செவ்வாய், 31 ஜனவரி, 2017

பாமரப்  பார்வையும் அறிவியல் பார்வையும்!
-------------------------------------------------------------------------------
அண்ணா பல்கலை நடத்தும் பொறியியல் கலந்தாய்வில்
மொத்தம் சுமார் இரண்டு லட்சம் இடங்கள் உள்ளன.
ஆனால் மருத்துவ இடங்கள் வெறும் 2000 மட்டுமே
உள்ளன. 200க்கு 200 மதிப்பெண்களை உயிரியல்,
இயற்பியல், வேதியியல் ஆகிய தொடர்புடைய
பாடங்களில் எடுத்துள்ள மாணவர்களின்  CUTOFF
200 ஆகும். இந்த 200 CUTOFF நிலையிலேயே 50, 60
மாணவர்கள் இருந்தது மருத்துவச் சேர்க்கையில்
பல ஆண்டுகளில் நிகழ்ந்தது.
**
அதே போல, 199.75 என்னும் CUTOFFஇல் 50 பேர்,
அடுத்து 199.50இல் 50 பேர் என்று 200-199 CUTOFF
நிலையில், அதாவது ஒரு மார்க் இடைவெளியில்,
200, 300 பேர் இருப்பது மருத்துவ அட்மிஷனில்
சர்வ சாதாரணம்.
**
கடந்த ஆண்டில் எழுதிய பதிவுகளிலேயே இவற்றை
எல்லாம் ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதி உள்ளேன்.
இந்தச் சூழ்நிலையில் ராண்டம் நம்பர்தான் அவர்களின்
இடத்தைத் தீர்மானிக்கிறது. இதுவே உண்மை.
**
கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ அட்மிஷனைக்
கூர்ந்து கவனித்து  வருபவன் என்ற முறையில்,
இது குறித்து பலமுறை எழுதி உள்ளேன். பல்வேறு
தொலைகாட்சி விவாத நிகழ்வுகளில் கூறியுள்ளேன்.
**
குறிப்பாக, வின் டி.வி நிகழ்ச்சிகளில் பலமுறை
திருவுளச் சீட்டு முறைதான் தற்போது நடப்பில்
உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து
உள்ளேன். இவை யூடியூபில் பதிவேற்றம் ஆகி
உள்ளன.
**
ஒரு விஷயத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை
கணக்கற்ற நேரடி அனுபவங்கள் மூலம் தெரிந்து
அதை உறுதி செய்த பிறகு கருத்துக் கூறுவது
அறிவியல் வழிமுறை. திடீரென்று அரைகுறையாக
எழுதப்பட்ட எதையாவது அரைகுறையாகப்
புரிந்து கொண்டு உளறுவது பாமரப் பார்வை.
**
2000 சீட்டு மட்டுமே உள்ள மருத்துவ அட்மிஷனில்
ராண்டம் நம்பர் மிகப்பெரிய பாத்திரம் வகிக்கும்.
இரண்டு லட்சம் சீட்டுகள் கொண்ட பொறியியல்
அட்மிஷனில், இதே ராண்டம் நம்பர் முக்கியமான
பாத்திரத்தை வகிக்க இயலாது. கணிதம்
புரிந்தவர்களால் இதை எளிதில் அறிய இயலும்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக