திங்கள், 30 ஜனவரி, 2017

திருவுளச் சீட்டு மூலமே தமிழ்நாட்டில்
MBBS இடங்கள் நிரப்பப் படுகின்றன!
தற்போதைய முறை இதுதான்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
அறிவியல் உலகம் முழுமைக்கும் பொதுவானது.
ஊருக்கு ஊர்  நாட்டுக்கு நாடு அறிவியல் மாறுவதில்லை.
வரலாற்றுப் பாடமும் மொழிப்பாடமும் ஊருக்கு ஊர்
மாறும். ஆனால் அறிவியல் பாடங்கள் உலகம்
முழுமைக்கும் பொதுவானவை.

நியூட்டனின் இயக்க விதிகள் (laws of motion)
கலிபோர்னியாவிலும் சரி, கடையநல்லூரிலும் சரி
ஒன்றுதான். எனவே CBSE பாடத்திட்டத்தின்
அடிப்படையில் அதற்கு IDENTICAL ஆக, தமிழ்நாட்டுப்
பாடத்திட்டத்தை உயர்த்துவதில் எந்தக் கஷ்டமும்
இல்லை.

Zn+H2SO4--> ZnSO4+H2 என்ற வேதியியல் ஃபார்முலா
CBSE மற்றும் State Board இரண்டிலும் மாறப் போவதில்லை.
எனவே அறிவியலைப் பொறுத்த மட்டில்,
CBSE, State Board இரண்டு பாடத்திட்டத்தையும்
சமச்சீராக (uniform) வைக்க முடியும். இது மிக மிக எளிது.     

தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில்
(UG,PG,Speciality) தமிழர்களுக்கு (TN Residents) உள்ள
இடங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. DOMICILE STATUS
தான்  தீர்மானிக்கிற காரணி ஆகும். ஆனால்
தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைகள்
வெளிமாநில மாணவர்களைச் சேர்க்கின்றன.
ஏதோ கொஞ்சம் சேர்க்கட்டும். ஆனால், காலப்போக்கில்
இந்த சுயநிதிக் கயவர்கள் நிகர்நிலை என்ற சலுகையின்
மூலம் தமிழர்களின் இடங்களை வெளிமாநில,
வெளிநாட்டு (NRI) மாணவர்களுக்குத் தாரை வார்த்து
விடுவார்கள். இதுதான் அபாயம்,

நுழைவுத் தேர்வு என்ற கோட்பாட்டை
(the very concept of entrance test) எதிர்ப்பவர்கள்
யாராயினும் அவர்கள் தனியார்மயக் கைக்கூலிகளே.
எம்ஜியார் காலம் முதல் 2007 வரை இங்கு
நுழைவுத் தேர்வு இருந்தது.அதைக் கைவிட்டு விட்டு,
திருவுளச் சீட்டுப் போட்டு MBBS இடங்களை நிரப்பும்
அறிவியலுக்கு எதிரான போக்கை ஆதரிப்போர்
எவராயினும் அவர்கள் அறியாமை நிரம்பியவர்களே.
Computer generated random number மூலம் நிரப்பப் படும் இடங்கள்
யாவும் நவீன திருவுளச் சீட்டு மூலம் நிரப்பப் படும்
இடங்களே.

நீட் தேர்வா அல்லது தமிழ்நாட்டில் முன்பிருந்த
TNPCEEயா என்பது பெரிய விஷயம் அல்ல.
CBSE தரத்துக்கு நம் பாடத்திட்டத்தை உயர்த்தினால்
நாம் நடத்தும் TNPCEE கூட NEETதான்.
------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இது பழைய பதிவு
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக