செவ்வாய், 10 ஜனவரி, 2017

பொங்கல் விடுமுறை பற்றிய உண்மைகள்!
மத்திய அரசின் விடுமுறைகள் எவ்வாறு
தீர்மானிக்கப் படுகின்றன?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
1) மத்திய அரசில் மொத்தம் 17 மூடிய விடுமுறைகள்
(CLOSED HOLIDAYS) உண்டு. இவை எவ்வாறு
தீர்மானிக்கப் படுகின்றன என்பது பொது
மக்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ தெரியாமல்
இருப்பதில் வியப்பில்லை.

2) மேற்கூறிய 17 விடுமுறைகளில் மத்திய அரசு
14 விடுமுறைகளை மட்டுமே அறிவிக்கும். மீதி மூன்று
விடுமுறைகளை, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள்
முடிவு செய்யும்.  அதாவது Central Govt Employees Welfare
Coordination Committee முடிவு செய்யும்.

3) கடந்த பத்தாண்டுகளாக, மத்திய அரசு வழங்கிய
14 விடுமுறைகளின் பட்டியலைக் கீழே காண்க.
இது மன்மோகன் அரசிலும் இன்றைய மோடி அரசிலும்
மாறாமல் அப்படியேதான் உள்ளது.

4) தேசிய விடுமுறைகள் =3
இஸ்லாமியப் பண்டிகைகள்= 4
கிறிஸ்துவப் பண்டிகைகள் =2 (கிறிஸ்துமஸ், நல்ல வெள்ளி)
இந்து மதப் பண்டிகைகள் =2 (தீபாவளி, தசரா)
புத்த மதப் பண்டிகை =1 (புத்த பௌர்ணமி)
சீக்கிய மதப் பண்டிகை= 1(குருநானக் ஜெயந்தி)
சமண மதப் பண்டிகை= 1 (மகாவீரர் ஜெயந்தி)
ஆக மொத்தம் =14.

மீதி 3 விடுமுறைகளை பின்வரும் பட்டியலில் இருந்து
அந்தந்த மாநில ஊழியர் நலக்குழு தேர்வு செய்யும்.

1)ஓணம் 2) பொங்கல் 3) மகர சங்கராந்தி 4) வசந்த பஞ்சமி
5) தசரா  (9th day) 6) ஹோலி 7)விநாயக சதுர்த்தி
8) ஜென்மாஷ்டமி 9) ராம நவமி 10) ரத யாத்ரா
11)மகா சிவராத்திரி 12) விஷு அல்லது உகாதி போன்ற
அந்தந்த மாநிலத்தின் புத்தாண்டுப் பிறப்பு.

ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்
நலக்குழு 3 விடுமுறைகளை முடிவு செய்யும். அநேகமாக
பொங்கல், விநாயகர் சதுர்த்தி, சித்திரை ஆண்டுப்பிறப்பு
என்பதாக அந்த 3 தினங்கள் அமையலாம்.

கேரளத்தில், அந்த மாநில ஊழியர் நலக்குழு 1) ஓணம்
2) விஷு 3) தசரா ஆகிய மூன்றை தெரிவு செய்யக்கூடும்.

எனவே பொங்கலை விடுமுறையாக தெரிவு செய்வது
தமிழ் மாநில ஊழியர் நலக்குழுவின் பொறுப்பு.
இந்த ஆண்டு 2017இல் ஏற்கனவே விடுமுறை
நாளான இரண்டாம் சனியன்று (second saturday)
பொங்கல் வருவதால், ஊழியர் நலக்குழு பொங்கலை
தெரிவு செய்யவில்லை.

ஆனால் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்
பொங்கலை தெரிவு செய்துள்ளன. உதாரணம் BSNL.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக