செவ்வாய், 9 மே, 2017

இது அறிவியல் பாடங்களை மட்டும் கொண்ட தேர்வு.
இதில் தமிழ் இலக்கியம் எல்லாம் கிடையாது.
படித்தால் மட்டுமே மார்க் வாங்க முடியும்.
நெகட்டிவ் மார்க் உண்டு.

முதலாண்டு நீட் அனுபவம் என்ன?
-----------------------------------------------------------------
போன ஆண்டே 2016இல் தமிழ்நாட்டில் நீட் நடந்து
முடிந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
நீட் 2016 UG and PG இரண்டும் நடந்து முடிந்து விட்டது.
இப்போது நடப்பது இரண்டாம் நீட்.

அதில், 2016 நீட் தேர்வில் (நீட் UG)
எத்தனை சதம் பேர் பாஸ் பண்ணினார்கள்?
அதில் CBSEயில் படித்தவர்கள்
எத்தனை சதம் தேறினர்? ஸ்டேட் போர்டு மாணவர்கள்
எத்தனை சதம் தேறினார்? இதற்கெல்லாம்
புள்ளி விவரம் இருக்கிறதே! அது தெரியுமா நண்பர்களே!
*****************************************************************

இந்த 85% என்பது அரசு உத்தரவு அல்ல.அது நீதிமன்றத்
தீர்ப்பு! எனவே தொடரும்.

3 கேள்விக்கும் பதில்கள்!
-------------------------------------------
1) கோச்சிங்  சென்டர் குறித்து அண்மையில்தான்
கட்டுரை எழுதி இருக்கிறேன். அதை படிக்கலாமே.
 கல்வித் தந்தை என்றால் பெரும் பணக்கார சுயநிதிக்
கல்லூரி நடத்துபவர் என்று அர்த்தம். வெறும் ஒரு
மத காலத்திற்கு கோச்சிங் சென்டர் அல்லது டியூஷன்
சென்டர் நடத்துபவன் கல்வித் தந்தை அல்ல.
2) சுயநிதிக் கல்லூரிகளில் (நிர்வாக கோட்டா)
பணம் உள்ள முட்டாளுக்கு MBBS சீட்டு கிடைக்கும்.
அவனை எப்படியும் பாஸ் பண்ண வைத்து விடுவார்கள்.
எல்லா மேனேஜ்மேண்ட் கோட்டா  மாணவர்களும்
தரம் குறைந்த மருத்துவர்களே. இதெல்லாம்
வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண
ஆட்களுக்குத் தெரியாது. நான் கடந்த 25 ஆண்டு
காலமாக மெடிக்கல் அட்மிஷனைக் கவனித்து
வருகிறேன். சுயநிதிக் கல்லூரிகளில் எப்படி
பாஸ் போடுகிறார்கள் என்பதை நேரடியாக
அறிவேன். இது தெரியாத நிலையில்தான்
தமிழ்நாட்டு மருத்துவர்கள் தரம் குறைந்தவர்களா
என்ற கேள்வி எழுகிறது.
3) நீட் தேர்வு சர்வரோக நிவாரணி அல்ல. அது
தனியாரால், நிகர்நிலை முதலைகளால்  நாசமாக்கப்
பட்ட (உபயம் அன்புமணி)  மருத்துவக் கல்வியை
மீட்டெடுப்பது மற்றும் ரெகுலேட் செய்வது என்ற
ஒற்றைக் குறிக்கோளைக் கொண்டது. இது
PURE ACADEMIC விஷயம். நீட் வந்தால்  கட்டணம்
குறையுமா என்ற கேள்வி மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கேள்வி.
கட்டணக் குறைப்பு, கட்டண ரெகுலேஷன் எல்லாம்
மாநில அரசின் பொறுப்பு. மாநில அரசைக் கேள்வி
கேட்க வேண்டும் என்று சிந்திக்க கூட இயலவில்லை.
பக்கத்து மாநிலமான கேரளத்தில் சுயநிதி,
நிகர்நிலை கட்டணம் எவ்வாறு அரசால் ரெகுலேட்
செய்யப்பட்டது என்று தெரிந்து கொள்ளவும்.    

85% மாநில இடங்கள் என்பது இந்தியாவில் உள்ள
ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ளது (புதிதாக
அரம்பித்த ஆந்திரா, தெலுங்கானா மட்டும்
விதிவிலக்கு). இந்த 85% இடங்களைக் குறைக்க
இயலாது. குறைத்தால் ஒவ்வொரு மாநிலமும்
எதிர்க்கும். எனவே எல்லா மாநிலங்களும் சேர்ந்து
85% இடங்களை பாதுகாக்கும்.


சங்கராச்சாரி, பச்சை முத்து, ஜேப்பியார் கைக்கூலிகளே
தனியார் சுயநிதி முதலைகளுக்கு போடும்
மூக்கணாங் கயிறான நீட்டை எதிர்ப்பார்கள்.

தங்களை போன்றவர்களை ஜேப்பியார் கைக்கூலி
என்று முத்திரை குத்த எனக்கு என்ன பைத்தியமா
அல்லது திமிரா? தங்கள் மனதில் உள்ள, மனதில்
தோன்றிய எண்ணங்களை வெளியில் கூறும்
மக்களை நான் சொல்லவில்லை. சங்கராச்சாரியின்
கைக்கூலிகள் யார் என்ற பட்டியலே என்னிடம்
உள்ளது. அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்,
யாரெல்லாம் அவர்களின் சம்பள பட்டியலில்
இருக்கிறார்கள் என்பதையும் வெளியிடுவேன்.
சாதாரண மக்களை இது குறிக்காது. உங்களுக்கும்
சங்கராச்சாரிக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும்
கிடையாது. வெறும் பூஜ்யம். இதை நான் அறிவேன்.


நாமக்கல் பிராய்லர் பள்ளிகளை
நீட் தேர்வு இழுத்து மூடுகிறது.
எதிர்வரும் நீட் ரிசல்ட் படுமோசம்!

11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமல்
எடுத்த எடுப்பிலேயே 12ஆம் வகுப்பு
பாடத்தை மட்டும் நடத்திய நாமக்கல்
பிராய்லர் பள்ளிகள் ரிசல்ட் வந்ததும்
பெருத்த அடி வாங்கும்!

நீங்கள் தெரிந்து பேசுகிறீர்களா, தெரியாமல்
பேசுகிறீர்களா? நீட் தேர்வு முடிந்த மே 7 மாலையில்
பெற்றோர்கள் பள்ளி முதல்வர்களை பிடி பிடி
என்று பிடித்து விட்டார்கள். ஒழுங்கா 11ஆம் வகுப்பு
பாடத்தை நடத்துங்க, அல்லது இழுத்து மூடுங்க
என்று பெற்றோர்கள் ஒரே கோபம். எனவே இவன்
நடத்தும் பள்ளியிலேயே இனி மாணவர்கள் சேருவது
கஷ்டம்.

நீட் ரத்து ஆகி விடும் என்று false hope கொடுத்து,
ஆசிரியர்களுக்குக்கூட ரத்து உத்தரவு வரும்
பாருங்கள் என்று ஏமாற்றிய எடப்பாடி அரசுதான்
மாணவர்கள் விதிமுறைகளைப் படிக்காமல்
தேர்வு அறைக்குப் போனதற்கு காரணம்.
இங்கு எதிர்க்கப்பட வேண்டியது எடப்பாடி அரசே.

நீட் தேர்வு கெடுபிடிகள்!
--------------------------------------------
இது டெக்நாலஜி சார்ந்த விஷயம். பிட் அடிப்பதை
தடுப்பதற்காக அல்ல.

ஒரு ப்ளூடூத் இருந்து கம்மல் தோடு கொலுசு
மூக்குத்தியில்  மறைத்து வைக்கப்பட்ட மைக்ரோ
கருவிகள், டிரான்ஸ்மிட்டர் மூலம் இன்னொரு இடத்தில்
இருப்போருக்கு தகவல் (விடைகள்) அனுப்பலாம்.
இதற்கெல்லாம் பிரதான பங்கு வகிப்பது கை.
எனவே கையானது குறிப்பாக முழங்கைப் பகுதி
வெளித் தெரிவதாக (in an exposed position) இருக்க வேண்டும்.
எனவே முழுக்கைச் சட்டைக்கு அனுமதி இல்லை..
 விரிவான விளக்கக் கட்டுரை பின்னர்.  

இதெல்லாம் டோட்டல் நான்சென்ஸ். அடுத்து சிலபஸ்
பற்றிப் பேச வேண்டும் என்றால், சம்பந்தப் பட்ட
பாடங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள்
பேச வேண்டிய விஷயம் அது.

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இல்லாத
எந்தப்பாடம் நீட் சிலபசில் இருக்கிறது?
ஏதாவது ஒரு பாடத்தை  யாராவது
காட்ட முடியுமா? சவால்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
சிலபஸ் என்பதைப் பொறுத்தமட்டில், நீட்
சிலபசுக்கும் நமது தமிழ்நாடு சிலபசுக்கும்
வேறுபாடு கிடையாது. இது பற்றி பலமுறை
எழுதி உள்ளேன். நீட் தேர்வின் சிலபஸ் என்பது
CBSE சிலபஸ் அல்ல. அது மாநில மத்திய பல்வேறு
பாடத்திட்டங்களின் கலவை. நான் சவால் விடுகிறேன்.
தமிழ்நாடு சிலபசில் இல்லாத எந்தப்பாடம் நீட்
சிலபசில் இருக்கிறது? யாராலும் நிரூபிக்க முடியுமா?

சிலபஸ் போன்ற விஷயங்கள் ஆசிரியர்கள்,
கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டிய விஷயம்.
இது இரும்பு அடிக்கும் இடம். இங்கே ஈக்கு என்ன வேலை?

பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பயாலஜி பாடங்களை பற்றி
ஆனா ஆவன்னா தெரியாதவர்கள் சிலபஸை
பற்றி எப்படிப் பேச முடியும்? நீட் சிலபஸ்
என்பது பாகுபலி படமல்ல.
--------------------------------------------------------------------------------

வேறு எவருக்கும் தெரியாத
வேறு எவரும் சொல்லாத விஷயங்களை
நீட் குறித்து A to Z சொன்னது
நியூட்டன் அறிவியல் மன்றமே!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
நீட் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை
அளித்து நிறைய பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள்
எழுதி உள்ளேன். அருள்கூர்ந்து எனது டைம்லைனில்
சென்று படிக்குமாறு வேண்டுகிறேன்.

மொத்தத் தமிழ்நாட்டிலும் நீட் குறித்து வேறு எவருக்கும்
தெரியாத, வேறு யாரும் சொல்லாத பல்வேறு
விவரங்களை நான் ஒருவன் மட்டுமே கூறியுள்ளேன்.
இதை கட்டணம் வாங்காமல் இலவசமாகச்
சொல்பவனும் நான் ஒருவன் மட்டுமே. இதையே
ஒரு செமினார் போட்டு காலை 10 to 1 ஒரு ஹாலில்
சொன்னால், மற்றவர்கள் தலைக்கு ரூ 5000 கட்டணம்
வசூலித்து விடுவார்கள்.
**********************************************************
இது நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சவால்!
யாராலும் இந்த சவாலை ஏற்க முடியுமா?

 நீட் தேர்வு கெடுபிடிகள்  குறித்த விளக்கக் கட்டுரை
இன்று இரவு வெளியாகும்.


அது போலியானது. அது நீட் தேர்வு சார்ந்த
புகைப்படம் இல்லை. அதை
யார் முதன் முதலில் வெளியிட்டார்கள் என்று
கண்டுபிடித்தாயிற்று. புகார் கொடுத்தாச்சு.
இப்படி வெளியிடும் கயவர்கள் சங்கராச்சாரி
ஜெயேந்திரரின் கைக்கூலிகள்.அவர்கள்

வடமாநிலங்களில் எவர் ஒருவரும் முழுக்கைச் சட்டை
அணிந்து தேர்வு எழுதவில்லை. கல்கத்தாவில்
எப்போதோ நடந்த ஒரு தேர்வின் படத்தை எடுத்துப்
போட்டு, நீட் தேர்வில் முழுக்கைச் சட்டை அணிந்து
எழுதுகிறான் பார் என்று காட்டினார்கள். இதெல்லாம்
தனியார் சுயநிதி முதலைகளின் எடுபிடிகள் மற்றும்
சங்கராச்சாரி கைக்கூலிகள் திட்டமிட்டுப் பரப்புகின்ற
பொய். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக