புத்தர்-மார்க்ஸ் ஒப்பீடே அபத்தமானது!
ரங்கநாயகம்மா நூல் குறித்து!
---------------------------------------------------------------------------
குழந்தையைக் குளிப்பாட்டிய பின்னர், குளிப்பாட்டிய
தண்ணீரை வீசும்போது, குழந்தையையும் சேர்த்து வீசி
விடுவது போன்று, மூலநூலாசிரியர் ரங்கநாயகி அம்மையார்
புத்தரையும் வீசி எறிந்து விடுகிறார். அவரின் நூல் முற்ற
முழுக்க அம்பேத்காரின் சாதி பற்றிய கருத்தியலை
ஆராயும் நூல். அதில் புத்தருக்கு வலிந்து இடம்
கொடுத்திருப்பது எவ்விதத்திலும் பொருத்தம் உடையதன்று.
**
"சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது....." என்ற
நூலின் தலைப்பே, கற்பிதத்தின் அடிப்படையில்
அமைந்துள்ளது. சாதியத்தின் தோற்றுவாய், வளர்ச்சி,
இயக்கம், நிலைபேறு ஆகியன குறித்து புத்தர் எவ்வித
ஆய்வையும் மேற்கொள்ளவில்லை: எத்தகைய தீர்வையும்
வழங்கவில்லை. அவரின் முன்னுரிமைகள் முற்றிலும்
வேறானவை. அவரின் நிகழ்ச்சி நிரலில் சாதி இடம்
பெறவில்லை; அதற்கான தேவை அவருக்கு இருக்கவில்லை.
அவர் காலத்தில் நிலவிய சாதியத்தை தேவைக்கேற்ப
அவர் எதிர்கொண்டார், அவ்வளவே.
**
புத்தரை அறிந்து கொள்ள, அவரின் போதனைகளைத்
தெரிந்து கொள்ள இன்று ஆயிரம் வழிகள் உள்ளன;
ஆயிரம் நூல்கள் உள்ளன. அம்பேத்கார் எழுதிய
"புத்தரும் அவர் தம்மமும்" என்ற ஒற்றை நூலை மட்டுமே
ஆதாரமாகக் கொண்டு புத்தரை மிகவும் எதிர்மறையாகவும்
உண்மைக்குப் புறம்பாகவும் விமர்சனம் என்ற பெயரில்
அவதூறு செய்வது பேதைமையுள் எல்லாம் பேதைமை
மட்டுமல்ல, நேர்மை சிறிதுமற்ற செய்கையும் ஆகும்.
அரச போகத்தைத் துறந்து, பிச்சை வாங்கி உண்ணும்
வாழ்க்கை பெற்ற புத்தர் எங்ஙனம் ஒட்டுண்ணி ஆவார்?
**
நக்சல்பாரி இயக்கம் சாரு மஜூம்தார் தலைமையில்
வசந்தத்தின் இடிமுழக்கமாக வெடித்துக் கிளம்பியபோது,
நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும்
அணிதிரண்டார்கள். அவர்களில் பலர் தொழில்முறைப்
புரட்சியாளர்களாக (Professional Revolutionaries), அதாவது
இயக்கத்தின் முழுநேர ஊழியர்களாகப் புரட்சிப்பணி
ஆற்றினார்கள். அவர்களைப் பராமரித்தது யார்?
அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் (shelter)
அளித்துக் காப்பாற்றியது யார்? மற்றவர்கள்தானே!
ஆயின் முழுநேரப் புரட்சியாளர்கள் ஒட்டுண்ணிகள்
ஆகி விடுவார்களா?
**
புத்தரை ஒட்டுண்ணி என்று வர்ணிப்பது மூல நூலாசிரியர்
ரங்கநாயகி அம்மையாரின் குட்டி முதலாளித்துவப்
பார்வைக் கோளாறு. இது பாட்டாளி வர்க்கக்
கண்ணோட்டம் அல்ல.
**
புத்தத் துறவியாக இருந்து பின்னர் மார்க்சியவாதியாக
மாறிய ராகுல சாங்கிருத்தியாயன், பௌத்த தத்துவ இயல்
என்ற நூலைஎழுதியுள்ளார். அதன் தமிழாக்கம்
(என்.சி.பி.ஹெச் வெளியீடு) உள்ளது. அந்நூலில் புத்தரை
மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும்
திறனாய்வு செய்திருப்பார் ராகுல சாங்கிருத்தியாயன்.
புத்தரை விமர்சிக்கப் புகுந்த ரங்கநாயகி அம்மையார்
ராகுல சாங்கிருத்தியாயன் நூல் போன்றவற்றில் இருந்து
புத்தரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டு ,
புத்தரை விமர்சனம் செய்திருந்தால், அது உண்மையின்
அடிப்படையில் அமைந்த விமர்சனமாக இருந்திருக்கும்.
**
அம்பேத்காரின் "புத்தரும் அவர் தம்மமும்" என்ற நூல்,
புத்தரைப் பற்றிய வரலாற்று நூல் அல்ல ( Not a biography).
அது ஒரு வரலாற்றுப் புனைவு. அது ஒரு இலக்கியப்
படைப்பு. கவிதை நடையில் எழுதப்பட்ட அந்த நூலை,
ரொமிலா தாப்பர் எழுதிய வரலாற்று நூல் போன்றோ,
நீலகண்ட சாஸ்திரி எழுதிய வரலாற்று நூல் போன்றோ
கருதுவது பேதைமை ஆகும். அம்பேத்கார் எழுதிய
அந்த ஒற்றை நூலை மட்டும் வைத்துக் கொண்டு,
அதுவும் ஒரு வரலாற்றுப் புனைவை வைத்துக் கொண்டு
புத்தரை விமர்சிப்பது குறைத்தல்வாதம் (reductionism) ஆகும்.
அம்பேத்காரின் புனைவுக்குள் மட்டும் சிறைப்பட்டுக்
கிடப்பவர் அல்லர் புத்தர்.
**
...அடுத்து, புத்தரின் காலம் பற்றிய யாந்திரீகமான
பிரக்ஞை மட்டுமே அம்மையாருக்கு இருக்கிறது.
புத்தர் இயேசுவுக்கு முற்பட்டவர்; வள்ளுவருக்கு
முற்பட்டவர்; கிரேக்கத்தில் சாக்ரட்டிஸுக்கே முற்பட்டவர்.
பிம்பிசார மன்னனின் காலத்தவர். கி.மு ஐந்தாம்
நூற்றாண்டு என்ற தோராயம்
சரியாக இருக்கும். புத்தரின் காலத்தில் நிலவுடைமைச்
சமூக அமைப்பு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும்
பரவி இருக்கவில்லை. பெரும் பேரரசுகள் உருவாகி
இருக்கவில்லை.
**
முதலாளியச் சமூகத்தின் இயங்கு விதிகளை ஆராய்ந்து
மார்க்ஸ் கூறியது போன்று புத்தர் தம் சமகாலச்
சமூகத்தை ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில்
புத்தரையும் மார்க்ஸையும் ஒப்பிடுவது என்பதே
அபத்தமானது. எனவே அம்பேத்காரின் ஒப்பீடு
ஏற்கத் தக்கதன்று. இது காளமேகப் புலவரின்
சிலேடை போன்றது. எவ்விதத்திலும் தொடர்பே
இல்லாத இரண்டு பொருட்களைப் பற்றி, நகைச்சுவையாகச்
சிலேடை பாடுவது காளமேகப் புலவரின் வழக்கம்.
பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை பாடியிருப்பார்
காளமேகம். (ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே
இரையும் மூடித் திறக்கின் முகங் காட்டும்......)
அம்பேத்காரின் மார்க்ஸ்-புத்தர் ஒப்பீடு காளமேகப்
புலவரின் சிலேடை அளவுக்கே மதிப்புப் பெறும்.
**
இந்த ஒப்பீட்டின் அபத்தத்தை விமர்சிக்க வேண்டிய
நூலாசிரியர், இலக்குத் தவறி, புத்தரை அவதூறு
செய்வது குட்டி முதலாளித்துவப் பார்வை ஆகும்.
காற்றில் அடித்துச் செல்லப்படும் இயல்பை உடையது
குட்டி முதலாளித்துவம். ஒரு தருணத்தில் எது வெகுஜன
செல்வாக்கிற்கு ஆட்பட்டிருக்கிறதோ, அதற்குத் தானும்
ஆட்படுகிற போக்கு குட்டி முதலாளித்துவத்திற்கு உண்டு.
இதன் விளைவாக அம்பேத்காரின் அபத்தமான
ஓப்பீட்டுக்கு வால் பிடிக்கிறார் ரங்கநாயகி அம்மையார்.
**
மேலும், மகாத்மா காந்தி பற்றிய அம்மையாரின்
விமர்சனங்களும் தரமற்றவை; நியாயமற்றவை.
எவ்வித ஆதாரமும் இன்றி, மகாத்மா காந்தியின்
தொகுப்பு நூல்களில் இருந்து ஒற்றை வரியைக் கூட
மேற்கோள் காட்டாமல், காந்தியை கீழ்மையான
சாதி வெறியர் என்று சித்தரிக்க முயல்வது நேர்மையற்றது.
அம்பேத்கார் கண்ட காந்தி வேறு; மெய்யான காந்தி வேறு.
இவையனைத்தும் இன்று ஆயிரம் ஆதாரங்களுடன்
நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் அம்மையாரோ
அரங்கின்றி வட்டாடி யற்றே என்பதுபோல், தமது
அறியாமையை கோவில் பிரசாதமாக முன்வைத்துள்ளார்.
**
காந்தி, புத்தர் பற்றிய அபத்தமான மதிப்பீடுகளைத்
தவிர்த்துப் பார்த்தால், நூலின் மையக் கருத்தான
சாதியப் பிரச்சினைக்கு மார்க்சியமே தீர்வு என்ற

கருத்து சரியான கருத்தே! எனினும் அதை இன்னும்
கூடுதலாக, மேலும் வலுவான ஆதாரங்கள் மற்றும்
வாதங்களுடன் நிலைநிறுத்தி இருக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக