வெள்ளி, 27 ஜனவரி, 2017

தடுப்பூசிகளை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம்.
இது குறித்து ஆதாரங்களுடன் முன்பே ஒரு கட்டுரை
எழுதி உள்ளேன். இங்கு நீங்கள் குறிப்பிடும் ரூபெல்லா
தடுப்பூசி குறித்து நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
உறுப்பினர்களாக உள்ள மருத்துவர்களிடம் கருத்துக்
கேட்டறிந்து, பின்னர் எழுதுகிறேன்.

CBSE என்பது வானத்தில் இருந்து குதித்து வந்த
அமைப்பு அல்ல. தேவதைகளால் மட்டுமே நடத்தப்படும்
அமைப்பும் அல்ல. ஆந்திர மாநிலப் பாடத்திட்டமானது
CBSE பாடத்திட்டத்தை விடத் தரம் வாய்ந்தது. பல்வேறு
மாநிலங்களிலும் CBSEக்கு நிகராக, பாடத்திட்டம்
மாற்றப்பட்டு விட்டது. காலத்துக்கு ஏற்றவாறு
பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதில் எல்லா மாநிலங்களும்
போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன.

ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வந்த அரசுகள்
பாடத்திட்டத்தை மாற்றாமலும், காலத்திற்கு ஏற்றவாறு
புதுப்பிக்காமலும் தம் கடமையைத் தட்டிக் கழித்தன.
உலகமே அழிந்தாலும் சரி, நாங்கள் பாடத்திட்டத்தைப்
புதுப்பிக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும்
அரசுகளே குற்றவாளிகள். இந்த உண்மையைப்
பார்க்க மறுப்பது என்ன நியாயம்?

11, 12 இரு வகுப்புகளின் பாடங்களிலும் இருந்துதான் 
நீட் தேர்வின் கேள்விகள் அமையும். எனவே 11ஆம்
வகுப்புப் பாடங்களை நடத்தாமல் விடுவது என்ற
பேச்சுக்கே இடமில்லை.

 
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் ஒரு தனித்தீவாக
தனிமைப்பட்டுக் கிடக்கிறது. பாடத்திட்டத்தை
அவ்வப்போது புதுப்பித்தால், புதுப்பித்து இருந்தால்
இன்று இவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இல்லை.


மாற்றத்தை எப்போதுமே எதிர்த்துக் கொண்டு இருக்க
முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில், எதிர்வருகிற மாற்றத்தை
ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அந்த நிர்ப்பந்தத்தை
நீட் தேர்வு ஏற்படுத்தி இருக்கிறது. இதுதான் யதார்த்தம்.
தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து
மேலும் சில காலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்குப்
பெறலாம். அல்லது நீதிமன்றத்தின் மூலம் ஏதேனும்
நிவாரணம் பெற முயன்று பார்க்கலாம். இவையெல்லாம்
தாற்காலிகத் தீர்வுகள். பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பது,
தேர்வு முறையை மாற்றியமைப்பது உள்ளிட்ட தேவையான
அனைத்து சீர்திருத்தங்களையும் போர்க்கால அடிப்படையில்
தமிழக அரசு செய்வதே நிரந்தரமான தீர்வாக அமையும்.

இது போன்ற அருவருக்கத்தக்க பொய்யான கமென்ட்களைத்
தவிர்த்து விட்டு, உங்கள் கருத்தை நீங்கள் வலுவாகக்
கூறலாமே.


நீட் தேர்வு முதன் முதலில் ஐமுகூ ஆட்சியின் போதுதான்
கொண்டு வரப்பட்டது. அன்புமணி ராமதாசுக்குப் பின்னர்,
மத்திய சுகாதார அமைச்சரான குலாம் நபி ஆசாத்
காலத்தில்தான் முதன் முதலாக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வின் தந்தை குலாம் நபி ஆசாத் அவர்கள்தான்.
**
அப்போது மு க அழகிரி உட்பட பல திமுக அமைச்சர்கள்
மத்திய அரசில் இருந்தனர். அப்போதே சுதாரித்து இருந்தால்,
இன்று மூக்கைச் சிந்த வேண்டிய நிலை வந்திருக்காது.
   


DOMICILE STATUS (வசிப்பிடத்தகுதி) அடிப்படையில்தான்
மருத்துவக் கல்லூரி இடம் வழங்கப்படும். அதாவது
தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.  பாலக்காட்டில் வசிக்கும் மலையாளி  தமிழக மருத்துவ இடத்தைப் பெற முடியாது.
ஏனெனில், வசிக்கும் இடம் பாலக்காடு, கேரளம். அதே நேரத்தில்,
தமிழ்நாட்டில் வசித்து, இங்குள்ள பள்ளியில் படிக்கும்
மலையாள மாணவனுக்கு மருத்துவ இடம் பெறத் தகுதி
உண்டு. ஆந்திராவிலும் இதே நிலைமைதான். அதாவது
வசிப்பிடத் தகுதிதான் தீர்மானிக்கிற காரணி ஆகும்.  

பாடத்திட்டத்தைப் புதுப்பிக்காமல் விடுவதன் மூலம்
தமிழ்நாடு தனித்தீவாகி விடுகிறது.


நீங்கள் சொல்வது சரிதான் சார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புதான் நீட் தேர்வு கட்டாயம்
என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. மத்திய
அரசின் அரசாணை மூலமாக இந்த நிர்ப்பந்தம் ஏற்படவில்லை.

தங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. தங்களின்
கருத்துக்கள் உட்படப் பலரின் பல்வேறு கருத்துக்களும்
தொகுக்கப்பட்டு மொத்தமாக மறுமொழி தரப்படும்.
மேனன் சமாதி சென்னைக் கடற்கரையில் இருக்கும்வரை
மலையாளிகள் இங்கு வருவதைத் தடுக்க முடியாது.
அதிகாரம் பெறுவதைத் தடுக்க முடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக