பத்துப் பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியுமா?
------------------------------------------------------------------------------------------
போசானிய இழைக்கொள்கை 26 பரிமாணங்களைக்
கூறுகிறது. அதியிழைக் கொள்கைகள் 10 பரிமாணங்களையும்
"எம்" கொள்கை 11 பரிமாணங்களையும் கூறுகின்றன.
இவற்றை உணர முடியுமா? மூன்று பரிமாணங்களை
மட்டுமே மனிதர்கள் உணர்கிறார்கள்.ஏனெனில் முப்பரிமாண உலகில், முப்பரிமாணப் பொருட்களைப் பார்ப்பது இயலும். ஐன்ஸ்டின் கூறிய நான்கு பரிமாண வெளி-காலத்தையே இன்னும் பலரால் உணர இயலவில்லை. இந்நிலையில் 26 பரிமாணங்களை எப்படி உணர்வது?
ஐன்ஸ்டின் கூறிய நான்கு பரிமாணங்களும் உணரக்கூடியவையே.
(observable). அதற்கு மேற்பட்ட பரிமாணங்களை விளங்கிக் கொள்ளும் பொருட்டு, "நெருக்கமாக வைத்தல்" (compactification) என்னும் கோட்பாட்டை இழைக்கொள்கை பயன்படுத்துகிறது.
இதன்படி, உபரியான பரிமாணங்கள் குறைக்கப் பட்டு,
நான்கு பரிமாணங்கள் என்ற அளவில் கொள்கை வரையறுக்கப் படுகிறது. ஒரு கொள்கை கூறும் வெளி-காலப் பரிமாணங்கள் D என்று கொண்டால், அவற்றை d அளவுக்கு குறைப்பது நெருக்கமாக
வைத்தல் ஆகும். இதன் பொருள், எல்லாப் புலங்களும், குறைக்கப்பட்ட D minus d பரிமாணங்களைச் சாராமல்
(இங்கு 10-4=6) இருக்கும் என்பதே.
இழைக்கொள்கைகளில், குறைக்கப்பட்ட ஆறு பரிமாணங்களும்
கலாபி-யாவ் வெளியில் மிக மிகச் சிறிதாக சுருண்டு
கிடக்கின்றன என்று கொள்ளப் படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக