செவ்வாய், 31 ஜனவரி, 2017

தமிழக அரசின் நீட் விதிவிலக்குச் சட்டம்!
எல்லாக் கண்டங்களையும் தாண்டுமா?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து
விதிவிலக்கு வழங்க வகை செய்யும் சட்டம்
சட்ட மன்றத்தில் தாக்கல் ஆகியுள்ளது.விண்ணதிரும்
முழக்கங்களுடன், பன்னீர் ஸ்டாலின் இருவரின்
ஆதரவுடன் இச்சட்டம் ஏகமனதாக நிறைவேறுவது
உறுதி. இது முதல் கட்டம்.

2) அடுத்த கட்டமாக, இச்சட்டம் ஜனாதிபதியின்
ஒப்புதலைப் பெற வேண்டும். இந்திய ஜனாதிபதி
சுயேச்சையாக முடிவு எடுக்க இயலாது. மத்திய
அரசின் பரிந்துரைக்கு ஏற்பவே முடிவு எடுக்க இயலும்.

3) அன்றைய மன்மோகன் அரசுதான் நீட் தேர்வை முதன்
முதலாகக் கொண்டு வந்தது. இன்றைய மோடி அரசு
அதைத் தொடர்கிறது. நீட் விஷயத்தில் காங்கிரஸ்,
பாஜக அரசுகளுக்கு இடையே எந்த விதமான முரண்பாடும்
கிடையாது. இரு அரசுகளும் நீட் ஆதரவாளர்கள்தான்.

4) எனவே நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை
மோடி அரசு ஏற்பது கடினம் ஆகும். எனவே
ஜனாதிபதியின் ஒப்புதல் தமிழக அரசின் சட்டத்திற்கு
கிடைப்பது கடினம்.

5) ஒருவேளை, ஏதோ ஒரு விதத்தில், ஜனாதிபதியின்
ஒப்புதல் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
அப்போது இச்சட்டம் செல்லுபடி ஆகிவிடும்;
அரசிதழில் இடம் பெறும்.

6) இதற்கு அப்புறமும் ஒரு கண்டம் இருக்கிறது. உச்சநீதி
மன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குத்
தொடரப்படும். அப்போது உச்சநீதிமன்றம் இந்தச்
சட்டம் செல்லும் என்று அறிவிக்க வேண்டும். அதற்கு
மாறாக, சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வருமானால்,
தமிழக அரசின் சட்டம் உயிரை விட்டு விடும்.

7) ஆக, இச்சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குள்
இவ்வளவு கண்டங்களைக் கடக்க வேண்டும்.
இச்சட்டத்தின் தலைவிதியை இறுதியாக முடிவு
செய்வது உச்சநீதி மன்றமே.

8) இவையெல்லாம் நிகழ்வதற்குள் மே மாதம் வந்து
விடும். மே 7 நீட் தேர்வுக்கான உத்தேசத் தேதி.
ஆக, தேர்வு நெருக்கத்தில் மாணவர்களையும்
பெற்றோர்களையும், இந்தியாவில் உள்ள எல்லோரும்
சேர்ந்து வறுத்து எடுப்பார்கள். கடந்த ஆண்டு இதுதானே
நடந்தது. இந்த ஆண்டும் இது மீண்டும் நடக்கும்.

9) நீட் தேர்வு குறித்த வழக்கில் இன்னமும் முதன்மைத்
தீர்ப்பு வரவில்லை. அத்தீர்ப்பு எப்படி வரும் என்று
கூற இயலாது. நீட் செல்லும் என்றோ அல்லது செல்லாது
என்றோ தீர்ப்பு வரலாம். அந்தத் தீர்ப்பையும்
வழங்காமல், உச்ச நீதிமன்றம் இழுத்தடித்துக்
கொண்டு இருக்கிறது. தற்போது நீதியரசர் அனில்
தவே அவர்கள் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான்  இவ்வளவும் நடந்து கொண்டு
இருக்கிறது.

10) வழக்கில் முதன்மைத் தீர்ப்பை (main verdict)
வழங்காமல் இழுத்தடிக்கும் உச்சநீதிமன்றம்தான்
தலைமைக் குற்றவாளி.
***************************************************************** 
பின்குறிப்பு: நீட் குறித்து இதுவரை 15 பதிவுகள் வரை
எழுதப் பட்டுள்ளன. அவற்றை அனைவரும் படிக்குமாறு
வேண்டுகிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------        
தடுப்பூசி போட மறுக்கும் இஸ்லாமிய மூடநம்பிக்கை 
பாடத்திட்டம், பாடங்கள் குறித்து பெரிதாக
அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
CBSEயிலும் தமிழ் மாநிலப் பாடத்திட்டத்திலும்
ஒரே பாடங்கள்தான். ஆனால், பொதுவாக,
CBSE பாடத்திட்டம் ஆழ உழுவது (COMPREHENSIVE
AND DEEP).  தமிழ்நாடு பாடத்திட்டத்தில் ஆழம் என்பது
மருந்துக்கும் கிடையாது; இது வெறும்
மேம்போக்கானது.
**
CBSE பாடத்திட்டத்தை விட அதிகமான தரத்துடன்
சில மாநிலங்களின் பாடத் திட்டம் உள்ளது. இதற்கு
உதாரணம் ஆந்திர மாநில பாடத்திட்டம்.


தமிழ்நாட்டில் தமிழக அரசே நடத்திய TNPCEE
நுழைவுத் தேர்வு இருந்தபோது, ராண்டம் நம்பர்
தேவைப்படவே இல்லை. ஏன் தெரியுமா?
அந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும்
மதிப்பெண்கள் பெரும்பாலும் RATIONAL NUMBERஆக
அதாவது பின்னமாக இருக்கும். உதாரணமாக,
198.34 என்றோ 197.82 என்பதாகவோ இருக்கும்.
அதாவது ஒரு கேள்விக்கான மதிப்பெண் முழு எண்ணாக
இருக்காது (Not an intiger)
  
பாமரப்  பார்வையும் அறிவியல் பார்வையும்!
-------------------------------------------------------------------------------
அண்ணா பல்கலை நடத்தும் பொறியியல் கலந்தாய்வில்
மொத்தம் சுமார் இரண்டு லட்சம் இடங்கள் உள்ளன.
ஆனால் மருத்துவ இடங்கள் வெறும் 2000 மட்டுமே
உள்ளன. 200க்கு 200 மதிப்பெண்களை உயிரியல்,
இயற்பியல், வேதியியல் ஆகிய தொடர்புடைய
பாடங்களில் எடுத்துள்ள மாணவர்களின்  CUTOFF
200 ஆகும். இந்த 200 CUTOFF நிலையிலேயே 50, 60
மாணவர்கள் இருந்தது மருத்துவச் சேர்க்கையில்
பல ஆண்டுகளில் நிகழ்ந்தது.
**
அதே போல, 199.75 என்னும் CUTOFFஇல் 50 பேர்,
அடுத்து 199.50இல் 50 பேர் என்று 200-199 CUTOFF
நிலையில், அதாவது ஒரு மார்க் இடைவெளியில்,
200, 300 பேர் இருப்பது மருத்துவ அட்மிஷனில்
சர்வ சாதாரணம்.
**
கடந்த ஆண்டில் எழுதிய பதிவுகளிலேயே இவற்றை
எல்லாம் ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதி உள்ளேன்.
இந்தச் சூழ்நிலையில் ராண்டம் நம்பர்தான் அவர்களின்
இடத்தைத் தீர்மானிக்கிறது. இதுவே உண்மை.
**
கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ அட்மிஷனைக்
கூர்ந்து கவனித்து  வருபவன் என்ற முறையில்,
இது குறித்து பலமுறை எழுதி உள்ளேன். பல்வேறு
தொலைகாட்சி விவாத நிகழ்வுகளில் கூறியுள்ளேன்.
**
குறிப்பாக, வின் டி.வி நிகழ்ச்சிகளில் பலமுறை
திருவுளச் சீட்டு முறைதான் தற்போது நடப்பில்
உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து
உள்ளேன். இவை யூடியூபில் பதிவேற்றம் ஆகி
உள்ளன.
**
ஒரு விஷயத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை
கணக்கற்ற நேரடி அனுபவங்கள் மூலம் தெரிந்து
அதை உறுதி செய்த பிறகு கருத்துக் கூறுவது
அறிவியல் வழிமுறை. திடீரென்று அரைகுறையாக
எழுதப்பட்ட எதையாவது அரைகுறையாகப்
புரிந்து கொண்டு உளறுவது பாமரப் பார்வை.
**
2000 சீட்டு மட்டுமே உள்ள மருத்துவ அட்மிஷனில்
ராண்டம் நம்பர் மிகப்பெரிய பாத்திரம் வகிக்கும்.
இரண்டு லட்சம் சீட்டுகள் கொண்ட பொறியியல்
அட்மிஷனில், இதே ராண்டம் நம்பர் முக்கியமான
பாத்திரத்தை வகிக்க இயலாது. கணிதம்
புரிந்தவர்களால் இதை எளிதில் அறிய இயலும்.           
CBSE பாடத்திட்டத்தில் இல்லாத பாடங்கள்
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ளன!
CBSEயை மிகை மதிப்பீடு செய்து
பூச்சாண்டி காட்ட வேண்டாம்!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
ஐன்ஸ்டின் கண்டறிந்த சிறப்புச் சார்பியல் கோட்பாடு
(Special Theory of Relativity) பற்றி தமிழ்மாநிலப் பாடத்
திட்டத்தில் இயற்பியலில் உள்ளது. E= mc squared என்னும்
ஐன்ஸ்டினின் சமன்பாடும் அதன் derivationம்
12ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டத்தில் (TN state board)
உள்ளன.  இதில் மேற்கூறிய derivation இறுதித்தேர்வில்
(board exam) பலமுறை கேட்கப் பட்டுள்ளது.

ஆனால் 12ஆம் வகுப்பு CBSE பாடத்திட்ட இயற்பியலில்
சார்பியல் கோட்பாடே கிடையாது. அந்தப் பாடமே
கிடையாது.

CBSE,  CBSE என்று பூச்சாண்டி காட்டும் அன்பர்களே,
இதற்கு உங்கள் பதில் என்ன?

இந்தியாவிலேயே கேவலமான பாடத்திட்டத்தைக்
கொண்ட TN State board மாணவர்களுக்கு ரிலேட்டிவிட்டி  
தியரி தெரியும். ஆனால் CBSE மாணவனுக்கு அது
தெரியாது.

(தமிழகப் பாடத்திட்டம் வெறும் நுனிப்புல் பாடத்திட்டம்
என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.)

எனவே பூச்சாண்டி காட்டி மாணவர்களின் படிப்பைக்
கெடுக்கும் அன்பர்களே,
அருள்கூர்ந்து நீட் தேர்வு குறித்து கருத்துத்
தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு,
மாணவர்களின் படிப்பில் மண்ணள்ளிப் போட
வேண்டாம்  என்று உங்களை இருகரம் கூப்பி
நியூட்டன் அறிவியல் மன்றம் வேண்டுகிறது.

நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாணவர்களும்
ஆசிரியர்களும் மருத்துவர்களும் முடிவு செய்யட்டும்.
வேண்டாம் என்றால் மாணவர்கள் சேர்ந்து
நீட்டைக் குப்பையில் வீசி எறிவார்கள்.
வேண்டும் என்றால் படித்துத்  தேறி மருத்துவர்கள்
ஆவார்கள். The issue will be decided by the concerned STAKE HOLDERS.
Others should keep quiet, please.

எனவே பூச்சாண்டி காட்டும் அன்பர்களே,
ரஜனி, விஜய்,அஜித்,சூர்யா என்று கூத்தாடிகள்
நடிக்கும் படங்களைப் பற்றி பூச்சாண்டி காட்டுங்கள்.
மாணவர்களின் படிப்போடு விளையாடாதீர்கள்!
கும்பிட்டுக்  கேட்டுக்கொள்கிறோம்!
*******************************************************************     

திங்கள், 30 ஜனவரி, 2017

நீட் தேர்வு பற்றி எவர் வேண்டுமானாலும் கருத்துக்
கூறலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
அதே நேரத்தில் இது சல்லிக்கட்டு போன்றதல்ல.
கல்வி சார்ந்த விஷயங்களில் பரிச்சயமும்,
ஆழமான புரிதலும் உடைய, நீட் விவகாரத்தின் 
stake holdersஆக இருப்பவர்களின் கருத்துக்கு
கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஏனெனில்
லாப நஷ்டத்தை ஏற்கப் போகிறவர்கள் அவர்களே.
மற்றவர்கள் அனைவரும் வழிப்போக்கர்களே.
**
"கிராமப்புற மாணவர்கள் அனைவருமே முட்டாள்கள்"
என்ற முட்டாள்தனமான முன்முடிவை எடுத்துக்
கொண்டு பேசுகிறவர்களைப் பொறுத்தமட்டில்,
அவர்களின் கருத்தைத் தீர்மானிப்பது அவர்களின்
தாழ்வு மனப்பான்மையே. உண்மை இவர்களின்
கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது.
**
ஒவ்வோராண்டும் மாநில முதல்வனாக (state first)
வரும் மாணவர்கள் எல்லாம் சென்னை என்கிற
பெருநகரத்தில் இருந்தா வருகிறார்கள். இல்லை.
கடந்த 50 ஆண்டுகளின் வரலாற்றை நான் அறிவேன்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கிராமப்புற மாணவர்களே
மாநில முதல் தகுதி உட்பட, பல்வேறு சிறப்பிடங்களைப்
பெற்று இருக்கிறார்கள்.
**
இன்று கிராமங்களில் லாப்டாப் பெற்றுள்ள
மாணவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைனில்
நடைபெறும்  நீட் தேர்வுகளில் பங்கேற்றும்
பயிற்சி பெற்றுக் கொண்டும்  இருக்கிறார்கள்.
**
நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாணவர்களும்
ஆசிரியர்களும் மருத்துவர்களும் முடிவு செய்வார்கள்.
தொடர்பற்றவர்களின் கூப்பாடுகளால் அவர்களின்
முடிவுகள் மாறப்போவதில்லை. அவர்களின்
எதிர்காலத்தை மாணவர்களே தீர்மானிப்பார்கள்.
மாணவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்களுக்குப்
பதிலாக மற்றவர்கள் சிந்திக்க வேண்டியதில்லை.
      

 
நீட் தேர்வும் கோச்சிங் சென்டர்களும்
ராட்சசத் தனமான பொய்களும்!
இவற்றை முறியடிப்பது எப்படி?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
1) நீட் தேர்வுக்கான கோச்சிங் கட்டணம் மிகவும்
அதிகம். லட்சக்கணக்கில் ரூபாய் செலவாகும்
என்று பலரும் பீதியைக் கிளப்பி வருகின்றனர்.

2) இது உண்மையா, குறைந்த கட்டணத்தில் நீட்
கோச்சிங் பெறுவதற்கு வாய்ப்பே இல்லையா?
இது பற்றி ஆராய்வோம்.

3) முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பாடம் எடுப்பவர்கள்
யார்? ஒரு வழக்கில் ஒரு முறை ஆஜர் ஆவதற்கு
ஒரு கோடி ரூபாய் கட்டணம் வாங்கும் ராம்
ஜெத்மலானியா? அல்லது கபில் சிபலா?

4) இல்லை. ப்ளஸ் டூ வகுப்பிற்குப் பாடம் எடுக்கும்
M.Sc B.Ed படித்த ஆசிரியர்கள்தான். வகுப்பில் பாடம்
எடுக்கும் ஆசிரியர்களால் மட்டுமே நீட் பயிற்சிக்கு
கோச்சிங் தர முடியும்.

5) இந்த ஆசிரியர்களை வைத்து, ஒவ்வொரு ஊரிலும்
தமிழக அரசே இலவச நீட் கோச்சிங் மையங்களை
உருவாக்கலாம்.

6) அரசு செய்யாவிட்டாலும் கூட, பெற்றோர்-ஆசிரியர்
சங்க முயற்சியில், அருகில் உள்ள பள்ளிகளின்
மாணவர்களை ஒன்று சேர்த்து, பயிற்சி மையம்
நடத்தலாம். இதற்கெல்லாம் பெரிதாகச் செலவு
ஆகாது.

7) வீட்டில் மனைவி அவிக்கிற இட்லியில் நாலு இட்லி
சாப்பிட்டால், அதற்கு ரூ 20 செலவு ஆகிறது. இதே
நாலு இட்லியை ஐந்து நட்சத்திர ஓட்டலில்
சாப்பிட்டால், 400 ரூ செலவாகும்.

8) வீட்டு இட்லியைச் சாப்பிட மாட்டேன், எனக்கு
5 ஸ்டார் ஓட்டல் இட்லிதான் வேண்டும் என்பது
நோய் மனத்தின் வெளிப்பாடே.

9) எங்கெல்லாம் மேநிலைப் பள்ளி இருக்கிறதோ,
அங்கெல்லாம் பயாலஜி வாத்தியார், பிசிக்ஸ்
வாத்தியார், கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆகியோர்
இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை வைத்து
ஒவ்வொரு பள்ளியிலும், அல்லது நாலைந்து
பள்ளிகள் சேர்ந்த எந்தவொரு மையத்திலும்
நீட் கோச்சிங் வகுப்புகளை நடத்த இயலும்.

10) வெண்ணையைக் கையில் வைத்துக் கொண்டு
நெய்க்கு அலைபவன் மூடன். உண்மையில்
தமிழ்நாட்டில், எல்லா இடங்களிலும் நீட் கோச்சிங்
வகுப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
படிப்புக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள்தான்
வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
*****************************************************************      


திருவுளச் சீட்டு மூலமே தமிழ்நாட்டில்
MBBS இடங்கள் நிரப்பப் படுகின்றன!
தற்போதைய முறை இதுதான்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
அறிவியல் உலகம் முழுமைக்கும் பொதுவானது.
ஊருக்கு ஊர்  நாட்டுக்கு நாடு அறிவியல் மாறுவதில்லை.
வரலாற்றுப் பாடமும் மொழிப்பாடமும் ஊருக்கு ஊர்
மாறும். ஆனால் அறிவியல் பாடங்கள் உலகம்
முழுமைக்கும் பொதுவானவை.

நியூட்டனின் இயக்க விதிகள் (laws of motion)
கலிபோர்னியாவிலும் சரி, கடையநல்லூரிலும் சரி
ஒன்றுதான். எனவே CBSE பாடத்திட்டத்தின்
அடிப்படையில் அதற்கு IDENTICAL ஆக, தமிழ்நாட்டுப்
பாடத்திட்டத்தை உயர்த்துவதில் எந்தக் கஷ்டமும்
இல்லை.

Zn+H2SO4--> ZnSO4+H2 என்ற வேதியியல் ஃபார்முலா
CBSE மற்றும் State Board இரண்டிலும் மாறப் போவதில்லை.
எனவே அறிவியலைப் பொறுத்த மட்டில்,
CBSE, State Board இரண்டு பாடத்திட்டத்தையும்
சமச்சீராக (uniform) வைக்க முடியும். இது மிக மிக எளிது.     

தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில்
(UG,PG,Speciality) தமிழர்களுக்கு (TN Residents) உள்ள
இடங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. DOMICILE STATUS
தான்  தீர்மானிக்கிற காரணி ஆகும். ஆனால்
தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைகள்
வெளிமாநில மாணவர்களைச் சேர்க்கின்றன.
ஏதோ கொஞ்சம் சேர்க்கட்டும். ஆனால், காலப்போக்கில்
இந்த சுயநிதிக் கயவர்கள் நிகர்நிலை என்ற சலுகையின்
மூலம் தமிழர்களின் இடங்களை வெளிமாநில,
வெளிநாட்டு (NRI) மாணவர்களுக்குத் தாரை வார்த்து
விடுவார்கள். இதுதான் அபாயம்,

நுழைவுத் தேர்வு என்ற கோட்பாட்டை
(the very concept of entrance test) எதிர்ப்பவர்கள்
யாராயினும் அவர்கள் தனியார்மயக் கைக்கூலிகளே.
எம்ஜியார் காலம் முதல் 2007 வரை இங்கு
நுழைவுத் தேர்வு இருந்தது.அதைக் கைவிட்டு விட்டு,
திருவுளச் சீட்டுப் போட்டு MBBS இடங்களை நிரப்பும்
அறிவியலுக்கு எதிரான போக்கை ஆதரிப்போர்
எவராயினும் அவர்கள் அறியாமை நிரம்பியவர்களே.
Computer generated random number மூலம் நிரப்பப் படும் இடங்கள்
யாவும் நவீன திருவுளச் சீட்டு மூலம் நிரப்பப் படும்
இடங்களே.

நீட் தேர்வா அல்லது தமிழ்நாட்டில் முன்பிருந்த
TNPCEEயா என்பது பெரிய விஷயம் அல்ல.
CBSE தரத்துக்கு நம் பாடத்திட்டத்தை உயர்த்தினால்
நாம் நடத்தும் TNPCEE கூட NEETதான்.
------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இது பழைய பதிவு
********************************************************************

நீட் தேர்வில் இந்தக் கேள்வி கேட்கப் படுமானால்,
கால் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு
மாணவனால் விடை எழுதி விட முடியும். ஒரே ஒரு
நிபந்தனை: ஏற்கனவே இந்தக் கணக்கை ஒரு முறை
அவன் செய்து பார்த்து இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
இந்தக் கணக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு IIT JEE
தேர்வில் கேட்கப்பட்டது என்பதை மாணவர்களுக்கு
நினைவூட்டுகிறேன். 


பையன் பந்தைப் பிடிப்பது ANGLE OF INCLINATION WITH
THE HORIZONTAL என்னும் கோணத்தைப் பொறுத்தது.
கோணத்தை மாற்றுவதன் மூலம் விடையையும்
மாற்ற இயலும். பையன் பந்தைப் பிடித்து விடுவான்
என்றும் பிடிக்க மாட்டான் என்றும் வெவ்வேறு விடைகள்
வருகிற விதத்தில் கணக்கை அமைக்கலாம். இந்தக்
கணக்கைச் செய்து, சரியான விடை கண்டு,
ECSTACY அடையுங்கள்.
அன்பர்களே,
இந்தப் பந்துக் கணக்கு உலகப் புகழ் பெற்றது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும்
பள்ளி மாணவர்களிடம் கேட்கப் படுவது.
இதை எளிதில் செய்யலாம். ஒரு நிமிடத்திற்குள்
செய்யலாம். செய்யுங்கள்.
(clue: resolve the velocity into two components horizontal and vertical)  
நீட் தேர்வையே ரத்து செய்ய கல்வித் தந்தைகள்
டெல்லியில் லாபி செய்து வருகிறார்கள். பணம்
பாதாளம் வரை பாயும். என்னவெல்லாம் சாத்தியமோ,
எதுவரை சாத்தியமோ அதுவரை மோதிப் பார்த்து
விடுவது என்ற முடிவில் கல்வித் தந்தைகளும்
அவர்களின் ஏஜெண்டுகளும் மருத்துவக் கவுன்சிலில்
காத்துக் கிடக்கிறார்கள். இதுதான் உண்மை. இதில்
மறுக்க எதுவுமில்லை. 
Overseas Indian Citizens இந்தியாவில் மருத்துவம் பயில
விரும்புகின்றனர். மேலைநாடுகளில் பொதுவாக
வயது ஒரு தடையாக இல்லை. அதேபோல,
இந்தியாவிலும் வயது வரம்பை அகற்றினால்,
நிறைய NRI ஆட்கள் மருத்துவம் படிக்க முன்வருவார்கள்.
அவர்களிடம் கோடி கோடியாகக் கறக்கலாம். 

ப்ளீஸ் போஸ்ட் யுவர்

Please post your comments in the appropriate post of mine which is already
there (Please see my Timeline). This post is meant for upper age limit for
medical admissions. You may post your views on this subject.

iyalum.

இயலும். இது வெறும் qualifying தேர்வுதான்.


வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை
மாணவர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கை அல்ல.
அது கல்வித் தந்தைகளின் கோரிக்கை மட்டுமே.
நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப் பட்டு விட்ட காரணத்தால்,
நீட் தேறாத மாணவர்களை சேர்க்க இயலவில்லை.
வெறுமனே 45 மார்க் எடுத்த பையனைச் சேர்த்துக்கொண்டு
ரூ 1 கோடி 1.5 கோடி என்று கொள்ளையடித்த கல்வித்
தந்தைகளுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே வயது வரம்பை உயர்த்துவதன் மூலம்,
தங்களின் targetted pool of  studentsஇன் எண்ணிக்கையை
உயர்த்த விரும்புகிறார்கள்.


upper age limit இன்னும் உயர்த்தப் படவில்லை. அதற்கான
முயற்சிகளை கல்வித் தந்தைகள் மேற்கொண்டு
வருகிறார்கள் என்று தெளிவாக எழுதி இருக்கிறேன்.
வயது வரம்பு அகற்றப் படலாம் அல்லது உயர்த்தப்
படலாம். பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வயது வரம்பு அகற்றப் பட்டு விட்டதாக எங்குமே
நான் குறிப்பிடவில்லை. இது தெளிவு.
   

இதன் காரணமாகத்தான் இன்னமும் CBSE நீட் தேர்வுக்கான
விண்ணப்பங்களையே ஆன்லைனில் வழங்கவில்லை.
கடந்த 2016 நீட்டின் போது, டிசம்பரிலேயே விண்ணப்பம்
வழங்கப் பட்டு விட்டது.

ஒவ்வொரு நாளும் CBSE குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில்,
கொடுக்கப்பட்ட லின்க்கில் (link) விண்ணப்பப் படிவத்தை
பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்து, கிடைக்காத
காரணத்தால், ஒரு நாளைக்கு 20, 30 பேர் நியூட்டன் அறிவியல்
மன்றத்தைத் தொடர்பு கொள்கிறார்கள். கல்வித்
தந்தைகளின் லாபியால் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்
ஏகத்துக்கும் டென்சன்.

எல்லா முறையும் பழைய முறைதான். ஏற்பட்டுள்ள
மாற்றம் இது மட்டுமே. அதாவது (1) நீட் தேர்ச்சி பெற்று
இருக்க வேண்டும். நீட் தேறாத மாணவன் விண்ணப்பிக்க
இயலாது.  (2) நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்
அடிப்படையில்மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
 
  

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

நீட் தேர்வு கடினமானது என்ற பொய்யின்
முதுகெலும்பை முறிக்கும் உண்மைகள்!
பாரீர் புள்ளி விவரங்களை!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
==============================================
1) கடந்த ஆண்டு (2016) நீட் தேர்வை 8 லட்சம் பேர்
எழுதியதில் 4 லட்சம் பேர் தேறினர் என்று
ஏற்கனவே பார்த்தோம். (முந்தைய பதிவுகள்
அனைத்தையும் பார்க்கவும்).

2) நீட்  ஒரு கடினமான தேர்வு என்றால், அதில்
பாதிக்குப் பாதிப்பேர் எப்படித் தேற முடியும்?
தேர்வுகள் பற்றிய குறைந்தபட்சப் புரிதல்
உடையவர்களால் மட்டுமே இதைப் புரிய முடியும்.

3) நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது (qualify ஆவது)
என்பது பல்வேறு காரணிகளைக் கொண்டது.
அவற்றை இங்கு விவரிக்க இயலாது. ஓரளவு
தோராயமாக இப்படிப் புரிந்து கொள்ளலாம்.

4) பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி = 50% மதிப்பெண்கள்.
SC, ST, OBC ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான
தேர்ச்சி = 40% மதிப்பெண்கள்.

5) 2016 நீட் தேர்வில் தேறியவர்கள் விவரம்:
-------------------------------------------------------------------------
பொதுப் பிரிவினர் = 1,71,329
OBC பிரிவினர் = 1,75,226
SC பிரிவினர் = 47,183
ST பிரிவினர் = 15,710

6) OBC, SC, ST ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரில்
2,38,119 பேர் தேறி உள்ளனர். இது பொதுப்பிரிவில்
தேறியோரை விட 66,790 பேர் அதிகம். 

7) நீட் தேர்வில் உயர்சாதி மாணவன் மட்டுமே தேற
முடியும் என்றும் தாழ்ந்த சாதிக்கார மாணவன்,
அதாவது SC, ST, BC மாணவன் ஒருநாளும் தேற
முடியாது என்று பொய் பேசிக் கொண்டிருந்த
பொய்யர்களை எங்கே? பொய்யர்களே வாருங்கள்
இங்கே!

8) நீட் தேர்வில் உயர்சாதி மாணவர்களை விட அதிக
எண்ணிக்கையில் தேறிய தாழ்ந்த சாதி மாணவர்கள்
உங்களுக்குத் பாடம் கற்றுக் கொடுக்கக் காத்து
இருக்கிறார்கள்.

இதோ ஆதாரம் பாரீர்!
----------------------------------------
NEET 2016-2017 Cut offs
CategoryMarks RangeQualifying CriteriaNo. of Candidates
Other685-14550th Percentile171329
OBC678-11840th Percentile175226
SC595-11840th Percentile47183
ST599-11840th Percentile15710
UR & PH474-13145th Percentile437
OBC & PH510-11840th Percentile597
SC & PH415-11840th Percentile143
ST & PH339-11840th Percentile36
 பின்குறிப்பு: PERCENTILE என்பது புள்ளியியல் சொல்.
(Statistical term). இதைப் புரிந்து கொண்டு படிக்கவும்.
********************************************************************** 

   
நீட் தேர்வு CBSE பாடத்திட்டப்படி மட்டுமே நடைபெறும்
என்பது அறியாமையால் சொல்லப்படும் பொய்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------
1) நீட் தேர்வில் 11, 12 வகுப்புகளின் பாடங்களில்
இருந்து கேள்விகள் கேட்கப்படும். 11ஆம் வகுப்புப்
பாடத்தை நடத்தாமல், எடுத்த எடுப்பிலேயே 12ஆம்
வகுப்புப் பாடத்தை நடத்துபவர்கள் கபால மோட்சம்
அடைவார்கள்.

2) CBSE பாடத்திட்டப்படி மட்டுமே நீட் தேர்வு அமையும்
என்பது உண்மை அல்ல. பல்வேறு மாநிலங்களின்
பாடத்திட்டங்களை பரிசீலித்து, அவற்றில் இருந்தும்
தேவையான பாடங்களை எடுத்துக் கொண்டு,
அதன் பிறகே நீட் தேர்வுக்கான பாடத்திட்டம்
உருவாக்கப் பட்டுள்ளது.

3) ஆந்திர மாநிலப் பாடத்திட்டம், மஹாராஷ்டிரா
மாநிலப் பாடத்திட்டம், கர்நாடக மாநிலப் பாடத் திட்டம்
உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களில்
உள்ள பாடங்கள் நீட் தேர்வுக்கான பாடத்  திட்டத்தில்
இடம் பெற்றுள்ளன.

4) சுருங்கக் கூறின், நீட் தேர்வுக்கான பாடத்திட்டம்
என்பது CBSE பாடத்திட்டம் மற்றும் பல்வேறு
மாநிலங்களின் பாடத்திட்டம் ஆகியவற்றின் கலவை
ஆகும். (NEET syllabus is the combination of CBSE syllabus and various state
boards' syllabi).

5) எந்தெந்த மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து
எவ்வளவு எடுக்கப் பட்டிருக்கிறது என்று அறிய
விரும்புவோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
கீழ் விண்ணப்பித்து வேண்டிய தகவலைப் பெறலாம்.

6) நீட் தேர்வு குறித்த கணக்கற்ற பொய்களை நியூட்டன்
அறிவியல் மன்றம் முறியடித்து இருக்கிறது. அந்தப்
பட்டியலில் பாடத்திட்டம் பற்றிய பொய்மை தற்போது
முறியடிக்கப் படுகிறது.
*******************************************************************  

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும்
மருத்துவப் படிப்பில் இடம் உறுதி இல்லை!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) நீட் தேர்வு குறித்து எழுதப்பட்ட எமது முந்திய
பதிவுகளை அவசியம் படிக்குமாறு வேண்டுகிறோம்.
2) சில புள்ளி விவரங்களை இப்போது பார்ப்போம்.

3) இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்
கல்லூரிகள் (அரசு+தனியார்) = 412
(இதில் ஜிப்மர், எய்ம்ஸ் சேர்க்கப்படவில்லை)

4) இந்தியாவின் மொத்த மருத்துவ இடங்கள் = 52715
  (அரசு + தனியார்)

5) அரசு மருத்துவக் கல்லூரிகள் = 190
6) அரசு மருத்துவ இடங்கள் = 25880

7) தனியார் மருத்துவக் கல்லூரிகள் = 222
8) தனியார் மருத்துவ இடங்கள் = 26835
9) மருத்துவ இடங்கள் = MBBS+ BDS

10) இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய மருத்துவக்
கவுன்சில் வெளியிட்டவை. என்றாலும் எத்தனை
கல்லூரிகள் மற்றும் எத்தனை இடங்கள் என்பது
பற்றிய துல்லியமான விவரம் செப்டம்பர் 2017
வாக்கில்தான் கிடைக்கப் பெறும்.

11) தமிழ்நாட்டில் மொத்தக்  கல்லூரிகள் =45
(அரசு + தனியார்)
12) தமிழ்நாட்டில் மொத்த மருத்துவ இடங்கள்= 5660
(அரசு + தனியார்)

13) மீண்டும் கூறுகிறோம்: துல்லியமான புள்ளி
விவரங்களுக்கு செப் 2017 வரை காத்திருக்கவும்.
**********************
2016இல் நீட் தேர்வு எழுதிய 8 லட்சம் பேரில்
4 லட்சம் பேர் தேறினார். என்றாலும் சுமார் 52,000 பேர்தான்
MBBS/BDS இடம் கிடைக்கப் பெற்றனர்.

அதாவது 8 பேர் நீட்டில் தேறினாலும், அதில்
ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கும்.
நீட் என்பது ஒரு தகுதித் தேர்வே.  
**************************************************************** 
(2) நீட் தேர்வுக்கு தயார் ஆவோம்!
விமானத்தில் இருந்து போடப்பட்ட பொருள்!
இயற்பியல், XI PORTION, (projectile motion)
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
1960 மீ உயரத்தில் கிடை மட்டமாகப் பறக்கும்
ஒரு விமானத்தின் வேகம் மணிக்கு 600 கி.மீ.
தரையில் உள்ள A என்ற புள்ளிக்கு நேர்செங்குத்தாக
விமானம் வரும்போது, விமானத்தில் இருந்து
ஒரு பொருள் கீழே போடப்படுகிறது. அந்தப் பொருள்
தரையில் B என்ற புள்ளியில் விழுகிறது என்றால்,
A,Bக்கு இடையிலான தொலைவு என்ன?
(குறிப்பு: காற்றுத்தடை பொருட்டல்ல)
**
An aeroplane is flying horizontally with a speed of 600 kmph
at a height of 1960 m. When it is vertically above the point A on
the ground, a body is dropped from it. The body strikes the ground
at point B. Calculate the distance AB.
**
விடைகள் தெரிந்தோர் எழுதலாம். எமது விடை
பின்னர் வெளியிடப்படும்.
Please note: English version of the
question is official and authentic.
***************************************************************
பின்குறிப்பு: கொடுக்கப்பட்ட படம் இந்தக் கணக்கிற்கு
உரிய படம் அல்ல. இதைப்  போன்றதொரு கணக்கிற்கான
படம் ஆகும்.
-------------------------------------------------------------------------------------------


1960 மீ என்பதில் வியப்படைய என்ன உள்ளது?
ஒரு விமானம் எப்போதும் 36,000 அடி உயரத்தில்தான்
பறக்க வேண்டுமா? Gaining as well as losing the altitude is natural.
பயணிகள் விமானம் பறக்கும் உயரம் வேறு. ஜெட்
விமானங்கள் பறக்கும் உயரம் வேறு. போர் விமானங்கள்
தாழப் பறக்கும். தாழப் பறக்கும்போதுதான் இலக்கைத்
துல்லியமாக  அடையாளம் கண்டு குறி தவறாமல்
குண்டு வீச முடியும்.

நீட் 2016 தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெற்றோர் விவரம்!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
கடந்த ஆண்டு 2016 நீட் தேர்வு:
விண்ணப்பித்தோர் = 8,02,594
தேர்வு எழுதியோர் = 7,31,223
தேர்ச்சி பெற்றோர் (qualified) =4,09,477
அகில இந்திய ஒதுக்கீடான
15% இடங்களுக்குத் தேர்வு பெற்றோர் = 19325
(மொத்தம் தேறியோரில் இந்த 19325 உள்ளடக்கம்)

தேர்வு எழுதிய 7,31,223 பேரில் 4,09,477 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். தோராயமாக 55 சதம் என்ற
அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுமார் 4 லட்சம் பேர் தேறினாலும், மொத்தமுள்ள
மருத்துப்ப படிப்பு இடங்கள் தோராயமாக 50,000 தான்.
அதாவது தேறியோரில் எட்டில் ஒருவருக்குத்தான்
மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது.
*************************************************************
கன்னட மொழியில் நீட் தேர்வு நடக்குமா?
நீட் விண்ணப்பங்களை இன்னமும் பதிவிறக்கம்
செய்ய முடியவில்லையே, ஏன்?
முழி பிதுங்கி நிற்கும் CBSE!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
1) எட்டு மொழிகளில் நீட் தேர்வு நடக்கும் என்று
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.
(தமிழ் தெலுங்கு ஆங்கிலம் இந்தி குஜராத்தி மராத்தி
வங்காளி அசாமி)

2) தற்போது கன்னடத்திலும் நீட் தேர்வு நடக்க வேண்டும்
என்று கன்னடர்கள் கோரி வருகின்றனர். மத்திய
சுகாதார அமைச்சர் ஜெ பி நட்டா அவர்களும்  கன்னட
மொழியிலும் நீட் தேர்வு நடக்கும் என்று வாக்குறுதி
கொடுத்து இருக்கிறார்.

3) இவ்வளவுக்கும் ஜெ பி நட்டா ஒரு கன்னடர் அல்லர்.
அவர் இமாச்சலப் பிரதேசத்துக்காரர். அவரின்
தாய்மொழி கன்னடமும் அல்ல.

4) ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஒடிய மொழியில்
(Odisha) நீட் தேர்வு நடக்க வேண்டும் என்று கோரி
ஒற்றைக்காலில் தவம் இருந்து வருகிறார்.
இவ்வளவுக்கும் வெளிநாட்டிலேயே படித்த நவீன்
பட்நாயக் அவர்களுக்கு தம் தாய் மொழியான
ஓடியாவில் சரளமாகப் பேச வராது.

5) இத்தனை மொழிகளிலும் நீட் தேர்வுக்கான மாதிரி
வினாத்தாட்கள், மெய்யான வினாத்தாட்கள், விடைகள்,
இதர படிப்புதவிக்கான பொருட்கள் (study materials)
ஆகியவற்றை மே மாதத்திற்குள் தயாரிக்க முடியாமல்
முழி பிதுங்கி நிற்கிறது CBSE.

6) இதன் காரணமாக, ஜனவரி 24  தேதியன்று
வெளியாக வேண்டிய நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை
இன்னமும் வெளியிட முடியாமல், தலையைப்
பிய்த்துக் கொண்டு நிற்கிறது CBSE. நீட் விண்ணப்பத்தை
இன்னமும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. 

7) இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மருத்துவப்
படிப்பானது அந்தந்த மாநில மொழியில் இல்லை.
ஒட்டு மொத்த மருத்துவக் கல்வியும் ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளது.

8) நீட் தேர்வை கன்னடத்தில் எழுதும் ஒரு மாணவனால்
மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் மட்டும்தான்
படிக்க இயலும். மருத்துவ அறிவியலைக் கன்னடத்தில்
கொண்டு வர எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல்
வெறுமனே கன்னடம் வாழ்க என்று கூச்சலிடுவதால்
என்ன பயன் விளையும்?
*****************************************************************

சனி, 28 ஜனவரி, 2017

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும்
தமிழக அரசின் உத்தேச அவசரச் சட்டம்!
முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து
விலக்கு அளிக்கும் ஓர் அவசரச் சட்டத்தை
(ordnance) தமிழக அரசு கொண்டுவர இருப்பதாகச்
செய்திகள் வெளியாகி உள்ளன.

2) தமிழக சட்டமன்றத்தின் ஜனவரி 2017 கூட்டத்தொடர்
(assembly session) முடிந்து விட்டது. எனவே சட்டமன்றம்
நடைபெறாத நிலையில், அவசரச்சட்டம் மட்டுமே
கொண்டுவர இயலும்.

3) தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்
தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்
பல்கலைகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு
மட்டுமே உத்தேசச் சட்டம் விலக்கு அளிக்கக் கூடும்.

4) UG நீட் தேர்வுக்கு மட்டுமே உத்தேசச் சட்டம்
விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏனெனில் PG நீட் தேர்வு ஏற்கனவே நடைமுறைக்கு
வந்தாகி விட்டது. It has become a fait accompli.    

5) உத்தேச அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின்
ஒப்புதலைப் பெற வேண்டும். பிரணாப் முகர்ஜி
அவர்கள் ஒப்புதல் அளிப்பதாகவே வைத்துக்
கொள்ளலாம்.

6) உச்சநீதிமன்றம் அந்த அவசரச் சட்டம் செல்லாது
என்று தீர்ப்பு வழங்கி விடக்கூடாது. உச்சநீதிமன்றம்
அப்படியொரு தீர்ப்பை வழங்காது என்று
உறுதிபடக் கூற இயலாது. இன்னும் சொல்லப்
போனால், சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்குவதற்கான நிகழ்தகவு அதிகம்.
The required probability may be > 0.7 என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கருதுகிறது.

7) என்றாலும் உத்தேச அவசரச் சட்டம் குறித்தும்
அது செல்லுமா, நிற்குமா என்பவை குறித்தும்
தகுதி வாய்ந்த சட்ட நிபுணர்களே கருத்துச் சொல்ல
இயலும். எனவே அவசரச் சட்டத்தின் செல்லுபடித்
தன்மை குறித்து நியூட்டன் அறிவியல் மன்றம் கூற
எதுவுமில்லை.

8) நீட் தேர்வுக்கான உத்தேசத் தேதி 07.05.2017 ஆகும்.
இன்னும் 99 நாட்களே உள்ளன. மாணவர்கள் நீட்
தேர்வுக்குத் தயாராகி விட்டார்கள். 100 நாள் கால
அட்டவணையைத் தயாரித்துக் கொண்டு, படிப்பில்
மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

9) இந்நிலையில், பன்னீர்ச்செல்வம் அரசின் உத்தேச
அவசரச் சட்டம் குறித்து மிகைமதிப்பீடு செய்து,
பலூனைப் பெரிதாக ஊதி, "நீட் தேர்வு ரத்தாகி விடும்"
என்றெல்லாம் ஆருடம் கூறி, படிப்பில் மூழ்கிப்போன
மாணவர்களின் கவனத்தைச் சிதைத்து, அவர்களின்
படிப்பில் மண்ணள்ளிப் போட வேண்டாம் என்று
அனைத்து ரக குட்டி முதலாளித்துவ அன்பர்களையும்
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.

10) இதன் பொருள், உத்தேச அவசரச் சட்டத்தை நியூட்டன்
அறிவியல் மன்றம் எதிர்க்கிறது என்பதல்ல. அத்தகைய
புரிதல் ஏற்படுமாயின் அது பிறழ் புரிதலே ஆகும்.
முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; அதன்
பிறகு சித்தப்பா (அல்லது பெரியப்பா) என்று
அழைப்பது பற்றி யோசிக்கலாம்.
******************************************************************         
   
         
நீட் தேர்வு பற்றிய விவரங்கள்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
1) MBBS/BDS படிப்பில் சேர்வதற்கான UG நீட் தேர்வு
காகிதம்-பேனா முறையிலானது.
இது ஆன்லைன் தேர்வு அல்ல. மூன்று மணி நேரம்
நடைபெறும் தேர்வாகும் இது.

2) MD/MS படிப்பிற்கான PG நீட் தேர்வு ஆன்லைன்
தேர்வாகும். தேர்வு நேரம்: மூன்றரை மணி.

3) UG நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும்.
MCQ வகையிலான கேள்விகள். இந்த 180 கேள்விகளுக்கு
180 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். அதாவது
ஒரு கேள்விக்கு ஒரு நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும்.

4) UG நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள்.
மொத்தம் 180 X 4 = 720 மதிப்பெண்கள்.

5) UG நீட் தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்
குறைக்கப்படும். அதாவது NEGATIVE MARK வழங்கப்படும்.
ஒரு தவறான கேள்விக்கு 1 மதிப்பெண் என்ற வீதத்தில்
மதிப்பெண் குறைப்பு இருக்கும்.

6) UG நீட் தேர்வில், ஒரு பாடத்தில் 45 கேள்விகள் வீதம்,
4 பாடங்களில் (இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல்) இருந்தும் 4 X 45= 180 கேள்விகள்
கேட்கப்படும்.

7) எதிர்வரும் மே 7,2017இல் நீட் UG தேர்வு நடத்தத்
திட்டமிடப்பட்டு உள்ளது. இது ஒரு உத்தேசத்
தேதியே ஆகும். (tentative date). எனினும் இதே தேதி
உறுதி செய்யப் படலாம்.

8) நீட் UG தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க முடியும்.

9) போலிகளை நம்பி ஏமாறாமல், மாணவர்களே,
நீட் தேர்வுக்குப் படியுங்கள்; படியுங்கள்.

10) நீட் UG தேர்வில், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில்,
500 மதிப்பெண் எடுத்தாலே MMCயில் இடம் கிடைக்க
வாய்ப்பு உள்ளது. எனவே படியுங்கள்.
********************************************************************  


நீட் தேர்வை சமஸ்கிருதத்தில் எழுத முடியுமா?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ஈரேழு பதினாலு லோகம் அழிந்தாலும், நீட் தேர்வை
சமஸ்கிருதத்தில் எழுத முடியாது.

அசாம் என்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலம் இது. இங்குள்ள பழங்குடியின
மொழி அசாமி. அசாம் மாநில மக்கள் இந்த
மொழியைப் பேசி வருகின்றனர். இங்கு
மக்கள்தொகை வெறும் மூன்று கோடிதான்.

என்றாலும் நீட் தேர்வை அசாமிய மொழியில் எழுத
மத்திய மோடி அரசு அனுமதித்து உள்ளது. ஆனால்,
சமஸ்கிருதத்தில் நீட் தேர்வை எழுத முடியாது.
அதற்கு மோடி அரசு அனுமதிக்கவில்லை.

ஏன்? இந்தியாவில் எந்த மாணவரும் சம்ஸ்கிருத
மீடியத்தில் அறிவியலைப் படிக்கவில்லை.
இந்தியாவின் எந்தப் பள்ளியிலும் பயிற்று மொழியாக
(medium of instruction) சமஸ்கிருதம் இல்லை.

வடஇந்தியாவில் பல்வேறு பல்கலைகளில் சமஸ்கிருதம்
கற்பிக்கப் படுகிறது. அதாவது மொழிப்பாடமாக.
ஆனால் எங்குமே சமஸ்கிருதம் பயிற்றுமொழியாக
இல்லை.  

குறைவான எண்ணிக்கையில் பேசப்படும்
அசாமி மொழி பயிற்றுமொழியாக இருக்கிறது.
இயற்பியலை வேதியியலை அசாமிய மொழியில்
மாணவர்கள் படிக்கிறார்கள்.
அசாமிய மொழியில் நீட் தேர்வை எழுதுகிறார்கள்.

ஆனால் சமஸ்கிருதத்தில் நீட் தேர்வை
எழுத முடியாது.
இதுதான் மெய்மை. இதுதான் உண்மை.

போலி சம்ஸ்கிருத அபிமானிகளும்,
சமஸ்கிருதப் பூச்சாண்டி காட்டுபவர்களும்
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு
ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது.
அதற்காகத்தான் இந்தப் பதிவு எழுதப் படுகிறது.
****************************************************************
பின்குறிப்பு: நீட் தேர்வுக்கு இன்னும் 99 நாட்களே உள்ளன.
தேர்வு மே 7, 2017 அன்று நடைபெறும்.
---------------------------------------------------------------------------------------------------------- 
நீட் தேர்வுக்கு தயார் ஆவோம்!
இயற்பியல், XI PORTION, (Newton's laws of motion)
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
40 கி.கி நிறையுள்ள ஒரு குரங்கு 6m/second squared
வளர்வேகத்துடன் ஒரு கயிற்றின் மீது ஏறுகிறது.
கயிறானது 550 N விறைப்பைத் தாங்கும் என்றால்,
கயிறு அறுந்து விடுமா? (g = 9.8m /second squared)
*********** 
A monkey of mass 40 kg climbs with an acceleration of 6 m/second squared
on a rope which can stand a maximum tension of 550 N. Will the rope
break? (g= 9.8 m/second squared)
**
விடைகள் தெரிந்தோர் எழுதலாம். எமது விடை
இன்று இரவு வெளியிடப்படும்.
***************************************************************


(1) நீட் தேர்வுக்கு தயார் ஆவோம்! தேர்வு நாள்: 07.05.2017
இன்னும் 99 நாட்களே உள்ளன!
இயற்பியல், XI PORTION, (Newton's laws of motion)
-----------------------------------------------------------------------------
முக்கிய அறிவிப்பு: நீட் தேர்வில் 11ஆம் வகுப்பு
பாடங்களிலும் கேள்விகள் கேட்கப் படும்.
கேள்விகள் தொகுப்பு: நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
40 கி.கி நிறையுள்ள ஒரு குரங்கு 6m/second squared
வளர்வேகத்துடன் ஒரு கயிற்றின் மீது ஏறுகிறது.
கயிறானது 550 N விறைப்பைத் தாங்கும் என்றால்,
கயிறு அறுந்து விடுமா? (g = 9.8m /second squared)
***********
A monkey of mass 40 kg climbs with an acceleration of 6 m/second squared
on a rope which can stand a maximum tension of 550 N. Will the rope
break? (g= 9.8 m/second squared)
**
விடைகள் தெரிந்தோர் எழுதலாம். எமது விடை
பின்னர் வெளியிடப்படும்.
***************************************************************

தனியார் சுயநிதிக் கல்லூரித் திமிங்கலங்கள்
நுழைவுத் தேர்வை அடியோடு விரும்பவில்லை.
அவர்களின் கல்லூரிகளில் மாணவர்களைச் 
சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு இடைஞ்சலாக இருந்தது.
எனவே அதை ரத்து செய்ய அரசிடம் கோரிக்கை வைத்து
வெற்றி பெற்றனர். இதுதான் நுழைவுத் தேர்வு ரத்தாவதற்கு
உண்மையான காரணம். ஆனால் இந்த உண்மையை
மறைத்து, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு என்ற
பொய்க்காரணம் கூறப்பட்டது.
**
உண்மையில் சுயநிதி முதலைகள், மாணவர்கள்
ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பொறியியல்
படிப்பில் சேர முடியும்
என்ற நிபந்தனையை விரும்பவில்லை. ப்ளஸ் டூவில்
தோல்வி அடைந்தவர்களையும் பொறியியல் படிப்பில்
சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே
அவர்களின் வெளியே சொல்லப்படாத கோரிக்கை.
முதலாண்டின் first semester அல்லது second semester தேர்வுதான்
ப்ளஸ் டூவிலும் தேர்வாகி விடுவார்கள். அதற்கு அனுமதிக்க
வேண்டும் என்பதே சுயநிதி முதலைகளின் உள்ளக் கிடக்கை.        

வெள்ளி, 27 ஜனவரி, 2017

தடுப்பூசிகளை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம்.
இது குறித்து ஆதாரங்களுடன் முன்பே ஒரு கட்டுரை
எழுதி உள்ளேன். இங்கு நீங்கள் குறிப்பிடும் ரூபெல்லா
தடுப்பூசி குறித்து நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
உறுப்பினர்களாக உள்ள மருத்துவர்களிடம் கருத்துக்
கேட்டறிந்து, பின்னர் எழுதுகிறேன்.

CBSE என்பது வானத்தில் இருந்து குதித்து வந்த
அமைப்பு அல்ல. தேவதைகளால் மட்டுமே நடத்தப்படும்
அமைப்பும் அல்ல. ஆந்திர மாநிலப் பாடத்திட்டமானது
CBSE பாடத்திட்டத்தை விடத் தரம் வாய்ந்தது. பல்வேறு
மாநிலங்களிலும் CBSEக்கு நிகராக, பாடத்திட்டம்
மாற்றப்பட்டு விட்டது. காலத்துக்கு ஏற்றவாறு
பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதில் எல்லா மாநிலங்களும்
போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன.

ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அரசுகள்
பாடத்திட்டத்தை மாற்றாமலும், காலத்திற்கு ஏற்றவாறு
புதுப்பிக்காமலும் தம் கடமையைத் தட்டிக் கழித்தன.
உலகமே அழிந்தாலும் சரி, நாங்கள் பாடத்திட்டத்தைப்
புதுப்பிக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும்
அரசுகளே குற்றவாளிகள். இந்த உண்மையைப்
பார்க்க மறுப்பது என்ன நியாயம்?

11, 12 இரு வகுப்புகளின் பாடங்களிலும் இருந்துதான் 
நீட் தேர்வின் கேள்விகள் அமையும். எனவே 11ஆம்
வகுப்புப் பாடங்களை நடத்தாமல் விடுவது என்ற
பேச்சுக்கே இடமில்லை.

 
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் ஒரு தனித்தீவாக
தனிமைப்பட்டுக் கிடக்கிறது. பாடத்திட்டத்தை
அவ்வப்போது புதுப்பித்தால், புதுப்பித்து இருந்தால்
இன்று இவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இல்லை.


மாற்றத்தை எப்போதுமே எதிர்த்துக் கொண்டு இருக்க
முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில், எதிர்வருகிற மாற்றத்தை
ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அந்த நிர்ப்பந்தத்தை
நீட் தேர்வு ஏற்படுத்தி இருக்கிறது. இதுதான் யதார்த்தம்.
தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து
மேலும் சில காலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்குப்
பெறலாம். அல்லது நீதிமன்றத்தின் மூலம் ஏதேனும்
நிவாரணம் பெற முயன்று பார்க்கலாம். இவையெல்லாம்
தாற்காலிகத் தீர்வுகள். பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பது,
தேர்வு முறையை மாற்றியமைப்பது உள்ளிட்ட தேவையான
அனைத்து சீர்திருத்தங்களையும் போர்க்கால அடிப்படையில்
தமிழக அரசு செய்வதே நிரந்தரமான தீர்வாக அமையும்.

இது போன்ற அருவருக்கத்தக்க பொய்யான கமென்ட்களைத்
தவிர்த்து விட்டு, உங்கள் கருத்தை நீங்கள் வலுவாகக்
கூறலாமே.


நீட் தேர்வு முதன் முதலில் ஐமுகூ ஆட்சியின் போதுதான்
கொண்டு வரப்பட்டது. அன்புமணி ராமதாசுக்குப் பின்னர்,
மத்திய சுகாதார அமைச்சரான குலாம் நபி ஆசாத்
காலத்தில்தான் முதன் முதலாக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வின் தந்தை குலாம் நபி ஆசாத் அவர்கள்தான்.
**
அப்போது மு க அழகிரி உட்பட பல திமுக அமைச்சர்கள்
மத்திய அரசில் இருந்தனர். அப்போதே சுதாரித்து இருந்தால்,
இன்று மூக்கைச் சிந்த வேண்டிய நிலை வந்திருக்காது.
   


DOMICILE STATUS (வசிப்பிடத்தகுதி) அடிப்படையில்தான்
மருத்துவக் கல்லூரி இடம் வழங்கப்படும். அதாவது
தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.  பாலக்காட்டில் வசிக்கும் மலையாளி  தமிழக மருத்துவ இடத்தைப் பெற முடியாது.
ஏனெனில், வசிக்கும் இடம் பாலக்காடு, கேரளம். அதே நேரத்தில்,
தமிழ்நாட்டில் வசித்து, இங்குள்ள பள்ளியில் படிக்கும்
மலையாள மாணவனுக்கு மருத்துவ இடம் பெறத் தகுதி
உண்டு. ஆந்திராவிலும் இதே நிலைமைதான். அதாவது
வசிப்பிடத் தகுதிதான் தீர்மானிக்கிற காரணி ஆகும்.  

பாடத்திட்டத்தைப் புதுப்பிக்காமல் விடுவதன் மூலம்
தமிழ்நாடு தனித்தீவாகி விடுகிறது.


நீங்கள் சொல்வது சரிதான் சார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புதான் நீட் தேர்வு கட்டாயம்
என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. மத்திய
அரசின் அரசாணை மூலமாக இந்த நிர்ப்பந்தம் ஏற்படவில்லை.

தங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. தங்களின்
கருத்துக்கள் உட்படப் பலரின் பல்வேறு கருத்துக்களும்
தொகுக்கப்பட்டு மொத்தமாக மறுமொழி தரப்படும்.
மேனன் சமாதி சென்னைக் கடற்கரையில் இருக்கும்வரை
மலையாளிகள் இங்கு வருவதைத் தடுக்க முடியாது.
அதிகாரம் பெறுவதைத் தடுக்க முடியாது.


1) நீட் தேர்வு தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி உள்ளிட்ட
பல்வேறு மொழிகளில் நடக்கிறது.
2) சமச்சீர் கல்வி என்பது தமிழ்நாட்டில் 11, 12 வகுப்புகளுக்கு
கிடையாது. தமிழ்நாட்டில், தமிழக அரசு நடத்தும்
ப்ளஸ் டூ தேர்வுகளே சமச்சீர் கல்வி முறையில்
நடைபெறுவதில்லை என்பதை அறிக. 

நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமானது அல்ல.
இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் நீட் தேர்வு உண்டு.
29 மாநிலங்களிலும் வெவ்வேறு பாடத்திட்டம்தான் உள்ளது.

நீட் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களே
மருத்துவ இடத்தைத் தீர்மானிக்கும்.


1) நீட் தேர்வு அறிவியல் பாடங்களில் மட்டுமே நடைபெறும்
தேர்வு (உயிரியல், இயற்பியல், வேதியியல்). உலகம்
முழுவதும் இப்பாடங்கள் பொதுவானவையே.
மொழிப்பாடங்கள், இலக்கியம், வரலாறு ஆகிய
பாடங்கள்தான் மாநிலத்திற்கு மாநிலம் மாறும்.
அறிவியல் பாடங்களில் பாரதூரமான மாற்றம் எதுவும்
கிடையாது.எனவே பாடத்திட்ட வேறுபாட்டை நமக்கு
பாதகம் ஏற்படாவண்ணம் கையாள இயலும்.

2) மத்திய அரசின் அவசரச் சட்டம் ஓராண்டுக்கு மட்டுமே
(2016) விதிவிலக்கு அளித்தது. அது முடிந்து போய் விட்டது.
எனவே இந்த ஆண்டு (2017-18) அவசரச் சட்டம் வழங்கிய
விதிவிலக்கு கிடையாது.

3) ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் புதிதாக
உருவாக்கப் பட்டவை. எனவே அந்தக் காரணத்தால்
அவற்றுக்கு சிறப்புச் சலுகை சில காலத்திற்கு
வழங்கப் பட்டுள்ளது. இந்தச் சலுகை மற்ற மாநிலங்களுக்குப்
பொருந்தாது.

காலத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதில்
எல்லா மாநிலங்களும் தங்கள் கடமையைச் செய்துள்ளன.
துரதிருஷ்ட வசமாக, தமிழ்நாட்டில் கடந்த கால் நூற்றாண்டு
காலமாக பாடத்திட்டம் புதுப்பிக்கப் படவே இல்லை. இது
யாருடைய தவறு? பொறுப்பற்ற அரசின் தவறு.

சட்டத் திருத்தம் வந்த பிறகே அதைப்பற்றிக் கூற இயலும்.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி பத்தாம் வகுப்பு வரை
மட்டுமே. 11, 12 வகுப்புகளுக்கு சமச்சீர்க் கல்வி அறிமுகப்
படுத்தப் படவே இல்லை. இதுதான் உண்மை.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஒரு சட்டம் மூலம்
சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. முதலாண்டில்
ஒன்றாம் வகுப்பிற்கும், அடுத்தடுத்த ஒவ்வொரு ஆண்டிலும்
ஒவ்வொரு வகுப்புக்கும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்
பட்டது. பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி செயலாக்கம்
பெற்றது (IMPLEMENTED). 11,12 வகுப்புகளில் சமச்சீர் கல்வி
அறிமுகம் செய்யப்படவே இல்லை. எனவே 11,12 வகுப்புகளுக்கு
சமச்சீர் கல்வி என்பதே கிடையாது.


விதண்டாவாதம் வேண்டாம். தமிழக அரசு 2010இல்
கொண்டுவந்த சமச்சீர்க்கல்விக்கான சட்டத்தின் பெயர்
Tamilnadu Uniform System of School Education Act 2010 என்பதாகும்.
2010இல் ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும்
சமச்சீர்க்கல்வி அறிமுகம் செய்யப் பட்டது. பின்னர்
பத்தாம் வகுப்பு வரை செயலாக்கம் பெற்றது. 11,12
வகுப்புகளுக்கு சமச்சீர்க்கல்வி அறிமுகம் ஆகவே இல்லை.
நீட் தேர்வு குறித்த உண்மைகள்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
1) நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).
அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).

2) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்
கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட்
தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப் படும்.
தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை
பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில்
மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG)
நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே
நிரப்பப் படும்.

3) மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில்
வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.
இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
இது அப்படியே தொடரும்.

4) நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின்
இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம்
உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,
தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்வித
மாற்றமும் இன்றி நீடிக்கிறது.

5) தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
இது அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு
மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே
தொடரும்.

6) குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப்
பிள்ளைகள், ஒரு கோடி  முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்
வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்
பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்
கொடிய வழக்கம் முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்
கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ
இடம் கிடைக்காது. இந்த நிலையை நீட் தேர்வு
உருவாக்கி இருக்கிறது. சுருங்கக் கூறின்,  தனியார் மற்றும்
நிகர்நிலைப் பல்கலைகளின் "கல்வித் தந்தை"களுக்கு
மரண அடி கொடுப்பதே நீட் தேர்வின் ஒரே நோக்கம்.

7) மருத்துவக் கல்வியில் ஒரு குறைந்தபட்ச தரத்தை
உருவாக்குவதும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ
இடங்களை நிரப்புவதில் ஓர் ஒழுங்காற்றை
ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.(The sole purpose of
NEET is to regulate the seat allotment).

8) எனவேதான் மாநிலத்திற்கு உரிய இடங்கள், இட ஒதுக்கீடு
முதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. நீட் தேர்வானது அந்த விஷயங்களில்
எல்லாம் தலையிடவே இல்லை. அந்த விஷயங்கள்
நீட் தேர்வின் செயல்பாட்டு வரம்புக்கு உட்படவே இல்லை.

9) நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநில
அரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.
அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக்
கல்வி பெற முடியும். அவ்வளவுதான்.

10) தனியார்மயக் கைக்கூலிகளும், சுயநிதி மருத்துவக்
கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகளுமே பெருங்
கூச்சலிட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
********************************************************************     
  
      

வியாழன், 26 ஜனவரி, 2017

1) டி  சிட்டர் வெளி
2) டி சிட்டர் எதிர் வெளி
3) symmetry determines interactions
4) பிரபஞ்ச மாறிலி
5) acclerating universe nobel prize
6) expanding universe nobel prize
--------------------------------------------------
strings vibrate in infinite ways. an infinite spectrum of vibrations.
strings have orientation
a string is a line segment indeed, infinitely thin line segment
string theory includes tachyans with negative mass
star trek movies for tachyans
------------------
compare: an electron and a string
electron= 10^minus 18
string= plank length 10^minus 33
So, if electron is a lemon or pumpkin coconut foot ball
then string is like a strand of hair
ஒரு இழைக்கும் வேறொரு இழைக்கும்    வேறுபாடு உண்டா

strings are made up of nothing. strings are not made of energy just like particles are
not made of energy
---------------------------------------------
The vibrating string is analogous to a pendulum swinging. A swinging pendulum will have maximum velocity while it is passing through the equilibrium point. This kind of energy is called kinetic energy. The other type of energy, related to position rather than velocity will be maximum at the highest point of swing. This type of energy is called potential energy. The string has the same energy storage characteristics. Only the spring has infinite degree of freedoms (any section on the string is a different mass) while the pendulum only has one.

The continuos vibration of the string, which is called "harmonic motion" is caused by those two types of energy being unable to balance each other. They can be translated to each other only through time and space. When the system is disturbed from its equilibrium, these energies occur in certain amounts and they cause motion. But because they are connected only through time (you don't get any movement if you have lots of speed but no time) they never really reach but keep chasing each other. One is translated to the other and back to the other again. This is called harmonic motion and is actually a circular, never ending motion. It is solved by Euler's Equation and unless there's friction, it continues forever.
------------------------------------
why string theory not experimentally proved
LHC two versions and energy scales
-------------
simple harmonic motion never ending
-------------
cavandish experiment to prove gravitional constant G
--------------------------------------------------------------------------------------
STANDARD COSMOLOGY 
baryonic matter = 5%
dark matter = 25%
dark energy= 70%
Not yet detected in any experiment
known and detectable only via gravity
-----------------------------------------------
scalar field; e.g higgs field. It is everywhere, no direction. Also atmopheric temperature is a scalar field. At any point in the field, the value of the temperature is a scalar 
vector field: electro magnetic field. gravitational field  
----------------------------
MOND Modified Newtonian Dynamics, an alternate theory for relativity

செவ்வாய், 24 ஜனவரி, 2017

இழைக்கொள்கை (String Theory) என்றால் என்ன?
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-----------------------------------------------------------------------
வடிவியலின் தந்தை யூக்ளிட், புள்ளி என்பதைப்
பின்வருமாறு வரையறுத்தார்: "ஒரு புள்ளிக்கு நிலையிடம்
உண்டு; ஆனால் பரிமாணம் கிடையாது".
(A point has a position but no dimension). இதே சொற்களை
யூக்ளிட்  பயன்படுத்தவில்லை என்றாலும் புள்ளி
என்பது பற்றி யூக்ளிட் உணர்த்தியது இதுதான்.

புள்ளிகள் பரிமாணம் எதுவும் இல்லாதவை
(zero dimensional). நீளம், அகலம், உயரம், பரப்பளவு, கனஅளவு
என்பன போன்ற எந்தப் பரிமாணமும் இல்லாததே புள்ளி.
இதுதான் யூக்ளிட் வகுத்த புள்ளியின் இலக்கணம்.
இவ்வுலகில் பூஜ்ய பரிமாணம் என்பது உண்மையில்
இருக்கிறதா என்றும், அது வெறும் கணிதக் கருத்தாக்கம்
மட்டும்தானா  என்றும் கேள்விகள் அன்றே எழுந்தன.
(Does a  point have a physical existence really? Is it real or a mere
mathematical abstraction?)

ஒரு புள்ளி என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அது இன்ன இடத்தில் இருக்கிறது என்று சுட்ட முடியும்.
ஆனால் ஒரு புள்ளியை நாம் பார்க்க இயலாது. காகிதத்தில்
பென்சிலால் நாம் வைக்கும் புள்ளியானது உண்மையில்
பரிமாணம் ஏதுமற்றது அல்ல; மாறாக முப்பரிமாணம்
உடையது. ஒரு நுண்ணோக்கியில் பார்த்தால் இது
புலனாகும். எனவே பரிமாணம் ஏதுமற்ற புள்ளியை
நாம் புரிந்து கொள்ள முடியுமே தவிர, பார்க்க இயலாது.
இங்கு இயலாமை என்பது மனித ஆற்றலின் குறைபாட்டைக்
குறிக்காது. மிகவும் ஆற்றல் வாய்ந்த, ஒரு பொருளை
பல லட்சம் மடங்கு பெரிதாக்கிக் காட்டும்  எலக்ட்ரான்
நுண்ணோக்கி மூலமாகவும்கூட ஒரு புள்ளியைப் பார்க்க
இயலாது. ஏனெனில் புள்ளி என்பது ஓர் கணிதக் கருத்தாக்கமே.

நமது பிரபஞ்சம் பற்றிய ஒரு சித்திரத்தை துகள் இயற்பியல்
துறையினர் வரைந்து வைத்துள்ளனர். தரமாதிரிச் சித்திரம்
(Standard Model) என்று இதற்குப் பெயர். இங்கு சித்திரம் என்பது
சித்தரிப்பு (description) என்று பொருள்படும்; ஓவியம் என்று
பொருள்படாது. இச்சித்திரத்தில் உள்ள துகள்கள் யாவும்
புள்ளிகளாகவே (point like particles) கருதப் படுகின்றன.

பொருட்கள் அணுக்களால் ஆனவை. அணுக்கள் துகள்களைக்
கொண்டுள்ளன. அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டானும்
நியூட்ரானும் துகள்களே. இவை குவார்க்குகள் என்ற
அடிப்படைத் துகள்களால் ஆனவை. உட்கருவுக்கு வெளியே
அதை ஒரு மேகமூட்டம் போலச்  சுற்றிக் கொண்டிருக்கும்
எலக்ட்ரான்களும் துகள்களே. இத்துகள்கள் யாவும்
இயற்பியலில் புள்ளிகளாகவே கருதப் படுகின்றன.

எலக்ட்ரான் மிக மெல்லிய துகள்களில் ஒன்று. அதன் நிறை
9.1 x 10^minus 32 கிலோகிராம் ஆகும். வேறு எதுவாலும்
ஆக்கப்படாத ஓர் ஆரம்ப நிலைத் துகளே  (elementary particle)
எலக்ட்ரான். பல்வேறு "துகள் மோதல்" பரிசோதனைகளில்
கிடைத்த முடிவுகளுக்கு விளக்கம் அளித்த அறிவியலாளர்கள்
எலக்ட்ரானின் அளவு (physical size) 10^minus 18 என்பதை விடக் குறைவு என்று கூறுகின்றனர்.

கனத்த துகள்களான புரோட்டான், நியூட்ரான்
பற்றிச் சொல்லவே  வேண்டாம். இவை கலவைத் துகள்கள்
(composite particles). இவை ஒவ்வொன்றும் வெவ்வேறான
சேர்க்கையால் அமைந்த மூன்று குவார்க்குகளால் ஆனவை.
புரோட்டானின் நிறை 1.67 x 10^minus 27 கிலோகிராம்.
புரோட்டானின் அளவு 0.84 to 0.87 ஃபெம்டோ மீட்டர்.
(1 femto meter = 10^minus15.

மேலே கூறியுள்ள விவரங்களில் இருந்து துகள்கள்
அண்ட வெளியில் ஓர் இடத்தை அடைக்கின்றன என்பது
புரியும். என்றாலும், துகள் மோதல் உள்ளிட்ட பல்வேறு
பரிசோதனைகளிலும் அவற்றைத் தொடர்ந்த கணக்கீடுகளிலும் துகள்கள் யாவும் புள்ளிகளாகவே.
அண்டவெளியில் இடத்தை அடைக்காத வெறும்
புள்ளிகளாகவே கணக்கில் கொள்ளப் படுகின்றன.
துகள்களின் அளவைப் பொருட்படுத்தத் தேவையற்ற கணக்கீடுகளில் இது வெற்றி அடைகிறது. ஆனால்,
துகள்களின் அளவு கணக்கீட்டின் தவிர்க்க இயலாத பகுதியாக
அமையும்போது, எலக்ட்ரான் போன்ற துகள்களைப்
புள்ளிகளாகக் கருதுவது, கணக்கிடுதலில் வரம்பிலிகளைத்
(infinities) தருவித்து விடுகிறது. கணக்கீட்டில்
வரம்பிலிகள் வருமானால் மேற்கொண்டு நகர முடியாமல்
போகும்.


கணக்கிடுதலில்  எவ்வாறு வரம்பிலிகள் வருகின்றன
என்பதை பின்வரும் உதாரணத்தின் மூலம் அறியலாம்.
ஒரு புள்ளிக்கு மிக மிகப் பக்கத்தில் நெருங்க நெருங்க
(infinitely close) அதன் மீது செயல்படும் விசையானது
வரம்பிலியாக மாறி விடுகிறது என்பது இயற்பியலின்
பாலபாடம் ஆகும். ஈர்ப்பு விசை குறித்த, புகழ் பெற்ற
நியூட்டனின் "தலைகீழ் வர்க்க விதி"யைக் (inverse square law)
கருதுவோம். F = G x m1 x m2 divided by r^2 என்பதில் m1, m2 ஆகியவை
பொருட்களின் நிறையையும், r என்பது இரண்டு
பொருட்களுக்கு இடையிலான தூரத்தையும் குறிக்கும்.
இங்கு தூரம் குறையக் குறைய, விசை அதிகரிப்பதையும்
தூரம் பூஜ்யமாகிறபோது விசை வரம்பிலி ஆகிவிடுவதையும்   அறியலாம். இவ்வாறு கணக்கீட்டில் வரம்பிலிகள்
வருகிறபோது, மேற்கொண்டு அடி எடுத்து வைப்பது
மிகக் கடினமாகி விடும். இதனால்தான் இயற்பியலாளர்கள்
வரம்பிலியை விரும்புவதில்லை.
   

இழைக் கொள்கை இதற்குத் தீர்வு கண்டுள்ளது.
வரம்பிலிகளால் ஏற்படும் சிக்கல்கள் இழைக் கொள்கையில் அகற்றப்படுகின்றன. பூஜ்ய
பரிமாணம் உடைய துகள்களுக்குப்பதிலாக ஒற்றைப்
பரிமாணம் கொண்ட (one dimensional) இழைகள்
அறிமுகப் படுத்தப்படுகின்றன.

ஒரு இழையின் அளவு என்பது இங்கு இழையின் நீளத்தை
மட்டுமே குறிக்கும். ஏனெனில் இழை என்பது ஒரே ஒரு
பரிமாணம் மட்டுமே கொண்டது. இந்த இழையின் நீளம்
பிளான்க்கின் நீளம் (Plank length)ஆகும். குவான்டம் கொள்கையை
முதன் முதலில் தோற்றுவித்த மாக்ஸ் பிளான்க் நினைவாக
இந்த அலகு. இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக மிகச் சிறிய
நீளம் பிளான்க் நீளம் ஆகும். இதன் மதிப்பு
1.616 229 x 10^minus 35 மீட்டர் ஆகும். இந்த மதிப்பு கோட்பாட்டு
வழியிலான மதிப்பீடே தவிர, பரிசோதனை மூலமாக
நிறுவப்பட்டது அல்ல. இன்றைய தொழில்நுட்பம்
இந்நீளத்தை அளவிடும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது அல்ல. அதாவது இவ்வளவு மிகச் சிறிய நீளத்தை அளக்கவல்ல கருவி இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தற்போது இல்லை. பிளான்க் நீளம்
என்பது அளக்கக்கூடிய நீளத்தின் கோட்பாட்டு வரம்பாகக்
(theoretical limit) கருதப் படுகிறது. அதாவது இதற்குக்  கீழான
நீளத்தை அளக்க இயலாது என்று பொருள். மனிதர்களால் வெறுங்கண்ணால் பார்த்து அளக்கக் கூடிய நீளம் 1 மி.மீ
என்பதோடு இதை ஒப்பு நோக்கலாம்.

 இழைகளும் அதிர்வுகளும்
--------------------------------------------------
இழைகளும் அவற்றின் அதிர்வுகளுமே இந்தப் பிரபஞ்சம்
என்கிறது இழைக்கொள்கை. இழைகள் என்பவை
அனைத்துக்குமான அடிப்படை அலகுகள். இழைகள்
ஒற்றைப் பரிமாணம் உள்ளவை; வரம்பில்லாத அளவு
மெல்லியவை (infinitely thin). இவற்றின் அதிர்வுகளால்
(vibrations) துகள்கள் உண்டாகின்றன. இழைகள் ஒரு குறிப்பிட்ட
விதத்தில் அதிர்ந்தால் எலக்ட்ரான்களும். வேறொரு
விதத்தில் அதிர்ந்தால் ஃபோட்டான்களும் உண்டாகின்றன.   


பொருள்சார் துகள்களும் (குவார்க்கு போன்றவை)
ஆற்றல்சார் துகள்களும் (ஃபோட்டான் போன்றவை)
இழைகளின் அதிர்வுகளின் விளைவே என்கிறது
இழைக்கொள்கை. தரமாதிரிச் சித்திரம் (standard model)
கூறுவதில், "பொருட்கள் துகள்களால் ஆனவை" என்பது
வரை இழைக்கொள்கை ஏற்றுக் கொள்கிறது. அதற்கு மேல்
ஒருபடி சென்று, "துகள்கள் ஆரம்ப அலகுகள் அல்ல"
என்றும் இழைகளின் அதிர்வுகளாலேயே துகள்கள்
உண்டாகின்றன என்றும் கூறுகிறது.

இழைகளைப் புரிந்து கொள்ள அவற்றை ஒரு வீணையின்
தந்திகளுடன் ஒப்பிடலாம்.  வீணை என்பது மூன்று அல்லது
நான்கு அடி நீளமுள்ள ஒரு நரம்புக் கருவி ஆகும். இதில் உள்ள தந்திகள் வெவ்வேறு இழுவிசையுடன் (tension) இருபுறமும்
இழுத்துக் கட்டப் பட்டிருக்கும். வெவ்வேறு தந்திகளை
மீட்டும்போது, வெவ்வேறு விதமான இசை பிறக்கும்.
அதாவது, வீணையின் தந்திகளை விரல்களால் வருடும்போது,
இசை பிறக்கிறது. அதைப்போல இழைகளில் அதிர்வு ஏற்படும்போது, துகள்கள் உண்டாகின்றன.

ஒரு எலக்ட்ரானை துகள் என்று மட்டுமே கருதுகிறது
தரமாதிரிச் சித்திரம். ஆனால் இழைக்கொள்கை
எலக்ட்ரானை மட்டுமின்றி, ஒவ்வொரு துகளையும் இழையாகக் கருதுகிறது. துகள் என்று சொன்னால் அது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும்; அதாவது நகரும்.
இதைத்தவிர ஒரு துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.
ஆனால் ஒரு இழையோ ஆடும், அசையும், அதிரும்.
வெவ்வேறு விதமாக அதிரும். இந்த ஒட்டு மொத்தப்
பிரபஞ்சமே இழைகளின் அதிர்வுகளால் ஆனதுதான்
என்கிறது இழைக்கொள்கை.

திறந்த இழைகளும் மூடிய இழைகளும்
-----------------------------------------------------------------------
இரண்டு வகையான இழைகளை இழைக்கொள்கைகள்
குறிப்பிடுகின்றன. 1) திறந்த இழை (open string) 2) மூடிய இழை
(closed string). திறந்த இழை என்பது ஒரு கயிற்றுத் துண்டு
போன்றது. இதற்கு இரண்டு முற்றுப்புள்ளிகள் (end points)
உண்டு. மூடிய இழை என்பது ஒரு வளையம் (closed loop) ஆகும்.
இது ஒரு ரப்பர் பாண்ட் போன்றது. இதற்கு முற்றுப் புள்ளிகள்
இல்லை.

எனினும் திறந்த மற்றும் மூடிய இழைகளுக்கு இடையில்
பெரிய வேற்றுமை இருப்பதாகக் கருத வேண்டியதில்லை.
அதிர்வுகளின்போதும்  ஊடாட்டங்களின்போதும்  (interactions)
திறந்த இழைகள் மூடிக் கொள்ளும்; மூடிய இழைகளாக மாறும். மூடிய இழைகள் உடைந்து திறந்த இழைகளாக மாறும்.
இழைகளின் அதிர்வு காரணமாகவே துகள்கள் உண்டாகின்றன.
ஈர்ப்புவிசையின் புலத்துகளான கிராவிட்டான் (graviton) என்ற துகள்
மூடிய இழைகளின் ஒரு குறிப்பிட்ட விதத்திலான அதிர்வு
காரணமாகவே உண்டாகிறது என்று இழைக்கொள்கை
கூறுகிறது.

நியூட்டனின் வெளியும் ஐன்ஸ்டினின் வெளி-காலமும்
---------------------------------------------------------------------------------------------
நியூட்டனின் வெளி (space) நீளம், அகலம், உயரம்
என்னும் மூன்று பரிமாணங்களைக் கொண்டது.
இம்மூன்று பரிமாணங்களும் பார்வைக்குப் புலனாகக்
கூடியவை. எனவே எல்லோரும்  எளிதில் இதை உணர்ந்து
ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் ஐன்ஸ்டின் கூறிய
வெளி நான்கு பரிமாணங்களைக் கொண்டது.
காலம் என்பது நான்காம் பரிமாணம் என்றார் ஐன்ஸ்டின்

வெளியும் காலமும் வெவ்வேறானவை, தனித்தனியானவை
என்றார் நியூட்டன். மேலும் வெளியும் காலமும்
தனிமுதலானவை (absolute) என்றும் கருதினார் நியூட்டன். இதை
மறுத்தார் ஐன்ஸ்டின். வெளியும் காலமும் ஒன்றிணைந்தவை; ஒன்றில் இருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதபடி
அமைந்தவை   என்றார். மேலும் வெளியும் காலமும்
தனிமுதலானவை அல்ல என்றும் அவை சார்புத்தன்மை
கொண்டவை (relative) என்றும் ஐன்ஸ்டின் மெய்ப்பித்தார்.

மேலும், நியூட்டனின் வெளி தட்டையானது. ஆனால்
ஐன்ஸ்டினின்வெளி வளைவானது. இந்த
அமைப்புக்கு வெளி-கால வளைவு (space time curvature)
என்று ஐன்ஸ்டின் பெயரிட்டார். யூக்ளிட்டின் தட்டையான
வடிவியல் (flat space geometry) மூலம் நியூட்டனின் வெளியைப் புரிந்து
கொள்ளலாம். ஆனால் ஐன்ஸ்டினின் வளைந்த வெளியைப்
புரிந்து கொள்ள இயலாது.

எனவே தனக்கான ஒரு வடிவியலைத் தேடிய ஐன்ஸ்டினுக்கு,
ரீமன் (Riemann) என்ற கணித அறிஞரின் வளைதள வடிவியல்
(curved space geometry)  பயன்பட்டது. ஒரு முக்கோணத்தில்
மூன்று செங்கோணங்கள் இருக்க முடியுமா?
யூக்ளிட்டின் வடிவியலில் இயலாது. ஆனால் ரீமனின்
வடிவியலில் அது சாத்தியம். கோணங்களின் கூட்டுத்தொகை
180 டிகிரியை விடக் குறைந்த ஒரு முக்கோணம் யூக்ளிட்டின்
வடிவியலில் இயலாது; ஆனால் ரீமனின் வடிவியலில்
அது இயலும். இவ்வாறு யூக்கிளிட்டின் வடிவியலும்,
ரீமனின் வடிவியலும் வேறுபட்டவை; வெவ்வேறு
தளங்களுக்கானவை. வளைவான தளத்திற்கான வடிவியல்   மூலமாகத்தான், பொதுச் சார்பியல்
கோட்பாட்டை ஐன்ஸ்டினால் விளக்க முடிந்தது. இழைக்  கொள்கையும் வளைவான வடிவியலையே பின்பற்றுகிறது.

ஐன்ஸ்டினின் ஆசிரியரான மின்கோவ்ஸ்கி, காலம் உட்பட
நான்கு பரிமாணங்களைக் கொண்ட ஒரு வெளியை
உருவாக்கினார். அது அவரின் பெயரால், மின்கோவ்ஸ்கி வெளி
(Minkovski space) என்று அழைக்கப் படுகிறது. சிறப்புச் சார்பியல்,
பொதுச்சார்பியல் இரண்டு கோட்பாடுகளையும் விளக்க
மின்கோவ்ஸ்கி வெளி பயன்பட்டது.

இழைக்கொள்கையின் வெளியும் பத்துப் பரிமாணங்களும்
------------------------------------------------------------------------------------------------------------
இழைக்கொள்கை மொத்தம் பத்துப் பரிமாணங்களைக்
கூறுகிறது. இழைக்கொள்கையில்  "வெளி"யின் (space)
பரிமாணங்கள் ஒன்பது மற்றும் ஒரு காலப் பரிமாணம்
என்பதாக மொத்தம் 10 பரிமாணங்கள். ஐன்ஸ்டின்
கூறியவை போக, ஆறு பரிமாணங்கள் அதிகம்.
இந்த ஆறு பரிமாணங்களும் கண்ணுக்குப் புலப்படாமல்
மறைந்து கிடப்பவை (hidden dimensions) என்று இழைக்கொள்கை கூறுகிறது.

மறைந்து கிடைக்கும் ஆறு பரிமாணங்களைக் கொண்ட
வெளி கலாபி-யாவ் வெளி (Calabi Yau space)  என்று அழைக்கப்
படுகிறது. இது உள்வெளி (inner space) எனவும் பெயர் பெற்றுள்ளது.
கலாபி (Eugenio Calabi) என்பவர் அமெரிக்க கணிதப் பேராசிரியர்.
ஷிங் துங் யாவ் (ShingTungYau) என்பவர் சீன நாட்டவரான
ஹார்வர்டு பல்கலைப் பேராசிரியர். இவ்விருவரின் பெயரால்
மறைந்திருக்கும் ஆறு பரிமாணங்கள்அடங்கிய வெளி,
கலாபி-யாவ் வெளி என்று அழைக்கப் படுகிறது.

ஐன்ஸ்டின் கூறும் நான்கு பரிமாண வெளி-காலத்தின்
ஒவ்வொரு புள்ளியிலும், ஆறு பரிமாண கலாபி-யாவ் வெளி
மறைந்து கிடக்கிறது. எனவே இது உள்வெளி எனப்படுகிறது.
பொதுச் சார்பியலின் நான்கு பரிமாண வெளி-காலத்தை
இழைக்கொள்கை ஏற்றுக்கொண்டு, அதில் ஒரு
உள்வெளியைப் புகுத்துகிறது. உள்வெளியின் மறைந்திருக்கும்
ஆறு பரிமாணங்களும் வெளி சார்ந்த பரிமாணங்களே
(dimensions of space). அதாவது இழைக் கொள்கையிலும், பொதுச் சார்பியலைப் போன்று,  காலப் பரிமாணம் ஒன்றே ஒன்றுதான்.

இழைக்கொள்கையின் தோற்றமும் வரலாறும்:
------------------------------------------------------------------------------------
இழைக்கொள்கை அண்மைக்காலத்தின் கொள்கை என்றாலும்,
உண்மையில் அதற்கு நீண்டதொரு வரலாறு உண்டு.
1921இல் ஐந்து பரிமாணங்களைக் கொண்ட ஒரு கோட்பாட்டை
தியடோர் கலூசா வெளியிட்டார். இது
பொதுச்சார்பியலின் ஒரு நீட்சியே தவிர, சுதந்திர அளவீடு
(free parameter) எதையும் கலூசா முன்மொழியவில்லை.
1940இல் ஆஸ்கர் க்ளைன் (Oscar Klein) இதே கொள்கையை,
தம் சொந்த முனைப்பில், அதாவது கலூசாவைச் சாராமல்,
வெளியிட்டார். ஐந்தாம் பரிமாணம் என்பது நுண்ணியது என்றும் சுருண்டு கிடப்பது (microscopic and curled)
என்றும் அவர்  விளக்கினார். இதைத் தொடர்ந்து இக்கொள்கை
இவ்விருவரின் பெயராலும் கலூசா க்ளைன் கோட்பாடு,
சுருக்கமாக கேகே கோட்பாடு (K K Theory) என்று பெயர் பெற்றது.

1960களில் போசானிய இழைக்கோட்பாடு (Bosonic string theory)
வெளியிடப்பட்டது. இக்கோட்பாடு போசான்களைப்
பற்றி மட்டுமே பேசியது. இதில் பெர்மியான்களுக்கு
இடமில்லை. எனவேதான் இப்பெயர். இக்கோட்பாடுதான்
இன்றைய இழைக்கோட்பாடுகளுக்கு எல்லாம்
மூலம் (original). இதில் மொத்தம் 26 பரிமாணங்கள்.
(வெளிசார் பரிமாணங்கள் 25 மற்றும் காலப் பரிமாணம் ஒன்று).
எனினும், இந்தப் பிரபஞ்சத்தில் முக்கியமான
பருப்பொருட்களின் துகள்களாகிய (matter particles)
ஃபெர்மியான்களை உள்ளடக்காமல் விட்டதால்,
இக்கொள்கை தோல்வி அடைந்தது.

காலப்போக்கில், 1980களில், ஃபெர்மியான்களை உள்ளடக்கிய
இழைக் கொள்கை முன்மொழியப்பட்டது. ஃபெர்மியான்களை
உள்ளடக்க, அதிசமச்சீர்மை (super symmetry)
என்ற பண்பு கற்பிக்கப்பட்டது. அதிசமச்சீர்மையைப் புரிந்து கொள்ள போசான்கள் மற்றும் ஃபெர்மியான்கள் பற்றித்
தெரிந்து கொள்ள வேண்டும்.போசான்கள் ஆற்றலின்
துகள்கள் (energy particles). ஃபோட்டான், குளூவான், ஹிக்ஸ் போசான்  ஆகியவை போசான்களுக்கு உதாரணங்கள்.சத்யேந்திரநாத் போஸ் என்ற இந்திய விஞ்ஞானியின் பெயரால் இவை போசான்கள் என்று பெயர்
பெற்றன. போசான்கள் முழுஎண் சுழற்சி (integral spin) கொண்டவை; சுழற்சி 0,1,2 என்பதாக இருக்கும்.ஃபோட்டானின் (photon)
சுழற்சி 1 ஆகும்.

ஃபெர்மியான்கள் என்பவை பொருள்சார் துகள்கள் (matter particles).
இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர்  என்ரிக்கோ ஃபெர்மியின்
பெயரால் இத்துகள்கள் ஃபெர்மியான்கள் எனப் பெயர் பெற்றன.
புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை
ஃபெர்மியான்களுக்கான உதாரணங்கள்.
ஃபெர்மியான்கள் அரை எண் சுழற்சி கொண்டவை;
1/2, 3/2, 5/2 என்பதாக சுழற்சி இருக்கும்.
எடுத்துக்காட்டாக, எலக்ட்ரானின் சுழற்சி 1/2 ஆகும்.

ஆரம்பநிலைத் துகள்களை ஒன்றோடொன்று
தொடர்பு படுத்துவதே அதிசமச்சீர்மை (super symmetry) ஆகும்.
Super Symmetry என்பது சுருக்கமாக SUSY என்று அழைக்கப் படும்.
அதாவது, ஒவ்வொரு போசானுக்கும் ஒரு ஃபெர்மியானைத்
தொடர்புபடுத்த வேண்டும். அதே போல ஒவ்வொரு ஃபெர்மியானுக்கும் ஒரு போசானை தொடர்பு படுத்த வேண்டும்.
இவ்வாறு ஒரு துகளுடன் தொடர்புபடுத்தப்படும் துகள்
அதன் அதிபங்காளி (super partner)எனப்படும்.

உதாரணமாக, எலக்ட்ரான் என்ற ஃபெர்மியானுக்குப்
பொருத்தமான போசான் செலக்ட்ரான் (selectron) ஆகும்.
இந்த செலக்ட்ரான் என்பது எலக்ட்ரானின்
அதிபங்காளி. அது போலவே, குவார்க் துகளின்
அதிபங்காளி  ஸ்குவார்க் (squark) எனப்படும். அதிபங்காளிகளான இத்துகள்கள் எவையும் இதுவரையில் பரிசோதனைகளில்
கண்டறியப்படவில்லை என்பதை மனதில் கொள்க.

இவ்வாறு, போசான், ஃபெர்மியான் என்று இரண்டு
பிரிவுகளாக உள்ள, ஆரம்பநிலைத் துகள்களில்,
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள துகள்களை. அவற்றின்
அதிபங்காளித் துகள்கள் மூலம் மற்றப் பிரிவில்
உள்ள துகள்களுடன் தொடர்பு படுத்துகிற, வெளி-கால
சமச்சீர்மையே அதிசமச்சீர்மை (super symmetry) ஆகும்.
இந்த அதிசமச்சீர்மையைக் கொண்டுள்ள இழைக்
கொள்கைகள் யாவும் அதியிழைக் கொள்கைகள்
(super string theories) என்று அழைக்கப் படுகின்றன. 1980களின் நடுப்பகுதியிலேயே அதியிழைக் கொள்கைகள் அறிமுகமாகி விட்டன. 1984 முதலான, தொடர்ந்த பத்தாண்டு கால நிகழ்வுகள் முதலாம் அதியிழைப் புரட்சி என்று அழைக்கப் படுகின்றன. தற்காலத்தில், எல்லா இழைக்கொள்கைகளும் அதிசமச்சீர்மையை ஏற்றுக் கொண்டதால், இழைக் கொள்கை என்றாலே அதியிழைக் கொள்கையைத்தான்  குறிக்கும்.

1985வாக்கில், மொத்தம் ஐந்து அதியிழைக் கொள்கைகள்
களத்தில் இருந்தன. இவை ஒவ்வொன்றும் தமக்குள்
வேறுபட்டவை. எனினும், இவை யாவும் பத்துப்
பரிமாணங்களைக் கொண்டவை.

1994ஆம் ஆண்டு அதியிழைக்கொள்கையின் வரலாற்றில்
மிகவும் சிறப்பானது. எட்வர்ட் விட்டன் என்பவர் களத்தில்
இருக்கும் ஐந்து அதியிழைக் கொள்கைகளையும்
ஒருங்கிணைக்க வல்ல ஒரு கொள்கையைக் கண்டறிந்தார்.
அது "எம்" கொள்கை  (M Theory) எனப்பட்டது. இதில் உள்ள
ஆங்கில M என்பதன் விளக்கம் இன்னும் தரப்படவில்லை.
அதை Mystery என்றோ அல்லது Mother என்றோ அல்லது வேறு
எப்படியுமோ வைத்துக் கொள்ளலாம் என்றும், இக்கொள்கை
வெற்றி அடைந்த பின்னர், M என்பதற்கான பொருளைத்
தேர்ந்து கொள்ளலாம் என்றும் இக்கொள்கையின்
கோட்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். "எம்" கொள்கையில்
பதினோரு பரிமாணங்கள் உண்டு. (வெளிசார் பரிமாணங்கள்
10 மற்றும் காலப் பரிமாணம் 1). "எம்" கொள்கை அறிமுகம்
செய்யப்பட்ட 1994ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்த
பத்தாண்டுகளும் இரண்டாம் அதியிழைப் புரட்சி என்று
கருதப் படுகின்றன.
                     
குவான்டம் கொள்கையைப் போன்று, இழைக்கொள்கையும்
பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இயற்பியலாளர்களால்
உருவாக்கப்பட்ட கொள்கையே.கேகே கொள்கையில்
ஆரம்பித்து இன்று "எம்" கொள்கை  வரையிலான வளர்ச்சியில்
பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இயற்பியலாளர்கள்
பங்களித்து உள்ளனர்.

பத்துப் பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியுமா?
------------------------------------------------------------------------------------------
போசானிய இழைக்கொள்கை 26 பரிமாணங்களைக்
கூறுகிறது. அதியிழைக் கொள்கைகள் 10 பரிமாணங்களையும்
"எம்" கொள்கை 11 பரிமாணங்களையும் கூறுகின்றன.
இவற்றை உணர முடியுமா? மூன்று பரிமாணங்களை
மட்டுமே மனிதர்கள் உணர்கிறார்கள்.ஏனெனில் முப்பரிமாண உலகில், முப்பரிமாணப் பொருட்களைப் பார்ப்பது இயலும். ஐன்ஸ்டின் கூறிய நான்கு பரிமாண வெளி-காலத்தையே இன்னும் பலரால் உணர இயலவில்லை. இந்நிலையில் 26 பரிமாணங்களை எப்படி உணர்வது?

ஐன்ஸ்டின் கூறிய நான்கு பரிமாணங்களும் உணரக்கூடியவையே.
(observable). அதற்கு மேற்பட்ட பரிமாணங்களை விளங்கிக் கொள்ளும் பொருட்டு, "நெருக்கமாக வைத்தல்" (compactification) என்னும் கோட்பாட்டை இழைக்கொள்கை பயன்படுத்துகிறது.

இதன்படி, உபரியான பரிமாணங்கள் குறைக்கப் பட்டு,
நான்கு பரிமாணங்கள் என்ற அளவில் கொள்கை வரையறுக்கப் படுகிறது. ஒரு கொள்கை கூறும் வெளி-காலப் பரிமாணங்கள் D என்று கொண்டால், அவற்றை  d அளவுக்கு குறைப்பது நெருக்கமாக
வைத்தல் ஆகும். இதன் பொருள், எல்லாப் புலங்களும், குறைக்கப்பட்ட  D minus d பரிமாணங்களைச் சாராமல்
(இங்கு 10-4=6) இருக்கும் என்பதே.

இழைக்கொள்கைகளில், குறைக்கப்பட்ட ஆறு பரிமாணங்களும்
கலாபி-யாவ் வெளியில் மிக மிகச் சிறிதாக சுருண்டு
கிடக்கின்றன என்று கொள்ளப் படுகிறது.

இழைக்கொள்கை தோன்றக் காரணம்:
----------------------------------------------------------------------------
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது பழமொழி.
அதுபோல தற்செயல் நிகழ்வாக அல்லாமல், ஒரு தேவை கருதித்தான் இழைக்கொள்கை பிறந்தது. நவீன அறிவியலின் உச்சமாகக் கருதப்படுகிற, பிரபஞ்சத்தை விளக்குகின்ற,
தரமாதிரிச் சித்திரத்தில் (standard model) ஈர்ப்புவிசை உள்ளடங்கவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப்
பொருட்களையும் எல்லா விசைகளையும் ஒருங்கிணைக்கிற
மாபெரும் ஒருங்கிணைப்புக் கொள்கையை (Grand UnificationTheory)
உருவாக்குவதில் நவீன இயற்பியல் முனைப்புடன்
செயல்பட்டு வருகிறது. ஐன்ஸ்டினின் கனவுக் கொள்கை இது.

மாபெரும் ஒருங்கிணைப்புக் கொள்கையானது
அனைத்துக்குமான கொள்கை (Theory of Everything) என்றும் அழைக்கப் படுகிறது. இக்கொள்கையை உருவாக்குவதில்,
ஒரே முட்டுக்கட்டை என்னவென்றால்,  தரமாதிரிச் சித்திரத்தில்
ஈர்ப்புவிசையை உள்ளடக்க முடியாமல் இருப்பதுதான்.
இந்தக் குறைகள் இழைக்கொள்கையில் நீக்கப்
படுகின்றன. ஈர்ப்புவிசை உட்பட அனைத்து விசைகளும்  இழைக்கொள்கையில் உள்ளடங்குகின்றன.
அனைத்துக்குமான கொள்கையை  உருவாக்கிட,
இழைக்கொள்கை ஒரு வேட்பாளராக (candidate theory) நிற்கிறது.

நவீன இயற்பியலின் இரு மாபெரும் கொள்கைகள்
பொதுச்சார்பியலும் குவான்டம் விசையியலும். இவை
இரண்டுக்கும் இடையில் இணக்கமில்லை. தனித்தனியாகச்
செயல்படும்போது, வெற்றிகரமானவையாக இருக்கும்
இவ்விரு கொள்கைகளும், ஒன்றாகச் சேர்ந்து
செயல்படும்போது படுதோல்வி அடைகின்றன.

சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள், விண்மீன்திரள்கள்
என்று பேரளவிலான (macro) பொருட்களை விளக்கும் கொள்கை
பொதுச்சார்பியல். இதற்கு மாறாக, அணுக்கள், துகள்கள்
என்று நுண்ணிய (micro) பொருட்களை விளக்கும் கொள்கை
குவான்டம் விசையியல். தத்தம் செயல்பாட்டுப் பிரதேசங்களில்
இவை சரியாக இருக்கின்றன. அதாவது பேரளவிலான
பகுதிகளில் பொதுச் சார்பியலும், நுட்பமான பகுதிகளில்
குவாண்டம் விசையியலும் சரியாக உள்ளன. இதை
எல்லாப் பரிசோதனைகளும் மெய்ப்பித்துள்ளன.

அப்படியானால் சிக்கல் எங்கே வருகிறது? இவை இரண்டையும்
சேர்த்துச் செயல்படுத்தும் இடங்களில் சிக்கல் தோன்றி விடுகிறது.
உதாரணமாக, கருந்துளைகளில் (black holes) இவற்றைச் செயல்படுத்தும்போது முற்றிலும் தவறான சமன்பாடுகள்
கிடைக்கின்றன.

கருந்துளை என்பது பிரும்மாண்டமான நிறை, அதி நுண்ணிய
இடத்தில் திரண்டு நிற்பதாகும். ஒரு குண்டூசி முனையில்,
மொத்தப் பிரபஞ்சத்தின் நிறையும் திரண்டு நிற்பதாகக்
கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் கருந்துளை.
ராட்சசத் தனமான நிறையும் அதி நுண்ணிய இடமும்
(macro and micro) ஒருங்கே கொண்டுள்ள கருந்துளைகளில்
பொதுச்சார்பியல் அல்லது குவான்டம் விசையியல் என்று
ஏதோ ஒரு கொள்கையைச் செயல்படுத்த முடியாது.
இரண்டு கொள்கைகளையும் சேர்த்துச் செயல்படுத்த
வேண்டும். ஏனெனில்,  பிரம்மாண்டமும் அதிநுட்பமும் ஒன்றாகச் சங்கமிக்கும் இடம் கருந்துளை. ஆனால், இரு கொள்கைகளையும்  ஒருங்கே செயல்படுத்தும்போது, முற்றிலும்
தவறான முடிவுகள் கிடைக்கின்றன. இதன் பொருள் என்ன?
ஒன்று பொதுச்சார்பியல் சரியானதாக இருக்க வேண்டும்;
அல்லது குவாண்டம் விசையியல் சரியானதாக இருக்க
வேண்டும்; இரண்டும் சரியானதாக இருக்க முடியாது என்பதே.

பசியோடு இருக்கும் ஒருவருக்கு இலை நிறையச் சோறு
வைக்கப் படுகிறது. அடுத்து கிண்ணம் நிறையக் குழம்பும்
வைக்கப் படுகிறது. சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து
சாப்பிட முற்படுகிறார் அவர். அப்போது பரிமாறுபவர்
அவரிடம், " ஒன்று வெறுஞ்சோற்றைச் சாப்பிடுங்கள்;
அல்லது குழம்பை மட்டும் குடியுங்கள்; இரண்டையும்
சேர்த்துச் சாப்பிடக் கூடாது; அப்படிச் சேர்த்துச் சாப்பிட்டால்,
சாப்பாடு விஷமாகி விடும்" என்று சொன்னால் எப்படி
இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய
ஒரு விசித்திரமான நிலைதான் பொதுச் சார்பியலையும்
குவான்டம் விசையியலையும் சேர்க்கும்போது உண்டாகிறது.


பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் இந்த மாபெரும் குறைபாட்டை
இழைக்கொள்கை நீக்கி விடுகிறது. உண்மையில் இக்குறையை
நீக்கும் பொருட்டே இழைக்கொள்கை பிறந்தது. இழைக்   கொள்கையில் இவ்விரு கொள்கைகளுக்கும் இடமளிக்கப்
பட்டுள்ளது. அங்கு அவை இணக்கத்துடன் செயல்படுகின்றன.

இழைக்கொள்கையின் இன்றையநிலை!
--------------------------------------------------------------------------
இருபத்தியோராம் நூற்றாண்டின் இயற்பியல் என்பது
இழைக்கொள்கையே. ஆரம்பத்தில் மையநீரோட்ட
இயற்பியலாளர்களின் கவனத்தைப் பெறாத இழைக்கொள்கை
தற்போது அதைப் பெற்றுள்ளது. போசானிய இழைக்கொள்கை
என்று தொடங்கி, இன்று "எம்" கொள்கையாக பரிணாம
வளர்ச்சி அடைந்திருக்கிறது இழைக்கொள்கை.

என்றாலும் இக்கொள்கையின் முன்மொழிவுகள் எவையும்
இந்த நிமிடம் வரை பரிசோதனைகள் மூலம் மெய்ப்பிக்கப்
படவில்லை. இக்கொள்கை கூறும் கிராவிட்டான் என்ற துகள்
கூட, இன்றுவரை பரிசோதனை மூலம் கண்டறியப்படவில்லை.
எனவே இக்கொள்கை ஒரு கருதுகோள் என்ற அளவில்தான்
இன்றும் நீடிக்கிறது. அதேநேரத்தில் பரிசோதனை முடிவுகள்
மூலம் இக்கொள்கை மெய்ப்பிக்கப் பட்டால், அறிவியல் உண்மையாக மாறும்.          

கணிதம் கற்காமல் இயற்பியலை அறிய இயலாது!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் காலத்து இயற்பியல் புரிந்து கொள்வதற்கு
மிகவும் எளியது. கணிதம் படிக்காதவர் உட்பட அனைவரும்
சிறிது முயன்றால் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
அனால் ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு வந்த
பின்னர் இந்த நிலைமை மாறியது. இயற்பியலானது புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒன்றாக மாறிவிட்டது.
தொடர்ந்து வந்த குவான்டம் விசையியல் முன்னிலும்
ஆழமான கணித அறிவைக் கோரியது. தற்போது வந்துள்ள இழைக் கோட்பாட்டை ஆழமான கணித அறிவு இல்லாமல்
புரிந்து கொள்ள முடியாது.

இயற்பியலைப்  புரிந்து கொள்ள டென்சார் அல்ஜிப்ரா,
டோப்பாலஜி ஆகிய கணிதத்தின் நவீன பிரிவுகளில்
போதிய அறிவு தேவை. வெய்ல் அல்ஜீப்ரா (Weyl algebra)
போன்ற புதிய கணிதமும் கற்க வேண்டும். பள்ளிகளில்
நாம் கற்ற யூக்ளிட்டின் வடிவியலைக் கொண்டு வளைவான
பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள இயலாது. எனவே வளைந்த
பரப்புக்கான வடிவியலான (curved space geometry) ரீமன்
வடிவியலைக் (Riemannian geometry) கற்க வேண்டும்.
இயற்பியல் மென்மேலும் தீவிரமாகக் கணிதமயம்
ஆகிவருகிறது. கணிதத்தில் ஆழ்ந்த புலமை இல்லாததே
பலராலும்  இயற்பியலைப் புரிந்து கொள்ள முடியாமைக்குக்
காரணமாகும். சமகால இயற்பியல் என்பது ஆழமான கணித
அறிவை உள்ளடக்கியதாகும். எனவே இயற்பியலைக் கற்க விரும்புவோர் கூடவே கணிதத்தையும், இயற்பியலாளர்கள்
உருவாக்கும் புதிய புதிய கணிதப் பிரிவுகளையும்
கற்க வேண்டும். இதுவே தீர்வாகும்.
*********************************************************************************

   


                 
திங்கள், 16 ஜனவரி, 2017

இழைக்கொள்கை தோன்றக் காரணம்:
----------------------------------------------------------------------------
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது பழமொழி.
அதுபோல தற்செயல் நிகழ்வாக அல்லாமல், ஒரு தேவை கருதித்தான் இழைக்கொள்கை பிறந்தது. நவீன அறிவியலின் உச்சமாகக் கருதப்படுகிற, பிரபஞ்சத்தை விளக்குகின்ற,
தரமாதிரிச் சித்திரத்தில் (standard model) ஈர்ப்புவிசை உள்ளடங்கவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப்
பொருட்களையும் எல்லா விசைகளையும் ஒருங்கிணைக்கிற
மாபெரும் ஒருங்கிணைப்புக் கொள்கையை (Grand UnificationTheory)
உருவாக்குவதில் நவீன இயற்பியல் முனைப்புடன்
செயல்பட்டு வருகிறது. ஐன்ஸ்டினின் கனவுக் கொள்கை இது.

மாபெரும் ஒருங்கிணைப்புக் கொள்கையானது
அனைத்துக்குமான கொள்கை (Theory of Everything) என்றும் அழைக்கப் படுகிறது. இக்கொள்கையை உருவாக்குவதில்,
ஒரே முட்டுக்கட்டை என்னவென்றால்,  தரமாதிரிச் சித்திரத்தில்
ஈர்ப்புவிசையை உள்ளடக்க முடியாமல் இருப்பதுதான்.
இந்தக் குறைகள் இழைக்கொள்கையில் நீக்கப்
படுகின்றன. ஈர்ப்புவிசை உட்பட அனைத்து விசைகளும்  இழைக்கொள்கையில் உள்ளடங்குகின்றன.
அனைத்துக்குமான கொள்கையை  உருவாக்கிட,
இழைக்கொள்கை ஒரு வேட்பாளராக (candidate theory) நிற்கிறது.

நவீன இயற்பியலின் இரு மாபெரும் கொள்கைகள்
பொதுச்சார்பியலும் குவான்டம் விசையியலும். இவை
இரண்டுக்கும் இடையில் இணக்கமில்லை. தனித்தனியாகச்
செயல்படும்போது, வெற்றிகரமானவையாக இருக்கும்
இவ்விரு கொள்கைகளும், ஒன்றாகச் சேர்ந்து
செயல்படும்போது படுதோல்வி அடைகின்றன.

சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள், விண்மீன்திரள்கள்
என்று பேரளவிலான (macro) பொருட்களை விளக்கும் கொள்கை
பொதுச்சார்பியல். இதற்கு மாறாக, அணுக்கள், துகள்கள்
என்று நுண்ணிய (micro) பொருட்களை விளக்கும் கொள்கை
குவான்டம் விசையியல். தத்தம் செயல்பாட்டுப் பிரதேசங்களில்
இவை சரியாக இருக்கின்றன. அதாவது பேரளவிலான
பகுதிகளில் பொதுச் சார்பியலும், நுட்பமான பகுதிகளில்
குவாண்டம் விசையியலும் சரியாக உள்ளன என்று
எல்லாப் பரிசோதனைகளும் மெய்ப்பித்துள்ளன.

அப்படியானால் சிக்கல் எங்கே வருகிறது? இவை இரண்டையும்
சேர்த்துச் செயல்படுத்தும் இடங்களில் சிக்கல் தோன்றி விடுகிறது.
உதாரணமாக, கருந்துளைகளில் (black holes) இவற்றைச் செயல்படுத்தும்போது முற்றிலும் தவறான சமன்பாடுகள்
கிடைக்கின்றன.

கருந்துளை என்பது பிரும்மாண்டமான நிறை, அதி நுண்ணிய
இடத்தில் திரண்டு நிற்பதாகும். ஒரு குண்டூசி முனையில்,
மொத்தப் பிரபஞ்சத்தின் நிறையும் திரண்டு நிற்பதாகக்
கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் கருந்துளை.
ராட்சசத் தனமான நிறையும் அதி நுண்ணிய இடமும்
(macro and micro) ஒருங்கே கொண்டுள்ள கருந்துளைகளில்
பொதுச்சார்பியல் அல்லது குவான்டம் விசையியல் என்று
ஏதோ ஒரு கொள்கையைச் செயல்படுத்த முடியாது.
இரண்டு கொள்கைகளையும் சேர்த்துச் செயல்படுத்த
வேண்டும். ஏனெனில்,  பிரம்மாண்டமும் அதிநுட்பமும் ஒன்றாகச் சங்கமிக்கும் இடம் கருந்துளை. ஆனால், இரு கொள்கைகளையும்  ஒருங்கே செயல்படுத்தும்போது, முற்றிலும்
தவறான முடிவுகள் கிடைக்கின்றன. இதன் பொருள் என்ன?
ஒன்று பொதுச்சார்பியல் சரியானதாக இருக்க வேண்டும்;
அல்லது குவாண்டம் விசையியல் சரியானதாக இருக்க
வேண்டும்; இரண்டும் சரியானதாக இருக்க முடியாது என்பதே.

பசியோடு இருக்கும் ஒருவருக்கு இலை நிறையச் சோறு
வைக்கப் படுகிறது. அடுத்து கிண்ணம் நிறையக் குழம்பும்
வைக்கப் படுகிறது. சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து
சாப்பிட முற்படுகிறார் அவர். அப்போது பரிமாறுபவர்
அவரிடம், " ஒன்று வெறுஞ்சோற்றைச் சாப்பிடுங்கள்;
அல்லது குழம்பை மட்டும் குடியுங்கள்; இரண்டையும்
சேர்த்துச் சாப்பிடக் கூடாது; அப்படிச் சேர்த்துச் சாப்பிட்டால்,
சாப்பாடு விஷமாகி விடும்" என்று சொன்னால் எப்படி
இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய
ஒரு விசித்திரமான நிலைதான் பொதுச் சார்பியலையும்
குவான்டம் விசையியலையும் சேர்க்கும்போது உண்டாகிறது.


பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் இந்த மாபெரும் குறைபாட்டை
இழைக்கொள்கை நீக்கி விடுகிறது. உண்மையில் இக்குறையை
நீக்கும் பொருட்டே இழைக்கொள்கை பிறந்தது. இழைக்   கொள்கையில் இவ்விரு கொள்கைகளுக்கும் இடமளிக்கப்
பட்டுள்ளது. அங்கு அவை இணக்கத்துடன் செயல்படுகின்றன.

இழைக்கொள்கையின் இன்றையநிலை!
--------------------------------------------------------------------------
இருபத்தியோராம் நூற்றாண்டின் இயற்பியல் என்பது
இழைக்கொள்கையே. ஆரம்பத்தில் மையநீரோட்ட
இயற்பியலாளர்களின் கவனத்தைப் பெறாத இழைக்கொள்கை
தற்போது அதைப் பெற்றுள்ளது. போசானிய இழைக்கொள்கை
என்று தொடங்கி, இன்று "எம்" கொள்கையாக பரிணாம
வளர்ச்சி அடைந்திருக்கிறது இழைக்கொள்கை.

என்றாலும் இக்கொள்கையின் முன்மொழிவுகள் எவையும்
இந்த நிமிடம் வரை பரிசோதனைகள் மூலம் மெய்ப்பிக்கப்
படவில்லை. இக்கொள்கை கூறும் கிராவிட்டான் என்ற துகள்
கூட, இன்றுவரை பரிசோதனை மூலம் கண்டறியப்படவில்லை.
எனவே இக்கொள்கை ஒரு கருதுகோள் என்ற அளவில்தான்
இன்றும் நீடிக்கிறது. அதேநேரத்தில் பரிசோதனை முடிவுகள்
மூலம் இக்கொள்கை மெய்ப்பிக்கப் பட்டால், அறிவியல் உண்மையாக மாறும்.            


    

     
பத்துப் பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியுமா?
------------------------------------------------------------------------------------------
போசானிய இழைக்கொள்கை 26 பரிமாணங்களைக்
கூறுகிறது. அதியிழைக் கொள்கைகள் 10 பரிமாணங்களையும்
"எம்" கொள்கை 11 பரிமாணங்களையும் கூறுகின்றன.
இவற்றை உணர முடியுமா? மூன்று பரிமாணங்களை
மட்டுமே மனிதர்கள் உணர்கிறார்கள்.ஏனெனில் முப்பரிமாண உலகில், முப்பரிமாணப் பொருட்களைப் பார்ப்பது இயலும். ஐன்ஸ்டின் கூறிய நான்கு பரிமாண வெளி-காலத்தையே இன்னும் பலரால் உணர இயலவில்லை. இந்நிலையில் 26 பரிமாணங்களை எப்படி உணர்வது?

ஐன்ஸ்டின் கூறிய நான்கு பரிமாணங்களும் உணரக்கூடியவையே.
(observable). அதற்கு மேற்பட்ட பரிமாணங்களை விளங்கிக் கொள்ளும் பொருட்டு, "நெருக்கமாக வைத்தல்" (compactification) என்னும் கோட்பாட்டை இழைக்கொள்கை பயன்படுத்துகிறது.

இதன்படி, உபரியான பரிமாணங்கள் குறைக்கப் பட்டு,
நான்கு பரிமாணங்கள் என்ற அளவில் கொள்கை வரையறுக்கப் படுகிறது. ஒரு கொள்கை கூறும் வெளி-காலப் பரிமாணங்கள் D என்று கொண்டால், அவற்றை  d அளவுக்கு குறைப்பது நெருக்கமாக
வைத்தல் ஆகும். இதன் பொருள், எல்லாப் புலங்களும், குறைக்கப்பட்ட  D minus d பரிமாணங்களைச் சாராமல்
(இங்கு 10-4=6) இருக்கும் என்பதே.

இழைக்கொள்கைகளில், குறைக்கப்பட்ட ஆறு பரிமாணங்களும்
கலாபி-யாவ் வெளியில் மிக மிகச் சிறிதாக சுருண்டு
கிடக்கின்றன என்று கொள்ளப் படுகிறது.
       
இழைகளும் அதிர்வுகளும்
--------------------------------------------------
இழைகளும் அவற்றின் அதிர்வுகளுமே இந்தப் பிரபஞ்சம்
என்கிறது இழைக்கொள்கை. இழைகள் என்பவை
அனைத்துக்குமான அடிப்படை அலகுகள். இழைகள்
ஒற்றைப் பரிமாணம் உள்ளவை; வரம்பில்லாத அளவு
மெல்லியவை (infinitely thin). இவற்றின் அதிர்வுகளால்
(vibrations) துகள்கள் உண்டாகின்றன. இழைகள் ஒரு குறிப்பிட்ட
விதத்தில் அதிர்ந்தால் எலக்ட்ரான்களும். வேறொரு
விதத்தில் அதிர்ந்தால் ஃபோட்டான்களும் உண்டாகின்றன.      


பொருள்சார் துகள்களும் (குவார்க்கு போன்றவை)
ஆற்றல்சார் துகள்களும் (ஃபோட்டான் போன்றவை)
இழைகளின் அதிர்வுகளின் விளைவே என்கிறது
இழைக்கொள்கை. தரமாதிரிச் சித்திரம் (standard model)
கூறுவதில், "பொருட்கள் துகள்களால் ஆனவை" என்பது
வரை இழைக்கொள்கை ஏற்றுக் கொள்கிறது. அதற்கு மேல்
ஒருபடி சென்று, "துகள்கள் ஆரம்ப அலகுகள் அல்ல"
என்றும் இழைகளின் அதிர்வுகளாலேயே துகள்கள்
உண்டாகின்றன என்றும் கூறுகிறது.

இழைகளைப் புரிந்து கொள்ள அவற்றை ஒரு வீணையின்
தந்திகளுடன் ஒப்பிடலாம்.  வீணை என்பது மூன்று அல்லது
நான்கு அடி நீளமுள்ள ஒரு நரம்புக் கருவி ஆகும். இதில் உள்ள தந்திகள் வெவ்வேறு இழுவிசையுடன் (tension) இருபுறமும்
இழுத்துக் கட்டப் பட்டிருக்கும். வெவ்வேறு தந்திகளை
மீட்டும்போது, வெவ்வேறு விதமான இசை பிறக்கும்.
அதாவது, வீணையின் தந்திகளை விரல்களால் வருடும்போது,
இசை பிறக்கிறது. அதைப்போல இழைகளில் அதிர்வு ஏற்படும்போது, துகள்கள் உண்டாகின்றன.

ஒரு எலக்ட்ரானை துகள் என்று மட்டுமே கருதுகிறது
தரமாதிரிச் சித்திரம். ஆனால் இழைக்கொள்கை
எலக்ட்ரானை மட்டுமின்றி, ஒவ்வொரு துகளையும் இழையாகக் கருதுகிறது. துகள் என்று சொன்னால் அது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும்; அதாவது நகரும்.
இதைத்தவிர ஒரு துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.
ஆனால் ஒரு இழையோ ஆடும், அசையும், அதிரும்.
வெவ்வேறு விதமாக அதிரும். இந்த ஒட்டு மொத்தப்
பிரபஞ்சமே இழைகளின் அதிர்வுகளால் ஆனதுதான்
என்கிறது இழைக்கொள்கை.

திறந்த இழைகளும் மூடிய இழைகளும்
-----------------------------------------------------------------------
இரண்டு வகையான இழைகளை இழைக்கொள்கைகள்
குறிப்பிடுகின்றன. 1) திறந்த இழை (open string) 2) மூடிய இழை
(closed string). திறந்த இழை என்பது ஒரு கயிற்றுத் துண்டு
போன்றது. இதற்கு இரண்டு முற்றுப்புள்ளிகள் (end points)
உண்டு. மூடிய இழை என்பது ஒரு வளையம் (closed loop) ஆகும்.
இது ஒரு ரப்பர் பாண்ட் போன்றது. இதற்கு முற்றுப் புள்ளிகள்
இல்லை.

எனினும் திறந்த மற்றும் மூடிய இழைகளுக்கு இடையில்
பெரிய வேற்றுமை இருப்பதாகக் கருத வேண்டியதில்லை.
அதிர்வுகளின்போதும்  ஊடாட்டங்களின்போதும்  (interactions)
திறந்த இழைகள் மூடிக் கொள்ளும்; மூடிய இழைகளாக மாறும். மூடிய இழைகள் உடைந்து திறந்த இழைகளாக மாறும்.
இலைகளின் அதிர்வு காரணமாகவே துகள்கள் உண்டாகின்றன.
ஈர்ப்புவிசையின் புலத்துகளான கிராவிட்டான் (graviton) என்ற துகள்
மூடிய இழைகளின் ஒரு குறிப்பிட்ட விதத்திலான அதிர்வு
காரணமாகவே உண்டாகிறது என்று இழைக்கொள்கை
கூறுகிறது.