அடையாள அரசியலுக்கு எதிராக....
மார்க்சியத்தைத் தூக்கிப் பிடிக்கும் நூல்!
---------------------------------------------------------------------------
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மிகத் தீவிரமான
ஒரு வழிபாட்டு மனநிலை நிலவுகிறது. திரைப்பட நடிகர்
எம் ஜி ராமச்சந்திர மேனனை கடவுளாக வழிபட்ட தேசம்
இது. இத்தகைய வழிபாட்டு மனநிலை பகுத்தறிவுக்கு
(REASON) எதிரானது; பிற்போக்கானது.
**
ரங்கநாயகம்மாவின் இந்த நூல் புரையோடிப் போயுள்ள
வழிபாட்டு மனநிலையின் மீது கத்தியை ஆழமாகப்
பாய்ச்சி விடுகிறது. எனவே நுனிப்புல்லர்களும்,
காலரிக்கு வாசிப்பவர்களும் விலாவில் குத்துப் பட்டது
போல அலறுகிறார்கள்.
**
ஆதாரங்களை அடுக்கி வைத்து அவற்றின் பேரில்
தமது முடிவுகளைச் சொல்வதால், அம்மையாரின் இந்த நூல்
பரிசீலனைக்கு ஏற்றதாகி விடுகிறது. பரிசீலிக்கவே
தகுதியற்றது இந்த நூல் என்று கூறுவது கோழைத்தனமான
நழுவல் வாதம் ஆகும். விவரங்களில் இருந்து உண்மைக்குச்
செல்லுதல் என்ற மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி
அம்மையார் எழுதியிருக்கும் இந்த நூலில், அம்மையார்
வந்தடைந்த முடிவுகள் தவறானவை என்று எவரேனும்
கருதினால், அதை நிரூபிப்பது வாசகர்களால் வரவேற்கப்படும்.
**
அம்மையாரின் நூலில் பல்வேறு குற்றங்குறைகள்
இருந்தாலும், சாராம்சத்தில் அந்நூல் மார்க்சியத்தை
உயர்த்திப் பிடிக்கிறது. தமிழகத்தில் செல்வாக்குப்
பெற்றிருக்கும் பல்வேறு குட்டிமுதலாளித்துவத்
தத்துவங்களை விட, மார்க்சியமே உயர்ந்தது என்பதை
நூலாசிரியர் நிரூபித்து இருக்கிறார். அடையாள அரசியல்
என்னும் புற்றுநோயானது வர்க்க அரசியலை, மார்க்சிய
அரசியலை அரித்துத் தின்று கொண்டிருக்கும் ஒரு
காலக்கட்டத்தில், அதை எதிர்த்துப் போராட விரும்புவோர்க்கு
இந்நூல் ஒரு சிறு அளவிலேனும் உதவி செய்கிறது
என்பதே உண்மை.
**
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர் மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
சென்னை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக