சனி, 13 மே, 2017

பெர்சென்டேஜ் என்றால் என்ன? (PERCENTAGE)
பெர்சென்டைல் என்றால் என்ன? (PERCENTILE)
நீட் தேர்வில் 40ஆவது பெர்சென்டைல் என்பதன் பொருள்!
(பழைய கட்டுரை; மறு பிரசுரம்)
------------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------------
1)நீட் தேர்வை (UG 2017) 12 லட்சம் பேர் எழுதினர்.

2) நீட் தேர்வில் மொத்த மதிப்பெண் 720.

3)இட ஒதுக்கீடு இல்லாத பொதுப்பிரிவு மாணவனின்
பாஸ் மார்க் (QUALIFYING MARK) 50ஆவது பெர்சென்டைல்.
SC/ST/OBCக்கு 40ஆவது பெர்சென்டைல்.

4) மேற்கூறிய 3 அம்சங்களை நினைவில் பதிக்கவும்.

5) தேர்வு எழுதிய 12 லட்சம் பேரில் 50% என்பது 6 லட்சம்.
அதே போல, 40% என்பது 4.8 லட்சம் பேர். இதையும்
நினைவில் பதிக்கவும்.

5) நீட் ரிசல்ட் வந்தவுடன், மாணவர்கள் பெற்ற
மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப் படும்.
இது இறங்கு வரிசையில் இருக்கும். முதல் ரேங்க்
பெற்ற மாணவன் 700 மார்க் எடுக்கிறான் என்றால்
அவன் பெயர் முதலில் இருக்கும். அடுத்து 695, 690,
682 என்று இறங்கு வரிசையில் இப்பட்டியல் இருக்கும்.  

6) ராமசாமி என்ற பொதுப்பிரிவு மாணவன் 132 மார்க்
எடுத்துள்ளான். இவனுக்குக் கீழ் 6 லட்சம் பேர்
இருக்கின்றனர். அதாவது அந்த 6 லட்சம் பேரும்
இவனை விடக் குறைவாக மார்க் எடுத்துள்ளனர்.
அவர்கள் பெற்ற மார்க் என்பது ராமசாமி பெற்ற
மார்க்கான 132ஐ விடக் குறைவு.

7) இந்த ராமசாமியின் மார்க்கான 132 தான் 50ஆவது
பெர்சென்டைல்.

8) நன்கு கவனிக்கவும். 50ஆவது பெர்சென்டைல் மார்க்
என்பது 50 சதம் மார்க் அல்ல. மொத்த மார்க் 720இல்
50 சதம் என்பது 360. 50ஆவது பெர்சென்டைல் என்பது
132. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

9)அடுத்து,  துலுக்காணம் என்ற மாணவன் (ஓபிசி)
108 மார்க் எடுத்துள்ளான். இவனுக்குக் கீழ் 4.8 லட்சம்
பேர் இருக்கின்றனர். இந்த 4.8 லட்சம் என்பது நீட்
எழுதியவர்களில் 40 சதம் ஆகும். இந்த 4.8 லட்சம்
பேரும் துலுக்காணம் பெற்ற 108 மார்க்கை விடக்
குறைவாக வாங்கி உள்ளனர்.

10) எனவே துலுக்காணம் பெற்றுள்ள 108 மார்க்தான்
40ஆவது பெர்சென்டைல்.

11) 40% மார்க் என்றால் 288. 40ஆவது பெர்சென்டைல்
என்றால் 108.

12) இப்போது புரிகிறதா? இந்த பெர்சென்டைல் என்பது
ஆண்டுதோறும் மாறக்கூடியது.

13) 40ஆவது percentile என்பது 108 மார்க் ஆகும்.
இந்த மார்க்கிற்கு கீழ் 40 சதம் பேர் இருக்கிறார்கள்
என்று பொருள். அதாவது 4.8 லட்சம் பேர் இந்த
108 மார்க்கை விட குறைவாக எடுத்துள்ளனர்
என்பது பொருள்.
**********************************************************

PERCENTILE என்பதன் தமிழ் என்ன?

Percentile = இடஅமைவு விழுக்காடு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக