வெள்ளி, 5 மே, 2017

1) இரண்டு விதமான ஒளிச்சேர்க்கைகள் உண்டு. இவ்விரண்டில்
தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கை ஆக்சிஜனை
உருவாக்கும். இந்த ஆக்சிஜன் வளிமண்டலத்தில்
சென்று சேரும். இந்த ஆக்சிஜன் இல்லாவிட்டால்,
நம் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் எப்போதோ
காலியாகி இருக்கும். இது மிகவும் பயனுள்ளது. 

2) பாக்டீரியாக்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கையில்
ஆக்சிஜன் உற்பத்தியாவதில்லை.

3) ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியில் நிகழ்வது.
இரவு நேரத்தில் பெருவாரியான தாவரங்கள்
கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
இதைப் பயன்படுத்தி அவை கார்போ ஹைட்ரேட்டுகளை
உற்பத்தி செய்கின்றன (குறிப்பாக குளுக்கோசை) . எனவே கார்பன்டை ஆக்ஸைடு
வளிமண்டலத்தில் கலப்பதில்லை. எனவே இதில்
மனிதனுக்குத் தீங்கு என்ன உள்ளது?

4) வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு வழிகளில்
(different paths) ஒளிச்சேர்க்கை செய்கின்றன. அவை
உற்பத்தி செய்யும் ஆக்சிஜனும் கார்பன்டை ஆக்சைடும்
வெவ்வேறு அளவிலானவை. இதைப்  பொறுத்து
நமக்குத் தீங்கானவையாக உள்ள தாவரங்களை
நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.

5) ஒளிச்சேர்க்கையின் சமன்பாட்டின்படி, ஆக்சிஜன்
கணிசமாக உற்பத்தி ஆகிறது. எனவே ஒளிச்சேர்க்கை
நமக்கு அவசியத் தேவை.

நான் அப்படிச் சொல்லவில்லை. ஒளிச்சேர்க்கைக்கு
சூரிய ஒளி அவசியம். எனவே சூரியன் இல்லாதபோது
ஒளிச்சேர்க்கை சாத்தியமில்லை. என்றாலும் சம்பந்தப்பட்ட
தாவரத்தைப் பொறுத்து, அவை ஒளிச்சேர்க்கை செய்யும்
வழிமுறைகளை பொறுத்து, இரவில் ஆக்சிஜன்
வெளியிடுவது நிகழக்கூடும். இது குறித்து தக்க
தாவரவியல் வல்லுநரே விளக்கக் கூடும். 

சீனாவில் தொழிற்சாலைகள் வெளியிடும் மாசு
காரணமாக, வளிமண்டலம் முற்றிலுமாக சீர்கேடு
அடைந்துள்ளது. எனவே சுத்தமான காற்று அங்கே
விற்கப் படுகிறது. இதற்கு காரணம் சூழலை
மாசு படுத்தும் ஆலைகள்.

10 பேர் அல்லது 20 பேர் சேர்ந்து மூச்சு விட்டு,
கார்பன்டை ஆக்சைடை வளி மண்டலத்தில்
கலப்பதன் மூலமாக வளிமண்டலத்தை மாசு
படுத்த இயலாது. அதற்கு 10, 20 பேர் பத்தாது.
வளிமண்டலம் மிகப் பெரியது. மிக அதிகமான
கன அளவை உடையது. எனவே மாசுபடுத்துவதற்கும்
பெரிய முயற்சி தேவைப்படும்.
**
தாவரங்கள் வெளிவிடும் எல்லா
கார்பன்டை ஆக்சைடும் வளிமண்டலத்தில்
கலப்பதில்லை. அவை கார்போ ஹைட்ரேட்டை
உருவாக்குவதில் பயன்படுகின்றன. எஞ்சிய
கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்திற்குத்தான்
செல்லும். அதனால் பொதுவாக பேரளவிலான
தீங்கு கிடையாது.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக