வெள்ளி, 30 செப்டம்பர், 2016

(6) மகாத்மா காந்தி மீது தர்ம அடி போடும் நூலாசிரியர்!
ரங்கநாயகம்மாவின் நூல் பற்றிய திறனாய்வு!
------------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------------
சாதியம் பற்றிய அம்பேத்காரின் கோட்பாடுகளையும்
தீர்வுகளையும் விமர்சிக்கும் தமது நூலில், மகாத்மா
காந்தி மீது விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை
அள்ளித் தெளித்து இருக்கிறார் ரங்கநாயகம்மா.

தமது நூலின் 8, 9, 14 அத்தியாயாயங்களில் மகாத்மா
காந்தியை விமர்சிக்கும் ரங்கநாயகம்மா, மலையாகக்
குவிந்து கிடைக்கும் காந்தியின் ஆவணப் படுத்தப்பட்ட
எழுத்துக்களில் இருந்தோ, அவரின் நூல்களில் இருந்தோ
ஒரு வரியைக் கூட மேற்கோள் காட்டவில்லை. மாறாக,
அம்பேத்காரின் எழுத்துக்களில் கூறப்பட்ட, அம்பேத்காரின்  
தேவைக்கேற்பக் குறுக்கப்பட்ட  மேற்கோள்களையே எடுத்தாள்கிறார். இது விமர்சன முறைமை அல்ல.

மூல ஒளி (original light) வேறு; பிரதிபலிக்கப்பட்ட ஒளி
(reflected light) வேறு. சூரிய ஒளியை ஒவ்வொரு கிரகமும்
வெவ்வேறு அளவில் பிரதிபலிக்கின்றன. இந்தப்
பிரதிபலிப்பு ஆற்றல், வானியலில் 'அல்பெடோ மதிப்பு'
(albedo value) எனப்படும். மகாத்மா காந்தியைப் பொறுத்து,
அம்பேத்காரின் அல்பெடோ மதிப்பு மிகவும் குறைவு.

தமது நூலில் ரங்கநாயகம்மா கூறுகிறார்:
--------------------------------------------------------------------------
"தீண்டப் படாதோர் குறித்து காந்தியே அதிகாரத்துடன்
பேச முடியும் என்றால், அம்பேத்கார் தன்னளவில் ஒரு
தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அவர் அதைவிட
அதிகாரத்துடன் பேச முடியும்; இல்லையா?" 
(ரங்கநாயகம்மாவின் நூல், தமிழ், பக்கம்-124)

தீண்டத்தகாதவர்களைப் பொறுத்து, மகாத்மா காந்தியை
விட, அம்பேத்காருக்கு அதிகமான பிரதிநிதித்துவப்
பண்பு (representative character) உண்டு என்பது விஷயத்தை
மேலெழுந்தவாரியாக மட்டும் பார்க்கும் எவருக்கும்
எளிதில் புலப்படுவது. ஆனால் பிரதிநிதித்துவப் பண்பு
மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வைத் தேடித் தந்து
விடுவதில்லை. தீர்வைத்  தீர்மானிக்க வேறு பல
காரணிகளும் உள்ளன. அவற்றையும் கருத்தில்
கொள்வது அவசியம்.

சற்றுக் கண்ணயர்ந்து, ரங்கநாயகம்மா முன்வைத்த
இந்த வாதத்தைத்தான் அடையாள அரசியல் சேற்றில்
புரள்வோர் எப்போதுமே முன்வைத்து வருகின்றனர்.
"தலித் விடுதலை தலித்துகளால் மட்டுமே சாத்தியம்"
"பெண் விடுதலை பெண்களால் மட்டுமே சாத்தியம்"
ஆகிய முழக்கங்கள், பிரதிநிதித்துவப் பண்பு என்ற
மணல் மீது கட்டப்பட்ட மாளிகைகளே. இவற்றை
மார்க்சிய லெனினியம் நிராகரிக்கிறது.

மகாத்மா காந்தி மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராளி. அவரின் வருகைக்கு முன்பு தேச விடுதலை
என்பது இந்திய மக்களின் கோரிக்கையாக
இருக்கவில்லை; அது வெகு சில மேட்டுக்குடிச்
சீமான்களின் கனவாக மட்டுமே இருந்தது. காந்தி
ஒருவர்தான் சுயராஜ்யம் (சுதந்திரம்) என்ற
கோரிக்கையின்பால் ஒட்டு மொத்த மக்களையும்
திரட்டியவர்.

மகாத்மா காந்தி அனைத்தையும் ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்ற மையமான முழக்கத்திற்குக்
கீழ்ப் படுத்தினார். அவரின் சமூக சீர்திருத்த
இலக்குகள், தீண்டாமை ஒழிப்பு ஆகிய அனைத்தும்
ஏகாதிபத்திய எதிர்ப்புக்குக் கீழ்ப்படுத்தப் பட்டன.
அவரின் முன்னுரிமைகள் வேறு.

அம்பேத்காரின் முன்னுரிமைகள் வேறானவை.
அவரின் மைய முழக்கம் வேறு. ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்பது அவரின் நிகழ்ச்சி நிரலில்
என்றுமே மையமாக இருந்ததில்லை.

மகாத்மா காந்தியைப் பற்றிய மாவோவின்
உயர்ந்த மதிப்பீட்டையும், ஸ்டாலின் உள்ளிட்ட
சோவியத் ஒன்றியத் தலைவர்களின்
மதிப்பீட்டையும் கருத்தில் கொள்ளாமல்
காந்தியின் பாத்திரம் குறித்து சரியான ஒரு முடிவுக்கு
வர முடியாது. (இது குறித்துப் பின்னர் பார்ப்போம்).

இந்நிலையில் இருவரையும் ஓப்பிடுவதும்,
ஓப்பிடுவதாகக் கூறி, மகாத்மா காந்தியை
அவதூறு செய்வதையும் ஏற்க இயலாது.
ரங்கநாயகம்மாவின் நூலின் இருண்ட
பக்கங்களாக, மகாத்மா காந்தியைப் பற்றிய
தவறான மதிப்பீடு அமைந்து விடுகிறது. என்றாலும்,
இதை வைத்துக் கொண்டு, நூல் முழுமையுமே
இப்படித்தான் என்று சித்தரிக்க எவரேனும்
முயல்வார்கள் என்றால், அது நேர்மையற்றதாகும்.

மகாத்மா காந்தியை மதிப்பிடுவதில் ரங்கநாயகம்மா
-------------------------------------------------------------------------------------------------
ஏன் தவறு இழைத்தார்?
------------------------------------------
இதற்கான காரணங்களை
அவரின் உள்ளே ( subjective factors) தேடுவதை விட,
அவர் மீது தாக்கம் செலுத்திய, சக்தி வாய்ந்த
புறச்சூழலின் யதார்த்த (objective reality) நிலையில்
தேடினால் கண்டு பிடிக்க இயலும்.

இந்த நூலை, ஆரம்பத்தில் தெலுங்கு வார ஏடான
ஆந்திரஜோதி என்ற ஏட்டில், தொடராக வாரந்தோறும்
எழுதினார் ரங்கநாயகம்மா. வார ஏட்டின் வாசகர்கள்
தம்மளவில் ஒன்று திரண்டவர்கள் (well organised).
எழுத்தாளர் மீதும் ஏடு மீதும் செல்வாக்கும்
நிர்ப்பந்தமும் செலுத்த வல்லவர்கள். எனவே
வாசகர்களின் ஏற்பைப் பெற வேண்டிய அவசியத்துக்கு
ஆட்படாமல் எந்த எழுத்தாளரும், சர்வ சுதந்திரமாக
தான் நினைத்தை அப்படியே எழுதி விட முடியாது.

அதிலும் அம்பேத்கார் கோடிக்கணக்கான மக்களால்
போற்றப் படுபவர். அவர் மீதான விமர்சனம் என்பது,
அது எவ்வளவு சரியானதாக இருந்தாலும், எவ்வளவு
நியாயமானதாக இருந்தாலும், வாசகர்களின்
ஏற்புடைமைக்கு (acceptability) உட்பட்டே வெளிவர
முடியும். இந்தச் சூழலில் தமது நேர்மையையும்
காழ்ப்புணர்ச்சியற்ற தன்மையையும் அனைவருக்கும்
புலப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டே
ரங்கநாயகம்மா இந்த நூலை எழுதினார் என்பதில்
நமக்குத்  தெளிவு வேண்டும்.

அம்பேத்காரை மட்டும் தனிமைப் படுத்தி விமர்சனம்
செய்கிறார் என்கிற அவதூறு எழுந்து விடாமல்
தடுக்கும் பொருட்டு, மகாத்மா காந்தி, விவேகானந்தர்,
தத்துவஞானி ராதாகிருஷ்ணன் என்று எல்லோரையும்
ஒரு பிடி பிடித்து விடுகிறார். அதிலும் இந்தியாவைப்
பொறுத்த மட்டில் மகாத்மா காந்தி ஒரு soft target. எனவே
எல்லோருடனும் சேர்ந்து மகாத்மா காந்தி மீது
தர்ம அடி போட்டு விடுகிறார் ரங்கநாயகியம்மா.
  
ரங்கநாயகியம்மா ஒரு தமிழராக இருந்து, தமிழ்நாட்டில்
வாழ்பவராக இருந்தால், அவரால் இப்படி ஒரு தொடரை
எந்த ஒரு ஏட்டிலும் எழுத முடியுமா? எழுதினாலும்
எந்த ஏடாவது அதைப் பிரசுரிக்க முன்வருமா?

தென்னிந்திய மாநிலங்களிலேயே, வாசகத்தன்மை
குறைந்த, நுனிப்புல் வாசகர்களை மட்டுமே கொண்ட
மாநிலம் தமிழ்நாடுதான். காத்திரமான எந்த ஒரு
பொருளையும் பற்றி, இங்கு எந்த ஒரு எழுத்தாளரும்
ஜனரஞ்சகமான வார ஏடுகளில் தொடர் எழுதிவிட
முடியாது. Polemical debates என்ற விஷயத்துக்கே தமிழ்
எழுத்துலகில் இடம் கிடையாது.
காணாக்குறைக்கு, அடையாள அரசியல் ரவுடித்
தனங்களின் சொர்க்கம் தமிழ்நாடு. 

எனவே, மேற்கூறிய அனைத்துக் காரணிகளையும்
கருத்தில் கொள்ளாமல், இலக்கு இல்லாமலும்,
ஏனோதானோ மனநிலையிலும் ரங்கநாயகம்மாவின்
நூலை விமர்சனம் செய்வது மக்களுக்குப் பயன்
தராது.
-------------------------------------------------------------------------------------------------
தொடரும்
---------------------------------------------------------------------------------------------------
அடுத்து: புத்தர் குறித்த ரங்கநாயகம்மாவின் பார்வை.
******************************************************************   

அறிஞர் அண்ணாவின் முன்னுதாரணம்!
----------------------------------------------------------------------------
அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது,
புற்றுநோயால்  அவர் உடல் நலிவுற்றார். கனடாவில்
இருந்து டாக்டர் மில்லர் வந்தார். தம்மால் முதல்வர்
பொறுப்பைக் கவனிக்க முடியாது என்று உணர்ந்த
நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள், நாவலர்
நெடுஞ்செழியன், செ மாதவன் ஆகிய இருவரிடமும்
முதல்வர் பொறுப்பைக்  கூட்டுப் பொறுப்பாக
(joint incharge) ஒப்படைத்தார்.
--------------------------------------------------------------------------------------

ஜெயலலிதா குணமடைய
கலிங்கப்பட்டியில் மாபெரும் யாகம்!
---------------------------------------------------------------------
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும்
ஜெயலலிதா அவர்கள் குணமடைய
வைகோ அவர்கள் கலிங்கப்பட்டியில்
மாபெரும் யாகம் நடத்துகிறார்.
வைகோவின் தம்பி ரவிச்சந்திரன்
இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறார்.
108 அந்தணர்கள் இந்த யாகத்தை நடத்துகின்றனர்.

மனிதாபிமானத்தில்  வைகோ உயர்ந்து நிற்கிறார்!
-------------------------------------------------------------------------------------------------

இலக்கம் 1 ஐ 9801 என்னும் இலக்கத்தால் வகுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 1/9801 என்னும் வகுத்தலின் போது, விடையாக வருவது என்ன தெரியுமா?
அதை நீங்களே பாருங்கள்.
0.00010203040506070809101112131415161718192021222324252627282930…………….. 9799
என்று வருகிறது. அதாவது தசம புளிக்குப் பின்னர் ஒன்றிலிருந்து நூறு வரையுள்ள இலக்கங்களை இரண்டிரண்டாக வரிசையாக எழுதி வருவதுதான் விடையாகிறது (0. 00 01 02 03 04 05 06 07 08 09 10 11…). இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. 98 மட்டும் விடையில் வராது. அந்த 98 இலக்கத்தைத்தான் நாம் வகுப்பதற்குப் பயன்படுத்தி இருக்கிறோமல்லவா? அதனால் 98 இல்லை. அத்துடன் 01 முதல் 99 வரை இரட்டை இலக்கங்களாக எழுதுவதால், 98 உம் 01 உம் சேர்ந்து வகுக்கப்படும் இலக்கமாக இலக்கம் 9801 ஆகிறது. இது தற்செயலாக அமைந்ததேயல்ல. கணிதத்தின் மாபெரும் விந்தை இது.
இத்துடன் விந்தை முடிந்துவிடவில்லை.
இலக்கம் 1 ஐ 998001 என்னும் இலக்கத்தால் வகுத்தால் என்ன விடை வரும் சொல்லுங்கள்?
ஆம் நீங்கள் நினைப்பது சரியே!
0.00000100200300400500600700800901001100120013014015016017018019020……….. ………996997999 என்று முடிகிறது. இங்கும் 998 இலக்கம் இருக்காது. காரணம் அதைத்தான் நாம் வகுப்பதற்குப் பயன்படுத்துகிறோம் அல்லவா? இங்கு வரும் இலக்கங்கள் தசம புள்ளிக்குப் பின்னர் 000 001 002 003 004 005 006 007 008 009 010….. என்னும் வரிசையை எடுக்கின்றன.
இந்தக் கணிதம் ஆச்சரியத்தை தரவில்லையா உங்களுக்கு?
மேலே சொன்னவை புரியவில்லையெனில் படம் தருகிறேன் மெல்ல பாருங்கள்.
கொசுறாக இன்னுமொரு கணித விந்தை
இலக்கம் 1 ஐ 81 ஆல் வகுத்தால் வருவது என்ன தெரியுமா?
0.012345679.
81 ஆல் வகுப்பதால் இங்கும் 8 இல்லை.
-ராஜ்சிவா-
(6) மகாத்மா காந்தி மீது தர்ம அடி போடும் நூலாசிரியர்!
ரங்கநாயகம்மாவின் நூல் பற்றிய திறனாய்வு!
------------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------------
சாதியம் பற்றிய அம்பேத்காரின் கோட்பாடுகளையும்
தீர்வுகளையும் விமர்சிக்கும் தமது நூலில், மகாத்மா
காந்தி மீது விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை
அள்ளித் தெளித்து இருக்கிறார் ரங்கநாயகம்மா.

தமது நூலின் 8, 9, 14 அத்தியாயாயங்களில் மகாத்மா
காந்தியை விமர்சிக்கும் ரங்கநாயகம்மா, மலையாகக்
குவிந்து கிடைக்கும் காந்தியின் ஆவணப் படுத்தப்பட்ட
எழுத்துக்களில் இருந்தோ, அவரின் நூல்களில் இருந்தோ
ஒரு வரியைக் கூட மேற்கோள் காட்டவில்லை. மாறாக,
அம்பேத்காரின் எழுத்துக்களில் கூறப்பட்ட,
அம்பேத்காரின்  தேவைக்கேற்பக்  குறுக்கப்பட்ட
மேற்கோள்களையே எடுத்தாள்கிறார். இது விமர்சன
முறைமை அல்ல.

மூல ஒளி (original light) வேறு; பிரதிபலிக்கப்பட்ட ஒளி
(reflected light) வேறு. சூரிய ஒளியை ஒவ்வொரு கிரகமும்
வெவ்வேறு அளவில் பிரதிபலிக்கின்றன. இந்தப்
பிரதிபலிப்பு ஆற்றல், வானியலில் 'அல்பெடோ மதிப்பு'
(albedo value) எனப்படும். மகாத்மா காந்தியைப் பொறுத்து,
அம்பேத்காரின் அல்பெடோ மதிப்பு மிகவும் குறைவு.

தமது நூலில் ரங்கநாயகம்மா கூறுகிறார்:
--------------------------------------------------------------------------
"தீண்டப் படாதோர் குறித்து காந்தியே அதிகாரத்துடன்
பேச முடியும் என்றால், அம்பேத்கார் தன்னளவில் ஒரு
தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அவர் அதைவிட
அதிகாரத்துடன் பேச முடியும்; இல்லையா?"
(ரங்கநாயகம்மாவின் நூல், தமிழ், பக்கம்-124)

தீண்டத்தகாதவர்களைப் பொறுத்து, காந்தியை
விட, அம்பேத்காருக்கு அதிகமான பிரதிநிதித்துவப்
பண்பு (representative character) உண்டு என்பது விஷயத்தை
மேலெழுந்தவாரியாக மட்டும் பார்க்கும் எவருக்கும்
எளிதில் புலப்படுவது. ஆனால் பிரதிநிதித்துவப் பண்பு
மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வைத் தேடித் தந்து
விடுவதில்லை. தீர்வைத்  தீர்மானிக்க வேறு பல
காரணிகளும் உள்ளன. அவற்றையும் கருத்தில்
கொள்வது அவசியம்.

சற்றுக் கண்ணயர்ந்து, ரங்கநாயகம்மா முன்வைத்த
இந்த வாதத்தைத்தான் அடையாள அரசியல் சேற்றில்
புரள்வோர் எப்போதுமே முன்வைத்து வருகின்றனர்.
"தலித் விடுதலை தலித்துகளால் மட்டுமே சாத்தியம்"
"பெண் விடுதலை பெண்களால் மட்டுமே சாத்தியம்"
ஆகிய முழக்கங்கள், பிரதிநிதித்துவப் பண்பு என்ற
மணல் மீது கட்டப்பட்ட மாளிகைகளே. இவற்றை
மார்க்சிய லெனினியம் நிராகரிக்கிறது.

மகாத்மா காந்தி மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராளி. அவரின் வருகைக்கு முன்பு தேச விடுதலை
என்பது இந்திய மக்களின் கோரிக்கையாக
இருக்கவில்லை; அது வெகு சில மேட்டுக்குடிச்
சீமான்களின் கனவாக மட்டுமே இருந்தது. காந்தி
ஒருவர்தான் சுயராஜ்யம் (சுதந்திரம்) என்ற
கோரிக்கையின்பால் ஒட்டு மொத்த மக்களையும்
திரட்டியவர்.

மகாத்மா காந்தி அனைத்தையும் ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்ற மையமான முழக்கத்திற்குக்
கீழ்ப் படுத்தினார். அவரின் சமூக சீர்திருத்த
இலக்குகள், தீண்டாமை ஒழிப்பு ஆகிய அனைத்தும்
ஏகாதிபத்திய எதிர்ப்புக்குக் கீழ்ப்படுத்தப் பட்டன.
அவரின் முன்னுரிமைகள் வேறு.

அம்பேத்காரின் முன்னுரிமைகள் வேறானவை.
அவரின் மைய முழக்கம் வேறு. ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்பது அவரின் நிகழ்ச்சி நிரலில்
என்றுமே மையமாக இருந்ததில்லை.

மகாத்மா காந்தியைப் பற்றிய மாவோவின்
உயர்ந்த மதிப்பீட்டையும், ஸ்டாலின் உள்ளிட்ட
சோவியத் ஒன்றியத் தலைவர்களின்
மதிப்பீட்டையும் கருத்தில் கொள்ளாமல்
காந்தியின் பாத்திரம் குறித்து சரியான ஒரு முடிவுக்கு
வர முடியாது. (இது குறித்துப் பின்னர் பார்ப்போம்).

இந்நிலையில் இருவரையும் ஓப்பிடுவதும்,
ஓப்பிடுவதாகக் கூறி, மகாத்மா காந்தியை
அவதூறு செய்வதையும் ஏற்க இயலாது.
ரங்கநாயகம்மாவின் நூலின் இருண்ட
பக்கங்களாக, மகாத்மா காந்தியைப் பற்றிய
தவறான மதிப்பீடு அமைந்து விடுகிறது. என்றாலும்,
இதை வைத்துக் கொண்டு, நூல் முழுமையுமே
இப்படித்தான் என்று சித்தரிக்க எவரேனும்
முயல்வார்கள் என்றால், அது நேர்மையற்றதாகும்.

மகாத்மா காந்தியை மதிப்பிடுவதில் ரங்கநாயகம்மா
-------------------------------------------------------------------------------------------------
ஏன் தவறு இழைத்தார்?
------------------------------------------
இதற்கான காரணங்களை
அவரின் உள்ளே ( subjective factors) தேடுவதை விட,
அவர் மீது தாக்கம் செலுத்திய, சக்தி வாய்ந்த
புறச்சூழலின் யதார்த்த (objective reality) நிலையில்
தேடினால் கண்டு பிடிக்க இயலும்.

இந்த நூலை, ஆரம்பத்தில் தெலுங்கு வார ஏடான
ஆந்திரஜோதி என்ற ஏட்டில், தொடராக வாரந்தோறும்
எழுதினார் ரங்கநாயகம்மா. வார ஏட்டின் வாசகர்கள்
தம்மளவில் ஒன்று திரண்டவர்கள் (well organised).
எழுத்தாளர் மீதும் ஏடு மீதும் செல்வாக்கும்
நிர்ப்பந்தமும் செலுத்த வல்லவர்கள். எனவே
வாசகர்களின் ஏற்பைப் பெற வேண்டிய அவசியத்துக்கு
ஆட்படாமல் எந்த எழுத்தாளரும், சர்வ சுதந்திரமாக
தான் நினைத்தை அப்படியே எழுதி விட முடியாது.

அதிலும் அம்பேத்கார் கோடிக்கணக்கான மக்களால்
போற்றப் படுபவர். அவர் மீதான விமர்சனம் என்பது,
அது எவ்வளவு சரியானதாக இருந்தாலும், எவ்வளவு
நியாயமானதாக இருந்தாலும், வாசகர்களின்
ஏற்புடைமைக்கு (acceptability) உட்பட்டே வெளிவர
முடியும். இந்தச் சூழலில் தமது நேர்மையையும்
காழ்ப்புணர்ச்சியற்ற தன்மையையும் அனைவருக்கும்
புலப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டே
ரங்கநாயகம்மா இந்த நூலை எழுதினார் என்பதில்
நமக்குத்  தெளிவு வேண்டும்.

அம்பேத்காரை மட்டும் தனிமைப் படுத்தி விமர்சனம்
செய்கிறார் என்கிற அவதூறு எழுந்து விடாமல்
தடுக்கும் பொருட்டு, மகாத்மா காந்தி, விவேகானந்தர்,
தத்துவஞானி ராதாகிருஷ்ணன் என்று எல்லோரையும்
ஒரு பிடி பிடித்து விடுகிறார். அதிலும் இந்தியாவைப்
பொறுத்த மட்டில் மகாத்மா காந்தி ஒரு soft target. எனவே
எல்லோருடனும் சேர்ந்து மகாத்மா காந்தி மீது
தர்ம அடி போட்டு விடுகிறார் ரங்கநாயகியம்மா.
 
ரங்கநாயகியம்மா ஒரு தமிழராக இருந்து, தமிழ்நாட்டில்
வாழ்பவராக இருந்தால், அவரால் இப்படி ஒரு தொடரை
எந்த ஒரு ஏட்டிலும் எழுத முடியுமா? எழுதினாலும்
எந்த ஏடாவது அதைப் பிரசுரிக்க முன்வருமா?

தென்னிந்திய மாநிலங்களிலேயே, வாசகத்தன்மை
குறைந்த, நுனிப்புல் வாசகர்களை மட்டுமே கொண்ட
மாநிலம் தமிழ்நாடுதான். காத்திரமான எந்த ஒரு
பொருளையும் பற்றி, இங்கு எந்த ஒரு எழுத்தாளரும்
ஜனரஞ்சகமான வார ஏடுகளில் தொடர் எழுதிவிட
முடியாது. Polemical debates என்ற விஷயத்துக்கே தமிழ்
எழுத்துலகில் இடம் கிடையாது.
காணாக்குறைக்கு, அடையாள அரசியல் ரவுடித்
தனங்களின் சொர்க்கம் தமிழ்நாடு.

எனவே, மேற்கூறிய அனைத்துக் காரணிகளையும்
கருத்தில் கொள்ளாமல், இலக்கு இல்லாமலும்,
ஏனோதானோ மனநிலையிலும் ரங்கநாயகம்மாவின்
நூலை விமர்சனம் செய்வது மக்களுக்குப் பயன்
தராது.
-------------------------------------------------------------------------------------------------
தொடரும்
---------------------------------------------------------------------------------------------------
அடுத்து: புத்தர் குறித்த ரங்கநாயகம்மாவின் பார்வை.
******************************************************************  

(5) சொற்காமுகர்களும் ரங்கநாயகம்மாவும்!
ரங்கநாயகம்மா நூல் பற்றிய திறனாய்வு!
----------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------- 
"ஒரு தத்துவத்தைப் பரிசீலிப்பவர்களுக்கு அதன் மீது
சிறிதளவாவது பரிவு இருத்தல் வேண்டும்; இல்லாவிடில்
அதன் நல்ல அம்சங்கள் புலப்படாமலே போய்விடும்"
என்பார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். அம்பேத்கார் மீது மிகவும்
பரிவுடனே ரங்கநாயகம்மா  இந்த நூலை எழுதி இருக்கிறார்.
அம்பேத்காரின் ஆக்கபூர்வமான பங்களிப்பை
அங்கீகரித்தும், அம்பேத்கார் முன்வைத்த கோட்பாட்டுப்
பிரச்சினைகளில், தமக்கு முரண்பாடு உள்ள இடங்களில்
சமரசமற்றும் விமர்சிக்கிறார் ரங்கநாயகம்மா.

அதே நேரத்தில், அம்பேத்காரின் பல்வேறு நடைமுறைகளின் 
(what was practiced by Ambedkar)  மீது, கறாரான விமர்சனம்
வைப்பதற்குப் பதிலாக,  மிகவும் மென்மையான
அணுகுமுறையையே கையாள்கிறார் ரங்கநாயகம்மா.

மதமாற்றமே தீர்வு என்றும், தாம் மதம் மாறப் போவதாகவும்
1936ஆம் ஆண்டிலேயே அம்பேத்கார் அறிவித்தார். ஆனால்,
1956இல், தம் அந்திம காலத்தில்தான், அதுவும் தம்முடைய
மறைவுக்குச் சிறிது காலம் முன்புதான் அம்பேத்கார்
பௌத்த மதத்திற்கு மாறுகிறார். மதமாற்றமே தீர்வு
என்று உறுதியாக முடிவு செய்த அம்பேத்கார், ஏன்  
இருபது ஆண்டுகள் காத்திருந்தார்? 1936 முதல்
1956 வரையிலான இந்த இருபது ஆண்டுகளில் தாம்
எடுத்த முடிவைச் செயலாக்க முடியாமல் அம்பேத்காரைக்
கட்டிப் போட்ட காரணிகள் யாவை?

இந்தக் கேள்வியைக் கேட்கும் ரங்கநாயகம்மா இதற்கான
பதிலை வாசகர்களுக்குத் தருவதில் துளியும் அக்கறை
காட்டவில்லை. மெலிந்த குரலில் இக்கேள்வியைக் கேட்டு
விட்டுக் கடந்து சென்று விடுகிறார். இதற்கான பதிலை
ரங்கநாயகம்மா அறிவார்; மார்க்சிய வெளிச்சத்தில்
அம்பேத்காரைத் திறனாய்வு செய்யும் அனைவரும்
அறிவார்கள்.

இந்தக் கேள்விக்கு விடையளிப்பதானது அம்பேத்காருக்குள்
இருக்கும் ஒரு சராசரி அரசியல்வாதியை, சமரசம் செய்து
கொள்ளும் அரசியல்வாதியை வெளிக்கொண்டு
வந்து விடும் என்று அஞ்சிய ரங்கநாயகம்மா,
விடையளிப்பதைத் தவிர்த்து விடுகிறார்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

1936இலோ  அல்லது அதைத் தொடர்ந்த சில
ஆண்டுகளுக்குள்ளோ  மதம் மாறி இருப்பாரேயானால், அம்பேத்கார் சட்ட அமைச்சராகவோ, அரசியல் நிர்ணய
சபைத் தலைவராகவோ நியமிக்கப்பட்டு இருக்க மாட்டார்
என்ற  உண்மையை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.

ஆக, கோட்பாடு, நடைமுறை (theory and practice) என்ற
இரண்டில், அம்பேத்காரின் கோட்பாடுகள் மீது மட்டுமே
கூர்மையான விமர்சனத்தை ரங்கநாயகம்மா
முன்வைக்கிறார். அம்பேத்காரின் நடைமுறைகள் 
அனைத்தையும்  கணக்கில் கொண்டு விமர்சிப்பதை
உணர்வுபூர்வமாகவே தவிர்த்து விடுகிறார். ஒன்றிரண்டு
நடைமுறைகளைப் போகிறபோக்கில் மெலிதாக
விமர்சிப்பதைத் தவிர.

தாம் சமர் புரிவது அம்பேத்கார் முன்மொழிந்த
கோட்பாடுகளுடன்தானே தவிர, அவரின் ஆளுமை
மீதல்ல என்ற கருத்தில் உறுதியுடன் இருந்த
ரங்கநாயகம்மா, தமது நூலில் அதை வெளிப்படுத்தி
உள்ளார். அம்பேத்காரின் ஆளுமைக்கு எவ்வித பங்கமும்
நேராமல், தமது கோட்பாட்டுச் சமரில் வெற்றி அடைந்து
இருக்கிறார் ரங்கநாயகம்மா இந்த நூலில்.

ரங்கநாயகம்மாவின் இந்த நூல் சாதியம் குறித்த
ஓர் ஆய்வு நூல் அல்ல. மாறாக, இது சாதியம் குறித்த
அம்பேத்காரின் கோட்பாடுகள் மீதான ஒரு
திறனாய்வு நூல். ஆய்வு  வேறு; திறனாய்வு வேறு.
நன்கு கவனிக்கவும்: சாதியம் பற்றிய ரங்கநாயகம்மாவின்
ஆய்வு நூல் அல்ல இது; மாறாக, சாதியம் பற்றிய
அம்பேத்காரின் கோட்பாடுகளைத் திறனாய்வு செய்யும்
ஒரு நூல் இது.
 
தமது சொந்த முயற்சியில் ஏராளமான தரவுகளைச்
சேகரித்து, அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி 
செய்து, அவற்றைப் பகுத்து ஆய்ந்து, அவற்றின் மீது
கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடை கண்டு,
விடைகளைத் தொகுத்து, தாம் தருவித்த முடிவுகளை
முன்வைப்பது ஒரு ஆய்வு நூலின் இலக்கணம் ஆகும்.
தமது நூல் ஓர் ஆய்வு நூல் என்று ரங்கநாயகம்மா
உரிமை கோரவில்லை. சாதியம் என்ற பிரச்சினையைக்
கையில் எடுத்து, அதன் தோற்றம், வளர்ச்சி, இயக்கம்
ஆகியவற்றை ஆய்ந்து அதற்குத் தீர்வும் கண்டு
விட்டேன் என்று ரங்கநாயகம்மா உரிமை கோரவில்லை.

தமது நூலைப் பற்றி, "அம்பேத்காரின் எழுத்துக்களை
அடிப்படையாகக் கொண்ட தலித் பிரச்சினைகள்
தொடர்பான விவாதம் இது" என்று ரங்கநாயகம்மா
தெளிவாகக்  கூறுகிறார். (பார்க்க: நூலின் தெலுங்கு
முதல் பதிப்பு முன்னுரை)

சாதியம் பற்றிய அம்பேத்காரின் கோட்பாடுகளைத்
திறனாய்வு செய்யும் நூல் இது. இதில் ரங்கநாயகம்மா
தெளிவாக இருக்கிறார்; வாசகர்களும் தெளிவாக
இருக்கிறார்கள். ஆனால் வினோத் மிஸ்ரா குழுவைச்
சேர்ந்த சில தோழர்கள் மட்டும் தாமும் குழம்பி
வாசகர்களையும் குழப்ப முயன்று தோல்வி
அடைகிறார்கள்.

ஆய்வுக்கும் திறனாய்வுக்கும் இடையிலான பாரதூரமான
வேறுபாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும். கம்ப
ராமாயணம் ஒரு நூல்; இதன் மீது ஆயிரம் திறனாய்வு
நூல்கள் வெளிவந்துள்ளன. "அரசும் புரட்சியும்" என்பது
லெனின் எழுதிய ஒரு நூல்; இதன் மீது ஆயிரம் திறனாய்வு
நூல்கள் வெளிவந்துள்ளன.

திறனாய்வு என்பதே முதலாளித்துவச் சமூகம்
வழங்கிய கொடை. நிலப்பிரபுத்துவ சமூகத்தில்
திறனாய்வு என்பதே கிடையாது. சிலப்பதிகாரத்தை
இளங்கோவடிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில்
எழுதினார். அக்காலத்தில் அதற்கு உரைதான் உண்டே
தவிர, திறனாய்வு எதுவும் கிடையாது. அடியார்க்கு
நல்லார் உரை எழுதினார். இயற்றப்பட்ட நூலுக்கு
உரை எழுதலாமே தவிர, திறனாய்வு எழுத இயலாது.

ஆக, ரங்கநாயகம்மாவின் நூல் ஒரு திறனாய்வு நூல்
என்ற உண்மையை இங்கு நிரூபித்து உள்ளோம். ஒரு
திறனாய்வு நூலை விமர்சனம் செய்கிற முறை வேறு;
அதற்கான அளவுகோல்கள் வேறு. ஆய்வு நூலை
விமர்சிக்கும் அதே அளவுகோல்களைக் கொண்டு
திறனாய்வு நூலை விமர்சிக்க முனைவது
எடைக்  கற்களைக் கொண்டு  தண்ணீரை அளக்க
முயல்வது போலாகும்.

லெனின் எழுதிய "என்ன செய்ய வேண்டும்?" என்ற
நூலைப் பலர் படித்து இருக்கக் கூடும். அந்த நூல்
ஒரு திறனாய்வு நூலே. அது polemical debatesஇன்   
தொகுப்பு. தம் சம காலத்தில் வாழ்ந்த
திருத்தல்வாதிகளான (revisionists) மார்ட்டினோவ்
போன்றோரின் கருத்துகளை,  முன்மொழிவுகளை
விமர்சித்து லெனின் எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பே அந்த நூல். ரபோச்சிய தேலா, ரபோச்சிய
மிஸில் ஆகிய ஏடுகளில் வந்த கட்டுரைகளுக்கு
லெனின் எழுதிய மறுப்பே பின்னாளில் "என்ன செய்ய
வேண்டும்?" என்ற நூலாக ஆக்கப் பட்டது.

ரங்கநாயகம்மாவின் இந்த நூல், லெனினைப்
பின்பற்றி, அவர் கடைப்பிடித்த பாணியில்,
அம்பேத்காரின் கருத்துக்களை விமர்சித்து
எழுதப்பட்ட நூல். முதலாளித்துவ உலகிலும் சரி,
மார்க்சிய உலகிலும் சரி, இத்தகைய விமர்சனப்
பாணி அங்கீகரிக்கப் பட்ட ஒன்றே; மேலும் நன்கு
நிலைநிறுத்தப்பட்ட முறைமையும் ஆகும்.
(well established methodology). எனவே ரங்கநாயகம்மாவின்
நூலில் பொருள்முதல்வாதப் பார்வை இல்லை
என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சொற்காமுகமே
ஆகும். (சொற்காமுகம்= phrase mongering).
---------------------------------------------------------------------------------------------------
தொடரும்
---------------------------------------------------------------------------------------------------   
பின்குறிப்பு: 1) நாங்கள் தற்போது மேற்கொண்டுள்ள பணிகள்
காரணமாக, எமது திறனாய்வு டிசம்பர் மாத வாக்கில்தான்
பிரசுரமாகக் கொண்டு வரப்படும். (32 பக்க pamphlet) 
2) இக்கட்டுரைத் தொடர்  இன்னும் சில கட்டுரைகளுடன்
இன்று அல்லது நாளையுடன் நிறைவு பெறும். எமது
முழுமையான திறனாய்வின் ஒரு சிறு பகுதியே
இங்கு முகநூலில் வெளியிடப் படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------                    

(5) சொற்காமுகர்களும் ரங்கநாயகம்மாவும்!
ரங்கநாயகம்மா நூல் பற்றிய திறனாய்வு!
அம்பேத்காரின் ஆளுமைக்குப் பங்கம் நேராமல்
அவரின் கோட்பாடுகளை மட்டும் விமர்சிக்கும் நூல்!

வியாழன், 29 செப்டம்பர், 2016

3000, 4000 ஆண்டுகளுக்கு முன்பான மக்கள் சமூகம்
பற்றிய ஒரு சித்திரத்தின் உதவியின்றி இக்கேள்விக்கு 
விடை காண இயலாது. ஆரியப் படையெடுப்பு
பற்றி முதலில் எழுதியவர்கள் மேலைநாட்டு வரலாற்று
ஆசிரியர்களே. இதை அம்பேத்கார் மறுக்கிறார்.
அம்பேத்கார் மெத்தப் படித்தவர். பல்வேறு விஷயங்களில்
ஆய்வு செய்தவர். அவரின் பல ஆய்வுகள் அறிவியல்
வழிப்பட்டவை. அவரின் அரசியலில் பலரும் முரண்படலாம்.
அதுபோல அவரின் ஆய்வுகளில் அவ்வாறு  முரண்பட முடியாது. 
**
நிற்க. இன்று நடைபெற உள்ள ஒரு கூட்டத்தில் பங்கேற்க
திடலுக்குச் செல்கிறேன். பின்னர் விரிவாகப் பேசலாம். 
(4) ஆரியம் திராவிடம் என்பதெல்லாம் கட்டுக்கதை!
ரங்கநாயகம்மாவின் நூல் குறித்த திறனாய்வு!
"ஆரியப்  படையெடுப்பு நிகழவில்லை"  என்று
அம்பேத்கார் உறுதிபடக் கூறுகிறார்!
------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் வரலாறே ஆரிய திராவிடப் போரின்
வரலாறுதான் என்பது ஈவெரா பெரியாரின் கருத்து.
இன்று (இந்த 2016ஆம் ஆண்டிலும்) ஆரிய திராவிடப்
போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அடிக்கடி
கூறுவார் கலைஞர் கருணாதி அவர்கள்.

இந்தியாவிலேயே ஆரிய திராவிடப் பகைமை குறித்து
ஒவ்வொரு நொடியிலும் பேசப்படும் இடம் தமிழ்நாடுதான்.
ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சான
கொள்கையே இதுதான்.

ஆனால் அம்பேத்கார் ஆரிய திராவிடப்போர் என்பதை
அடியோடு நிராகரிக்கிறார். ஆரியப்  படையெடுப்பு
(Aryan invasion) என்ற கோட்பாட்டை முட்டாள்தனமானது
என்கிறார். ஆரியப்  படையெடுப்பு பற்றிப் பேசுபவர்களை
"பாம்பைப் போலக்  கொல்ல வேண்டும்" என்கிறார்.

 இதோ அம்பேத்கார் கூறுகிறார்:
---------------------------------------------------------
"ஆரியர்கள் படையெடுத்து வந்து மற்ற இனங்களை
 அடக்கி ஒடுக்கினார்கள்  என்று கூறினால்தான்
அவர்களது மேம்பாட்டு நிலையை நிரூபிக்க முடியும்
என்பதைத் தெரிந்து கொண்ட மேலைய எழுத்தாளர்கள்,
ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்
என்றும், தாசர்களையும்  தசியுக்களையும் வெற்றி
கொண்டார்கள் என்றும் கதை கட்டி விட
ஆரம்பித்தார்கள்"
----- (அம்பேத்காரின் எழுத்தும் பேச்சும்; தொகுதி-13,
பக்கம்-120)
(மேற்கோளுக்குள் அடங்கிய பகுதி ரங்கநாயகம்மாவின்
நூலில் இருந்து; பக்கம்-39, இடது பாதி).

அம்பேத்கார் மேலும் கூறுகிறார்:
------------------------------------------------------------
(ஆரியப் படையெடுப்பு பற்றிய) "மேலைநாட்டுக் கோட்பாடு
சில விஷயங்களைப் போதிய அளவு ஆராயாமல்,
ஆழமாகப் பரிசீலிக்காமல் அவசரக் கோலமாக
மேற்கொள்ளப்பட்ட முடிவே என்பதில் ஐயமில்லை"
(தொகுதி-13, பக்கம்-158,159)
(மேற்கோளுக்குள் அடங்கிய பகுதி ரங்கநாயகம்மாவின்
நூலில் இருந்து; பக்கம்-40, இடது பாதி).

அம்பேத்கார் அறுதியிடுகிறார்:
----------------------------------------------------------
"அப்படிப்பட்டவர்கள் (மேலைநாட்டு எழுத்தாளர்கள்)
இத்தகைய வலுவற்ற, பலவீனமான அஸ்திவாரத்தின்
மீது ஒரு கோட்பாட்டை உருவாக்க முனைந்திருப்பது
வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

இந்த அத்தியாயத்தில் ஏராளமான. அசைக்க முடியாத,
உறுதியான சான்றுகள் தரப்பட்டுள்ள நிலைமையில்,
(ஆரியப் படையெடுப்பு பற்றிய) இந்த மேலையக்
கோட்பாடு இனியும் செல்லுபடி ஆகாது; இதனைக்
குப்பைக் கூடையில்தான் தூக்கி எறிய வேண்டும்".
(அம்பேத்கார் எழுத்தும் பேச்சும்: தொகுதி-13,
பக்கம்-158-159)
(மேற்கோளுக்குள் அடங்கிய பகுதி ரங்கநாயகம்மாவின்
நூலில் இருந்து; பக்கம்-40, வலது பாதி).

தமது நூலில், அம்பேத்காரின் "ஆரியப் படையெடுப்பு
என்பது கற்பனையே" என்ற கருத்தைச் சுட்டிக் காட்டும்
ரங்கநாயகம்மா, அப்பொருள் பற்றித் தமது கருத்து
என்ன என்பதை முன்வைக்கவில்லை. ஏனெனில்,
நூலின் மையக்கருத்து ஆரியப் படையெடுப்பு அல்ல.
எனவே காழ்ப்புணர்வோடு தொட்டதெற்கெல்லாம்
அம்பேத்காரை விமர்சிக்கிறார் என்று சித்தரிக்க
முயல்வதில்லை பொருளில்லை.

"3500 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஆசியாவில் வாழ்ந்து
வந்த, மேய்ச்சல் சமுதாயத்தினரான நாடோடிகளான
ஆரியர்கள், கைபர் போலன் கணவாய்கள் வழியாக
இந்தியாவுக்குள் நுழைந்தனர். இங்குள்ள நாகரிகத்தில்
சிறந்து விளங்கிய திராவிடர்களுடன் போரிட்டு,
அவர்களை வீழ்த்தி அடிமைகள் ஆக்கினார்கள்.
கங்கைச் சமவெளியில் குடியேறிய இந்த ஆரியர்கள்
நால்வகை வேதங்களைப் படைத்தார்கள்."  

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள
ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் இந்த வரலாறுதான்
கற்பிக்கப் பட்டு வருகிறது. மாக்ஸ் முல்லர், ஜவாஹர்லால்
நேரு, கால்டுவெல் பாதிரியார் போன்றோர் ஆரியப்
ப்டையெடுப்பு என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள்.

நவீன வரலாற்று ஆசிரியர்களான ரொமிலா தாப்பர்
போன்றோர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள்
அம்பேத்காரின் கருத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த அஸ்திவாரத்தையே
அம்பேத்கார், "ஆரியப்  படையெடுப்பு ஒரு கட்டுக்கதை"
என்று நிரூபித்ததன் மூலம் தகர்த்து விடுகிறார். மார்க்சிய
லெனினிய இயக்கம் என்ற முகாமில், மாறுவேடத்தில்
அமர்ந்திருக்கும் திராவிடக்  கோட்பாட்டின்
ஆதரவாளர்களும் அம்பேத்காரின் இந்த சாட்டையடியில்
இருந்து தப்பவில்லை. குறிப்பாக மார்க்சியத்தின்
பொருளியல் அடிப்படைகளை நடைமுறையில் மறுத்து,
கிராம்சிய வழியில் அமைப்பு நடத்தும்  பண்பாட்டு
மார்க்சிஸ்டுகள் அம்பேத்காரிடம் வாங்கிய அடியில்
மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள்.

கருத்தியல் தளத்தில் பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்த வல்ல அம்பேத்காரின் ஆய்வுகள்
மனம் ஒன்றிப் படிக்க வேண்டியவை. ஒரு திறனாய்வு
நூலின் துணையின்றி, அம்பேத்காரைப் படிப்பது
சுலபமல்ல. ரங்கநாயகம்மாவின் இந்த நூல், அந்த
வகையில் அம்பேத்காரைப் படிக்கப் பெரிதும்
துணை புரிகிறது.
---------------------------------------------------------------------------------------------------
தொடரும்
பின்குறிப்பு: இக்கட்டுரைத் தொடரின் முந்திய பகுதிகள்
அனைத்தையும் படிக்குமாறு வேண்டுகிறோம்.
---------------------------------------------------------------------------------------------------   
 
புதன், 28 செப்டம்பர், 2016

(3) வழிபாட்டு மனநிலை, துதிபாடித்தனம் இவற்றின் மீது
ரங்கநாயகம்மாவின் சம்மட்டி அடி!
ரங்கநாயகம்மா எழுதிய நூலின் திறனாய்வு!
---------------------------------------------------------------------------------------------- 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------------------------------
                உண்மையைக் கூறுவதே புரட்சிகரமானதுதான்!
                (To tell the truth is revolutionary)
                -----அந்தோனியோ கிராம்சி (1891-1937)
                  (இத்தாலிய மார்க்சிய  அறிஞர்)

ஆந்திரத்தைச் சேர்ந்த ரங்கநாயகம்மா அவர்கள் சாதியம்
குறித்து ஒரு நூல் எழுதி உள்ளார். அந்த நூலில் சாதி
ஒழிப்பிற்கு  அம்பேத்கரியம் தீர்வாகாது என்றும்
மார்க்சியமே தீர்வு  என்றும் நிறுவி உள்ளார். தலித்திய
மார்க்சிய வட்டாரங்களில் அறிவு பூர்வமான விவாதத்தை
உருவாக்க வல்லது அண்மையில்  வெளிவந்த இந்நூலின்
தமிழ் மொழிபெயர்ப்பு.

ரங்கநாயகம்மாவின் நூலைப் புரிந்து கொள்ள
வேண்டுமென்றால், அம்பேத்காரைப் படித்திருக்க
வேண்டும். அம்பேத்காரின் நூல்கள் முழுவதையும்
படித்திருக்காவிட்டாலும், அவர் எழுதிய
1) சாதி ஒழிப்பு 2) புத்தரும் அவர் தம்மமும் 3) புத்தரா
காரல் மார்க்சா என்ற கட்டுரை 4) சாதி குறித்த
அவரின் கருத்துக்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகப்
படித்து இருக்க வேண்டும்.

மார்க்சியத்துக்கு முன்னும் பின்னும் உலகெங்கும்
பல்வேறு குட்டிமுதலாளித்துவத் தத்துவங்கள் தோன்றி
உள்ளன. புருதோன் போன்ற குட்டி முதலாளித்துவ
அறிஞர்களின் கற்பனையான சோசலிசத்தை
மார்க்ஸ் தம் காலத்திலேயே எதிர்கொண்டு முறியடித்து
உள்ளார். சமூக முரண்பாடுகளுக்குத் தீர்வு தரும்
ஆற்றல் இல்லாதவையே குட்டிமுதலாளித்துவத்
தத்துவங்கள். இவற்றில் பல வெறும் சீர்திருத்தவாத
(reformism) எல்லைக்குள் முடங்கிப் போய்விட்டவை.

ரங்கநாயகம்மா தமது நூலில், இடஒதுக்கீடு என்னும்
சீர்திருத்த எல்லையை அம்பேத்கரியம் தாண்டவில்லை
என்பதை நிரூபித்து இருக்கிறார். சமூக மாற்றத்தை
மார்க்சியம் மட்டுமே சாதிக்க இயலும் என்றும்
நிறுவி உள்ளார்.

வழிபாட்டு மனநிலையும் துதிபாடலுமே எங்கும்
வியாபித்து இருக்கும் தமிழ்ச் சூழலில், அரசியல்
சூழலில், ரங்கநாயகம்மாவின் இந்த நூல் உண்மையைப்
பேசுகிறது. உண்மையைப் பேசுவதே புரட்சிகரமானது
என்கிறார் கிராம்சி. மிகுந்த துணிச்சலுடன் பூனைக்கு
மணி கட்டி இருக்கிறார் ரங்கநாயகம்மா இந்த நூலில்.

குறுகிய காலத்தில் மூன்றாம் பதிப்பைக் கண்டுள்ள
போதிலும், இந்நூல் இன்னும் அறிவுலகில் போதிய
கவனிப்பைப் பெறவில்லை. சம்பிரதாயமான ஓரிரு
அறிமுகக் கூட்டங்கள் இந்த நூலை முன் வைத்து
நடந்துள்ளன; என்றாலும் நூலின் பேசுபொருள் குறித்த
காத்திரமான விவாதங்கள் இன்னமும் தமிழ்ச்சூழலில்
எங்கும் நடைபெறவே இல்லை என்பதுதான் உண்மை.

விவாதங்களுக்கு அஞ்சுகிற, விவாதம் என்னும்
நடைமுறைக்கே தலைமுழுகி தர்ப்பணம் செய்துவிட்ட
பல்வேறு தமிழக மார்க்சிய அமைப்புகள் திட்டமிட்டே 
இந்த நூலைப் புறக்கணிக்கின்றன. மார்க்சியத்தின்
பெயரிலான தங்களின் பிழைப்புவாதமும் வாக்குவங்கி
அரசியலும் பாதிப்பு அடையக் கூடாது என்ற அழுக்கான
அக்கறை அதில் தெரிகிறது.

அடையாள அரசியலை மேற்கொண்டுள்ள அனைவரும்
விதிவிலக்கின்றி, மக்களிடம் தாங்கள் நீண்டகாலமாகவே 
உருவாக்கி வைத்துள்ள வழிபாட்டு மனநிலை மீது
இந்த நூல் கத்தியைப் பாய்ச்சி விடுகிறதே என்ற
கலக்கத்தில் உள்ளனர். எனவே அவர்களும் இந்த நூலை
எதிர்க்கின்றனர்.

எனினும், இந்த நூலை எதிர்ப்பவர்கள் அனைவரும்,
நூலை எதிர்ப்பதை விட, அதைப்  புறக்கணிப்பதே
சிறந்த உபாயம் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். 
"கண்டனம் என்பது அறிமுகத்தின் அடையாளம்"
என்ற அரசியல் பாலபாடத்தை அவர்கள் அறியாதவர்களா
என்ன!

அடையாள அரசியலை எவ்விதத்திலும் சாராமலும்,
ஆதாயம் கருதிய உள்நோக்கம் எதுவும் இல்லாமலும்,
வெறுமனே கல்வியியல் ரீதியாக (academically) இந்த நூலை
மென்மையாக விமர்சித்தவர்களைக்கூட, நூலின்
ஆதரவாளர்கள் எதிரியாகப் பாவித்து கடித்துக் குதறி வைத்துள்ளனர். இதன் மூலம் இந்த நூலின் மீதான
அறிவார்ந்த விவாதம் எழுவதை முளையிலேயே
கிள்ளி விட்டனர். இருப்பினும் இத்தகைய தற்காலிகத்
தடைகளைத் தாண்டி, காத்திரமான விவாதம் எழுந்தே
தீரும். அதை உருவாக்குவது ஒன்றே மார்க்சியத்தின்
மீது பற்றுக் கொண்டோரின் கடமை ஆகும்.
----------------------------------------------------------------------------------------------
தொடரும்
---------------------------------------------------------------------------------------------- 

(2) பொருள்முதல்வாதப் பார்வை இருக்கிறதா?
ரங்கநாயகம்மா எழுதிய நூலின் திறனாய்வு!
வாழை குலை தள்ளுவது போல், ரங்கநாயகம்மாவின்
நூலில் பொருள்முதல்வாதம் குலை தள்ளுகிறதா?
--------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதத்தை நன்கு கற்று, புரிந்து கொண்டு.
அதை உள்வாங்கிக் கொண்டு, அந்தரங்க சுத்தியோடு
அதைப் பின்பற்றுகிற எவர் ஒருவருக்கும் காலப்போக்கில் பொருள்முதல்வாதப் பார்வை மிக இயல்பாகக் கைவந்து  விடும். எனவே அவரின் சிந்தனையின்
வெளிப்பாடுகளிலும் செயல்பாடுகளிலும் பொருள்முதல்வாதப்
பார்வை இயல்பாகவே செல்வாக்குச் செலுத்தும்;
தீர்மானிக்கும். இது பொருள்முதல்வாதத்தின் பண்பு.

தத்துவம் மக்களைப்  பற்றிக் கொள்ளும்போது, அது
மாபெரும் பௌதிக சக்தி ஆகி விடுகிறது என்று மார்க்ஸ்
கூறியதை இங்கு நினைவு கூரலாம். அதே போல், பொருள்முதல்வாதப் பார்வை ஒருவரைப் பற்றிக்
கொள்ளும்போது, அவரின் நூல்களில் அது இயல்பாகவே வெளிப்படும். பொருள்முதல்வாதப் பார்வையை வெளிப்படுத்துவதற்காக ஒருவர் தனிச்சிறப்பான
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

ஆகவே, ரங்கநாயகம்மா அவர்களின் நூலில் காணப்படும்
(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு..........), அம்பேத்கார் பற்றிய
அவரின் விமர்சனங்களில்  பொருள்முதல்வாதப் பார்வை
இல்லை என்று முரட்டடியாக நிராகரித்து விட முடியாது.
அவர் மார்க்சியம் கற்காதவர் என்று கூற முடியாது.

ஒரு நூலிலோ அல்லது விமர்சனத் தொகுப்பிலோ,
பொருள்முதல்வாதப் பார்வையானது வாழை
குலை தள்ளுவது போல குலைதள்ளப் படுவது அல்ல.
அது பாலுக்குள் நெய் போன்று உள்ளுறைந்து நிற்பது.
வெண்பாவில் செப்பலோசை பயில்வது போன்று
பயின்று நிற்பது அது.

அடுத்து வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில்
தமது நூலை ரங்கநாயகம்மா எழுதவில்லை என்ற
குற்றச்சாட்டு. பொருள்முதல்வாதம் தொன்மையானது;
மார்க்சுக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனால்
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) என்பது
மார்க்சின்  உருவாக்கமே. வரலாற்றைப் பொருள்முதல்வாத
வழியில் விளக்குவது அது.

மார்க்சுக்கு முந்தி எவருமே வரலாற்றைப்
பொருள்முதல்வாத நோக்கில் விளக்கியதில்லை.
ஒரே வரியில் சொல்வதானால், மக்கள்தான்
வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதே நேரத்தில் வரலாற்றில்
தனிநபருக்கு உள்ள பாத்திரத்தையும் மார்க்சியம்
மறுக்கவில்லை. (பார்க்க: மார்க்சிய அறிஞர் பிளக்கானவ்
எழுதிய "வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்"
என்ற நூல்). மார்க்சியத்தின் இந்த வரையறுப்பை
மறுத்து, அம்பேத்கார் எழுதி இருக்கிறார். அம்பேத்காரின்
மார்க்சிய எதிர்ப்புக் கருத்துக்கள் இது போல் நிறைய
உள்ளன. அவை சம்பிரதாயமாகக் கூட
மார்க்சியர்களால் மறுக்கப் படவில்லை.

ரங்கநாயகம்மாவின் இந்த நூல், பிரதானமாக
அம்பேத்காரின் சாதியம் பற்றிய பார்வை, சாதி ஒழிப்பு
குறித்த அம்பேத்காரின் தீர்வுகள் ஆகியவற்றைப்
பற்றியே பேசுகிறது. அவற்றின் போதாமை, பொருந்தாமை
ஆகியவை பற்றியும் பேசுகிறது.

அம்பேத்கார் நம் சமகாலத்தவர்.
அவர் கி.மு காலத்தவர் அல்லர். அவரின் பேச்சும் எழுத்தும்
முறையாக ஆவணப் படுத்தப்பட்டு, அநேகமாக
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மலிவு விலையில்
கிடைக்கின்றன.

அம்பேத்கார் எழுதிய அரசமைப்புச் சட்டம்தான் இன்று
நம்மை ஆளுகை செய்கிறது. அச்சட்டத்தோடு நாம்
கொள்ளுகிற ஒவ்வொரு உறவிலும் நாம் அம்பேத்காரைக்
காண்கிறோம்; உணர்கிறோம்.சுருங்கக்கூறின்,
அவர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக,
அன்றாட வாழ்வில் அம்பேத்காரை ஒவ்வொரு நாளும்
உணர்ந்து கொண்டே இருக்கிறோம்.

அம்பேத்கார் சிந்தனைப்பள்ளியைச் சார்ந்தவர்கள்,
மாயாவதி முதல் திருமாவளவன் வரை,
அவர் பெயரிலான அமைப்புகள், கட்சிகள் வாயிலாக,
ஒவ்வொரு நாளும் அவரின் இருப்பை போதனைகளை
நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆகவே, இந்நிலையில், அம்பேத்காரின் எழுத்துக்களில்
இருந்து, அவரின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு,
அவற்றை விமர்சனம் செய்வது என்பது வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வையே. வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வை என்பது எங்கோ
கடல் கடந்து ஒரு தனித்தீவில் உள்ள மரத்தின்
பொந்தில் இருப்பது போலவும், அதை ரங்கநாயகம்மா
ராபின்சன் குரூசோவாக மாறி, எடுத்து வரத்
தவறி விட்டார் என்பது போல விமர்சிப்பது
ஏற்புடையதல்ல.

ரத்தமும் சதையுமாக இந்த மண்ணின் வாசனையோடு
அம்பேத்கார் தம் எழுத்துக்களில் புலப்பட்டு நிற்கிறார்.
அவர் மறக்கடிக்கப்பட்டோ, மறக்கப்பட்டோ அழிந்துபோய் விடவில்லை. தம் எழுத்துக்களில் அவர் உயிருடன்
இருக்கிறார்; தரிசனம் தருகிறார். அம்பேத்காரின்
எழுத்துக்களில் இருந்து அவரை விமர்சிப்பது என்பது
பழுதுபடாத வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையே.

எனவே, ரங்கநாயகம்மா வரலாற்றுப் பொருள்முதல்வாதப்
பார்வை இல்லாமலே அம்பேத்காரை அணுகுகிறார்
என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.
----------------------------------------------------------------------------------------------------------
தொடரும்
-------------------------------------------------------------------------------------------------------
நாராயண குருவை வெறுமனே ஒரு இந்துத் துறவி என்று
பாஜக குறுக்குமேயானால், அதை விட மூடத்தனம்
வேறில்லை. அவர் மகத்தான சீர்திருத்தவாதி. மாபெரும்
சாதி எதிர்ப்புப் போராளி. புலனாயினும் கீழாக நடத்தப்பட்ட
ஈழவ சாதி மக்களுக்கு சமூக அந்தஸ்த்தைப் பெற்றுத்
தந்தவர் அவர். ஈழவர் மட்டுமின்றி பிற ஒடுக்கப்பட்ட
அனைத்து சாதி மக்களுக்கும் சமூக அந்தஸ்த்தைப் பெற்றுத்
தந்தவர். மலையாள நம்பூதிரிகளின் ஆதிக்க நுகத்தடியை
உடைத்து சுக்குநூறாக இருந்தவர். ஏழை எளிய மக்களின்
பிரதிநிதியாக இருந்தவர். அவர்களின் வாழ்வில் ஏற்றம்
காண நாளெல்லாம் உழைத்தவர்.
**
மேலும் தத்துவ நூல்களை ஆழ்ந்து கற்றவர். மிகச் சிறந்த தத்துவஞானியும் ஆவார். அவரின் மறைவுக்குப் பின்னரும்
அவரின் சீடர்கள் அவரது கருத்துக்களைத் தொடர்ந்து எடுத்துச் சென்றார்கள்.  

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

பொருள்முதல்வாதப் பார்வை இருக்கிறதா இல்லையா?
ரங்கநாயகம்மா எழுதிய நூலின் திறனாய்வு!
வாழை குலை தள்ளுவது போல், ரங்கநாயகம்மாவின்
நூலில் பொருள்முதல்வாதம் குலை தள்ளுகிறதா?
-----------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதத்தை நன்கு கற்று, புரிந்து கொண்டு.
அதை உள்வாங்கிக் கொண்டு, அந்தரங்க சுத்தியோடு
அதைப் பின்பற்றுகிற எவர் ஒருவருக்கும் காலப்போக்கில் பொருள்முதல்வாதப் பார்வை மிக இயல்பாகக் கைவந்து  விடும். எனவே அவரின் சிந்தனையின்
வெளிப்பாடுகளிலும் செயல்பாடுகளிலும் பொருள்முதல்வாதப்
பார்வை இயல்பாகவே செல்வாக்குச் செலுத்தும்;
தீர்மானிக்கும். இது பொருள்முதல்வாதத்தின் பண்பு.

தத்துவம் மக்களைப்  பற்றிக் கொள்ளும்போது, அது
மாபெரும் பௌதிக சக்தி ஆகி விடுகிறது என்று மார்க்ஸ்
கூறியதை இங்கு நினைவு கூரலாம்.
ஆகவே, ரங்கநாயகம்மா அவர்களின் நூலில் காணப்படும்
(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு..........), அம்பேத்கார் பற்றிய
அவரின் விமர்சனங்களில்  பொருள்முதல்வாதப் பார்வை
இல்லை என்று முரட்டடியாக நிராகரித்து விட முடியாது.
அவர் மார்க்சியம் கற்காதவர் என்று கூற முடியாது.

ஒரு நூலிலோ அல்லது விமர்சனத் தொகுப்பிலோ,
பொருள்முதல்வாதப் பார்வையானது வாழை
குலை தள்ளுவது போல குலைதள்ளப் படுவது அல்ல.
அது பாலுக்குள் நெய் போன்று உள்ளுறைந்து நிற்பது.
வெண்பாவில் செப்பலோசை பயில்வது போன்று
பயின்று நிற்பது அது.

அடுத்து வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில்
தமது நூலை ரங்கநாயகம்மா எழுதவில்லை என்ற
குற்றச்சாட்டு. பொருள்முதல்வாதம் தொன்மையானது;
மார்க்சுக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனால்
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) என்பது
மார்க்சின்  உருவாக்கமே. வரலாற்றைப் பொருள்முதல்வாத
வழியில் விளக்குவது அது.

மார்க்சுக்கு முந்தி எவருமே வரலாற்றைப்
பொருள்முதல்வாத நோக்கில் விளக்கியதில்லை.
ஒரே வரியில் சொல்வதானால், மக்கள்தான்
வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதே நேரத்தில் வரலாற்றில்
தனிநபருக்கு உள்ள பாத்திரத்தையும் மார்க்சியம்
மறுக்கவில்லை. (பார்க்க: மார்க்சிய அறிஞர் பிளக்கானவ்
எழுதிய "வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்"
என்ற நூல்). மார்க்சியத்தின் இந்த வரையறுப்பை
மறுத்து, அம்பேத்கார் எழுதி இருக்கிறார். அம்பேத்காரின்
மார்க்சிய எதிர்ப்புக் கருத்துக்கள் இது போல் நிறைய
உள்ளன. அவை சம்பிரதாயமாகக் கூட
மார்க்சியர்களால் மறுக்கப் படவில்லை.

ரங்கநாயகம்மாவின் இந்த நூல், பிரதானமாக
அம்பேத்காரின் சாதியம்பற்றிய பார்வை, சாதி ஒழிப்பு
குறித்த அம்பேத்காரின் தீர்வுகள் ஆகியவற்றைப்
பற்றியே பேசுகிறது.

அம்பேத்கார் நம் சமகாலத்தவர்.
அவர் கி.மு காலத்தவர் அல்லர். அவரின் பேச்சும் எழுத்தும்
முறையாக ஆவணப் படுத்தப்பட்டு, அநேகமாக
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மலிவு விலையில்
கிடைக்கின்றன.

அம்பேத்கார் எழுதிய அரசமைப்புச் சட்டம்தான் இன்று
நம்மை ஆளுகை செய்கிறது. அச்சட்டத்தோடு நாம்
கொள்ளுகிற ஒவ்வொரு உறவிலும் நாம் அம்பேத்காரைக்
காண்கிறோம்; உணர்கிறோம்.சுருங்கக்கூறின்,
அவர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக,
அன்றாட வாழ்வில் அம்பேத்காரை ஒவ்வொரு நாளும்
உணர்ந்து கொண்டே இருக்கிறோம்.

அம்பேத்கார் சிந்தனைப்பள்ளியைச் சார்ந்தவர்கள்,
மாயாவதி முதல் திருமாவளவன் வரை,
அவர் பெயரிலான அமைப்புகள், கட்சிகள் வாயிலாக,
ஒவ்வொரு நாளும் அவரின் இருப்பை போதனைகளை
நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆகவே, இந்நிலையில், அம்பேத்காரின் எழுத்துக்களில்
இருந்து, அவரின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு,
அவற்றை விமர்சனம் செய்வது என்பது வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வையே. வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வை என்பது எங்கோ
கடல் கடந்து ஒரு தனித்தீவில் உள்ள மரத்தின்
பொந்தில் இருப்பது போலவும், அதை ரங்கநாயகம்மா
ராபின்சன் குரூசோவாக மாறி, எடுத்து வரத்
தவறி விட்டார் என்பது போல விமர்சிப்பது
ஏற்புடையதல்ல.

அம்பேத்காரின் எழுத்துக்களில் இருந்து அவரை
விமர்சிப்பது என்பது பழுதுபடாத வரலாற்றுப்
பொருள்முதல்வாதப் பார்வையே.

அதே நேரத்தில், புத்தர் வேறு; அம்பேத்கார் வேறு.
அம்பேத்கார் இருபதாம் நூற்றாண்டின் தலைவர்.
புத்தர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
புத்தர் ஒரு வரலாற்றுப் பாத்திரம். அவர் பிம்பிசார
மன்னனின் காலத்தில் வாழ்ந்தவர். நரேந்திர மோடி
காலத்தில் வாழ்கிற நாம், 2500 ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த புத்தரைப் பற்றி அறிந்து கொள்ள
வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவு தேவை.
புத்தரைப் பற்றிய மெய்யான வரலாற்றுச் செய்திகள்
யாவும் தேவையான அளவில் இன்றும் கிடைக்கவில்லை.
**
எனவே, வரலாற்றுப் பொருள்முதல்வாத வழிமுறை
இல்லாமல், புத்தரை மதிப்பிட முடியாது. அது பற்றி
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
...........................தொடரும்.....................

திங்கள், 26 செப்டம்பர், 2016

1000 ரூபாய் ஹெர்குலிஸ் சைக்கிளில் தொடங்கி  
ஒரு கோடி ரூபாய் பி.எம்.டபிள்யு கார் வரை! 
1G முதல் 5G வரை ஓர் அறிவியல் பயணம்!
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-3)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------  
2G ,3G போன்ற தலைமுறை மாற்றங்கள் எல்லாம் 
வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா மொபைல் 
சேவைக்கு மட்டுமே பொருந்தும். நிலைத்த 
தொலைபேசியான  நிலவழித் தொலைபேசியில் 
(Landline Telephone) இத்தகைய தலைமுறை 
மாற்றம் எதுவும் கிடையாது.

உலகம் முழுவதும் 4G பெருவாரியான நாடுகளில் 
பயன்பாட்டில் உள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்ட் 2015) 
இந்தியாவில் நாடு தழுவிய அளவில் 4G சேவையை 
(4G LTE எனப்படும் 4G யை விடக் குறைந்த சேவை)
ஏர்டெல் நிறுவனம் அறிமுகப் படுத்தியதால், இந்தியாவும் 
4G பயன்பாட்டுக்கு நெருக்கமாக வந்து விட்டது.

ஐந்தாம் தலைமுறை வந்து விட்டதா? உலகில் 
எங்கெல்லாம் 5G இருக்கிறது என்கிற கேள்விகள் 
எழுவது இயற்கையே.
உலகில் எங்கும் 5G இல்லை என்பதே இதற்கு விடை.

2010-2011 காலக்கட்டத்தில் 4G வளர்த்தெடுக்கப் பட்ட 
உடனேயே, 5Gயை உருவாக்கும் பணிகள் தொடங்கி 
விட்டன. ஐரோப்பியத் தொலைதொடர்பு தரநிர்ணயக் 
கழகம் (European Telecomn Standards Institute) என்ற அமைப்பு 
5Gயை வளர்த்தெடுத்து அதற்கான தரநிர்ணயத்தை 
உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. பல்வேறு 
மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் மொபைல்  
சேவை நிறுவனங்களும் இப்பணியில் துணை புரிந்து 
வருகின்றன.

2019இல் 5Gக்கான தரநிர்ணயம் இறுதியாகும் என்றும்,
அவ்வாறு இறுதியானால் 2020-2021  ஆண்டுகளில் 
5G சேவை தொடங்கும் ( Commercial Rollout of 5G service)
என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் 
உலகில் 5G வருவதற்கு இன்னும் 6,7 ஆண்டுகள் ஆகும்.

அப்படியானால் இந்தியாவில் 5G வருவதற்கு இன்னும் 
எத்தனை ஆண்டுகள் ஆகும்? கால தாமதம் ஆகுமோ 
என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். ஏர்டெல் 
இருக்கும்போது கவலைப் படலாமா? இருக்கிற ஒண்ணே 
முக்கால் ஜி, ரெண்டேமுக்கால் ஜி ஆகியவற்றை 
வைத்துக் கொண்டு 5G, 6G என்று சேவை வழங்கத்தான் 
ஏர்டெல் தயாராக இருக்கிறதே! பின் ஏன் கவலை? 

5G என்பது பிக்காசோவின் நவீன ஓவியம்!
--------------------------------------------------------------------
ஆண்டுதோறும் பார்சிலோனா நகரில் உலக மொபைல் 
காங்கிரஸ் (World Mobile Congress) நடைபெறும். வயர்லெஸ் 
தொழிலில் உள்ள அனைவரும் இங்கு கூடி, தங்களின் 
கருவிகள் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பகிர்ந்து 
கொள்வர். கடந்த மார்ச் 2015இல் நடைபெற்ற காங்கிரசில் 
பேசிய ஒரு தொழில் (நுட்ப) அதிபர், 5Gயை பிக்காசோவின் 
நவீன ஓவியத்துக்கு ஒப்பிட்டார்.

(ரவிவர்மா மரபான ஓவியர்; பிக்காசோ நவீன ஓவியர்.
மரபான ஓவியம் என்பது பார்த்ததை அப்படியே வரைவது.
நவீன ஓவியம் என்பது பார்த்ததை வரையாமல் 
உணர்ந்ததை வரைவது. இது நவீன ஓவியத்திற்கான ஒரு 
இலக்கணம் என்பதை ஓவிய ஆர்வலர்கள் அறிந்திருக்கக் 
கூடும்).

5G யின் ராட்சச வேகம்!
----------------------------------------
5G வரும்போது, அதன் வேகம் அசுரத்தனமாக இருக்கும்.
10 Gbps வரையிலான வேகம் கிடைக்கும். இதுவரையிலான
2G, 3G, 4G சேவைகளில் நாம் உணர்ந்த வேகம் Kbps மற்றும் 
Mbps தான். 5Gஇல்தான் Gbps வேகத்தை உணரப் போகிறோம்.

தொழில்நுட்ப விவரங்களைத் தவிர்த்து விட்டு,
சராசரி நுகர்வோர் 5Gயை எப்படிப் புரிந்து கொள்வது?   
ஒரு முழுநீள ஹாலிவுட் சினிமாவை பதிவிறக்கம் 
செய்து முடிப்பதற்கு, 3Gயில் பல மணி நேரம் ஆகும்.
4Gயில் பல நிமிடங்கள் ஆகும். 5Gயில் சில நொடிகள் 
ஆகும்.

இன்னும் எளிமையாகச் சொல்வதானால், 
2G என்பது சைக்கிள்.
3G என்பது ஸ்கூட்டர்.
4G என்பது  மாருதி ஏ.சி கார்.
5G  என்பது பி.எம்.டபிள்யு கார். 
1000 ரூபாய் சைக்கிளில் தொடங்கிய அறிவியலின் 
பயணம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள BMW காரில்
தொடர இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------
தொடரும் 
***************************************************************    
(1) இந்தியாவில் 3G படுதோல்வி!
4G என்பது மெய்யான 4G அல்ல!
அலைக்கற்றை குறித்த அறிவியல் விளக்கக் கட்டுரை!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
வணிக ரீதியான 3G மொபைல் சேவையை இந்தியாவில்
முதன் முதலில் வழங்கியது BSNL நிறுவனமே. தனியார்
நிறுவனங்கள் கடைசியில் நின்றன. அன்றைய
தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசா, முன்பணம்
எதுவும் செலுத்தாமலும் (without any upfront payment),
ஏலத்தில் பங்கெடுக்கக் கோராமலும் BSNLக்கு
3G அலைக்கற்றையை ஒதுக்கித் தந்தார்.

இந்தியாவில் 3G அலைக்கற்றைக்கான ஏலம் 2010ஆம்
ஆண்டில் நடைபெற்றது. 2010 ஏப்ரல் மாதம் தொடங்கிய
ஏலம், 34 நாட்கள் நடைபெற்று, மே 19 அன்று முடிவுற்றது.
மொத்தம் 183 சுற்றுக்களில் இந்த ஏலம் நடைபெற்றது.
மிகவும் வெளிப்படையாகவும் சர்வதேச அளவிலான
பார்வையாளர்கள் பங்கேற்புடனும் நடந்த இந்த
ஏலத்தில் மொத்தம் ஒன்பது நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த அலைக்கற்றை ஏலத்தை நடத்திய அமைச்சர் யார்?
வேறு யார்? ஆ ராசாதான். ஏலமே விடாமல், 2G அலைக்
கற்றையைத் தாரை வார்த்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு
ஆளான அதே ஆ ராசாதான்.

இந்த ஏலம் மட்டுமின்றி வேறொரு அலைக்கற்றை ஏலத்தையும்
ஆ ராசா நடத்தினார். அது BWA (Broadband Wireless Access)
அலைக்கற்றைக்கான ஏலம் ஆகும். தொழில்நுட்ப
வட்டாரங்களில் இது வைமேக்ஸ் என்று அழைக்கப்படும்.
WiMAX என்றால்  Worldwide inter operability of Microwave access என்று
பொருள்.

2010 மே மாதம் தொடங்கிய இந்த ஏலம், 16 நாட்கள் நடைபெற்று
ஜூன் 11 அன்று முடிவுற்றது. 11 நிறுவனங்கள் பங்கேற்ற
இந்த ஏலத்தில் 6 நிறுவனங்கள் மட்டுமே அலைக்கற்றை
கிடைக்கப் பெற்றன.

தமது பதவிக் காலத்தில் அலைக்கற்றை குறித்த இரண்டு
ஏலங்களை நடத்திய ஒரே அமைச்சர் ஆ ராசாதான். அவருக்குப்
பின் பதவியேற்ற கபில் சிபில் ஒரு தோல்வி அடைந்த
ஏலத்தை நடத்தினார்.

3G ஏலத்தின் விளைவாக ரூ 67718.95 கோடி அரசுக்குக் கிடைத்தது.
முப்பதாயிரம்  கோடி ரூபாய்தான் கிடைக்கும் என்று
DOT (Dept of Telecom) எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு
இரு மடங்குக்கு மேல் கிடைத்தது.

ஏலத்தின் இறுதியில், மொத்தம் 71 உரிமங்கள் வழங்கப் பட்டன.
ஒரு உரிமதாரருக்கு 5 MHz (மெகா ஹெர்ட்ஸ்) வீதம் மொத்தம்
355 MHz அளவுள்ள 3G அலைக்கற்றை வழங்கப் பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற BWA அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக
அரசுக்கு ரூ 38543.31 கோடி கிடைத்தது. இவ்விரண்டு
ஏலங்களிலும் சேர்த்து மொத்தம் 106262.26 கோடி ரூபாய்
அரசுக்குக் கிடைத்தது. அதாவது ஒரு லட்சத்து ஆறாயிரம்
கோடி ரூபாய் ஏலத்தொகையாக அரசுக்குக் கிடைத்தது.
இதற்கான பெருமை ஆ ராசா அவர்களையே சேரும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்தும்கூட, இந்தியாவில்
3G சேவை என்பது முற்றிலும் படுதோல்வி அடைந்த ஒன்று.
இந்த உண்மையை அன்றைய அமைச்சர் கபில் சிபல்
வெளிப்படையாகவே பேசினார். இது நாளிதழ்களிலும்
தொலைக்காட்சிச் செய்திகளிலும் வெளிவந்ததை வாசகர்கள்
நினைவு கூரட்டும். எனினும், அமைச்சரின் ஒப்புதல்
வாக்குமூலமான 3G சேவை படுதோல்வி என்ற பொருளின்மீது
இந்தியாவில் எந்த விவாதமும் நடக்கவில்லை.

அறிவுபூர்வமான விவாதங்களுக்கு இந்தியாவில் இடமில்லை
என்ற ஒளிவீசும் உண்மையை அறிந்து வைத்திருக்கும்
எவருக்கும் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இந்தியாவில் 3G சேவை படுதோல்வி அடைந்ததற்குக் காரணம்
தனியார் நிறுவனங்களே. பல நிறுவனங்கள் அலைக்கற்றையைப்  
பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில்
3G  அலைக்கற்றை உரிமம் பெற்றவை 1) பாரதி ஏர்டெல் 2) ஏர்செல்
3) வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே. ரிலையன்ஸ்,
டாட்டா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கிடத்
தேவையான அலைக்கற்றை உரிமத்தைப் பெறவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

டாட்டா ஃபோட்டான் என்ற பெயரில் 2G அலைக்கற்றையில்
அதிவேகம் தருவதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றும்
டாட்டா நிறுவனம் 3G உரிமத்தைப் பெறாததில் வியப்பில்லை.
3G உரிமம் பெற்ற நிறுவனங்கள்கூட குறித்த நேரத்தில்
சேவையைத் தொடங்க முன்வரவில்லை.

2G, 3G, 4G என்ற தலைமுறை மாற்றங்களின்போது, புதிய
தலைமுறையின் வேகம் முந்தைய தலைமுறையை விட
அதிகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு
பொதுவான பண்பு. ஆனால் 2G, 3G சேவைகளுக்கு இடையிலான
பெரும் வேறுபாடு என்னவெனில், 3G சேவையில் வீடியோ
அழைப்பு (VIDEO CALL)   உண்டு என்பதுதான்.  அதாவது இரு
முனைகளிலும் பேசுவோரின் முகம் (உருவம்) தெரியும்.
அதற்காகவே இரு பக்கங்களிலும் காமிரா ( camera at both front
and back) உடையதாக  3G மொபைல் ஃபோன்கள் வடிவமைக்கப்
படுகின்றன.

3G சேவை வெற்றி பெற்று இருக்குமேயானால், இந்தியா
முழுவதும் வீடியோ அழைப்புகள் பிரபலமாகி இருக்கும்.
இருபுறமும் காமிரா கொண்ட 3G வசதி கொண்ட  செட்டுகள்
உற்பத்தியாகி இருக்கும். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில்
ரூ 20000க்கும்,   ரூ 30000க்கும் மொபைல் ஃபோன் வாங்கும்
அளவு வசதி படைத்த வாடிக்கையாளர்கள்கூட 3G வசதி கொண்ட
மொபைல் ஃபோன்களை (3G enabled handsets) வாங்குவதில்
ஆர்வம் காட்டவில்லை.

ஆக, 3G சேவை இந்தியாவில் படுதோல்வி என்ற அன்றைய
அமைச்சர் கபில் சிபலின் கூற்று உண்மையே என்று
வாசகர்கள் உணர இயலும்.
---------------------------------------------------------------------------------------------
தொடரும்
----------------------------------------------------------------------------------------------
மொபைல் பயன்படுத்தும் அனைவரும் 
நன்றி செலுத்த வேண்டியது யாருக்கு?
வயர்லெஸ்சின் தந்தையான ஜே.சி.போசுக்கே!   
---------------------------------------------------------------------------------------
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-4)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------  
இன்ஸ்பெக்டர்: சார், குற்றவாளி Xஐக் கைது செய்து 
விட்டேன்; ஓவர்.
கமிஷனர்: அப்படியா, எங்கே, எப்போது; ஓவர்.
இன்ஸ்பெக்டர்: சற்று முன்பு; பம்பாய் VTயில்; ஓவர்.
கமிஷனர்: உடனே அவனை K-12க்குக் கொண்டு வாங்க; ஓவர்.
  
நிஜ வாழ்க்கையிலோ அல்லது திரைப்படத்திலோ 
இதுபோன்ற உரையாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும். 
இது என்ன ஓவர்? ராமபக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவது 
போல, வயர்லெஸ் பக்தர்கள் ஓவர் என்று அடிக்கொருதரம் 
சொல்ல வேண்டுமா? இது என்ன நேர்த்திக் கடனா?

ஆரம்பகால  வயர்லஸ் உரையாடல் இது. (இது இன்னமும் 

உலகின் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது)
இந்த வயர்லஸ் ஒருவழிச் சேவை (one way working) ஆகும்.
அதாவது, ஒரே நேரத்தில் இருவரும் பேச முடியாது.
அப்படிப் பேசினால், குரல் கேட்காது; இரைச்சல்தான் 
கேட்கும் (noise instead of voice). எனவே உரையாடலில் 
தனது ஸ்பெல் முடிந்து விட்டது என்பதை  உணர்த்தும் 
பொருட்டு, ஒவ்வொரு ஸ்பெல் முடிவின்போதும்  ஓவர் 
என்று சொல்லியாக வேண்டும்.

மொபைல் சேவை ஒரு வயர்லெஸ் சேவை. என்றாலும் 

அதற்கு முன்பே வேறு வடிவில் வயர்லெஸ் சேவை 
உலகெங்கும் இருந்தது. முதன் முதலில் வயர்லெஸ் 
செய்திப் பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்கியவர் இந்திய 
விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்தான். ஆனால் அதற்குரிய 
காப்புரிமைக்கு அவர் உரிமை கோராமல் இருந்ததால், 
இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி அந்தப் பெருமையைத் 
தட்டிச் சென்றார். நோபல் பரிசும் பெற்றார்.

முதன்முதலில் இருந்த வயர்லஸ் சேவை கார்கள், 

காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களில் இருந்தது.
டிரான்ஸ்மீட்டர், ரிசீவர் இரண்டும் வாகனத்தின் தலையில் 
பொருத்தப் பட்டு இருக்கும். செல் தொழில்நுட்பத்துக்கு 
முந்திய வயர்லஸ் சேவை இது. இது பூஜ்யம் தலைமுறை 
(Zero Generation) அதாவது 0G எனப்படுகிறது.

மொபைல் வயர்லெஸ்சின் முதல் தலைமுறை, 

செல் தொழில்நுட்பத்தைக் கொண்டது (Cellular technology).
சேவை வழங்கப்படும் ஏரியாக்கள் சிறு சிறு 
சிற்றறைகளாகப் பிரிக்கப் படுவதால் செல் என்ற பெயர் 
வந்தது. இந்த 1G,  அனலாக் (analog) முறையில் ஆனது.
அதாவது, இம்முறையில் பேசப்படும் சொற்கள் 
எவ்வித ரகசியக் குறியீடுகளாகவும் மாற்றப் படாது.
(No encoding and  hence no decoding).

2G முதற்கொண்டு தொடர்ந்த எல்லாத் தலைமுறைகளும் 

டிஜிட்டல் முறையிலானவை. இம்முறையில், பேசப்படும் 
சொற்கள் பைனரி குறியீடுகளாக (Binary code) மாற்றப்படும்.
உதாரணமாக, "12" என்பது அனலாக் முறையில் 12 என்றே 
டிரான்ஸ்மிட் செய்யப்படும். டிஜிட்டலில் 12 என்பது
பைனரியாக மாற்றப்பட்டு 1100 என்று டிரான்ஸ்மிட் 
செய்யப்படும். தற்காலத்தில், கீழ் வகுப்புகளிலேயே 
பைனரி கற்றுக் கொடுக்கப் படுவதால், இன்றைய 
தலைமுறை இது குறித்து நன்கு அறிந்திருப்பர்.

வணிக ரீதியிலான 1G சேவை முதன் முதலில் 1981இல் 

சவூதி அரேபியாவில் தொடங்கியது. 1980இன் பத்தாண்டுகள் 
முழுவதும் 1G செயல்பட்ட காலம். தரநிர்ணயப்படி, 1G 
என்பது NMT -450 (Nordic Mobile Telephony) என்று அழைக்கப் 
பட்டது. (நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து,
டென்மார்க் ஆகியவையே நார்டிக் நாடுகள். இங்குதான் 
1G உருவாக்கப் பட்டது. எனவேதான் NMT என்ற பெயர்).
1G அளித்த வேகம் (speed provision) 2.4 kbps மட்டுமே.

1990இன் பத்தாண்டுகள் 2Gயின் காலம். 1990-91இல் 2G

சேவை தொடங்கியது. இது அளித்த வேகம் 64 kbps வரை.  
2Gயின் பிரபல தொழில்நுட்பங்கள் GSM, CDMA, IS-95
ஆகியவை ஆகும். இவற்றில் CDMA மற்றும் IS-95 ஆகிய 
இரண்டும் CDMA தொழில்நுட்பங்கள். இவ்விரண்டும் 
அமெரிக்காவில் பிரபலமாக இருந்தன. அமெரிக்கா
தவிர்த்த உலகின் பிற நாடுகளில் GSM தொழில்நுட்பமே 
செல்வாக்குப் பெற்றது.

GSM என்பது Global System of Mobile communication ஆகும்.
CDMA என்பது Code Division Multiple Access ஆகும்.

GSMஇல் ரேடியோ அதிர்வெண் அலைக்கற்றையானது
(Radio Frequency Spectrum) பல்வேறு சானல்களாகப்
பிரிக்கப் பட்டு, FD அல்லது TD (frequency division or time division)
முறையில் பயன்படுத்தப்படும்.

CDMAயில் இவ்வாறு பிரிக்கத் தேவையில்லாமல், மொத்த 
அலைக்கற்றையுமே பயன்படுத்தப் படும். இது spread spectrum 
டெக்னாலஜி ஆகும். CDMA சேவைக்கென்றே 
பிரத்தியேகமான மொபைல் ஃபோன்கள் உண்டு. இத்தகைய 
CDMA ஃபோன்கள் GSM சேவையில் பயன்படாது.
(CDMA handsets do not have interchangeability)
-------------------------------------------------------------------------------------------------------
படங்கள்: இடமிருந்து வலம்; 
ஜகதீஷ் சந்திர போஸ் (இந்தியா) (1858-1937)
மார்க்கோனி (இத்தாலி) (1874-1937)
--------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*************************************************************************         

மரபணு மாற்றப்பட்ட கடுகு!
மக்களிடம் கருத்துக் கேட்கும் மத்திய அரசு!
-------------------------------------------------------------------------------
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பருத்தி
மட்டுமே இந்தியாவில் இன்று வரை அனுமதிக்கப்
பட்டுள்ளது. பருத்திக்கு அடுத்து முயற்சி செய்யப்பட்ட
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு இந்தியா இன்று
வரை அனுமதி அளிக்கவில்லை. தற்போது மரபணு
மாற்றப்பட்ட கடுகுப் பயிருக்கு அனுமதி வழங்கத் 
திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இது குறித்து மக்களின்
கருத்தைக் கேட்டுள்ளது.

சனி, 24 செப்டம்பர், 2016

ரங்கநாயகம்மா அவர்களின் சாதியம் பற்றிய நூல்!
சமகாலச் சூழலில் இந்த நூல் தேவைப் படுகிறதா?
சாதிவெறி அரசியலையும் அடையாள அரசியலையும்
எதிர்த்து முறியடிக்க இந்த நூல் பயன்படுகிறதா?
அம்பேத்கரின் தீர்வுகள் மீதான விமர்சனம் சரிதானா?
-------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------------------------------
ரங்கநாயகம்மா எழுதிய "சாதியப் பிரச்சினைக்குத்
தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது!
மார்க்ஸ் அவசியத் தேவை!" என்ற நூல்.
வெளியீடு: குறளி பதிப்பகம்,  ஜூன் 2016.
தெலுங்கு மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே திறனாய்வு
செய்யப் படுகிறது. (தமிழில்: கொற்றவை அவர்கள்.)
--------------------------------------------------------------------------------------------------
வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல, ரங்கநாயகம்மா
அவர்களின் இந்த நூல் தமிழ் அறிவுத்தளத்தில் நிலவிய
வெற்றிடத்தை எளிதில் நிரப்பி விட்டது. சமூகத்தின்
தேவையை இந்நூல் நிறைவு செய்கிறது என்பதன்
வெளிப்பாடே இது.

வழிபாட்டு மனநிலையும்  துதிபாடுதலுமே அங்கிங்கு
எனாதபடி எங்கும் நிறைந்து தமிழ் அறிவுலகு மூச்சுத்
திணறிக்  கொண்டு இருக்கிறது. அடையாள அரசியல்
தனது உச்சகட்ட வளர்ச்சியை அடைந்து சாதிவெறி
அரசியலாக மாறி விட்டது.

தங்கள் சாதியைச் சேர்ந்த மறைந்த தலைவர்களை
அடையாளம்  கண்டு, தேடிப் பிடித்து, உயிர்த்தெழ வைத்து
குருபூஜைகள் வாயிலாக அவர்களை இளைய
தலைமுறையிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஒவ்வொரு
சாதியினரும் காட்டும் ஆர்வத்தில் குறை காணத்
தேவையில்லை. ஆனால் இந்தப் போக்கின் தர்க்க
ரீதியான வளர்ச்சியானது , தங்கள் சாதியைச் சேர்ந்த
குற்றவாளிகளைக் காப்பாற்ற சட்டத்தை வளைக்கவும்
ஒவ்வொரு சாதியும்  தயாராகி விட்ட  சூழலில் முடிகிறது.

ஆக, சாதியைக் களத்தில் சந்திக்காமல் சமூகத்தை
ஒரு அங்குலமேனும் முன் நகர்த்த முடியாது என்ற
உண்மை சமகாலச் சூழலில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் சாதி எதிர்ப்புப் போருக்கு
ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஜோதிபா பூலே, ஈவெரா
பெரியார், நாராயணகுரு, அம்பேத்கர்  என்று
பல்வேறு போராளிகளின் அணிவரிசையும் உண்டு.
எனினும் இன்றளவும் சாதி ஒழிப்பு சாத்தியப் படவில்லை.

இவர்களுள் சாதி  பற்றி ஆராய்ந்து, சாதி ஒழிப்பு
குறித்து பல்வேறு தீர்வுகளை முன்வைத்த அம்பேத்கரின்
சாதி ஒழிப்பு பற்றிய கோட்பாடுகளைத் திறனாய்வுக்கு
எடுத்துக் கொண்டுள்ளார் ரங்கநாயகம்மா. கூடவே
புத்தரின் கொள்கைகள் சாதி ஒழிப்பில் மார்க்சியத்தை
விடச் சிறந்த தீர்வை வழங்குகின்றன என்று அம்பேத்கர்
கூறுவதால், புத்தம், அம்பேத்கரியம்,  மார்க்சியம்
ஆகிய மூன்றும் கூறுகிற சாதியம்பற்றிய  கருத்துகளை திறனாய்வுக்கு எடுத்துக்
கொண்டுள்ளார்  நூலாசிரியர்.

தம் திறனாய்வின் இறுதியில், சாதியை ஒழிக்க
வேண்டுமெனில், புத்தரும் அம்பேத்கரும் மட்டும்
போதாது; மார்க்சும் அவசியத் தேவை என்ற முடிவுக்கு
வந்துள்ளார் நூலாசிரியர்.

ஆக, புறக்கணிக்க முடியாத ஒரு உள்ளடக்கத்தை
இந்த நூல் கொண்டுள்ளது. எனவே அது சாதிய
ஒழிப்பில் அக்கறை கொண்டுள்ள அனைவரின்,
கவனத்தையும்  குறிப்பாக மார்க்சிஸ்டுகளின்
கவனத்தை ஈர்க்கிறது. சாதி ஒழிப்பில் மார்க்சியத்தின்
பாத்திரம் என்ன என்பது தொடர்பான ஒரு விவாதம்
மேலெழுந்து உள்ளது. இந்தப் பின்னணியில்
ரங்கநாயகம்மா அவர்களின் இந்த நூலை
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் திறனாய்வு
செய்துள்ளது.

இந்தச் சுருக்கமான முன்னுரையுடன், இனி
நூலுக்குள் செல்வோம்.
--------------------------------------------------------------------------------
தொடரும்
----------------------------------------------------------------------------------
*************************************************************

சகோதரி கொற்றவை அவர்களுக்கு,
-------------------------------------------------------------------
1) இவ்வாறு விளிப்பதிலும் தங்களுக்கு ஆட்சேபம்
இருக்குமாயின் ஈண்டு உரையாடல் நிகழ இயலாது.
2) விளிப்பு குறித்த தங்களின் வாதம் ஏற்க இயலாதது.
**
3) தங்களின் வாதப்படி பார்த்தால், தோழர் தமிழிசை
என்றும், தோழர் சுஷ்மா ஸ்வராஜ் என்றும் தோழர்
வானதி சீனிவாசன் என்றும் விளித்தல் வேண்டும்.
இன்னும் தோழர் நரேந்திர மோடி என்றும் தோழர்
ஹெச் ராஜா என்றும் விளித்தல் வேண்டும். அது
அபத்தமானது. 
**
திரு வசு மித்ர அவர்கள் ஒரு பதிப்பக உரிமையாளர்
என்ற செய்தி உண்மையிலேயே எனக்குத் தெரியாது. இதை
மிகப்பெரிய அறியாமையாகத் தாங்கள் கருதும்
பட்சத்தில் என்னால் எதுவும் செய்ய இயலாது. நான் இந்த
நூலை மதிப்பீடு செய்து ஒரு கருத்தைத் தெரிவித்தேன்.
அதற்கு பதிப்பாளரைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய
தேவையில்லை என்றே கருதுகிறேன்.
**
நூலைப் பற்றி நான் நிறையச் சொல்லி இருக்கிறேன்.
அது பற்றித் தாங்கள் எதுவும் சொல்லவில்லை. மாறாக
தங்களுடன்  முன்பின் பழக்கம் இல்லாத, முற்றிலும்
அறிமுகம் இல்லாத, இந்த நூல் காரணமாகவே தங்களோடு
தொடர்பு கொள்ள முற்பட்ட, ஒரு மூன்றாம் மனிதனாகிய
நான்,  தங்களை மரியாதையுடன் திருமதி கொற்றவை என்று குறிப்பிட்டதில் தவறு காண்பது பேதைமையன்றி
வேறு யாது?
**
அடுத்து, "தோழர்" என்ற அடைமொழியானது மார்க்சியக்
கட்சி சார்ந்தும், அதன் வெகுஜன அமைப்புகள் சார்ந்தும்
இயங்கியோர், இயங்குவோர் தங்களுக்குள்
ஒருவரையொருவர் விளிக்கவும் சுட்டவும் உண்டான சொல்.
Tom, Dick and Harry ஆகியோரை விளிப்பதற்கான சொல் அல்ல அது.
தங்களை "தோழர்" என்றுதான் விளிக்க வேண்டும்
என்று தாங்கள் என்னை நிர்பந்திப்பது அறிவுடைமை ஆகுமா?
**
இறுதியாக, இந்த நூல் குறித்த எங்கள் மதிப்பீடு பற்றிய
தங்கள் கருத்து என்ன? இந்த நூல் பற்றி மட்டுமே
நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். மூலநூலாசிரியர்,
மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் ஆகியோரைப்
பற்றிய செய்திகள், தகவல்கள் ஆகியவற்றில் எமக்கு
அக்கறை இல்லை. கருத்தியல் சாராத விஷயங்களில்
அக்கறை செலுத்துவதும், கருத்தியலைப் புறக்கணிப்பதும்
பேதைமை ஆகும்.
**
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
----------------------------------------------------------------------------------------------
இந்த நூல் பற்றிய மதிப்பீடு என்னுடைய தனிப்பட்ட
கருத்து அல்ல. இந்த நூல் பேசப்படத் தொடங்கியதுமே,
புதுமைப் பதிப்பகத்துக்குச் சென்று அந்த நூலை
நாங்கள் எல்லோரும் வாங்கிப் படித்து, விவாதித்து,
அதன் பிறகு செய்யப்பட்ட மதிப்பீடு இது. மேலும் இந்த
நூல் குறித்த மதிப்பீட்டை ஒரு சிறு வெளியீடாகவும்
கொண்டுவர உத்தேசித்துள்ளோம். எனவே அமைப்பின்
கருத்தை நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக
உரிமை கொண்டாட முடியாது. இது குறித்து
அனைவருக்கும் சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளோம்.
தங்களின் அஞ்சல் முகவரி இல்லாததால் தங்களுக்கு அனுப்ப இயலவில்லை.

நூல் பற்றிய முழுமையான மதிப்பீடு ஒரு சிறு நூலாக
வெளிவர இருக்கிறது. அந்த மதிப்பீட்டின் சாரம்
இரண்டு குறுங் கட்டுரைகளாக என்னால் பின்னூட்டம்
இடப்பட்டுள்ளது. 1) அடையாள அரசியலுக்கு எதிராக
மார்க்சியத்தைத் தூக்கிப் பிடிக்கும் நூல் 2) பூனைக்கு
மணி கட்டிய அம்மையார் ஆகிய எமது இரண்டு பின்னூட்டங்களையும்  படித்துப் பார்க்குமாறு வேண்டுகிறோம்.
 
வியாழன், 22 செப்டம்பர், 2016

சுவாதி கொலையில் பணம் பறிக்கவே யூமா காத்தரினும்
அவள் மகன் ஹரி சிவாவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்
என்று குற்றம் சாட்டுகிறார் ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ்.

முக்கியச் செய்தி!
-----------------------------------
உண்மையில் சுவாதியைக் கொலை செய்தவன்
யூமா காத்தரின் என்ற தமிழச்சியின் மகனான
ஹரி சிவா என்பவன். இவன்தான் ராம்குமாரை
கூலிக்கு அமர்த்திக் கொலை செய்தவன். இதற்காகவே
திருநெல்வேலியில் உள்ள ராம்குமாரை ஆசை காட்டி
அழைத்து வந்து, லாட்ஜில் தங்க வைத்து, அரிவாள்
வாங்கி கொடுத்து கொலை செய்ய வைத்தான்.
**
கொலைக்கான காரணம் (motive), சுவாதியிடம்
இருந்து அவர் நிறுவன மற்றும் அரசு சம்பந்தமான
சில ரகசியங்களைக் கேட்டான். சுவாதி தர மறுத்தார்.
போலீசில் சொல்லி விடுவதாக மிரட்டினார். எனவே
சுவாதியைக் கொலை செய்தால் ,மட்டுமே தான் தப்பிக்க
முடியும் என்பதால் ஆள் வைத்து கொலை செய்தான்.
உண்மைக்கு கொலையாளி ஹரி சிவா. தற்போது இன்டர்போல்
உதவியுடன் ஹரி சிவாவைக் கைது செய்ய போலீஸ்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
**
போலீசுக்கு எதிரான மனநிலையை மக்களிடம்
உருவாக்கவும், கொலையாளியான தன்  மகனைக்
காப்பாற்றவும் தமிழச்சி இவ்வளவு ஆர்ப்பாட்டங்களை
செய்து வருகிறார்.     

புதன், 21 செப்டம்பர், 2016

பூனைக்கு மணி கட்டிய அம்மையார்!
--------------------------------------------------------------------
கரடு தட்டிப் போயும் கடப்பாரையால் தோண்டினால்கூட
மண் மேலெழும்பாமலும் உள்ள, மூர்க்கத் தனமான
ஒரு வழிபாட்டு மனநிலை நிலவும் தமிழ்ச் சூழலில்,
ரங்கநாயகி அம்மையார் தமது நூல் (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு......) மூலம், இறுகிப்போன  இந்த வழிபாட்டு மனநிலையைத்
தகர்த்து எறிந்துள்ளார் என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
இந்நூல் குறித்து மதிப்பிடுகிறது.
**
மொத்தத் தமிழ்ச் சூழலிலும் வழிபாட்டு மனநிலையை
அகற்றி விட்டு, அதனிடத்தில் ஆய்வு மனநிலையை
அறிமுகப் படுத்தும் ஒரு துணிச்சலான முயற்சியாகவே,
பூனைக்கு மணி காட்டும் முயற்சியாகவே இந்த நூலை
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் எடை போடுகிறது.
**
மகாத்மா காந்தி, புத்தர் பற்றிய நூலாசிரியரின்
மதிப்பீடுகளில் பல்வேறு குறைகள் இருந்த போதிலும்,
சாராம்சத்தில்இந்த நூல் மார்க்சியத்தை உயர்த்திப்
பிடிக்கிறது. தமிழகத்திலும் இந்தியத் துணைக்
கண்டத்திலும்  செல்வாக்குப் பெற்றுத் திகழும்
குட்டி முதலாளித்துவத் தத்துவங்களால் ஒருபோதும்
சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாது என்ற
உண்மையை அம்மையார் ஆணித்தரமாகவும்
ஆதாரங்களுடனும் இந்நூலில் நிரூபித்து இருக்கிறார்
என்று  மார்க்சிய சிந்தனைப் பயிலகம்  அங்கீகரிக்கிறது.
**
பல ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிப் பண்பாட்டு இயக்கம்
சார்பாக மறைந்த தோழர் இல  கோவிந்தசாமி அவர்களின்
முன்முயற்சியில், சாதியம் குறித்த கருத்தரங்கம்
நடைபெற்று, கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுக்கப்
பெற்று நூல் வடிவம் பெற்றன. சாதியம் குறித்த
முதன் முதல் மார்க்சிய ஆய்வு அதுதான். அந்நூல்
சாதியம் குறித்த மார்க்சியப் பார்வை என்ன என்ற
விவாதத்தை எழுப்பியது.
**
அதன் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரங்கநாயகி
அம்மையாரின் இந்த நூல்தான் மீண்டும் அதே பொருளில்
ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்
திருமதி கொற்றவை மற்றும் இந்த நூலின் ஆதரவாளர்கள்
பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்புள்ள இந்த
உண்மையை, இந்த வரலாற்றை மார்க்சிய சிந்தனைப்
பயிலகம் நினைவூட்ட விரும்புகிறது.
**
ரங்கநாயகி அம்மையாரின் இந்த நூல் குறித்த,
கறார் ஆனதும் துல்லியமானதுமான ஒரு மதிப்பீட்டை
(திறனாய்வை) ஒரு சிறு வெளியீடு வாயிலாகக்
கொண்டு வருவது என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
முடிவெடுத்து உள்ளது. தற்போது நாங்கள்
மேற்கொண்டிருக்கும் ஒரு பணி முடிந்த பின்னரே,
(அதாவது நவம்பர் மாத வாக்கில்) இந்த வெளியீட்டை
எங்களால் கொண்டு வர இயலும்.
**
மொழிபெயர்ப்பாளர் திருமதி கொற்றவை மற்றும் இந்த
நூலின் ஆதரவாளர்கள் இந்த நூல் சுட்டும் சாதிய
ஒழிப்புக்கான மார்க்சியப் பார்வை குறித்து ஒரு
காத்திரமான விவாதத்தை எழுப்பக் கடமைப்
பட்டுள்ளார்கள். எனினும் அத்தகைய விவாதத்தை
உருவாக்குவதில் அவர்களிடம் மிகப்பெரிதும் போதாமை
நிலவுகிறது என்பது எங்கள் ஆதங்கம். இந்த நூலின்
பயனும், தமிழ் மொழிபெயர்ப்பின் பயனும் அத்தகைய
ஒரு விவாதத்தை உருவாக்குவதுதான் அல்லவா!
காத்திரமானதும் இடைவிடாததுமான polemical debates
மூலமாகவே வழிபாட்டு மனநிலையை அகற்றி,
அவ்விடத்தில் ஆய்வு மனநிலையை வைக்க முடியும்!
.........(தொடரும்)................
**
............தொடர்ச்சி..................
மேற்கூறியவைதான் அம்மையாரின் நூல் குறித்த
மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின் பார்வை.
இந்நூல் காலத்தின் கட்டாயம் என்பதால், சமகால
மார்க்சிய அரசியலின் மூலாதாரமான ஒரு தேவையை
இந்நூல் நிறைவு செய்கிறது என்பதால், இந்நூலின்
பல்வேறு குறைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை
என்று மார்க்சிய சிந்தனைப் பயிலகம் கருதுகிறது. 
**
இந்நூலின் ஆதரவாளரான திரு வசு மித்ர என்பவர்,
எமது கருத்துக்குப் பதிலாக எழுதியுள்ள சில
பின்னூட்டங்களில், தமது முதிர்ச்சியற்ற, சிறுபிள்ளைத்
தனமான, குட்டிமுதலாளித்துவ மனநிலையை
வெளிப்படுத்துகிறார். மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தில்
அம்மையார் பேரவை உண்டா என்று கேட்பதன் மூலம்.
இத்தகைய lumpen commentsஐ  மார்க்சிய சிந்தனைப்
பயிலகம் ஒருபோதும் பொருட்படுத்தாது.
**
எனினும்,அவரின் பின்னூட்டத்தில் ஒரு "அறியா வினா"
உள்ளது. அதற்கு விடையளிக்க வேண்டியது கடமை.
தமிழ் இலக்கணமானது,  வினாக்களை அறிவினா,
அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை
வினா என்றெல்லாம் பிரிக்கிறது. (பத்தாம் வகுப்புக்கான
தமிழ் இலக்கணப் புத்தகம் பார்க்கவும்) பல்வேறு
அகவையில் அமைந்த பெண்டிரைச் சுட்டுமாறு
எங்ஙனம் என்பதே அவ்வினா. பேதை, பெதும்பை,
மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்
என்பவையே அவை. இப்பருவங்களைக் கடந்த பெண்கள்
அனைவருமே பொதுவில் பெண்கள் என்றே அழைக்கப்
படுவர். அவர்களுள் அகவையில் மூத்தோர் அம்மை
என்று அழைக்கப் படுவர். சிறப்புக் கருதி ஆர் விகுதி
சேர்க்கையில் அம்மையார் என்ற மரியாதைச்
சுட்டுப் பெயர் கிடைக்கிறது. நன்றி. வணக்கம்.
**
தோழமையுள்ள
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம், சென்னை.