வெள்ளி, 27 ஜனவரி, 2017

நீட் தேர்வு குறித்த உண்மைகள்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
1) நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test).
அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).

2) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்
கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட்
தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப் படும்.
தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை
பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில்
மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG)
நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே
நிரப்பப் படும்.

3) மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில்
வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.
இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
இது அப்படியே தொடரும்.

4) நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின்
இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம்
உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,
தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்வித
மாற்றமும் இன்றி நீடிக்கிறது.

5) தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
இது அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு
மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே
தொடரும்.

6) குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப்
பிள்ளைகள், ஒரு கோடி  முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்
வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்
பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்
கொடிய வழக்கம் முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்
கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ
இடம் கிடைக்காது. இந்த நிலையை நீட் தேர்வு
உருவாக்கி இருக்கிறது. சுருங்கக் கூறின்,  தனியார் மற்றும்
நிகர்நிலைப் பல்கலைகளின் "கல்வித் தந்தை"களுக்கு
மரண அடி கொடுப்பதே நீட் தேர்வின் ஒரே நோக்கம்.

7) மருத்துவக் கல்வியில் ஒரு குறைந்தபட்ச தரத்தை
உருவாக்குவதும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ
இடங்களை நிரப்புவதில் ஓர் ஒழுங்காற்றை
ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.(The sole purpose of
NEET is to regulate the seat allotment).

8) எனவேதான் மாநிலத்திற்கு உரிய இடங்கள், இட ஒதுக்கீடு
முதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. நீட் தேர்வானது அந்த விஷயங்களில்
எல்லாம் தலையிடவே இல்லை. அந்த விஷயங்கள்
நீட் தேர்வின் செயல்பாட்டு வரம்புக்கு உட்படவே இல்லை.

9) நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநில
அரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.
அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக்
கல்வி பெற முடியும். அவ்வளவுதான்.

10) தனியார்மயக் கைக்கூலிகளும், சுயநிதி மருத்துவக்
கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகளுமே பெருங்
கூச்சலிட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
********************************************************************     
  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக