புதன், 4 ஜனவரி, 2017

1) பொது சகாப்தம் (common era) என்பது மிக அண்மையில்,
1980களின் இறுதியில்தான் உருவாக்கப் பட்டது.
அடுத்து வரும் மில்லேனியத்தில், இயன்ற வரை
பழைய தவறுகளை சரி செய்ய வேண்டும் என்ற
எண்ணமே பொதுப்புத்தாண்டுக் கணக்கை
உருவாக்கியதன் நோக்கம்.
**
2) இந்தப் பொதுப்புத்தாண்டானது ஏதேனும் ஒரு
கதிர்த் திருப்பத்தின் (solstice) அடிப்படையில்
அல்லது ஏதேனும் ஒரு scientific reference point அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று
விரும்புவது நியாயமானதே. ஆனால் அந்த
விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் போய் விட்டது.
**
3) எப்படியெனில், 1980-90 வாக்கில், ஜனவரிக்குப்
பதில் வேறொரு மாதத்தைத் தொடக்கமாகக் கொண்ட
புத்தாண்டை உருவாக்குவது என்பது நடைமுறை
சாத்தியமற்றதாக இருந்தது. ஏனெனில். இக்காலக்
கட்டத்தில் மக்கள் அனைவருமே ஜனவரிப்
புத்தாண்டுக்குப் பழகி விட்டனர்.  600 கோடி மக்களை
ஒரு மைத்துளியின் உதறலில், புதியதொரு
நடைமுறைக்குப் பழக்கி விட முடியாது.
**
4) காலண்டர் என்பது அறிவியல் மாணவர்களும்
ஆசிரியர்களும் தங்களுக்குள் பயன்படுத்திக்
கொள்ளும் Logritham Tables அல்லது Trigonometric Table
போன்றதல்ல. அதில் பாரதூரமான மாற்றங்களை
ஒரு உத்தரவின் மூலமாகக் கொண்டு வந்து விட
முடியாது. 
**
5) உலகின் பெரும்பாலான பிரதேசங்களில் மக்களாட்சி
நடைபெற்று வரும் இக்காலத்தில், மக்களின்
ஒப்புதலும் பங்கேற்பும் இல்லாமல், எந்தவொரு
மாற்றத்தையும் எவராலும் கொண்டு வந்து
விட முடியாது.
**
6) எனவே அறிவியல் அடிப்படையில் அமையவில்லையோ
என்ற ஐயம் இருந்த போதிலும்,  ஜனவரியை ஏற்பதைத்
தவிர வேறு வழியில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக