திங்கள், 30 ஜனவரி, 2017

நீட் தேர்வு பற்றி எவர் வேண்டுமானாலும் கருத்துக்
கூறலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
அதே நேரத்தில் இது சல்லிக்கட்டு போன்றதல்ல.
கல்வி சார்ந்த விஷயங்களில் பரிச்சயமும்,
ஆழமான புரிதலும் உடைய, நீட் விவகாரத்தின் 
stake holdersஆக இருப்பவர்களின் கருத்துக்கு
கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஏனெனில்
லாப நஷ்டத்தை ஏற்கப் போகிறவர்கள் அவர்களே.
மற்றவர்கள் அனைவரும் வழிப்போக்கர்களே.
**
"கிராமப்புற மாணவர்கள் அனைவருமே முட்டாள்கள்"
என்ற முட்டாள்தனமான முன்முடிவை எடுத்துக்
கொண்டு பேசுகிறவர்களைப் பொறுத்தமட்டில்,
அவர்களின் கருத்தைத் தீர்மானிப்பது அவர்களின்
தாழ்வு மனப்பான்மையே. உண்மை இவர்களின்
கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது.
**
ஒவ்வோராண்டும் மாநில முதல்வனாக (state first)
வரும் மாணவர்கள் எல்லாம் சென்னை என்கிற
பெருநகரத்தில் இருந்தா வருகிறார்கள். இல்லை.
கடந்த 50 ஆண்டுகளின் வரலாற்றை நான் அறிவேன்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கிராமப்புற மாணவர்களே
மாநில முதல் தகுதி உட்பட, பல்வேறு சிறப்பிடங்களைப்
பெற்று இருக்கிறார்கள்.
**
இன்று கிராமங்களில் லாப்டாப் பெற்றுள்ள
மாணவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைனில்
நடைபெறும்  நீட் தேர்வுகளில் பங்கேற்றும்
பயிற்சி பெற்றுக் கொண்டும்  இருக்கிறார்கள்.
**
நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாணவர்களும்
ஆசிரியர்களும் மருத்துவர்களும் முடிவு செய்வார்கள்.
தொடர்பற்றவர்களின் கூப்பாடுகளால் அவர்களின்
முடிவுகள் மாறப்போவதில்லை. அவர்களின்
எதிர்காலத்தை மாணவர்களே தீர்மானிப்பார்கள்.
மாணவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்களுக்குப்
பதிலாக மற்றவர்கள் சிந்திக்க வேண்டியதில்லை.
      

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக