ஞாயிறு, 29 ஜனவரி, 2017

நீட் தேர்வு CBSE பாடத்திட்டப்படி மட்டுமே நடைபெறும்
என்பது அறியாமையால் சொல்லப்படும் பொய்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------
1) நீட் தேர்வில் 11, 12 வகுப்புகளின் பாடங்களில்
இருந்து கேள்விகள் கேட்கப்படும். 11ஆம் வகுப்புப்
பாடத்தை நடத்தாமல், எடுத்த எடுப்பிலேயே 12ஆம்
வகுப்புப் பாடத்தை நடத்துபவர்கள் கபால மோட்சம்
அடைவார்கள்.

2) CBSE பாடத்திட்டப்படி மட்டுமே நீட் தேர்வு அமையும்
என்பது உண்மை அல்ல. பல்வேறு மாநிலங்களின்
பாடத்திட்டங்களை பரிசீலித்து, அவற்றில் இருந்தும்
தேவையான பாடங்களை எடுத்துக் கொண்டு,
அதன் பிறகே நீட் தேர்வுக்கான பாடத்திட்டம்
உருவாக்கப் பட்டுள்ளது.

3) ஆந்திர மாநிலப் பாடத்திட்டம், மஹாராஷ்டிரா
மாநிலப் பாடத்திட்டம், கர்நாடக மாநிலப் பாடத் திட்டம்
உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களில்
உள்ள பாடங்கள் நீட் தேர்வுக்கான பாடத்  திட்டத்தில்
இடம் பெற்றுள்ளன.

4) சுருங்கக் கூறின், நீட் தேர்வுக்கான பாடத்திட்டம்
என்பது CBSE பாடத்திட்டம் மற்றும் பல்வேறு
மாநிலங்களின் பாடத்திட்டம் ஆகியவற்றின் கலவை
ஆகும். (NEET syllabus is the combination of CBSE syllabus and various state
boards' syllabi).

5) எந்தெந்த மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து
எவ்வளவு எடுக்கப் பட்டிருக்கிறது என்று அறிய
விரும்புவோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
கீழ் விண்ணப்பித்து வேண்டிய தகவலைப் பெறலாம்.

6) நீட் தேர்வு குறித்த கணக்கற்ற பொய்களை நியூட்டன்
அறிவியல் மன்றம் முறியடித்து இருக்கிறது. அந்தப்
பட்டியலில் பாடத்திட்டம் பற்றிய பொய்மை தற்போது
முறியடிக்கப் படுகிறது.
*******************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக