வியாழன், 12 ஜனவரி, 2017

அணுக்கள் அல்ல, எல்லாம் இழைகளே!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
பொருட்கள் அணுக்களால் ஆனவை. அணுக்கள்
துகள்களைக் கொண்டவை. புரோட்டான், நியூட்ரான்,
எலக்ட்ரான் ஆகியவை துகள்கள். துகள்கள் பரிமாணம்
ஏதும் அற்றவை (zero dimensional)

இப்படித்தான் படித்து இருக்கிறோம். இப்படிக் கூறும்
கொள்கையின் பெயர் பிரபஞ்ச மாதிரிச் சித்திரம்
(Standard Model of particle physics).

பொருட்கள் அனைத்தும் இழைகளால் ஆனவை.
(இழைகள் = strings). இந்த இழைகளின் அதிர்வே
அனைத்தும். துகள்களும் பொருட்களும்  ஆற்றலும்    
இழைகளின் அதிர்வு காரணமாகவே ஏற்படுகின்றன.
(அதிர்வு =vibration). இந்த இழைகள் ஒற்றைப் பரிமாணம்
கொண்டவை (one dimensional).

இவ்வாறு கூறுகிறது இழைக்கொள்கை (string theory).

இழைக்கொள்கை குறித்து அறிய விரும்புவோர்
அறிவியல் ஒளி ஆண்டு மலரில் (பிப்ரவரி 2017)
வெளியாகவிருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
இழைக்கொள்கை பற்றிய சிறப்புக் கட்டுரையைப்
படிக்கலாம். இழைக்கொள்கை குறித்து தமிழில்
எழுதப்படும் முதல் கட்டுரை இது.
*******************************************************  

இதழ் இன்னும் வரவில்லை. என் கட்டுரையும் இன்னும்
எழுதி முடிக்கப்படவில்லை. வெளிவந்த பின்னர்,
மின்னியல் முறையில் அனுப்ப முயல்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக