வெள்ளி, 29 நவம்பர், 2019

BSNL மீட்கப் படுகிறது! மீட்பர் யார்?
தொழிற்சங்கங்களை ஊழியர்கள் மதிக்காதது ஏன்?
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், NFTE, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
------------------------------------------------------------------------
VRS என்பது BSNL தொழிற்சங்கத் தலைவர்களுக்குப்
புதிதுதான். எனினும் இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில்
இது மிகவும் தொன்மையானது. கிணற்றுத் தவளையாக
வாழ்ந்து முடித்து விட்ட தொழிற்சங்கத் தலைவர்களாலும்
குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவோராலும் BSNL VRS 2019ஐ
எதிர்கொள்ள இயலவில்லை என்பதைப் பார்த்து வருகிறோம்.

1990களில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள IDPL என்னும்
பொதுத்துறை நிறுவனத்தில் (Indian Drugs and Pharmaceuticals Limited)
VRS திட்டம் கொண்டு வரப்பட்டது. மகத்தான தொழிற்சங்கத்
தலைவர் தோழர் குசேலர் அவர்கள் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டார். நமது VRS போன்றே அவர்களுக்கும்
குஜராத் மாடல் VRSதான்.(35 நாள், 25 நாள் என்ற கணக்கீடு).

குசேலரின் தலைமையை ஏற்று, VRS குறித்து ஊழியர்களுக்கு
வழிகாட்டுதல் வழங்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
சுமார் ஒரு மாத காலம் எனது மாலை நேரங்களை IDPL சங்க
அலுவலகத்தில் கழித்த அந்த அனுபவம் பயனுள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலேயே
BSNL  நலிவுறத் தொடங்கி இருந்தது. Incipient sickness என்பது
அன்றே 2010ல்தொடங்கி இருந்தது.
(Incipient sickness = ஆரம்ப நிலையிலான நலிவுறுதல்)

BSNL குறித்து ஆராய, சாம் பித்ரோடா தலைமையில்
டாக்டர் மன்மோகன் சிங் ஒரு குழுவை அமைத்தார்.
BSNLன் inflated population கண்டு அதிர்ந்து போன
சாம் பித்ரோடா, அன்று இருந்த மூன்று லட்சம்
ஊழியர்கள் என்ற எண்ணிக்கையைப் பெருமளவு
குறைக்க, VRS வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ஆனால் டாக்டர் மன்மோகன்சிங்கின் அரசு VRSக்குத்
தேவையான நிதியை BSNLக்கு வழங்க முன்வரவில்லை.
அமைச்சர் கபில் சிபலும் கண்டு கொள்ளவில்லை.

அன்று சாம் பித்ரோடா குழு என்ன அறிக்கை அளித்ததோ
அதே அறிக்கையைத்தான் இன்று ஐஐஎம் அகமதாபாத்
நிபுணர் குழுவும் அளித்துள்ளது. ஆனால் அன்று
மன்மோகன்சிங் அரசு தர மறுத்த நிதியை இன்று
மோடி அரசு  (ரூ 80,000 கோடி) தருகிறது.

2012ல் சாம் பித்ரோடா குழுவின் அறிக்கை வெளியானதுமே,
சுதாரித்துக் கொண்டு, BSNLஐ மீட்கும் முயற்சிகளை
சங்கங்கள் தொடங்கி இருக்க வேண்டும்; ஒரு தீர்வை
எட்டி இருக்க வேண்டும். ஆனால் எருமை மாட்டின் மீது
பெய்த மழையாக ஆகிப்போனது.

VRS has a negative connotation always என்ற பழமைவாத
ஐதீகத்தில் இருந்து சங்கங்களால் வெளியேற முடியவில்லை.
இதே காலக் கட்டத்தில் பல்வேறு பொதுத்துறை
நிறுவனங்களில், குறிப்பாக வங்கிகளில் VRS செயல்படுத்தப்
பட்டிருப்பதில் இருந்து சங்கங்கள் பாடம் கற்கவில்லை.
VRS குறித்த எந்தவொரு புறவய ஆய்வையும்
(objective assessment) சங்கங்கள் மேற்கொள்ளவில்லை.

முட்ட வரும் காளையை அதன் கொம்பைப் பிடித்து
அடக்க வேண்டும் என்பார் தானைத் தலைவர் ஓ பி குப்தா.
Hold the bull by its horns என்பது அவரின் பிரசித்தி பெற்ற
வாக்கியம். வருவாய் இழப்பும் லாப இழப்பும் சிறிய
அளவில் இருந்தபோதே, சாம் பித்ரோடா சுட்டிக் காட்டிய
போதே, குப்தா கூறியது போல, சூழலை நேருக்கு நேர்
எதிர்கொண்டு மீட்பு நடவடிக்கைகளை அன்றே மேற்கொண்டு
இருக்க வேண்டும். செய்யவில்லையே சங்கங்கள்!

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.

மீட்பர் யார்?
-------------------
நல்வாய்ப்பாக BSNL இன்று மீட்கப் படுகிறது.ஆனால்
மீட்பர் யார்?

மீட்பர் வேறு யாருமல்ல, அரசுதான்! மோடி அரசுதான்!
BSNLன் எந்த ஒரு தொழிற்சங்கமும் மீட்பரின் பாத்திரத்தை
வகிக்கவில்லை! இதுதான் வெட்ககரமான உண்மை!

அதிகபட்ச நாணத்துடனும் குறைந்தபட்ச நேர்மையுடனும்
BSNL தொழிற்சங்கங்கள் இந்த உண்மையை ஒப்புக்
கொள்ள வேண்டும். சங்கங்கள் என்றால் NFTE, BSNLEU
SNEA, AIBSNLEA ஆகிய பிரதான சங்கங்களே. சங்கங்கள்
ஒப்புக் கொள்ள மறுத்தாலும் BSNLல் இன்று இருக்கும்
1.6 லட்சம் பேரின் மனச்சாட்சிக்கு இந்த உண்மை தெரியும்.

BSNLஐ மீட்கும் முயற்சிகளை,  BSNLன் ஒட்டு மொத்தப்
புத்தாக்கத்தை (revival plan including VRS) சங்கங்கள்
தங்களின் சொந்த முயற்சியில் கொண்டு வரவில்லை.
மீட்பதற்கான எந்தவொரு தீர்வும் சங்கங்களிடம் இல்லை.
ஆனால் அரசு சும்மா இருக்கவில்லை. அது ஒரு தீர்வைக்
கண்டுபிடித்தது. அதை நடைமுறைப் படுத்துகிறது.
The entire revival plan including the VRS is absolutely the brain child
of the government. இதுதான் முக்கால உண்மை (universal truth).

புத்தாக்கத் திட்டம் (Revival plan)
-----------------------------------------------
அ) VRS திட்டத்தின் Ex Gratia வழங்கும் செலவு = ரூ 17,169 கோடி.
ஆ) Pensionary benefits preponed வழங்கும் செலவு = ரூ 12,768 கோடி.
இ) 4G அலைக்கற்றை BSNLக்கு = ரூ 14,115 கோடி
ஈ) 4G அலைக்கற்றை MTNLக்கு = ரூ 6295 கோடி
உ) அலைக்கற்றைக்கான GST வரி = ரூ 3674 கோடி.
ஊ) BSNL, MTNLக்கு மேலும் வழங்கும் நிதி = ரூ 15,000 கோடி.

இந்த ரூ 15,000 கோடியை உறுதிப் பத்திரங்கள் மூலமாக
(Sovereign guarantee bonds) மத்திய அரசு வழங்கும்.
மேற்கூறிய அ), ஆ), உ) ஆகிய மூன்று இனங்களுக்கும்
பட்ஜெட்டில் ரூ 33,611 கோடி நிதி ஒதுக்கப் படுகிறது.

அதாவது VRSக்கு ஆகும் செலவுக்கும் பென்சன் வழங்கும்
செலவுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படுகிறது.
இ) மற்றும் ஈ) இனங்களுக்கு முறையே Equity infusion
மூலமும், preference shares மூலமும் மத்திய அரசு
நிதி வழங்கும்.
(பார்க்க: மக்களவையில் unstarred question எண்: 546க்கு
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் பதில்; 20 நவம்பர் 2019).

இப்படி ஒரு மீட்புத் திட்டத்தைப் பற்றி சங்கங்கள்  ஏன்
சிந்திக்கவில்லை? காரணம் இரண்டு. ஒன்று: இத்தகைய
சிந்தனை அவர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது.
அடுத்து, VRS என்றாலே அதை எதிர்க்க வேண்டும் என்ற
பழமைவாத முன்முடிவு. VRSஐ உள்ளடக்காத எந்த ஒரு
மீட்புத் திட்டமும் இந்த உலகில் கிடையாது என்ற
உண்மை அவர்கள் அறியாதது.

எனவேதான் Proactiveஆகச் செயல்பட வேண்டிய
சங்கங்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதையும்
அரசுக்கு வால் பிடித்துக் கொண்டு திரிவதையும்
அனுதினமும் கண்ணாரக் கண்டு வருகிறோம்.

புத்தாக்கத் திட்டத்தை தங்களின் சொந்த வலிமையில்
சாதித்துக் காட்டாத சங்கங்கள் அரசின் கருணை
மற்றும் நல்லெண்ணத்தில் ஊழியர்களின் தலைவிதியை
வைத்து விட்டன என்று வரலாறு பதிவு செய்கிறது.

BSNL உயிரோடு இருக்க வேண்டும் என்றும் அது வாழ
வேண்டும் என்றும் மோடி அரசு இன்று விரும்புகிறது.
ஆனால் இதே மனநிலையில் மோடி அரசு தொடர்ந்து
இருக்குமா? GOK, அதாவது God only knows! எதிர்காலத்தில்
BSNL தேவையில்லை என்று மோடி அரசோ அல்லது வேறு
அரசோ முடிவெடுத்தால், அன்று ஊழியர்களின் நிலை
என்ன? சங்கங்களிடம் பதில் உள்ளதா? இல்லை!
(God only knows means Nobody knows. கடவுள் இருக்கிறார்
என்று பொருள் அல்ல).

களையெடுப்புக்குப் பதில் தங்கக் கைகுலுக்கல்!
----------------------------------------------------------------------------
ஒருவேளை அ) BSNLஐ மூடி விடுவது என்றோ அல்லது
ஆ) ஆட்குறைப்புச் செய்து முதல் கட்டமாக 50,000 பேரை
வெளியேற்றுவது  என்றோ மோடி அரசு முடிவெடுத்து
இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அ) மூடுவது என்றால், OFFICIAL LIQUIDATOR வந்திருப்பார்.
அவர் BSNLஐ இழுத்து மூடி, எல்லோரையும் வெளியேற்றி,
இருக்கும் சொத்துக்களைக் கணக்கெடுத்து அரசிடம்
கொடுத்திருப்பார். அப்போது எல்லோரும்
Liquidator பற்றியே பேசிக் கொண்டிருப்போம். Liquidator
என்ற புதிய சொல் BSNLல் பேசுபொருள் ஆகியிருக்கும்.

ஆ) ஆட்குறைப்புச் செய்வது என்றால், அதை CRS
எனப்படும் கட்டாய ஒய்வு மூலமே செய்ய முடியும்.
இது ஒரு   மாபெரும் களையெடுப்பாக (Great purge)
இருக்கும். முதல் கட்டமாக 50,000 பேருக்கு ஆட்குறைப்பு
என்றால், எந்த 50,000 பேர்,  என்ன அளவுகோல் என்பதில்
வெட்டு குத்து நடக்கும்.

இந்த நெருக்கடியான சூழலில், நேரடி நியமனத்தில்
வேலைக்கு வந்த (Direct recruits) பொறியியல் கல்வித் தகுதி
உடையவர்களை வைத்துக்கொண்டு, Promotee officersஐ
வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுக்கும். இது ஊழியர்கள்
அதிகாரிகள் மத்தியில் கடும் மனக்கசப்பை ஏற்படுத்தும்.
இந்த முடிவு பாரபட்சமானது என்று நீதிமன்றத்தில்
Promotee Officers வழக்குத் தொடர்வார்கள்.

எனினும் இத்தகைய வழக்குகளில் வழக்குத் தொடுத்தவர்களுக்கு தோல்வியே கிட்டி இருக்கிறது.
இது வரலாறு. கல்வித் தகுதியின்  அடிப்படையில்
பாரபட்சம் காட்டப்பட்டாலும், அதில் அரசமைப்புச் சட்டம்
கூறுகிற intelligible differentia உள்ளது என்றும் அது
மேற்கொள்ளப்பட்ட நோக்கத்துடன் பொருந்துகிறது
என்றும் BSNLன் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
நிரூபித்து விடுவார்கள். விவரிக்க இது இடமில்லை.
(Intelligible differentia must have a rational nexus with the object sought be
achieved and this will be easily proved by BSNL in the court of law).

அதிர்ஷ்டவசமாக இத்தகைய சண்டை, மனக்கசப்புக்கு
இடமில்லாமல் VRS என்னும் தங்கக் கைகுலுக்கல் மூலம்
சாந்தியும் சமாதானமும் நிரம்பி வழிய வீட்டுக்குச்
செல்கிறோம். ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ரூ 40,000 Basic Pay உள்ள ஒரு அதிகாரி 152 சத DAவுடன்
VRS 2019ல் செல்கிறார். அவர் Ex Gratiaவாக மட்டும்
ஓராண்டுக்கு ரூ 9 லட்சம் பெறுகிறார். இந்த அதிகாரியின்
வயது 55 என்றால், 60 வயது வரையிலான ஐந்தாண்டு
காலத்திற்கு  அவர் Ex Gratiaவாக ரூ 45 லட்சம் பெறுவார்.
அத்துடன் மாதந்தோறும் Basic Pensionஆக ரூ 50,400 பெறுவார்.
கிராச்சுட்டி commutation போன்றவை பின்னர் கிடைக்கும்.
இதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை!

Superannuationல் போனாலும் VRSல் போனாலும்
பணிஓய்வு என்பது பணிஓய்வே. Retirement என்பதன்
பொருள் பந்தம் அறுதலே! பந்தங்கள் ஒருநாள்
அறுபடத்தான் செய்யும். அதுதான் உலக இயற்கை!

BSNL உடனான Physical bonding மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு
எதிர்வரும் 31.01.2019 அன்று அறுபடுகிறது. ஆனால்
BSNLஉடனான நமது மானசீக பந்தம் ஒருபோதும் அறுபடாது.
அது யுக யுகாந்திரங்களைக் கடந்து நிற்கும். அடுத்த
பிறவியிலும் நானும் நீங்களும் இதே BSNLல் பணிபுரிவோம்
என்ற நம்பிக்கையுடன் VRSல் செல்வோம்! BSNLஐ முத்தமிட்டு
விடை பெறுவோம்!

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே!
******************************************************

 



HOLDTHEBULLBY ITSHORNS.
இதை எதிர்கொள்ளும் ஆளுமை இன்றைய
தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறவே இல்லை
என்பது கண்கூடு. தனியொருவரின் சம்பாத்தியத்தில்
மொத்தக்க குடும்பமும் உட்கார்ந்து சாப்பிட்டதை போல
தலைவர் ஓ பி குப்தாவின் ஆளுமை, அறிவுத்திறன்,
சாணக்கியம், பக்குவம் ஆகியவை காரணாமாக BSNL
தொழிற்சங்க இயக்கம் (NFTE மட்டுமல்ல, ஒட்டு மொத்த
தொழிற்சங்க இயக்கம்) ஜீவித்து இருந்தது. குப்தாவின்
இன்மை சங்கங்களின் சித்தாந்த ஓட்டாண்டித் தனத்தையும்
தலைவர்களின் சிந்தனை குள்ளத தனத்தையும்
நிர்வாணப் படுத்தி விட்டது.

BEBTECH படித்தவன் துப்புரவு வேலைக்கு விண்ணப்பிக்கும்
இன்றைய சூழலில் BSNLSDEக்கு வெளியில் என்ன வேலை கிடைக்கும்.

ஆஃபிஸில் LIQUIDATOR


31.01.2020ல் VRSல் பணி ஒய்வு பெறும் ஒருவருக்கு
மறுநாளான பெப்ரவரி 1 அன்று இன்கிரிமென்ட் due
என்றால், அது அவருக்குக் கிடைக்காது. எவ்வளவு
மேதாவிலாசம் பொருந்திய கருத்து பாருங்கள்!
சரி, அதே 31.01.2020ல் Superannuationல் போகிற ஒருவருக்கு
பிப்ரவரி இன்கிரிமென்ட் கிடைக்குமா? கிடைக்காது
என்று எல்லோருக்கும் தெரியும் அல்லவா?

ரிட்டயர்மென்ட் என்றால் என்ன? Superannuationல்
போனாலும் சரி, VRSல் போனாலும் சரி, ரிட்டயர்மென்ட்
என்பது பந்தம் முறிவதன் அடையாளமே. பல்லாண்டு
காலப் பந்தம் முடிவுக்கு வருவதன் அறிகுறிதான்
ரிட்டயர்மென்ட். இதில் Superannuationல் போனால்,
பந்தம் நீடிக்கும் என்றும், VRSல் போனால் பந்தம்
அறுந்து விடும் என்றும் பேசித் திரிவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும்.

ராமாயணக் கதையை ஒரு வரியில் சொல்ல முடியுமா
என்று கேட்டபோது சிறையிருந்தாளின் ஏற்றம் கூறியது
என்றார் பெரிய வாச்சான் பிள்ளை. இவர்
நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர்.
(சிறையிருந்தாள் = சீதை; ஏற்றம் = பெருமை).

அது போல BSNL VRS 2019 பற்றி ஒரே வார்த்தையில்
கூறுவதானால், "TINA" என்று கூறுவேன்.
(TINA = There Is No Alternative). VRSல் செல்வது தவிர BSNL
ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேறு வழியில்லை
என்பதே இதன் பொருள்.

இறுதியாக, நலிவுற்ற நிறுவனம் என்பது ஒரு ஸ்ட்ரோக்
வந்த நோயாளி போன்றது. ஸ்ட்ரோக் வந்து பைபாஸ்
செய்த பிறகு, முன்பிருந்த இயல்பு வாழ்க்கை
சாத்தியம் இல்லை.
 கோட்டை   நன்றி. உங்களுக்கு நிரந்தர அனுமதி உண்டு.

வடிவம், உள்ளடக்கம் (form and content) என்ற பைனரியை
மார்க்சியம் ஒரு தத்துவார்த்த வகையினம் என்பதாக
(philosophical category) வரையறுக்கிறது.
உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவோரில் மிகப் பலர்
வடிவத்தில் கொட்டி விட்டு விடுவர். வடிவத்தில்
கவனம் செலுத்துவோரில் மிகப் பலர் உள்ளடக்கத்திற்கு
வஞ்சகம் செய்து விடுவர்.

இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன் நான்.
1) என்ன சொல்கிறேன் என்பதற்கும்
2) எப்படிச் சொல்கிறேன் என்பதற்கும்
நான் சமமான முக்கியத்துவம் அளிக்கிறேன்;
தொடர்ந்து அளிக்க முயல்கிறேன்.

Customer careல் சிற்சில குறைகள் இருக்கக் கூடும்.
அதை நாங்கள் சரி செய்து விடுவோம். மேம்பட்ட
சேவையை சந்தாதாரருக்கு BSNL வழங்கும்.

ஆனால் தொலைதொடர்பில் டாட்டா ஒரு
சுண்டைக்காய். அவரால் என்ன பெரிய  சேவையை
வழங்கி விட முடியும்? BSNLன் டவர்களைப்
பயன்படுத்தாமல், டாட்டாவால் சேவை வழங்க
முடியுமா?

ஒவ்வொரு BSNL அலுவலகத்திலும் எக்சேஞ்சிலும்
VRS Benefit calculatorஐ தயாராக வைத்து இருக்கிறார்கள்.
அருகில் உள்ள ஏதேனும் ஒரு BSNL அலுவலகத்திற்குச்
செல்லவும். ஒரு மூத்த Senior TOAக்கு ஓராண்டுக்கு
ரூ 5 லட்சம் Ex gratia கிடைக்கும். 55 வயதானவர் என்றால்,
மீதியுள்ள 5 ஆண்டு காலத்துக்கு ரூ 25 லட்சம்
ex gratia பெறுவார். இது போக வழக்கமான கிராச்சுட்டி
commutation, leave salary எல்லாம் உண்டு. கிராச்சுட்டி பின்னர்
கிடைக்கும்.

அது pure central govt staffக்குரிய சட்டம். BSNL ஒரு PSU
என்பதால் எங்களுக்குத் தடை இல்லை. இப்போது
VRSல் சென்றவர்களில் சிறப்புத் திறமை உள்ள
பலருக்கு REEMPLOYMENT வாய்ப்பு நிச்சயமாக
உள்ளது. VRS திட்ட அறிக்கையில் இது சொல்லப்
பட்டுள்ளது. எனவே பலருக்கே மீண்டும் வேலை
கிடைக்கும். ஒரு CONSOLIDATED PAY  தருவார்கள்.

Number of hitsக்கு காரணம் எழுதியது அனைத்தும்
உண்மை என்பதால்தான். அதையும் புரியும்படி
எழுதியதால்தான்.

Ex gratiaஐ நாம் கனக்குப்
போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்
பெப்ரவரி மாத சந்தா கோட்டா வகையில்
இதுநாள் வரை கிடைத்து வந்த ரூ 6 லட்சம்
தொகை drasticஆகக் குறைந்து சில பல ஆயிரங்களில்
வந்து நிற்பதைக் கண்டு கலங்கிப்  


to e or not to e hamlet existentialism

Today members are wiser than leaders!
CKM is nagative eample. He does what not to do?
He is bold enough to declare not to opt.

TO be ornot to be?
Gunam naadi kutramum naadi.

to e or not to e hamlet existentialism
------------------------------------------------------
VRS திட்டத்தில் உள்ள Ex Gratia வழங்குவதற்காக
ரூ 17,169கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்டுள்ளது.
அது போக 10 ஆண்டு கழித்து வழங்க வேண்டிய
பென்சன் தொகையை முன்கூட்டியே பெப்ரவரி 2020 முதல்
வழங்குவதற்காக ரூ 12,768கோடி பட்ஜெட்டில்
ஒதுக்கப் பட்டுள்ளது.  

வதந்தி பரப்பும் சமூக விரோதிகள் இந்த உண்மையை
மறுக்க முடியுமா? பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாவிட்டால்
கண்டபடி பேசலாம். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்ட
பின்னர் அப்படிப் பேசுவது நேர்மையற்ற செயல்.



 

Article 14 of the Indian Constitution (intelligible differentia and the the object sought to be achieved)

Equality is one the magnificent corner stones of the Indian Democracy. Article 14 guarantees to every person the right to equality before the law or the equal protection of the laws. The first expression is a declaration of equality of all persons within territory of India, implying thereby the absence of any privilege in favour of any individual. The second one directs that equal protection shall be secured to all persons within the territorial jurisdiction of the union in the enjoyment of their rights and privileges without favouritism or discrimination. The guiding principle of this Article is that all persons and things similarly circumstanced shall be treated alike both in respect of privileges conferred and liabilities imposed. Equality before the law, means that amongst equals should be equal and equally administered and that like should be treated alike. Hence what it forbids is discrimination between persons who are substantially in similar circumstances or conditions. It does not forbid different treatment of unequals. The rule is rather that like should be treated alike and that unlike should be treated differently. As a matter of fact all persons are not alike or equal in all respects. Application of the same laws uniformly to all of them will, therefore, be inconsistent with the principal of equality. To avoid that situation laws must distinguish between those who are equals and to whom they must apply and those who are different and to whom they should not apply.

It is now accepted that persons may be classified into groups and such groups may be treated differently if there is a reasonable basis for such difference. Article 14 forbids class legislation; it does not forbid classification or differentiation which rests upon reasonable grounds of distinction. The principle of equality does not mean that every law must have universal application to all the persons who are not by nature, attainment or circumstances in the same position. The varying needs of different classes of persons require different treatment. In order to pass the test for permissible classification two conditions must be fulfilled, namely: (1) the classification must be founded on an intelligible differentia which distinguishes persons or things that are grouped together from others left out of the group, and (2) the differentia must have a rational nexus with the object sought to be achieved by the statute in question.

What is however necessary is that there must be a substantial basis for making the classification and the there should be a nexus between the basis of classification and the object of the statute under consideration. In other words, there must be some rational nexus between the basis of classification and the object intended to achieved.

The expression “intelligible differentia” means difference capable of being understood. A factor that distinguishes or in different state or class from another which is capable of being understood. The impugned act deals with users of social networking websites Test laid down in State of West Bengal v. Anwar Ali Sarkar i.e. the differentia or classification must have a rational nexus with the object sought to be achieved by the statute in questionSupreme Court in many of its judgment has clearly indicated about such kinds of classifications as vague and inoperative. The Supreme Court in landmark judgment of Maneka Gandhi v. Union of India clearly ruled out the room for arbitrariness. ‘Article 14 strikes at arbitrariness in State action and ensures fairness and equality of treatment. The principle of reasonableness, which logically as well as philosophically, is an essential element of equality or non-arbitrariness, pervades Article 14 like a brooding omnipresence.’ Rule of law which permeates the entire fabric of the Indian Constitution excludes arbitrariness. Wherever we find arbitrariness or unreasonableness there is denial there is denial of rule of law.

This new dimension of Art.14 transcends the classificatory principle. Art.14 is no longer to be equated with the principle of classification. It is primarily a guarantee against arbitrariness in state action and the doctrine of classification has been evolved only as a subsidiary rule for testing whether a particular state action is arbitrary or not. If a law is arbitrary or irrational it would fall foul of Art.14. As an example, it has been held that any penalty disproportionate to the gravity of the misconduct would be violative of Art.14. So the impugned act should be tested at the touchstone of Art. 13(2) and should be declared invalid.

Article 14 Permits Classification But Prohibits Class Legislation
The equal protection of laws guaranteed by Article 14 does not mean that all laws must be general in character. It does not mean that the same laws should apply to all persons. It does not attainment or circumstances in the same position. The varying need of different classes of persons often requires separate treatment. From the very nature of society there should be different laws in different places and the legitimate controls the policy and enacts laws in the best interest of the safety and security of the state. In fact identical treatment in unequal circumstances would amount to inequality. So a reasonable classification is only not permitted but is necessary if society is to progress.
Thus what Article 14 forbids is class-legislation but it does not forbid reasonable classification. The classification however must not be “arbitrary, artificial or evasive” but must be based on some real and substantial bearing a just and reasonable relation to the object sought to be achieved by the legislation. Article 14 applies where equals are treated differently without any reasonable basis. But where equals and unequal are treated differently, Article 14 does not apply. Class legislation is that which makes an improper discrimination by conferring particular privileges upon a class of persons arbitrarily selected from a large number of persons all of whom stand in the same relation to the privilege granted that between whom and the persons not so favored no reasonable distinction or substantial difference can be found justifying the inclusion of one and the exclusion of the other from such privilege.

Test Of Reasonable Classification While Article 14 forbids class legislation it does not forbid reasonable classification of persons, objects, and transactions by the legislature for the purpose of achieving specific ends. But classification must not be “arbitrary, artificial or evasive”. It must always rest upon some real upon some real and substantial distinction bearing a just and reasonable relation to the object sought to be achieved by the legislation. Classification to be reasonable must fulfill the following two conditions
Firstly the classification must be founded on the intelligible differentia which distinguishes persons or thing that are grouped together from others left out of the group
Secondly the differentia must have a rational relation to the object sought to be achieved by the act.

The differentia which is the basis of the classification and the object of the act are two distinct things. What is necessary is that there must be nexus between the basis of classification and the object of the act which makes the classification. It is only when there is no reasonable basis for a classification that legislation making such classification may be declared discriminatory. Thus the legislature may fix the age at which persons shall be deemed competent to contract between themselves but no one will claim that competency. No contract can be made to depend upon the stature or colour of the hair. Such a classification will be arbitrary.

The true meaning and scope of Article 14 have been explained in a number of cases by the supreme court. In view of this the propositions laid down in Damia case still hold good governing a valid classification and are as follows:
1. A law may be constitutional even though it relates to a single individual if on account of some special circumstances or reasons applicable to him and not applicable to others, that single individual may be treated as a class by itself
2. There is always presumption in favour of the constitutionality of a statute and the burden is upon him who attacks it to show that there has been a clear transgression of constitutional principles.
3. The presumption may be rebutted in certain cases by showing that on the fact of the statue, there is no classification and no difference peculiar to any individual or class and not applicable to any other individual or class, and yet the law hits only a particular individual or class
4. It must be assumed that Legislature correctly understand and appreciates the need of its own people that its law are directed to problem made manifest by experience and that its discrimination are based on adequate grounds
5. In order to sustain the presumption of constitutionality the court may take into consideration maters of common knowledge, matters of report, the history of the times and may assume every state of facts which can be conceived existing at the time of the legislation.
6. Thus the legislation is free to recognize degrees of harm and may confine its restriction to those cases where the need is deemed to be the clearest.
7. While good faith and knowledge of the existing conditions on the part of a legislature are to be presumed, if there is nothing on the face of the law or the surrounding circumstances brought to the notice of the court on which the classification may reasonable be regarded as based, the presumption of constitutionality cannot be carried to extent always that there must be some undisclosed and unknown reason for subjecting certain individuals or corporation to be hostile or discriminating legislation
8. The classification may be made on different bases e.g. geographical or according to object or occupation or the like.
9. The classification made by the legislature need not be scientifically perfect or logically complete. Mathematical nicety and perfect equality are not required. Equality before the law does not require mathematical equality of all persons in all circumstances. Equal treatment does not mean identical treatment. Similarly not identity of treatment is enough.
10. There can be discrimination both in the substantive as well as the procedural law. Article 14 applies to both. If the classification satisfies the test laid down in the above propositions, the law will be declared constitutional. The question whether a classification is reasonable and proper and not must however, be judged more on commonsense than on legal subtitles.
---------------------------------------------------------
Who works in IMPCS? WHO WORKS IN IN? IN HIGH TECH AREA WHO WORKS?
I employ euphemism here to avoid unplesantness
vrs or purge? Instead golden shake there would be a cruel purge
 There wuld be an OPERATION PURGE to weed out the incompetant uneducated technically illiterate and what not?

VRS DOES NOT HAVE ANY NEGATIVE CONNOTATION. But the unions look at it with a jaundiced eye. The unions by reducing everything to a conflict of villain and hero not only miss the point but land in falsified decisions even.

Dr manmohan singh employed Sam Pitroada committe which recommended
vrs. Now iim ahmedabad also recommends the same.

IDPL company vrs. pharmacy company later turned into surgical instruments production co. kuchelar period vrs.

 


GREET THE EXODUS! old article written on july 2013
-------------------------------------------------------------------
P ILANGO SUBRAMANIAN
-----------------------------------------------------------------------
BSNL the Public Sector telecom giant has decided to downsize the company by one lakh. The strategy employed is an offer of VRS (VOLUNTARY RETIREMENT SCHEME), a Golden Handshake to its employees.
THE BACKGROUND:
-----------------------------
The PSU which has a work force of THREE LAKHS spends nearly 50 per cent of its revenue on wage bills annually. It has incurred a loss of (a) Rs 1822 crore and ( b) Rs 6000 crore during the fiscals 2009-10 and 2010-11 respectively. The loss is on the increase and the situation may worsen further.
The successive loss making has prompted the Dept of Public Enterprises to brand BSNL as a marginally loss making company. The future too is not rosy even to the optimists in BSNL and it may well become a solid loss-making company soon.
The ACHILLES’ HEELS of BSNL is its giant size work force of 3 lakhs most of whom is junk. No other private operator in the industry has this much of huge staff strength. Bharti Airtel the market leader in telecom with a subscriber base of 150 million has only 23000 employees in its rolls as against 3 lakhs of BSNL.
In BSNL the ratio between the volume of work and the staff strength is alarmingly disproportionate and skewed indicating the inflated staff strength when compared to international and domestic standards. Nevertheless the “ less work-more staff” condition in BSNL is of no help to the organization which could not even resist the ongoing erosion of its subscriber base thanks to the sluggish work force. Things have moved from bad to worse after the introduction of MNP (MOBILE NUMBER PORTABILITY) this year and the 100 million subscriber base of BSNL has started eroding.
No bonus was paid to the staff of BSNL for the last two years. The management has resorted to expenditure control and sundry allowances were withdrawn. These measures have created apprehensions in the minds of the workers that BSNL wont survive and would become another AIR INDIA.
Really the count down has begun for BSNL. Sensing this the management of BSNL in consultation with the PMO has rightly decided to jettison the excess cargo lest the company should not sink. The decision to reduce the work force by one lakh is not an arbitrary decision but in agreement with the recommendations of SAM PITRODA committee.
VRS PROPOSALS:
------------------------
Now let us consider the VRS proposals put forth by the management. The details are now transpired through various web sites of BSNL unions and therefore it is needless to repeat them here. There are two sets of proposals in the air viz: ( a) BSNL MODEL and ( b) GUJARAT MODEL and of these two one will be chosen. The management has made these proposals sufficiently attractive and if the unions are not satisfied they are at liberty to fight for improvement.
The concept of VRS may be new to BSNL but the Indian working class has gained rich Experience and wisdom all along its path where numerous VR schemes were successfully dealt with.
The present proposals of VRS ARE INDEED BETTER, GAINFUL AND BY AND LARGE ACCEPTABLE in the contemporary socio-economic scenario. Any employee with a robust common sense will easily conclude that accepting the said VRS WOULD BE THE PRUDENT DECISION ever made in his life.
BSNL HR: THE SORDID PICTURE:
-------------------------------------------------
The sorrow of BSNL is its work force which is mainly sub standard. BSNL is the only organization where the promotees from the lower ranks constitute a large chunk of the Work force. A scrutiny of the HR details of these promotees reveals that many SUB- DIVISIONAL ENGINEERS (Divisional Engineers and few DGMs even) have a very low academic profile and most of them are mere matriculates. In BSNL till recently the promotions were not linked with academic qualification and because of this phenomenon matriculates and graduates in various non-science disciplines were baptized as Sub Divisional Engineers.
In the non-executive side also the same phenomenon operated and phone mechanics with the qualification of VIII standard passed/failed were made as Technical Assistants. With the induction of modern technology which is essentially wireless these promotees have become a liability to BSNL. Whatever is done by BSNL is done by the DIRECT RECRUITS who are physics/engineering graduates.
The high-tech projects like CDR, ERP and NGN could not be successfully implemented in BSNL and the reason therefor inter alia is the technically incompetent work force.
How a Sub Divisional Engineer who is a Tamil Pundit or a History graduate can contribute to NGN, the next generation network?
Another matter of concern is the ratio between the non-executives and the Executives which is
5:1. ( no. of executives is 55019 and non-executives 221287). This means that for every 5 phone mechanics there is an engineer!
How ridiculous!
From the sordid picture one concludes that the need of the hour is not a VRS but a grand OPERATION PURGE to weed out the incompetent which may be possible through a CRS!
THE NEGATIVE ROLE OF THE UNIONS:
---------------------------------------------------------
In BSNL the VRS has always been a rumour so far. But it has become an inevitable eventuality now. Yet some unions are skeptical about its arrival.
It is high time for the unions to lay an effective role and to extract the maximum benefit out of the proposed VRS. But they are callus and indifferent to the issue. They indulge in euphemism.
Without an objective assessment their one line solution is “ OPPOSE VRS”.
One wonders why the unions engage themselves with the conservative idea that VRS should be opposed. The unions with the illogical slogan of ‘oppose VRS’ can do incalculable harm to the innocent workers. Their Quixotic PROJECTS LIKE HINGER FAST, ONE DAY TOKEN STRIKE etc have alienated them from their members.
VRS DOES NOT HAVE ANY NEGATIVE CONNOTATION. But the unions look at it with a jaundiced eye. The unions by reducing everything to a conflict of villain and hero not only miss the point but land in falsified decisions even. Swayed by the customary belief the unions feel that anything by the Govt is to be opposed. This is the secret of their opposition to VRS.
Do the unions oppose the present VRS? Or do they oppose the very concept of VRS?
If they oppose the concept itself, then it becomes a theoretical question which can’t be discussed in mass front platforms. And Marxism teaches us that theoretical knowledge should be brought into the working class only from outside. It is not within. Interested readers may please refer the book: WHAT IS TO BE DONE? by V I LENIN.
VRS: THEORETICAL ANALYSIS:
--------------------------------------------
Theoretically VRS is a derivative obtained from certain initial conditions through a scientific process. There exists a clear CAUSE AND EFFECT relationship in it. As long as there is a cause, there will be an effect. If the effect is to be nullified then the cause should be removed.
In our case the causes for VRS are as under:-
a) Inflated population in BSNL
b) Incompetant HR
c) Crippled advancement
If these causes are removed then the VRS is not necessary.
Do the unions which oppose VRS have any meaningful alternative? The answer is a BIG NO. They have to seek the guidance of their mentors. But having travelled long in a direction opposite to the revolution their mentors, the pseudo Left parties could not guide them to a correct destination. But many UNMARXIST solutions are there in their cup-boards and the unions may be asked to pick up one.
IT IS CRYSTAL CLEAR NOW THAT THERE IS AN INTERNAL CONTRADICTION
BETWEEN BSNL AND ITS OWN STAFF. THIS IS AN UNANTAGONISTIC CONTRADICTION. HOW WILL THIS BE RESOLVED? THE ANSWER IS : VRS!
THEREFORE AN EXODUS OF ONE LAKH EMPLOYEES IS A MUST AND LET US GREET IT.
**************************************

வியாழன், 28 நவம்பர், 2019

சமாஜ வர காமனா பொருள்
================================
saamaja = an elephant; vara=the best;gamana=movement/gait; saadhuhrit=the hearts of the saints; saarasaabja=the lotuses born out of the ponds; paala=ruler; kaalaateeta=one who is beyond the time; vikhyaata=the celebrated/well-known; saamanigama=hymns of saamaveda;ja=born; sudhaamaya=full of nectar;gaana=music/singing; vichakshana=skillful;gunasheela=possessing all virtues;dayaa=compassion; aalavaala=reservoir;maam=me; paalaya=please save/ protect;vedashiromaatrija=that emanated from the fountainhead of vedas; saptasvara=seven notes of the science of music; naada=the sound/cry;achala=mountain; deepa=the light/beacon;sweekrita=acknowledged; yaadavakula=born into the clan of yadus; muraleevaadana=playing flute;vinoda=entertaining; mohanakara=fascinating;tyaagarajavandaneeya=worthy of being worshipped and glorified by Tyagaraja. Oh Lord Shri Krishna ! you are the one whose gait is as elegant as that of a stately elephant. You are the ruler of the lotuses born in the lakes of the hearts of saints; you are beyond the conditions of time and space. Oh Lord you are the most celebrated and glorified (in this universe). You are full of nectar born from the hymns of samaveda.You are the master of song and melody. Oh Lord, you are the embodiment of all virtues; you are the repository of compassion and grace. Please do protect me, save me (from the entanglements of this material world). Oh Lord, you are the seven notes of music that emanate from the head of the vedic lore. You are acknowledged as the beacon of the mountain of sound/voice. You are a descendant of yadava dynasty. You are a great fascinator through the entertainment of your flute-playing. You are therefore, Oh Lord, always glorified and worshiped by Tyagaraja.
Show less
34

புதன், 27 நவம்பர், 2019

மீத்தேன் ஆய்வுத் திட்டம் ரத்து!
ஓர் உண்மை நிலை விளக்கம்!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
1) மண்ணைத் தோண்டி பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன்
எடுப்பதில் மூன்று வகை உண்டு. இது தவிர கடலுக்கு
அடியில் இருந்தும் மீத்தேன் எடுக்கப் படுகிறது.

2) (அ) பாரம்பரிய மீத்தேன் (conventional methane)
(ஆ) ஷேல் பாறைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மீத்தேன்.
இது shale gas எனப்படுகிறது.
(இ) கரிப்படுகை மீத்தேன் (coal bed methane)
ஆகிய மூன்று வகைப்பட்ட மீத்தேன் மண்ணுக்கு அடியில்
இருந்து கிடைக்கும்.

3) தமிழ்நாட்டில் பாரம்பரிய மீத்தேன் 1985 முதலே
எம் ஜி ராமச்சந்திரன் முதல்வராக இருந்த காலம்தொட்டே
எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வகை மீத்தேன் மண்ணுக்கு
அடியில் குறைந்த ஆழத்திலேயே கிடைக்கும். இதனால்
சுற்றுச் சூழலுக்கோ விளைநிலங்களுக்கோ நிலத்தடி
நீருக்கோ பெரிய அளவு பாதிப்பு இருக்காது.

4) ஷேல் வாயு எனப்படும் மீத்தேன் தமிழ்நாட்டில்
இல்லை. அதாவது வணிக நோக்கில் லாபகரமான
ஷேல் வாயு எடுப்பது தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை.
பத்து ரூபாய் மீத்தேனை எடுப்பதற்கு பத்தாயிரம்
ரூபாய் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

5) கரிப்படுகை மீத்தேன் (coal bed methane) எடுக்கும் திட்டம்
என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு பேரழிவுத்
திட்டம். நிலத்தடி நீரையும் விளைநிலங்களையம்
பெருமளவில் பாதிக்கும் திட்டம். தமிழக வயல்களைப்
பாலைவனமாக்கும் திட்டம் இது.        
  
6) கரிப்படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்குத்தான்
அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
அனுமதி அளித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த
ஜெயலலிதா அந்த அனுமதியை ரத்து செய்து விட்டார்.
       
7) தற்போது காவிரிப் படுகையில் ஷேல் வாயு எடுக்கும்
திட்டத்தைக் கைவிடுவதாக ONGC நிறுவனம் அறிவித்து
உள்ளது. இது வரவேற்கத் தக்க முடிவு. இது நியூட்டன்
அறிவியல் மன்றத்துக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

8) தொலைக்காட்சி சானல்கள் இது குறித்து விவாதம்
நடத்தக் கூடும். ஆனால் அவர்கள் நடத்தும் விவாதம்
முற்றிலும் பயனற்றதாகவே இருக்கும். ஏனெனில்
அறிவியலே அறியாத தற்குறிகளான அரசியல் கட்சிப்
பிரமுகர்களை வைத்து விவாதம் என்ற பெயரில்
அறியாமையையாக கூட்டாக வெளிப்படுத்துவார்கள்.
இது ஒரு சமூகத் தீமை ஆகும்.

9) அல்லது சுற்றுச் சூழல் போராளிகள்(?) என்ற பெயரில்
பொருளாதார நிபுணர்களை(??) அல்லது அறிவியல்
கற்காத வழக்கறிஞர்களை வைத்து விவாதம்
நடத்துவார்கள். இதுவும் ஓர் இழிந்த சமூகத் தீமை
ஆகும்.

10) மீத்தேன் எடுப்பது என்பது முற்றிலும் ஓர் அறிவியல்
சப்ஜக்ட். ஷேல் பாறைகள் என்றால் என்ன என்றோ
ADSORPTION என்றால் என்னவென்றோ தெரியாத
முட்டாள்களைக் கொண்டு நடத்தும் விவாதம் நடத்துவது 
சமூகக் கயமை ஆகும்.    

11)ADSORPTION என்றால் என்ன?
Adhere to, adhesive ஆகிய சொற்களின் பிறப்பு
போன்றதே adsorption என்ற சொல்லின் பிறப்பும்.


ஒரு பொருளின் அணுக்களோ அயான்களோ
மூலக்கூறுகளோ இன்னொரு பொருளின் surfaceல்
ஒட்டிக் கொள்ளுதல் adsorption எனப்படும்.

எனினும் adsorption நிகழ்ந்து ஒட்டிக் கொண்ட
பின்னால், அதை பிரித்தெடுப்பதும் கடினமே.

உதாரணமாக மீத்தேன் என்னும் வாயு, பாறையாகிய
solidல் ஒட்டிக் கொண்ட பின்னால், ஒட்டிக்கொண்ட
வாயுவின் movement கிட்டத்தட்ட முற்றிலுமாக
நின்று விடுகிறது. அதாவது entropy அறவே குறைந்து
விடுகிறது. entropy குறைந்து விட்டதால், spontaneous
process என்பதற்கு இடமில்லை.

எனவே external agent மூலமாகத்தான் movement
ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தித்தான்
ஒட்டிக் கொண்டுள்ள பொருளை surfaceல் இருந்து
பிரித்தெடுக்க முடியும். இப்படிப் பிரித்தெடுப்பது
ஒரு violent processதான்.

ஷேல் வாயு பிரித்தெடுப்பதில், ஒரு கரைசலை
(சில ரசாயனங்கள் கலந்த தண்ணீராலான கரைசல்)
அதிக வேகத்துடன், அதிக impact ஏற்படுத்தும்
விதத்தில் பீய்ச்சி அடித்தால்தான், surface ல் ஒட்டிக்
கொண்டிருக்கும் வாயு நகரும். இதுதான் ஷேல் வாயு
எடுக்கும் முறை.
    எனவே ஊடகங்களே திருந்துங்கள்!


மருதுபாண்டியன்   ஷா (ஷேல் வாயு)


இதிலும் ADSORPTION மூலமாகத்தான் நிலக்கரிப்
பதிவுகளின் மீது மீத்தேன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.


பொருளாதார நிபுணர் என்று உலகில் எவரும் இல்லை.
பொருளாதார முட்டாள்கள் மட்டுமே உலகெங்கும்
நீக்கமற நிறைந்துள்ளார்கள்.
பொருளாதாரம் என்பதே முட்டாள்களின் சப்ஜக்ட்தான்.

உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் யார்
என்று என்னைக் கேட்டால் நான் இரண்டு பேரைக்
குறிப்பிடுவேன். 1. ராஜாத்தி அம்மாள் 2. செத்துப்போன
சரவணா பவன் ராஜகோபால். இந்த இருவருமே
பொருளாதாரத்தில் சாதித்துக் காட்டியவர்கள்.
இவர்களுக்கு உலகம் முழுவதும் சொத்து உள்ளது.
அல்லது உலகம் முழுவதும் பிசினஸ் உள்ளது.
இவர்கள் பள்ளிப்படிப்பு கூட இல்லாத தற்குறிகள்.
ஆனால் பொருள் சேர்ப்பதில் நிபுணர்கள்.

   

திராவிடத் தற்குறிகள், தேசியத் தற்குறிகள்,
தற்குறிகளான தமிழ்ப் பண்டிட்டுகள் ஆகியோரை
வைத்து தற்குறிகளான நெறியாளர்கள் SCIENCE SUBJECTல்
நடத்தும் விவாத நிகழ்ச்சிகளால் என்ன பயன் விளையும்?
இதைக் கண்டிக்காத ஒரு தற்குறிச் சமூகம்!
எங்கும் எதிலும் தற்குறித்தனம்!


Marxism leninism
வாரத்துக்கு ஏழு நாட்கள் என்பது யூத சமயம் மூலம் உலகுக்கு கிடைத்த விசயம். ஆறு நாளில் உலகை கடவுள் உண்டாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்பதால் அந்த நாளை சப்பாத் என அறிவித்து விடுமுறை நாளாக அறிவித்தார்கள். நம்பிக்கையுள்ள யூதர்கள் அந்த நாளில் மின்னஞ்சல் கூட பார்க்கமாட்டார்கள். அதிபர் டிரம்பின் மருமகன் யூதர். சப்பாத் நாளில் இன்ஸ்டகிராம் பதிவு கூட போடமாட்டார். அதன் நீட்சிதான் ஆங்கிலேயர் உலகுக்கு அறிமுகப்படுத்திய ஞாயிறு விடுமுறை கான்செப்ட்.
சங்கதமிழ் இலக்கியங்களில் வாரநாட்கள் கிடையாது. சனி, ஞாயிறு என கிழமைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நட்சத்திரம், திதி, அமாவாசை, பவுர்ணமி முதலானவற்றை வைத்தே நாட்களை வேறுபடுத்தினார்கள். வாரவிடுமுறைக்கு பதில் அமாவசை, பவுர்ணமி தவிர ஏகபட்ட பண்டிகைகள் தான் அன்று விடுமுறை நாட்கள்.
இப்படி வாரத்துக்கு ஏழு நாள் என்பதில் மாற்றம் செய்யமுயன்ற ஒரே முயற்சி பழைய சோவியத்யூனியனில் நடந்தது.
1929...வாரத்துக்கு ஏழு நாட்கள் என்பதால் ஞாயிறு விடுமுறை விடபட்டு தேசிய உற்பத்தில் ஏழில் ஒரு பங்காக குறைவதை மாற்றமுடியுமா என சோவியத் அதிகாரிகள் யோசித்தார்கள். அதுதவிர ஞாயிறு விடுமுறை என்பதும் சமயம் சார்ந்ததாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
ஐந்து நாள் வாரத்தை உருவாக்கி தொழிலாளிகளை சுழற்சி முறையில் விடுமுறை அளித்தால் என்ன? மஞ்சல், சிகப்பு, பச்சை, நீலம், வெள்ளை என்பது போல செக்யூலரான ஐந்து நாட்களை உருவாக்கலாம். தொழிலாளிகளை ஐந்து நிறங்களில் பிரிக்கலாம். மஞ்சள் தொழிலாளிகளுக்கு மஞ்சள்கிழமையன்று விடுமுறை, சிகப்புக்கு சிகப்புகிழமை...இப்படி செய்தால் எல்லா நாளிலும் 80% தொழிலாளிகள் பணிக்கு வருவார்கள். தொழிலாளிகளுக்கு ஏழு நாளுக்கு ஒரு விடுமுறை என்பதை விட ஐந்து நாளுக்கு ஒரு விடுமுறை என கூடுதலாக விடுமுறகளும் கிடைக்கும்.
1929ல் சோவியத் காலண்டர் இப்படி ஐந்து நாள் வாரமாக பிரிக்கப்பட்டது. ஆனால் உடனே சர்ச்சைகள் மூண்டன. கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லாருக்கும் ஒரே நிறத்தை கொடுப்பது சாத்தியமில்லை. இதனால் விடுமுறைநாளில் கூட அனைவரும் பிரிந்திருக்கும் சூழல் உருவானது. "யாருமில்லாமல் தனியாக நான் மட்டும் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வது?" என தொழிலாளிகள் புகார் செய்தார்கள்.
ஏழு நாளில் தொடர்ந்து ஓடியதால் இயந்திரங்களும் பழுதடைந்தன. மனிதனுக்கு மட்டுமல்ல, இயந்திரத்துக்கும் ஓய்வு அவசியம் என சொல்லி இரண்டு ஆண்டுகளில் இந்த பரிசோதனை முயற்சி முடிவுக்கு வந்து மீண்டும் ஏழுநாள் வாரம், ஞாயிறு விடுமுறை என சோவியத் யூனியன் காலண்டர் மாறியது.

செவ்வாய், 26 நவம்பர், 2019

விருப்ப ஓய்வில் செல்லும் முடிவு சரிதானா?
60 வயதில் ஒய்வு என்பது மாரீச மானா?
BSNL VRSன் நாடு தழுவிய கதிர்வீச்சு தீங்கானதா?
பாம்படம் அணிந்த பாட்டிகளின் VRS எதிர்ப்பு!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
-----------------------------------------------------------------
ஒளியின் வேகத்தில் BSNL ஊழியர்களும் அதிகாரிகளும்
VRSக்கு விண்ணப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிமிடம் வரை BSNLல் 80,000  பேரும் MTNL ல் 12,000
பேரும் விண்ணப்பித்து உள்ளனர். கடைசி நாளான
டிசம்பர் 3க்குள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடக்கூடும்.

There was a mad rush  to opt for VRS among BSNL staff என்று
எவரேனும் கூறினால் அது ஒரு குறைமதிப்பீடே ஆகும்.
Maddest ever rush என்பதே உண்மையாகும். உரிய
superlativeகள் இல்லாமல் BSNL VRSஐ வர்ணிக்க இயலாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி 37 பந்துகளில்
செஞ்சுரி அடித்து உலக சாதனை புரிந்த வேகத்தில்,
BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் VRSக்கு
விண்ணப்பம செய்கின்றனர். என்ன காரணம்?

இங்கு ஒரு TINA Factor செயல்படுவதுதான் காரணம்.
TINA என்றால் There Is No Alternate என்று பொருள்.
முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்று
இல்லை என்பதை வலியுறுத்தும் நோக்கில் மார்கரெட்
தாட்சர் அடிக்கடி TINA என்ற சொல்லைப் பயன்படுத்துவார்.

நிலவுகிற சமூக, பொருளாதாரச் சூழலில், 50 வயதை
எட்டி விட்ட ஒரு BSNL ஊழியருக்கோ அதிகாரிக்கோ
இந்த VRSஐ ஏற்பதைத் தவிர வேறு வழியே இல்லை!

VRS மட்டுமல்ல, ஒய்வு பெறும் வயதை 58ஆகக் குறைப்பதும்
BSNLன் புத்தாக்கத் திட்டத்தில் உள்ளது. 2020 மார்ச் 31
அன்றே ஒய்வு பெறும் வயது 58 என்று ஆகிவிடலாம்.
சங்கங்களால் இதைத் தடுக்க இயலாது. ஏனெனில் புத்தாக்கத்
திட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு 58 வயதில் ஒய்வு
என்பதை எதிர்க்க இயலாது.

எனவே மற்றவர்களை விட 58 வயதுக்காரர்கள் கூடுதல்
கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும். "எனக்கு VRS
வேண்டாம்; 60 வயது வரை வேலை செய்யப் போகிறேன்"
என்று கூறும் தோழர்களே, நாளையே ஒய்வு
பெறும் வயது 58 என்று உத்தரவு வந்து விட்டால்,
உங்களின் வாழ்வு நீர்க்கோலம் ஆகி விடும்!
60 வயதில் superannuation என்பது வெறும் மாரீச மான்!
அதை விரும்புவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

VRSக்குப் பிந்திய நிலைமைகள்! (Post VRS Scenario)
----------------------------------------------------------------------------
VRS க்குப் பிந்திய BSNL எப்படி இருக்கும்? யுத்தம் முடிந்து
துருப்புகள் வெளியேறிய பிறகு கைவிடப்பட்ட ராணுவ
முகாம்களைப் போல, BSNL அலுவலகங்கள் காட்சி அளிக்கும்.

ஊழியர்களின் வேலைப்பளு அதிகரிக்கும். போதிய
ஊழியர்கள் இல்லாத இடங்களில், தனியார் உரிமதாரர்களுக்கு
(Franchise) BSNLன் வேலைகள் கையளிக்கப்படும்.
முற்றிலும் புதிய ஒரு வேலைக் கலாச்சாரத்துக்கு
ஊழியர்கள் மாறினால் ஒழிய தாக்குப் பிடிக்க இயலாது.

நேரடி நியமனம் செய்யப்பட்ட (direct recruits of BSNL)
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமாதாரர்களால்
புதிய தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்வது எளிது.
DOTயில் இருந்து வந்த Promotee officerகளுக்கு இது
ஒப்பீட்டளவில் கடினம்..Accounts sideம் இதே
நிலைமையில்தான் உள்ளது. பலருக்கும் ஏற்படும்
தர்ம சங்கடங்களைத் தவிர்க்க இதற்கு மேல்
விவரித்துச் சொல்ல விரும்பவில்லை.

இது survival of the fittest என்னும் கோட்பாடு முழுவீச்சில்
செயல்படும் நேரம். இதன் மூலம் யாப்புறுத்த விரும்புவது
என்னவெனில், யாரினும் கூடுதலாக, DOTயில் இருந்து
வந்த Promotee Officersக்கே இந்த VRS 2019 ஓர் வரப்பிரசாதம்
என்பதை உணர வேண்டும்.
Unsung Unwept Unhonoured என்ற நிலையில் Unceremonious exitக்குப்
பதிலாக an exit with due honours. 21 குண்டுகள் முழங்க
80 லட்ச ரூபாய் பணத்துடன் இல்லம் ஏக வேறென்ன வழி?

தொழிற்சங்கங்களின் வலிமை குறையும்!
----------------------------------------------------------------
VRSக்குப் பிந்திய நிலைமைகளில் தொழிற்சங்கங்களின்
வலிமை பெரிதும் குன்றிவிடும். காற்றில் கரைந்த
கற்பூரமாய், ஒரு லட்சம் பேர் வெளியேறிய பின்னர்,
யாரை வைத்துச் சங்கம் நடத்துவது?

தற்போது SNEAவின் உறுப்பினர்கள் 20,000 பேர்.
AIBSNLEAவில் 9000 பேர். பட்டதாரிப் பொறியாளர் சங்கமான
AIGETOAவில் 5500 பேர். VRSக்குப் பின் தற்போது மூன்றாம்
இடத்தில் உள்ள AIGETOA இனி decisive roleஐ மேற்கொள்ளும்.
அது போல SNATTAவும் பெரிதும் முக்கியத்துவம் பெறும்.

NFTE, BSNLEU ஆகிய இருபெரும் சங்கங்களும் மிகக்
கடுமையான இழப்பைச் சந்திக்கும். இந்தியாவிலேயே
அதிகபட்ச நஷ்டத்தை அடையும் சங்கங்கள்
இவ்விரண்டுமே. ரிட்டயர்டு ஆன ஆசாமிகளைத்
தலைமையில் வைத்துக் கொண்டிருக்கும் சங்கங்கள் இவை!
இவற்றை நம்பியா VRSக்குப் பிந்திய புயல் சூழலில்
ஊழியர்களால் கரையைக் கடக்க இயலும்?

VRSஐ எதிர்ப்பது என்ற பெயரில் தமிழ்நாடு CGM அலுவலக
வளாகத்தில் மார்க்சிஸ்ட் ஆதரவு தொழிற்சங்கம் நேற்று
ஒரு கூத்தை நடத்தியது. இதில் பங்கேற்ற பலரும்
ரிட்டயர்டு ஆனவர்களே. VRS என்பது fait accompli ஆன பிறகு,
80,000 பேர் விண்ணப்பித்த பிறகு, முக்கால்வாசி ஊர் எரிந்த
பிறகு, மிகவும் சாவகாசமாக வெறும் கண்துடைப்பாக
நடத்தப்படுகிறது இந்தக் கூத்து.

பழைய காலத்தில் பாட்டி என்றால் பாம்படம்
அணிந்திருக்க வேண்டும்; அது போல யூனியன் என்றால்
VRSஐ எதிர்க்க வேண்டும் என்பது அருதப் பழசான ஒரு
தொழிற்சங்க ஐதீகம்!

VRS குறித்த, மார்க்சிய வழிப்பட்ட புறவய ஆய்வோ
மதிப்பீடோ இல்லாமல், தனது conservative எச்சங்களை
வெளித்தள்ளுவதால் என்ன பயன்? VRSக்கு என்ன
மாற்று வைத்து இருக்கின்றனர் இந்த hypocrites?

தற்போது BSNLல் உள்ள ஊழியர்கள் = 1,17,305
அதிகாரிகள் = 46,597
மொத்தம் = 1,63,902
BSNLன் சராசரி வயது = 50க்கு மேல்
VRSக்கு தகுதி உள்ள அதிகாரிகள் (age > 50) = 17,632
விண்ணப்பித்த அதிகாரிகள் = 13,204
VRSக்கு தகுதி உள்ள ஊழியர்கள் = 86,839
விண்ணப்பித்துள்ள ஊழியர்கள் = 65,999.
இந்தப் புள்ளி விவரம் பல உண்மைகளை உணர்த்தும்.

RSS and BJP need not be collinear always!
-----------------------------------------------------
தொலைதொடர்பின் வரலாற்றில், நிறைய
அமைச்சர்களைப் பார்த்து இருக்கிறோம். 1970களில்
இருந்த காங்கிரஸ் அமைச்சர் சி எம் ஸ்டீபன்,
1990களின்  சுக்ராம் ஆகிய இருவருமே மிக மோசமான
மக்கள் விரோத அமைச்சர்கள்.

திமுக அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ ராசா
ஆகியோர் காலத்தில் BSNL செயல்படத் தொடங்கி
விட்டது. BSNLக்கு 3G அலைக்கற்றை (UMTS 2100 MHz)
மற்றும் WiMAX அலைக்கற்றை ஆகிய இரண்டும்
எந்த முன்பணமும் செலுத்தாமல் (without any upfront payment)
மத்திய அரசால் வழங்கப் பட்டன. ஆனால் சேவையைத்
தொடங்க இயலாமல் WIMAX அலைக்கற்றையை BSNL
அரசிடமே திரும்ப ஒப்படைத்து விட்டது. இது வரலாறு.

ஒரு கட்டத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாயே
தொலைத்தொடர்புத் துறையை தம் வசம் வைத்து
நிர்வகிக்க நேரிட்டது.

தற்போதைய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,
தாம் பதவி ஏற்றது முதலே BSNL ஒரு கேந்திரமான
பொதுத் துறை நிறுவனமாக (BSNL as a strategic PSU) நீடிக்க
வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

2014 முதலே இந்தியாவின் அரசியல் விவகாரங்களையும்
மத்திய அரசின் கொள்கைகளையும் ஆர் எஸ் எஸ்
அமைப்புதான் தீர்மானித்து வருகிறது. BSNLஐ மூட
வேண்டும் என்றும் அதன் சொத்துக்களை விற்க வேண்டும்
என்றும் ஆர் எஸ் எஸ் மோடி அரசை வலியுறுத்தியது.
இன்று நேற்றல்ல, மனோஜ் சின்ஹா நமது அமைச்சராக
இருந்தபோதே, BSNLஐ மூடச்சொல்லி ஆர் எஸ் எஸ்
வலியுறுத்தி வந்தது. தற்போது ரவிசங்கர் பிரசாத்தையும்
வலியுறுத்தியது.

ஆர் எஸ் எஸ்சின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர்
ஏட்டில் (ஜூலை 16, 2019) அரசுடைமைத் தத்துவம்
தோல்வி அடைந்து விட்டதால் BSNLஐ மூட வேண்டும்
என்று கட்டுரை வெளியானது.

ஆர் எஸ் எஸ்சின் நெருக்குதலையும் மீறி, ரவிசங்கர்
பிரசாத் உறுதியுடன் நின்றார். பாதுகாப்புத் துறையும்
அரசின் ரகசியங்களைக் காக்க BSNL நீடிக்க வேண்டும்
என்ற நிலையை எடுத்தது. இதன் விளைவாகவே
BSNL இன்று புத்தாக்கம் பெறுகிறது. ஆர் எஸ் எஸ்சும்
பாஜகவும் எப்போதுமே collinearஆக இருக்க வேண்டும்
என்று IQ குன்றிய குட்டி முதலாளிய Pseudo left ஆட்கள்
கருதலாம். RSS and BJP need not be collinear always!

ஆக இன்று தன் கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த வாளை அறுத்தெறிந்து விட்டு, ஒரு புது மணப்பெண்ணைப்
போல  புத்தாக்கத்தை எதிர்நோக்கி BSNL நாணத்துடன்
காத்திருக்கிறது. BSNLன் வளைக்கரங்களுக்கு மருதாணி
இட பிரபஞ்சத்தின் பேரழகிகள் வரிசையில் நிற்கின்றனர்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
****************************************************************
ஆண்டாள் தன்னை மணக்க, மறுநாள் வரும் கண்ணனை
காளை என்றாள்..ஆண்டாள் personification செய்தாள்.
மானுடக் கண்ணனை தெய்வ நிலைக்கு ஏற்றிட அந்த
personification தேவைப்பட்டது.

ஆண்டாளை மேற்கோள் காட்டுகையில், நான் எந்த ஒரு
குறிப்பிட்ட நபரையும் காளை என்று personification
செய்யவில்லை. எதிர்காலத்தில் வரும் வளத்தையே
வாழ்வாங்கு வாழப்போகும் வாழ்வையே நான் காளை
என்ற பதத்தால் குறிப்பிட்டேன்.

நாளைக்குப் பிறக்கும் நல்ல காலமே BSNLஐ
மணக்க இருக்கும் காளை.
       



  

   



              
மீத்தேன் ஆய்வுத் திட்டம் ரத்து!
ஷேல் வாயு தமிழ்நாட்டில் கிடையாது!
அன்றே சொன்னது நியூட்டன் அறிவியல் மன்றம்!
இன்று ஓ என் ஜி சி நிறுவனமும் அதையே கூறுகிறது!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
காவிரிப் படுகையில் நடைபெற்று வந்த மீத்தேன் ஆய்வுத்
திட்டத்தை (ஷேல் வாயு ஆய்வுத் திட்டம்) கைவிடுவதாக
ஓ என் ஜி சி நிறுவனம் நேற்று (25.11.2009) அறிவித்துள்ளது.

இன்னும் ஓராண்டு காலம் ஆய்வு செய்வதற்கு அனுமதி
இருந்த போதிலும், காவிரிப் படுகையில் நடைபெற்று
வந்த ஷேல் வாயு (shale gas) இருப்பைக் கண்டறியும்
ஆய்வுத் திட்டத்தை, நிர்ணயித்த காலம் முடிவதற்கு
முன்பாகவே கைவிடுவதாக ONGC அறிவித்துள்ளது.

ONGCயின் இந்த அறிவிப்பானது நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தத் திட்டம்
ஆரம்பமான நிலையிலேயே, தமிழ்நாட்டில் எங்குமே
ஷேல் வாயு கிடையாது என்பதால் இத்திட்டத்தைக்
கைவிட வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
கூறி இருந்தது. இது குறித்து நடைபெற்ற இரண்டு
செய்தியாளர் சந்திப்புகளில் நியூட்டன் அறிவியல் மன்றம்
பங்கெடுத்து, ஷேல் வாயு தமிழ்நாட்டில் இல்லவே இல்லை
என்று அடித்துக் கூறி இருந்தது. அன்றே நாங்கள் கூறிய
உண்மையை ONGC இன்று ஏற்றுக் கொண்டுள்ளது.

ஷேல் வாயு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமல்,
அதை எடுக்கும் முறை பற்றி எந்த அறிவும் இல்லாமல்,
"ADSORPTION" என்றால் என்ன என்று தெரியாமல்
இருக்கும் எவராலும் இக்கட்டுரையைப் புரிந்து
கொள்ள இயலாது. முந்திய வரியில் ADSORPTION
என்று எழுதி உள்ளேன். நன்கு கவனிக்கவும்: அந்த
வார்த்தையில் உள்ள D என்ற எழுத்தை. இது
ABSORPTION அல்ல.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற
குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில்
(Children Science Congress 2019) குழந்தைகளின் performanceஐ
மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கும் ஒரு
மதிப்பீட்டாளராக நான் பங்கேற்றேன்.

அப்போது 11 வம் வகுப்பு மாணவி ஒருத்தி adsorption
phenomenonஐக் கொண்டு ஒரு திட்டத்தை வடிவமைத்து
அதை சமர்ப்பித்தார். அந்த மாணவி மதிப்பீட்டாளர்கள்
அனைவரையும் கவர்ந்தார். நாங்கள் அனைவருமே
அந்த மாணவிக்கு அதிக பட்ச மதிப்பெண்களை
வழங்கினோம். Chemistryயில் டிகிரி வாங்கிய பலருக்கே
adsorption என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கும்
நிலையில், பதினோராம் வகுப்பு மாணவி ஒருத்தி
adsorption பற்றித் தெளிவான அறிவுடன் இருந்தது
எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
  
Adsorption என்பது ஒரு surface phenomenon. இது chemistry
பாடத்தில் வருவது. அதே போல்  SHALE GAS என்பது
வேறு எதுவுமல்ல; அதுவும் மீத்தேன்தான். மீத்தேன்
வாயுவுக்கு அது கிடைக்கும் இடத்தைப் பொறுத்து
பல்வேறு பெயர்கள் சூட்டப் படுகின்றன.

மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு இயக்கத்தில்,
சுட்டுப்  போட்டாலும் சயன்ஸ் வராத ஆர்ட்ஸ் க்ரூப்
ஆசாமிகள் உட்கார்ந்து கூத்தடித்துக் கொண்டு
இருக்கிறார்கள். இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம்.
இங்கு இப்படி நடப்பதில் வியப்பில்லை.
**************************************************
பின்குறிப்பு: ADSORPTION என்றால் என்ன?
வாசகர்கள் இக்கேள்விக்கு விடையளிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------

Adhere to, adhesive ஆகிய சொற்களின் பிறப்பு
போன்றதே adsorption என்ற சொல்லின் பிறப்பும்.
ஒரு பொருளின் அணுக்களோ அயான்களோ
மூலக்கூறுகளோ இன்னொரு பொருளின் surfaceல்
ஒட்டிக் கொள்ளுதல் adsorption எனப்படும்.

எனினும் adsorption நிகழ்ந்து அதாவது ஒட்டிக் கொண்ட
பின்னால், அதை பிரித்தெடுப்பதும் கடினமே.
உதாரணமாக மீத்தேன் என்னும் வாயு, பாறையாகிய
solidல் ஒட்டிக் கொண்ட பின்னால், ஒட்டிக்கொண்ட
வாயுவின் movement கிட்டத்தட்ட முற்றிலுமாக
நின்று விடுகிறது. அதாவது entropy அறவே குறைந்து
விடுகிறது. entropy குறைந்து விட்டதால், spontaneous
process என்பதற்கு இடமில்லை.     

எனவே external agent மூலமாகத்தான் movement
ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தித்தான்
ஒட்டிக் கொண்டுள்ள பொருளை surfaceல் இருந்து
பிரித்தெடுக்க முடியும். இப்படிப் பிரித்தெடுப்பது
ஒரு violent processதான்.

ஷேல் வாயு பிரித்தெடுப்பதில், ஒரு கரைசலை
(சில ரசாயனங்கள் கலந்த தண்ணீராலான கரைசல்)
அதிக வேகத்துடன், அதிக impact ஏற்படுத்தும்
விதத்தில் பீய்ச்சி அடித்தால்தான், surface ல் ஒட்டிக்
கொண்டிருக்கும் வாயு நகரும். இதுதான் ஷேல் வாயு
எடுக்கும் முறை.
 
    



திங்கள், 25 நவம்பர், 2019

திரு முகிலன் அவர்களின் மறுப்புரையும்
அதன் மீதான எமது எதிர்வினையும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
திரு முகிலனின் மறுப்புரை தோழர் பத்ரிநாத் மூலமாக
எனக்குக் கிடைக்கப் பெற்றது. தோழர் பத்ரிக்கு நன்றி!

1) திரு முகிலனின் மறுப்புரை மிகவும் hollowஆக உள்ளது.
பொருட்படுத்தக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை.
மாறாக கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்களும்
வசவுகளும் மட்டுமே உள்ளன.

2) "BSNLன் முன்னாள் ஊழியர், இன்னும் BSNL பணத்தில்
வயிறு வளர்க்கும் நபர்" என்று எழுதுகிறார் திரு முகிலன்.
BSNLன் முன்னாள் இந்நாள் தொழிலாளர்களை BSNLன்
பணத்தில் வயிறு வளர்க்கும் நபர்கள் என்று எழுதுவது
பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.

சரி, திரு முகிலன் BSNLன் பணத்தில் வயிறு
வளர்க்கவில்லையா? இல்லை என்றால் ஜியோவின்
பணத்தில் வயிறு வளர்க்கிறாரா? மல்லாந்து படுத்துக்
கொண்டு எச்சில் துப்பினால் மார்பின் மேல்தான்
வந்து விழும் என்று தெரியாதா?

3) BSNL ன் நிதி ஆதாரம் பற்றியோ, தொழில்நுட்பம்
பற்றியோ, NGN பற்றியோ, WiMax ஸ்பெக்ட்ரம் பற்றியோ
இக்கட்டுரை பேசவில்லை. அவையெல்லாம் இக்கட்டுரையின்
கருப்பொருள் அல்ல. எனவே அதைப்பற்றி ஏன் பேசவில்லை
என்று திரு முகிலன் கேட்பது கேலிக்கு உரியது.
    
4) எமது கட்டுரை VRSல் போகலாமா வேண்டாமா என்று
முடிவெடுக்க உதவும் ஒரு வழிகாட்டும் கட்டுரை (a guidance) .
இன்றைய சூழலில் VRSல் செல்வதே சரியான முடிவு என்று
எமது கட்டுரை வழிகாட்டுகிறது. எமது கட்டுரையின்
ONE POINT AGENDA இது மட்டுமே

5) ஊழியர்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்கள்.
சார், VRSல் போகலாமா வேண்டாமா, பதில் சொல்லுங்கள்,
"Say Yes or No" என்று கேட்கிறார்கள். அதற்குப் பதில்
சொல்லும் கட்டுரை இது. "YES, VRSல் போகலாம் என்று
உறுதியுடன் சொல்கிறது எமது கட்டுரை.

6) இவ்வாறு உறுதியுடன் சொல்ல அஞ்சும் கோழைகளே
சங்கத் தலைமைகளில் நிறைந்துள்ளார்கள். எனவே
ஊழியர்கள் பலர் VRS குறித்து வழிகாட்டும்படி கேட்டுக்
கொண்டதற்கு இணங்க நியூட்டன் அறிவியல் மன்றம்
ஒரு கட்டுரையை எழுதியது. ஆக, இக்கட்டுரை
ஊழியர்களின் தேவையில் இருந்து பிறக்கிறது.
(Born out of objective compulsions and not from my subjective wish).

7) மயிராண்டி, ஹைகோர்ட்டான் என்றெல்லாம்
வசவுகளைப் பிரயோகம் செய்வது திரு முகிலனின்
நோய் மனத்தின் வெளிப்பாடு. இது அவர் மீது பரிதாபம்
கொள்ள வைக்கிறது.

8)  பொதுவெளியிலும் சரி, தனிப்பட்ட முறையிலும்
சரி, கண்ணியமாக உரையாட முடியவில்லை என்பது
திரு முகிலனின் பலவீனத்தைக் குறிக்கும். அதை அவர்
மாற்றிக் கொள்வது அவருக்கு நலம் பயக்கும்.

9) என்னதான் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம்
செய்தாலும், திரு முகிலன் மீது கோபம் கொள்ள
விரும்பவில்லை. ஏனெனில், திரு முகிலன் என்னை விட
வயதில் இளையவர்; அனுபவத்திலும் இளையவர்தான்.

10) திரு முகிலன் VRSல் செல்கிறாரா அல்லது பணியில்
நீடிக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவருடைய
நலன் சார்ந்து அவர் முடிவு எடுக்கட்டும். அவருடைய
வாழ்வில் அவர் எல்லா நலமும் பெறட்டும் என்று
மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
*****************************************************


          
Draft 1: திரு முகிலன் அவர்களின் மறுப்புரையும்
அதன் மீதான எமது எதிர்வினையும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
திரு முகிலனின் மறுப்புரை தோழர் பத்ரிநாத் மூலமாக
எனக்குக் கிடைக்கப் பெற்றது. தோழர் பத்ரிக்கு நன்றி!

1) திரு முகிலனின் மறுப்புரை மிகவும் hollowஆக உள்ளது.
பொருட்படுத்தக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை.
மாறாக கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்களும்
வசவுகளும் மட்டுமே உள்ளன.

2) "BSNLன் முன்னாள் ஊழியர், இன்னும் BSNL பணத்தில்
வயிறு வளர்க்கும் நபர்" என்று எழுதுகிறார் திரு முகிலன்.
BSNLன் முன்னாள் இந்நாள் தொழிலாளர்களை BSNLன்
பணத்தில் வயிறு வளர்க்கும் நபர்கள் என்று எழுதுவது
பேதைமை மட்டுமல்ல கயமையும் ஆகும்.

சரி, திரு முகிலன் BSNLன் பணத்தில் வயிறு
வளர்க்கவில்லையா? இல்லை என்றால் ஜியோவின்
பணத்தில் வயிறு வளர்க்கிறாரா? மல்லாந்து படுத்துக்
கொண்டு எச்சில் துப்பினால் மார்பின் மேல்தான்
வந்து விழும் என்று தெரியாதா?

3) BSNL ன் நிதி ஆதாரம் பற்றியோ, தொழில்நுட்பம்
பற்றியோ, NGN பற்றியோ, WiMax ஸ்பெக்ட்ரம் பற்றியோ
இக்கட்டுரை பேசவில்லை. அவையெல்லாம் இக்கட்டுரையின்
கருப்பொருள் அல்ல. எனவே அதைப்பற்றி ஏன் பேசவில்லை
என்று திரு முகிலன் கேட்பது கேலிக்கு உரியது.
    
4) எமது கட்டுரை VRSல் போகலாமா வேண்டாமா என்று
முடிவெடுக்க உதவும் ஒரு வழிகாட்டும் கட்டுரை (a guidance) .
இன்றைய சூழலில் VRSல் செல்வதே சரியான முடிவு என்று
எமது கட்டுரை வழிகாட்டுகிறது. எமது கட்டுரையின்
ONE POINT AGENDA இது மட்டுமே

5) ஊழியர்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்கள்.
சார், VRSல் போகலாமா வேண்டாமா, பதில் சொல்லுங்கள்,
"Say Yes or No" என்று கேட்கிறார்கள். அதற்குப் பதில்
சொல்லும் கட்டுரை இது. "YES, VRSல் போகலாம் என்று
உறுதியுடன் சொல்கிறது எமது கட்டுரை.

6) இவ்வாறு உறுதியுடன் சொல்ல அஞ்சும் கோழைகளே
சங்கத் தலைமைகளில் நிறைந்துள்ளார்கள். எனவே
ஊழியர்கள் பலர் VRS குறித்து வழிகாட்டும்படி கேட்டுக்
கொண்டதற்கு இணங்க நியூட்டன் அறிவியல் மன்றம்
ஒரு கட்டுரையை எழுதியது. ஆக, இக்கட்டுரை
ஊழியர்களின் தேவையில் இருந்து பிறக்கிறது.
(Born out of objective compulsions and not from my subjective wish).

7) மற்றப்படி, திரு முகிலனின் மறுப்புரையில் சாரமே
இல்லை என்பதால், அதற்கு point to point rebuttal அளிக்க
வேண்டிய தேவை இல்லை. He is pooh poohed.

8) மயிராண்டி, தந்திக்காரன், ஹைகோர்ட்டான்
என்றெல்லாம் வசவுகளைப் பிரயோகம் செய்வது
திரு முகிலனின் நோய் பிடித்த மனத்தின் வெளிப்பாடு.
அவர் மீது பரிதாபப் படுகிறேன். தந்திக்காரன் என்றால்
பறையன் என்று கருதுகிறாரா திரு முகிலன்? சாதியக்
காழ்ப்பினால் மூளை சீழ் பிடித்து விட்டது போலும்!

9) இது annihilation நடந்த இடம் என்று பாவம், இந்தக் குட்டி
முதலாளிய உதிரி அறிய மாட்டார் போலும்! கேவலம்,
ஒரு டெலிகாம் CPI கேடராகக் கூட  நீடிக்க முடியாமல்
petti bourgeois Dravidian scumஆகஇழிந்த போன ஒரு மூளையில்
இருந்து சீழ் மட்டும் வழியுமே தவிர சிந்தனை வழியாது.

10) மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் திரு முகிலன் போன்ற
லும்பன்களைப் பொருட்படுத்துவதில்லை. வேண்டுமானால்
திரு முகிலன் இந்த எதிர்வினையை கியூ பிராஞ்சு
ஆசாமிகளுக்கு அனுப்பி மகிழட்டும்.
******************************************************


          
1. 'லாபம் ஈட்ட முடியாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.' என்று எழுதுகிறார். இந்தியாவில் எந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது? நாம் மட்டும் நஷ்டத்தில் இயங்குவது போன்ற த்வனியில் தொடங்குதல் அறிவுடமையா? வன்மமா? 2. 'அதற்கான  நிதி இன்மையால் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை' என்கிறார் கட்டுரையாளர். நிதி இல்லை என்று இவருக்கு எப்படித் தெரியும்? மற்ற நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? நிதி இல்லையா அல்லது நமக்கு நிதி ஒதுக்க 'அவர்களுக்கு' மனமில்லையா? இந்த ஆளே நிதி அமைச்சர் போலப் பேசுகிறாரே? முறைதானா? மேலும் நமக்கு ஏன் நிதி? நம்மிடம் இருந்த நிதியை வீணடிக்காமல் இருந்தாலே போதுமே? வீணடித்து யார்? வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமாவது மூலதனத்தை முட்டாள்தனமாக வீணடிக்குமா? யாரால் நமது மூலதனம் வறண்டப் பட்டது? அழிந்து கொண்டிருக்கும்  LL  சேவையில் நவீனம் என்ற பெயரில் NGN ஸ்விட்சில் பல்லாயிரம் கோடி கொட்டி அழித்தது யார்? CDMA, Cor-Dect, PMP,  என விதவிதமாக எத்தனை ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்பட்டன?   லாபகரமான   Wimax ஏன் யாரால் தட்டிப் பறிக்கப்பட்டது? அந்த  frequency band தான் ஜியோவிற்கு அளிக்கப்பட்டது என்பதை அறிவாரா இவர்? அந்த நுண்ணலைக்கற்றைக்கு நாம் கொட்டியழுதபணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்பதை அறிவாரா இவர்? இவற்றுக்கெல்லாம் BSNL காரணமா? அல்லது Ministerம் CMDம் அதாவது Government காரணமா? ஒரு முன்னாள் ஊழியர், இன்னும் BSNL பணத்தில் வயிறு வளர்க்கும் நபர் இப்படி எழுதலாமா? மீடியா இவ்வாறெல்லாம் அரசின் தவறுகளை மறைத்து பிஎஸ்என்னெலை குறை சொன்னால் புரிந்து கொள்ள முடியும். மீடியா சொல்வதை அப்படியே வேறு வார்த்தைகளில் ஒரு முன்னாள் ஊழியர் இப்படிச் சொல்வதை எப்படி பொறுத்துக் கொள்ள? 3. 'சந்தையில் கடும் போட்டி. பிற நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல்....பிஎஸ்என்எல்......." என்றெல்லாம் எழுதுகிறாரே....அறிவுடன் தான் எழுதுகிறாரா? சந்தையில் போட்டி என்றால் என்ன? சேவை தொடங்கி ஓரிரு ஆண்டுகளுக்கு கட்டணமே இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக சேவை தருவதா? அதை போட்டி என்று கொண்டால் ஜியோவிற்கு வழங்கப்பட்டதுபோல் நமக்கும் லட்சம் லட்சம் கோடிகளாய் கடன் வழங்கப்பட்டு நாமும் முற்றிலும் இலவசமான சேவை அதுவும் 4G சேவை அளிக்க அரசு அனுமதித்திருந்தால் அது போட்டி. ஆனால் ஜியோவை ரேஸ் குதிரை மேல் உட்கார்த்தி விட்டு நம்மை இரண்டுகால்களையும் மடக்கிக் கட்டி ஓடவிட்டார்களே அதன் பெயர் போட்டியா? சூதா? நம்மை அழிக்க நினைக்கும் அரசு ஜியோ கூட்டணியின் சூதாட்டத்தைப்பற்றி வாயே திறக்காமல் நம்மால் போட்டிபோட முடியாமல் நமது வாடிக்கையாளர் அடித்தளம் அரிக்கப்பட்டு விட்டது என்று எழுதுகிற இவரை பழைய முகிலனாயிருந்தால் மயிராண்டி என்று விளித்திருப்பேன். என்ன செய்ய ரத்தம் சுண்டிவிட்டதே. இந்த ஆளுக்குத் தெரியுமா, ஜியோவின் வருகைக்குப்பின்னரும் ஜியோ தவிர  BSNL மட்டும்தான் SIM விற்பனையில் positiveஆக இருக்கும் ஒரே நிறுவனம் என்பது? அதனால்தான் மூர்க்கத்தனமாக நம்மை அழிக்கிறார்கள் என்பது இந்த ஆளுக்குத் தெரியுமா? 4. ஏதோ பாதுகாப்புத் துறையின் பரிந்துரையில் நாம் பிழைத்திருப்பது போல் எழுதுகிறாரே...? இன்றைக்கும் காஷ்மீரத்தில் BSNLஐ அரசுப் மக்களும் சார்ந்திருப்பது பாதுகாப்புக் காரணங்களுக்காக வா? அதை மீறிய அரசியல் சமூகக் காரணங்கள் இல்லையா? மும்பை தொடர் குண்டு வெடிப்புகளின்போதும் நாடெங்கும் நடந்த பல்வேறு புயல்களின்போதும் தொடர்மழை வெள்ளங்களின் போதும் கலவரங்களின் ஊடேயும் நக்சல்ஆதிக்கத்தின் கீழுள்ள மாவட்டங்களிலும் தனியார்கள் பொத்திக்கொண்டு போவது பொருளாதாரக் காரணங்களாலும் நாம் சேவையாற்றுவது நமது சமூகப் பொறுப்பினாலும் இல்லையா? 5.  தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்திருக்கவேண்டும் என்று சொல்கிறாரே எப்படி வேலை நிறுத்தம் செய்ய முடியும்? வேலைநிறுத்தம் சேவை முடக்கத்திலும், சேவை முடக்கம் மக்கள் நம் மீது கோபம் கொள்வதிலும் முடியாதா?  தொடர்ச்சியான கடுமையான வேலை நிறுத்தங்களை நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு சூழலில் தொழிற் சங்கங்கள் இருக்கின்றன என்பதை பொறுப்பாக யோசித்தால் புரிந்து கொள்ள முடியும். வக்கிரமாக யோசித்தால்? தோழர்களே பிரகலாத்ராய் சிவக்குமார் துரையரசன் என எல்லோரும் மெலிதான(?) இடதுசாரிகள் என்கிற ஒரு கடுமையான உண்மையை கண்டுபிடித்து சொன்ன கட்டுரையாளரை எவ்விதம் பாராட்ட? அதிகாரிகளின் சங்கங்கள் ஒருபோதும் அரசியல் சார்புடைய இருந்ததில்லை என்பது மட்டுமல்ல முடியாது என்பதும் மட்டுமல்ல தொலைத்தொடர்பு பொறுத்தவரையில் நான்-எக்ஸிக்யூட்டிவ் பிரிவு ஊழியர்களின் சங்கங்களும் கூட அரசியல் சார்புகளுடன் எந்த முடிவுகளையும் பெரிதாக எடுத்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய் சொல்வேன் ஒரு பாரம்பரியம் மிக்க இடதுசாரி சிந்தனை உள்ள தலைமையால் தான், தபாலோடு போயிருக்க வேண்டிய இந்த தந்திக்காரர் தொலைத் தொடர்பில் வந்து சேர்ந்து வக்கணை பேசிக்கொண்டிருக்கிறார். 6. 'அரசின் நல்லெண்ணத்தால்' BSNLக்கு  புத்துயிர் ஊட்டுகிறார்களாம்.' அடமட ஹைக்கோர்ட்டானே......அரசு ஜியோ வை வாழவைத்து நம்மை அழிக்க ஆயத்தம் செய்துகொண்டுள்ளது தெரியாதா? பிஎஸ்என்எலைப் பொறுத்து மட்டும் அல்ல வேறு எந்த ஒரே ஒரு விஷயத்திலாவது இந்த அரசு நல்லெண்ணம் கொண்ட அரசென்று சொல்லமுடியுமா? பிஎஸ்என்னெலை அரசு நல்லெண்ணம் கொண்டு காக்கிறது என்று எழுதுகிறவன் ஆறறிவு உள்ள மனிதனா?  நல்லெண்ணமிருந்தால் 8 மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களை பட்டினி போடுவார்களா? நல்லெண்ணம் இருந்தால் கடந்த ஆண்டு முழுதும் நாம் வாடகைக்கு எடுத்து இருக்கிற இடங்களுக்கு வாடகை அளிக்காமல் இருப்பார்களா? நல்லெண்ணம் இருந்தால் மின் கட்டண பாக்கிகளுக்காக சேவையை துடிக்க விடாமல் மாநில அரசுகளை ஒற்றை ஆணையில் அவர்களால் காப்பாற்றி இருக்க இருக்க முடியாதா? நல்லெண்ணம் இருந்தால் நேரா நேரத்திற்கு ஊதியம் அளித்திருக்க முடியாதா? நல்லெண்ணம் இருந்தால் பல லட்சம் கோடிகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கிற அரசே நமக்கு ஒரு ரூபாய் கூட  கடன் வழங்காமல் தடுக்குமா? எவ்வளவு வன்மம்  பாருங்கள் கட்டுரையாளர் மனதில்? VRS BSNL  க்கு நலம்பயக்க என்கிற நம்பிக்கை, மடமை நிறைந்தது இல்லையா?  அதற்கு எதற்கு வீஆர்எஸ்? நம்மை வெவ்வேறு துறைகளுக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பலாமே!6.  Is it a golden hand shake? Is it not utter foolishness to define this  compensated compulsory retirement as golden hand shake? நேரம் போதவில்லை. பிறகு பேசலாம்.
டிராட்ஸ்கியிசத்தையும்

(தோழர் ஏ எம் கே முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி!)

நவமவர் (நவம்பர் 25)

திருப்பூர் குணா
மருதுபாண்டியன்
சிலம்பரசன் சே
தோழர் ஞானம்
செந்தழல்  புவனசேகர்

பகத்சிங் பாரதி
கிருஷ்ணசாமி தியாகராஜன்


அது மத்திய அரசு நடத்தும் மத்தியக் கல்வி
நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில்
OBC இடஒதுக்கீடு உண்டு. அது அனைவரும்
அறிந்ததே.

இங்கு நான் கூறுவது யாதெனில்,
மத்தியத் தொகுப்புக்கு 26 மாநிலங்களும்
வழங்கும் இடங்களில் இடஒதுக்கீடு இல்லை
என்பதே.

மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில்
உள்ள இடம் சொற்பமே (நூற்றுக் கணக்கில்).
ஆனால் 26 மாநிலங்களும் சேர்ந்து
மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் இடங்கள்
(ஆயிரக் கணக்கில்) ஒப்பீட்டளவில் மிக மிக அதிகம்.
உரிய புள்ளி விவரங்களைப் பார்க்கவும்.

அ) மத்திய அரசே நடத்தும் கல்லூரிகளில் உள்ள
இடங்கள்
ஆ) 26 மாநிலங்களும் சேர்ந்து மத்தியத் தொகுப்புக்கு
வழங்கும் இடங்கள்
ஆகிய இவ்விரண்டு வகை இடங்களையும் மத்திய
அரசுதான் நிரப்புகிறது. இவ்விரண்டில் (அ)வில்
OBCக்கு இடஒதுக்கீடு உண்டு. (ஆ)வில் இல்லை.
இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள
வேண்டும்.
   

BSNL ஒருபோதும் தானாக அழியாது. நாமாக
அழித்தால்தான் உண்டு. போட்டி நிறுவனங்கள்
BSNLன் NETWORKஐ நம்பித்தான் வாழ்கின்றன.
எனவே BSNLஐ அவர்களால் அழிக்க இயலாது.
புத்தாக்கத்தின் பின், BSNL  சிறப்பாகச் செயல்பட
இயலும்.
  
சட்டி செய்யத் தெரியாதவனா தமிழன்?
------------------------------------------------------------
சகரக் கிளவியும் மொழிமுத லற்றே
அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே
என்கிறது தொல்காப்பியம்.

அதாவது சகரம் மொழிமுதல் வராது என்று பொருள்.
அதாவது ச என்ற எழுத்தைக் கொண்டு ஒரு சொல்
தொடங்காது என்று பொருள்.

தேவநேய பாவாணர் இதை ஏற்கவில்லை.
கானப்பேர் எயில் கடந்த தமிழன் சட்டி செய்யத்
தெரியாமல் இருந்தானா என்று கேட்டார் அவர்.
புரிகிறது அல்லவா! சகரம் மொழிமுதல் வராது
என்றால், சட்டி என்ற சொல் தமிழில் இருக்கக்
கூடாது அல்லவா?

சட்டி, சண்டை, சரிவு ஆகிய சொற்கள் சரியான
தமிழ்ச் சொற்கள் அல்ல என்று கூற இயலுமா?

"வெல்போர் வேந்தன் வீரரைச் சவட்டி"
என்று திருவிளையாடல் புராணத்தில் வருகிறது.
சவட்டி என்ற சொல்லின் பொருள் "அடித்து உதைத்தல்"
என்பதாகும்.

நெல்லை மாவட்டத்தில் பேச்சு வழக்கில் அடிக்கடி
"மிதிச்சுச் சமட்டிப் போடுவேன்" என்று சொல்வார்கள்.
மேற்கூறிய செய்யுள் வழக்கான "சவட்டி"  என்பதே
பேச்சு வழக்கில் "சமட்டி" என்று வருகிறது.

ஆக, சகரம் மொழிமுதல் வரும் என்பதே உண்மை.
தொல்காப்பிய நூற்பா ஏடு பெயர்த்து எழுதும்போது
நேர்ந்த தவறாகும் என்பது என் முடிவு.
      
===========================================
பிரிவு 5 a (3) கூறுவதாவது:-
மத்திய கல்வி நிலையங்களில் உள்ள 27 சதம் இடங்கள்
இதர பிற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் மத்திய கல்வி
நிலையங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம்
2006ன் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.

இந்த ஒதுக்கீடு மத்திய கல்வி நிலையங்களில் உள்ள
இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதாவது 26 மாநிலங்களும் சேர்ந்து வழங்கும்
இடங்களுக்குப் பொருந்தாது.

மத்திய கல்வி நிலையங்களில் நூற்றுக் கணக்கான
இடங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் OBCக்கு
இட ஒதுக்கீடு உண்டு.
ஆனால், 26 மாநிலங்களும் சேர்ந்து வழங்கும் இடங்கள்
ஆயிரக் கணக்கில் உள்ளன. இவற்றில் இடஒதுக்கீடு
கிடையாது.   
 
இதைத்தான் மேற்கண்ட பிரிவு 5 a (3) கூறுகிறது.
----------------------------------------------------------------------------

All India Quota என்ற பிரிவானது மத்திய கல்வி
நிலையங்களில்  உள்ள இடங்களையும் மாநிலங்கள்
வழங்கும் இடங்களையும் உள்ளடக்கியது.
எனவே அந்தத் தலைப்பின் கீழ், மத்திய கல்வி
நிலையங்களில் உள்ள இடங்களுக்கு மட்டும்
ஒதுக்கீடு என்று கூறுகிறது. அந்த ஒதுக்கீடானது
2006ஆம் ஆண்டுச் சட்டப்படி வழங்கப் படுகிறது
என்றும் கூறுகிறது.

2006ஆம் ஆண்டுச் சட்டம் என்ன சொல்கிறது என்று
அருள் கூர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடஒதுக்கீடு என்பது தெளிவான சொற்களில்
கூறப்பட வேண்டிய ஒன்று. யாரும் உய்த்து உணரத்
தேவை இல்லாமல், வாசிக்கும் எவர் ஒருவரும்
எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இடஒதுக்கீடு
பற்றிய அறிவிப்பு இருத்தல் வேண்டும்.

பரிமேலழகர் உரையோ கோனார் உரையோ
தேவை இல்லாமல் தெளிவுபடச் சொல்ல வேண்டும்.
ஆங்கிலத்தில் in no uncertain terms என்றும், in unequivocal
terms என்றும் in unambiguous terms என்றும் ஆங்கிலத்தில்
சொல்லுவார்கள்.   
   
எனவே நீங்கள் உங்களின் தற்குறிப்பேற்றத்தை
இதில் புகுத்திக் கூறும் கருத்து ஏற்புடையது அல்ல.

சட்டி செய்வதையும் தொல்காப்பிய நூற்பாவையும்
தொடர்பு படுத்தியவர்  மரியாதைக்குரிய மறைந்த
தமிழறிஞர் தேவநேயப் பாவாணர். நான் அல்லன்.
இதை நான் என்னுடைய பின்னூட்டத்திலேயே
எழுதி உள்ளேனே. அருள்கூர்ந்து நான் எழுதியதைச்
சரியாகப் படித்து விட்டுப் பேசுமாறு வேண்டுகிறேன்.

தமிழில் எப்படி ஐயா சகரம் மொழிமுதல் வராமல்
போகும்?  அப்படியானால் சட்டி என்ற சொல் வேறு
மொழியில் இருந்து வந்ததா? கானப்பேர் எயில்
கடந்த தமிழன் சட்டி செய்யத் தெரியாமல் இருந்தனா
என்று ஆவேசப் பட்டவர் பாவாணர்.