செவ்வாய், 10 ஜனவரி, 2017

பொங்கலுக்கு "மூடிய விடுமுறை"
திருத்தப்பட்ட உத்தரவை
ஊழியர் நலக்குழு வெளியிட்டது.

தங்களின் கூற்றில் விவரப்பிழை (factual error) உள்ளது ஐயா.
15 நாட்களாக இருந்த தற்செயல் விடுப்பு (casual leave)
12 நாட்களாகக் குறைக்கப்பட்டது 35 ஆண்டுகளுக்கு
முன்பு.

நெவெர் சைட் அனிதிங் அகைன்ஸ்ட் பொங்கல்


விடுமுறைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப்
புரிந்து கொள்ள வேண்டும். 1) மத்திய அரசு அறிவிக்கும்
14 விடுமுறைகள். 2) ஊழியர் நலக்குழு தெரிவு செய்யும்
3 விடுமுறைகள். இந்த 17 நாட்களுமே மூடிய
விடுமுறைகள்தான் (closed holidays),
**
மத்திய அரசு அறிவிக்கும் 14 விடுமுறைகளில், கடந்த
10 ஆண்டுகளாகவே பொங்கல் இல்லை. ஊழியர் நலக்குழு
தெரிவு செய்வதற்கான ஒரு பட்டியல் உள்ளது.
அதில்தான் பொங்கல் உள்ளது. ஊழியர் நலக்குழு
ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு விதமாக
முடிவு எடுக்கிறது. உதாரணமாக, மத்திய பொதுத்துறை
நிறுவனமான BSNL பொங்கலுக்கு விடுமுறை அளித்துள்ளது.
ஆனால், மத்திய அரசுத்துறையின் ஊழியர் நலக்குழு
பொங்கலுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இதுதான்
உண்மையான நிலைமை.
**
என்னுடைய பதிவுகள் வாசகத் தன்மையில் முதிர்ச்சி
உடைய, சற்று IQ அதிகமுள்ள வாசகர்களை மனதில்
கொண்டு எழுதப் படுகின்றன. எனவே கூடுதல் IQ இல்லாத
வாசகர்கள் பிறழ்புரிதலுக்கு இரையாவது இயல்பே.
**
33 ஆண்டுகளாக மத்திய அரசில் பணி புரிந்துள்ளேன்.
பல ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக, மாநிலச் சங்க
நிர்வாகியாக, JCM உறுப்பினராக, JCM தலைவராக
இருந்துள்ளேன். மத்திய அரசு விடுமுறைகள் எப்படி
ஊழியர்களால் தீர்மானிக்கப் படுகின்றன என்பதை
அனுபவ பூர்வமாக அறிவேன்.
**
கடைசியில் என்ன ஆனது? முட்டாள் அரசியல்வாதிகள்
அடித்த கூத்தில், மத்திய அரசு ஊழியர்கள் ஒருநாள்
விடுமுறையை இழக்கிறார்கள். அவ்வளவுதான்.
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக