செவ்வாய், 3 ஜனவரி, 2017

மனித குல வரலாற்றில், பல்வேறு காலக்கட்டங்களில்
புத்தாண்டுகள் என்பவை பல்வேறு மாதங்களை
அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் பட்டன.
கிரெகோரி காலண்டர் பெருவழக்காக வந்த பின்னர்தான்,
ஜனவரி முதல்நாளைப் புத்தாண்டின் தொடக்கமாகக்
கொண்ட நடைமுறை ஏற்பட்டது. சுருங்கக் கூறின்,
தொடர்ந்து காலண்டர்களில் திருத்தங்கள் செய்யப்
பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதுவே
நம் நாடு தவிர்த்த, குறிப்பாக மேலை நாடுகளின்
வரலாறு.
**
ஜனவரியைத் தொடக்கமாகக் கொண்ட புத்தாண்டு
என்பது எவ்வாறு முட்டாள்களின் வேலையாக
இருக்க முடியும்? ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும்
மக்கள் தங்களின் அனுபவம், கூட்டு அறிவு ஆகியவற்றின்
அடிப்படையில், தங்களின் சூழலுக்குப் பொருத்தமாக,
ஒரு புத்தாண்டு முறையைக் கற்பித்துக் கொள்கிறார்கள்.
அப்படித்தான் ஜனவரிப் புத்தாண்டு வழக்கில்
வந்தது.
**
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், ஆவணி, சித்திரை,
தை ஆகிய மாதங்களைத் தொடக்கமாகக் கொண்ட
புத்தாண்டுகள் வழக்கில் இருந்தன. இவற்றுக்கு
ஆதாரங்கள் உள்ளன.   இது தமிழ்நாட்டின் வரலாறு.
**
அறிவியல் வழியில் பரிசோதித்துப் பார்க்கும்போது,
இந்த மூன்று மாதங்களின் ( ஆவணி, சித்திரை,தை)
அடிப்படையிலான புத்தாண்டுகளை மக்கள்
ஏற்பதற்கான அறிவியல் அடிப்படைகள் உள்ளன
என்பது நிரூபணம் ஆகிறது.
**
பூமியில் இருந்து 15 கோடி கி.மீ.க்கு அப்பாலுள்ள
சூரியனை, பூமி சற்றேறக்குறைய ஒரு நீள்வட்டப்
பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீண்ட பயணத்தில்,
1) vernal equinox 2) autumnal equinox 3) summer solstice 4) winter solstice
ஆகியவையும் அவை நிகழும் மாதங்களும்
முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே அவற்றுள்
ஏதாவது ஒன்றை reference pointஆகக் கொண்டு,
தத்தம் சூழலுக்கு ஏற்ப,மக்கள் புத்தாண்டுகளை
உருவாக்கிக் கொண்டனர். அப்படித்தான், ஆவணி
சித்திரை தை ஆகிய மாதங்களைத் தொடக்கமாகக்
கொண்டு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு
புத்தாண்டுகள் ஏற்பட்டன. இதுதான் தமிழகத்தின்
வரலாறு.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக