செவ்வாய், 31 ஜனவரி, 2017

CBSE பாடத்திட்டத்தில் இல்லாத பாடங்கள்
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ளன!
CBSEயை மிகை மதிப்பீடு செய்து
பூச்சாண்டி காட்ட வேண்டாம்!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
ஐன்ஸ்டின் கண்டறிந்த சிறப்புச் சார்பியல் கோட்பாடு
(Special Theory of Relativity) பற்றி தமிழ்மாநிலப் பாடத்
திட்டத்தில் இயற்பியலில் உள்ளது. E= mc squared என்னும்
ஐன்ஸ்டினின் சமன்பாடும் அதன் derivationம்
12ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டத்தில் (TN state board)
உள்ளன.  இதில் மேற்கூறிய derivation இறுதித்தேர்வில்
(board exam) பலமுறை கேட்கப் பட்டுள்ளது.

ஆனால் 12ஆம் வகுப்பு CBSE பாடத்திட்ட இயற்பியலில்
சார்பியல் கோட்பாடே கிடையாது. அந்தப் பாடமே
கிடையாது.

CBSE,  CBSE என்று பூச்சாண்டி காட்டும் அன்பர்களே,
இதற்கு உங்கள் பதில் என்ன?

இந்தியாவிலேயே கேவலமான பாடத்திட்டத்தைக்
கொண்ட TN State board மாணவர்களுக்கு ரிலேட்டிவிட்டி  
தியரி தெரியும். ஆனால் CBSE மாணவனுக்கு அது
தெரியாது.

(தமிழகப் பாடத்திட்டம் வெறும் நுனிப்புல் பாடத்திட்டம்
என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.)

எனவே பூச்சாண்டி காட்டி மாணவர்களின் படிப்பைக்
கெடுக்கும் அன்பர்களே,
அருள்கூர்ந்து நீட் தேர்வு குறித்து கருத்துத்
தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு,
மாணவர்களின் படிப்பில் மண்ணள்ளிப் போட
வேண்டாம்  என்று உங்களை இருகரம் கூப்பி
நியூட்டன் அறிவியல் மன்றம் வேண்டுகிறது.

நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாணவர்களும்
ஆசிரியர்களும் மருத்துவர்களும் முடிவு செய்யட்டும்.
வேண்டாம் என்றால் மாணவர்கள் சேர்ந்து
நீட்டைக் குப்பையில் வீசி எறிவார்கள்.
வேண்டும் என்றால் படித்துத்  தேறி மருத்துவர்கள்
ஆவார்கள். The issue will be decided by the concerned STAKE HOLDERS.
Others should keep quiet, please.

எனவே பூச்சாண்டி காட்டும் அன்பர்களே,
ரஜனி, விஜய்,அஜித்,சூர்யா என்று கூத்தாடிகள்
நடிக்கும் படங்களைப் பற்றி பூச்சாண்டி காட்டுங்கள்.
மாணவர்களின் படிப்போடு விளையாடாதீர்கள்!
கும்பிட்டுக்  கேட்டுக்கொள்கிறோம்!
*******************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக