வெள்ளி, 19 மே, 2017

பெண் மொழிபெயர்ப்பாளரின் கயமைத்தனம்!
பதிப்பாளர்களின் நிதி மோசடி!
ஆங்கிலத்தில் எல்லாப் பயலும்
திருவள்ளுவர்தான்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) கிளியோபட்ராவின் அழகை வருணித்த சேக்ஸ்பியர்
Age cannot wither her beauty என்றார்.

2) The state will wither away என்றார் எங்கல்ஸ். இது மார்க்சிய
பாலபாடங்களில் ஒன்று.

3) இரண்டுமே புகழ்பெற்ற மேற்கோள்கள். முன்னதை
இலக்கியம் பயின்றோரும் பின்னதை மார்க்சியம்
பயின்றோரும் அறிவார்கள். இரண்டையும் பயின்றோர்
இரண்டையும் அறிவார்கள்.

4) "அவளின் பேரழகு காலத்தால் மங்காது" என்று
முன்னதை மொழிபெயர்க்கலாம்.

5) "அரசு உலர்ந்து உதிர்ந்து விடும்" என்பது பின்னதற்கான
தமிழ் மார்க்சிய நூல்களில் காணப்படும் மொழிபெயர்ப்பு.

6) wither என்ற ஒற்றைச் சொல்லுக்கு இணையான
ஒற்றைச்சொல் தமிழில் இல்லை. எனவே
"உலர்ந்து உதிர்தல்" என்ற இரு சொற்களைக் கொண்ட
தொடர் அத்தேவையை நிறைவு செய்கிறது. அதே
நேரத்தில் சொற்செட்டு என்பது தற்கொலை செய்து
கொண்டு செத்துப் போகிறது.

7) மேலே கூறிய இரண்டு உதாரணங்களும் முறையே
இலக்கியம் அரசியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை.
அடுத்து அறிவியலுக்கு வருவோம்.

8) THE UNIVERSE IS ISOTROPIC! என்று ஒரே வரியில்
சொல்லி விட்டு ஓடி விடுகிறான் ஆங்கிலேயன்.
தமிழில் அப்படியெல்லாம் கற்பனையில் கூடச்
சொல்ல முடியாது.

9) தமிழில் ஒரே ஒரு திருவள்ளுவர்தான் உண்டு.
ஆங்கிலத்தில் எல்லாப் பயலுமே திருவள்ளுவர்தான்.
சொற்செட்டு ஆங்கிலத்தின் இயல்பாக இருக்கிறது.

10) ISOTROPIC என்பதற்கு "திசையறு தோற்றப்பாடு" என்று
ஒரு புதிய சொல்லை உருவாக்கி உள்ளேன்.
வெறுமனே ஒரு கட்டுரையில் இச்சொல்லைப்
பெய்தால் கட்டுரையாளனைத் தவிர வேறு
எவருக்கும் விளங்காது. பதிப்பாளரே விளக்கம்
கேட்பார்.

11) ISOTROPY என்ற சொல்லுடன் சொல்லாக்கம்
முடிந்து விடாது. அடுத்து இதன் எதிர்ப்பதமான
ANISOTROPY தனது தமிழ் இணையைத் தேடி நிற்கும்.

12) தமிழ் ஒரு pre feudal மொழி. Feudal காலத்தில் அது
உச்சம் பெற்றது. ஆனால், post feudal காலத்தில்,
அதாவது முதலாளிய ஏகாதிபத்திய காலக்
கட்டத்தில் தமிழ் வளராமல் தேங்கி நின்று
விட்டதால், யாரினும் கூடுதலாக
மொழிபெயர்ப்பாளர்கள் துன்பப் படுகிறார்கள்.

13) எவராலும் மறுக்க முடியாத உண்மை இது.
**********************************************************        
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக