வியாழன், 18 மே, 2017

இல்லாமை போதாமை இயலாமை
எல்லாக் குறைகளையும் கொண்ட தமிழ்!
அறிவியலோடு பொருந்திப் போகாத தமிழ்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
சூன் இதழுக்கு ஓர் அறிவியல் கட்டுரை
வேண்டுமெனக் கோரியிருந்தார் ஆசிரியர்.
"பிரபஞ்சம் வரம்பற்றதா?" என்ற தலைப்பில் ஓர்
அறிவியல் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

சற்றுப் பெரிய கட்டுரையாக பத்துப் பக்க அளவில்
எழுதத் திட்டமிட்டேன். இயலவில்லை. மூன்றரைப்
பக்கங்களில் கட்டுரையை எழுதி அனுப்பி விட்டேன்.

1) தேவையான கலைச்சொற்கள் எவையும் தமிழில்
இல்லை. 2) ஆங்கிலத்தில் ஒரு வரியில் சொல்ல முடிந்த
ஒரு கருத்தை, தமிழில் சொல்ல ஒரு பக்கம் தேவைப்
படுகிறது. 3) பில்லியன், டிரில்லியன், குவாட்ரில்லியன்
ஆகிய சொற்களுக்கு நிகரான சொற்கள் இல்லை.
புதிய சொற்களைப் பெய்தால் வாசகர்களுக்குப்
புரியாத நிலை. டிரில்லியன் என்று அப்படியே
ஆங்கிலச் சொல்லை எழுதினாலும் அதைப் புரிந்து
கொள்ள இயலாத தமிழ் வாசகர்களின் போதாமை.

4) பார்செக் என்ற சொல் இல்லாமல் பிரபஞ்சம்
பற்றி எழுத முடியாது. அதற்கான விளக்கத்தை
தமிழில் கொடுப்பதற்குள் இடமும் நேரமும்
பலமடங்கு ஆகும்.

5)இத்தியாதி... இத்தியாதி மட்டுமல்ல; இன்னும் பல.

6) 12ஆம் வகுப்பு பள்ளிப் பாடங்கள் வரை மட்டுமே
தமிழில் சொல்ல இயலும். அதற்கு மேலான
அறிவியலைத் தமிழில் சொல்ல இயலாது. இதுதான்
ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவம்.

7) மக்கள் மொழியில் எழுத வேண்டும். அறிவியலுக்கு
என்று தனித்த புதியதொரு பண்டித நடையை
உருவாக்கக் கூடாது.தமிழ் விக்கிப்பீடியா அத்தகைய
தமிழுக்குப் பகையான மக்களுக்கு எதிரான
நடையில் உள்ளது. மக்களோடு தொடர்பற்ற
தந்தக் கோபுரவாசிகளால் அறிவியலும் வளராது;
தமிழும் வளராது. மாறாக இரண்டுமே அழியும்.

8) இன்னும் வரும்!
*******************************************************         
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக