இலக்கம் 1 ஐ 9801 என்னும் இலக்கத்தால் வகுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 1/9801 என்னும் வகுத்தலின் போது, விடையாக வருவது என்ன தெரியுமா?
அதை நீங்களே பாருங்கள்.
0.00010203040506070809101112131415161718192021222324252627282930…………….. 9799
என்று வருகிறது. அதாவது தசம புளிக்குப் பின்னர் ஒன்றிலிருந்து நூறு வரையுள்ள இலக்கங்களை இரண்டிரண்டாக வரிசையாக எழுதி வருவதுதான் விடையாகிறது (0. 00 01 02 03 04 05 06 07 08 09 10 11…). இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. 98 மட்டும் விடையில் வராது. அந்த 98 இலக்கத்தைத்தான் நாம் வகுப்பதற்குப் பயன்படுத்தி இருக்கிறோமல்லவா? அதனால் 98 இல்லை. அத்துடன் 01 முதல் 99 வரை இரட்டை இலக்கங்களாக எழுதுவதால், 98 உம் 01 உம் சேர்ந்து வகுக்கப்படும் இலக்கமாக இலக்கம் 9801 ஆகிறது. இது தற்செயலாக அமைந்ததேயல்ல. கணிதத்தின் மாபெரும் விந்தை இது.
இத்துடன் விந்தை முடிந்துவிடவில்லை.
இலக்கம் 1 ஐ 998001 என்னும் இலக்கத்தால் வகுத்தால் என்ன விடை வரும் சொல்லுங்கள்?
ஆம் நீங்கள் நினைப்பது சரியே!
ஆம் நீங்கள் நினைப்பது சரியே!
0.00000100200300400500600700800901001100120013014015016017018019020……….. ………996997999 என்று முடிகிறது. இங்கும் 998 இலக்கம் இருக்காது. காரணம் அதைத்தான் நாம் வகுப்பதற்குப் பயன்படுத்துகிறோம் அல்லவா? இங்கு வரும் இலக்கங்கள் தசம புள்ளிக்குப் பின்னர் 000 001 002 003 004 005 006 007 008 009 010….. என்னும் வரிசையை எடுக்கின்றன.
இந்தக் கணிதம் ஆச்சரியத்தை தரவில்லையா உங்களுக்கு?
மேலே சொன்னவை புரியவில்லையெனில் படம் தருகிறேன் மெல்ல பாருங்கள்.
கொசுறாக இன்னுமொரு கணித விந்தை
இலக்கம் 1 ஐ 81 ஆல் வகுத்தால் வருவது என்ன தெரியுமா?
0.012345679.
81 ஆல் வகுப்பதால் இங்கும் 8 இல்லை.
-ராஜ்சிவா-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக