திங்கள், 8 மே, 2017

பிசிக்ஸ் எக்ஸாம் அன்றைக்கு
பிசிக்ஸ் மாணவர்கள் முழுக்கைச் சட்டை
அணிந்து செல்லக் காரணம் என்ன?
மூக்குத்தியைத் தடுத்தது நியாயமா?
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
எல்லா நாளும் அரைக்கைச் சட்டை போடும்
நம்ம பிசிக்ஸ் பசங்க, பிசிக்ஸ் எக்ஸாம் அன்னிக்கு
மட்டும் முழுக்கைச் சட்டை  போட்டுக் கொண்டு
போவான். ஏன்? என்ன காரணம்?

எக்ஸாம் ஹாலுக்குள் நுழைந்ததுமே, நம்மிடம்
உள்ள கால்குலேட்டரை வாங்கி அதில் உள்ள
மெமரியை முழுவதுமாக டெலிட் செய்து
நம்மிடம் தருவார் இன்டெர்னல் எக்ஸாமினர்.

நம்ம பசங்க நல்லாப் படிச்சுட்டுத் தான் போவாங்க.
இருந்தாலும் பரீட்சைக்கு கிளம்புகிற நேரத்தில்
நாலைந்து பையன்கள் சேர்ந்து சில முக்கியமான
கான்ஸ்டன்ட்டுகள், சில வேல்யூக்கள் ஆகியவற்றை
முழங்கால் முழங்கைகளில் எழுதி வைத்துக்
கொள்வார்கள். அதை மறைக்கவே முழுக்கைச்
சட்டை. குறிப்பாக, பிராக்டிக்கல் எக்ஸாம் போகும்
போதுதான் இப்படிச் செய்வார்கள்.

இது பெருவாரியாக எல்லா பிசிக்ஸ் மாணவர்களும்
செய்வது. இதில் எந்த  விதமான மோசடிச் சிந்தனை
எதுவும் கிடையாது. அது அந்த வயசுக்கேற்ற ஒரு
நடத்தை.

இதனால்தான் நீட் எக்ஸாமில் முழுக்கைச் சட்டை
அணிவதை அனுமதிப்பது இல்லை.

மேலும் நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக,
தோடு, மூக்குத்தி ஆகியவற்றைக் கொண்டு
தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுக்குள்
விடைகளைப் பரிமாற்றம் செய்து கொள்ள
இயலும். இதைத் தடுக்கவே, தோடு, மூக்குத்தி,
கையில் கட்டிய வேண்டுதல் கயிறு ஆகியவற்றை
தேர்வு அறைக்குள் அனுமதிப்பதில்லை.

ஒரு பிசிக்ஸ் ஜோக்!
----------------------------------
தமிழில் எழுதினால் ஒரு  பக்கம் வரும். எனவே
ஆங்கிலத்தில் எழுதுகிறேன். மன்னிக்கவும்.

Once our scientists played a hide and seek game.
Scientists hid themselves.
Newton stood on a one square meter tile.
Einstein was the seeker.
As soon as the play started, Einstein found Newton
and caught hold of him.
But Newton said, "I am not Newton; since I am Newton per meter square,
I am Pascal".

இந்த ஜோக் புரிகிறதா? படித்தால் சிரிப்பு வருகிறதா?
****************************************************************************


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக