செவ்வாய், 20 செப்டம்பர், 2016


இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. அபாயகரமானது.
அறிவியலுக்கு எதிரானது. AC மின்சாரம் உயிரைப் பறிக்காது
என்ற கருத்தை இந்த வாக்கியம் கூறுகிறது.
அது உண்மை அல்ல.
**
அடுத்து, AC மின்சாரம் விட்டு விட்டு வரும் என்பது தவறு.
AC, DC இருவகை மின்சாரமும் எலெக்ட்ரான்களின் பயணமே.
(FLOW OF ELECTRONS). DCயில் ஒரே திசையில் எலெக்ட்ரான்கள்
பயணம் செய்யும். ACயில் எலெக்ட்ரான்கள் ஒரே திசையில்
செல்லாமல், திசை மாறி மாறிச் செல்லும். வேறுபாடு
அவ்வளவே.
**
AC மின்சாரம் விட்டு விட்டு வரும் என்பதால் ஷாக் அடித்தால்
உயிர் போகாது என்ற கருத்து சரியல்ல.
விட்டு விட்டு மழை பெய்தது என்பது போல, விட்டு விட்டு
மின்சாரம் வரும் என்று கூறுவது தவறு. இத்தகைய
தவறான கருத்துக்கள் நிறைய உயிர்களைப் பறித்து
விடும் என்பதை சுட்டிக் காட்டக் கடமைப் பட்டுள்ளேன்.
**
DC மின்சாரம், AC மின்சாரம் என்று எந்த வகை மின்சாரமாக
இருந்தாலும், அதில் கையை வைத்து ஷாக் அடித்தால்
உயிர் போகும் வாய்ப்பு இரண்டு வகை மின்சாரத்திலும்
உண்டு. தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா என்று
பாரதி கூறியது கவிதை சார்ந்த விஷயம். அதாவது
கற்பனை. அதை AC மின்சாரத்திற்குப் பொருத்தக் கூடாது.
**
தவறான கருத்தைச் சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு
வலுச் சேர்க்க, தங்களைப்  போன்றவர்களைப் பயன்படுத்திக்
கொண்டதில் நாங்கள் மிக்க வருத்தம் அடைகிறோம்.
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர்
நியூட்டன் அறிவியல் மன்றம்.
சென்னை.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக