புதன், 4 ஜனவரி, 2017

E = mc^2 என்ற சமன்பாட்டை நிரூபிப்பது போல,
தைப்புத்தாண்டு இருந்தது என்ற கருத்தை
நிரூபிக்க இயலாது. எனினும் ஒரு சமூகவியல்
கோட்பாடு அல்லது கருதுகோளுக்கு குறைந்தபட்சமாக
சில ஆதாரங்கள் தேவை. இந்தியாவில் மத்திய மாநில
அரசு ஊழியர்களின் மீது, ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொள்ளும் பொருட்டு துறை ரீதியான
விசாரணைகள்நடைபெறும்.
**
அந்த விசாரணைகளில், குற்றச்சாட்டுகளை
நிரூபிப்பதற்கு preponderance of probabilities  இருந்தால்
போதும். இந்திய சாட்சியச் சட்டத்தின்படியான
(Indian Evidence Act) ஆதாரங்கள் தேவையில்லை. 
அதைப்போல, சமூகவியல் கருதுகோள்களை
நிரூபிப்பதற்கு, preponderance of probabilities இருந்தால் போதும்.
(preponderance of probabilities = more chances)
**
தைப்புத்தாண்டு இருந்தது என்பதற்கான
நிகழ்தகவு பூஜ்யமற்றது (nonzero) என்று நான்
கருதுகிறேன். எனவே தைப்புத்தாண்டும் இருந்ததாக
நான் கருதுகிறேன். எனவே அதை ஏற்கிறேன்.
"தைப்புத்தாண்டும்" என்பதில்
உள்ள உம்மை கருத்தில் கொள்ளத் தக்கது.
**
தைத் தொடக்கம் புத்தாண்டாக இல்லை என்போர்
அதை  preponderance of probabilities முறையில் நிரூபித்தாலே
போதும். அதை ஏற்கலாம். (preponderance = plenty)
**
அதே நேரத்தில் தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள்
ஏன் அமைதி காக்கின்றனர் என்றும் புரியவில்லை.
பகுத்தறிவு இயக்கத்தவர்கள், தமிழ் தேசியக்
கட்சிகளின் ஆதரவாளர்கள் எனப் பலரும்
அமைதி காப்பது ஏன்?          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக