திங்கள், 2 ஜனவரி, 2017

1) தமிழ் நிலத்தின் விழுமியங்கள் யாவற்றையும்
ஆரியனே உருவாக்கினான் என்பது முழுப்பொய்.
தமிழனுக்கு வானியல் அறிவே இல்லை என்பதும்
பொய்.
2) நீண்ட நெடிய தமிழர் மரபில், மூன்று புத்தாண்டுகள்
வழக்கில் இருந்தன. ஆவணிப் புத்தாண்டு, சித்திரைப்
புத்தாண்டு, தைப்புத்தாண்டு ஆகிய மூன்றுமே அவை.

3) இம்மூன்றையும் கண்டு பிடித்தவனும்
கடைப்பிடித்தவனும் தமிழனே. அதற்கான அறிவியல்
அறிவு தமிழனுக்கு இருந்தது.  இந்த மூன்று
புத்தாண்டுகளையும் ஆரியனோ பார்ப்பானோ
உருவாக்கவில்லை. இவற்றை  தமிழனின் அறிவியல்
அறிவும், வானியல் அறிவுமே உருவாக்கின. இதில்
ஆரியனிடம் இருந்து தமிழன் எதையும் கடனாகப்
பெறவில்லை. இவற்றுக்கு நிறைய ஆதாரங்கள்
உள்ளன.

4) முதிர்ந்த வாசகத் தன்மையும், ஆழமான புரிதலும்,
மார்க்சிய லெனினியக் கல்வியும்,  அறிவியல் அறிவும்
உடைய வாசகர்களை மனதில் கொண்டு இக்கட்டுரை
எழுதப் பட்டுள்ளது. நுனிப்புல் வாசகர்களால்
இக்கட்டுரையின் சாரத்தை உள்வாங்க இயலாமல்
இருப்பது இயல்பே.

5) தமிழன் முட்டாள், அவனுக்கு மூளை எதுவும்
என்றுமே இருந்தது கிடையாது, அவன் ஆரியனையும்
பார்ப்பனையும் அண்டிப் பிழைத்தே அடிமையாக
வாழ்ந்தான் என்று கருதுவது முற்றிலும் அறிவியலுக்கு
எதிரானது; அதில் எள்ளளவும் உண்மை இல்லை.   இது
போராடி முறியடிக்கப் பட வேண்டிய அடிமைச் சிந்தனை
ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக