சனி, 28 ஜனவரி, 2017

நீட் தேர்வு பற்றிய விவரங்கள்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
1) MBBS/BDS படிப்பில் சேர்வதற்கான UG நீட் தேர்வு
காகிதம்-பேனா முறையிலானது.
இது ஆன்லைன் தேர்வு அல்ல. மூன்று மணி நேரம்
நடைபெறும் தேர்வாகும் இது.

2) MD/MS படிப்பிற்கான PG நீட் தேர்வு ஆன்லைன்
தேர்வாகும். தேர்வு நேரம்: மூன்றரை மணி.

3) UG நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும்.
MCQ வகையிலான கேள்விகள். இந்த 180 கேள்விகளுக்கு
180 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். அதாவது
ஒரு கேள்விக்கு ஒரு நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும்.

4) UG நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள்.
மொத்தம் 180 X 4 = 720 மதிப்பெண்கள்.

5) UG நீட் தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்
குறைக்கப்படும். அதாவது NEGATIVE MARK வழங்கப்படும்.
ஒரு தவறான கேள்விக்கு 1 மதிப்பெண் என்ற வீதத்தில்
மதிப்பெண் குறைப்பு இருக்கும்.

6) UG நீட் தேர்வில், ஒரு பாடத்தில் 45 கேள்விகள் வீதம்,
4 பாடங்களில் (இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல்) இருந்தும் 4 X 45= 180 கேள்விகள்
கேட்கப்படும்.

7) எதிர்வரும் மே 7,2017இல் நீட் UG தேர்வு நடத்தத்
திட்டமிடப்பட்டு உள்ளது. இது ஒரு உத்தேசத்
தேதியே ஆகும். (tentative date). எனினும் இதே தேதி
உறுதி செய்யப் படலாம்.

8) நீட் UG தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க முடியும்.

9) போலிகளை நம்பி ஏமாறாமல், மாணவர்களே,
நீட் தேர்வுக்குப் படியுங்கள்; படியுங்கள்.

10) நீட் UG தேர்வில், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில்,
500 மதிப்பெண் எடுத்தாலே MMCயில் இடம் கிடைக்க
வாய்ப்பு உள்ளது. எனவே படியுங்கள்.
********************************************************************  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக