புதன், 4 ஜனவரி, 2017

தங்களுக்கு எல்லாமே தவறான புரிதல்தான் போலும்.
இங்கு குட்டி முதலாளித்துவப் போலிப்
பகுத்தறிவாளர்களை நான் துணைக்கு
அழைக்கவில்லை. இந்தக் கட்டுரையின் தலைப்பே
"சில போலிப் பகுத்தறிவு அமைப்புகள் பரப்பும் 
அறிவியலுக்கு எதிரான இழிந்த மூட நம்பிக்கைகள்!" 
என்பதுதான்.
**
அறிவியல் பொருள்முதல்வாத நோக்கில்
புத்தாண்டுகள், பொது சகாப்தம் ஆகியவை பற்றிக்
கூறும் கட்டுரை இது. தைப்புத்தாண்டின்
ஆதரவாளர்களான குட்டி முதலாளித்துவ நபர்கள்
பலரும் கருத்துச் சொல்லாமல்
மௌனமாக இருப்பது இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.
குட்டி முதலாளித்துவம் கருத்தியல் ரீதியாக திவால்
நிலையில் இருக்கிறது என்பதே இங்கு சுட்டிக் காட்டப்
படுகிறது.
**
அடுத்து, தைப்புத்தாண்டு ஆதரவு--எதிர்ப்பு என்னும்
இரு பிரிவினரில்,  எந்தத் தரப்பாய் இருந்தாலும்
தம் கூற்றை சரியென்று நிரூபிக்கலாம்; அல்லது
எதிரியின் கூற்று தவறு என்றும் நிரூபிக்கலாம்.
இல்லை என்று சொல்வோர் மட்டுமே நிரூபிக்க
வேண்டும் என்றும் உண்டு என்று சொல்வோர் நிரூபிக்க வேண்டியதில்லை என்றும் அல்லது vice versa என்றும்
இதற்குப் பொருள் கொள்வது பிறழ் புரிதல் ஆகும்..
இதெல்லாம் சொல்லாமலே விளங்கத்  தக்கது.
(goes without saying)/
**
அடுத்து நான் மார்க்சியவாதியா இல்லையா
என்பதற்கு தாங்கள் சான்றிதழ் அளிக்க முற்படுவது
பரிதாபத்திற்கு உரியது மட்டுமல்ல கிரிமினல்
தன்மையும் ஆகும். மார்க்சியவாதி என்பதற்கான
சான்றிதழ் போராட்டக் களங்களில், போலீஸ் காவலில்,
கொட்டடிச் சிறைகளில் பெறப்படுவது. முகநூலின்
குட்டி முதலாளித்துவவாதிகளிடம் இருந்து
பெறப்படுவதில்லை.
**
அடுத்து, தாங்கள் தைப்புத்தாண்டை ஏற்கிறீர்களா
இல்லையா என்பது பற்றி எமக்கு அக்கறை இல்லை.
நீங்கள் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். அது உங்களின்
உரிமை. இதில் மகிழ்வதற்கோ அல்லது
வருந்துவதற்கோ எமக்கு ஏதுமில்லை.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக