வியாழன், 7 நவம்பர், 2019

திரைப்பட விமர்சகர் சுரேஷ் கண்ணனின் போதாமை!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------------
இம்மாத தீராநதி இதழில்  "ஆர்ட்டிக்கிள் 15" என்ற திரைப்படம்
குறித்து விமர்சனம் எழுதி உள்ளார் திரு சுரேஷ் கண்ணன்.
தீராநதியின் அயல்திரை என்ற பகுதியில். ஏழு பக்க
விமர்சனம்.

தீராநதி, உயிர்மை கா.சு இன்ன பிற இதழ்களை நான் 
இன்றும் படித்துத் தொலைக்கிறேன்; ஓரளவு!

மேற்கூறிய "ARTICLE 15" என்னும் படம் இந்திப்படமா,
ஆங்கிலப் படமா, வங்கப் படமா என்று சுரேஷ் கண்ணன்
எழுதிய கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்ள
முடியவில்லை. ஏழு பக்க விமர்சனம் எழுதியவர்
அது எந்த மொழிப் படம் என்று குறிப்பிடவில்லை.
ஏன் இந்தப் போதாமை சுரேஷ் கண்ணன் அவர்களே?

எந்த மொழிப் படம் என்பதை தலைப்பிலேயே
குறிப்பிட வேண்டும். அப்படிக் குறிப்பிடாமல்
விடுவது அறிவியலற்றது.

இதன் மூலம் ஒரு உண்மை தெரிய வருகிறது.
திரு சுரேஷ் கண்ணன் அவர்கள் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் பதிவுகளைப் படிக்கவில்லை என்பது
தெரிய வருகிறது. அப்படிப் படிக்காமல் இருப்பதால்
அவர் நிறையவே இழக்கிறார்.

நேற்றும் இன்றும் ஒரு சில திரைப்படங்களைப்
பற்றி நியூட்டன் அறிவியல் மன்றம் புகழ்ந்து
எழுதி உள்ளது. அயல்திரைப் படங்களான
1) Pawn Sacrifice, 2) 2010: The year we make contact என்னும்
இரு ஆங்கிலப் படங்கள் பற்றி எழுதி உள்ளேன்.

நடிகர் ஜோசப் விஜய் நடித்த ஒரு தமிழ்ப் படத்தின் காட்சி
பற்றி எழுதி உள்ளேன். இவற்றை எல்லாம்
திரு சுரேஷ் கண்ணன் அவர்கள் படிக்க வேண்டும்.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள்தான் அதிகபட்ச
அறிவியலைத் தமது படங்களில் சொல்லியவர்.
Faraday Cage பற்றி தமது விஸ்வரூபம் படத்தில்
சொல்லி இருப்பார். "திரைப்படங்களில் அறிவியல்"
என்ற எனது கட்டுரை முன்பே "அறிவியல் ஒளி"
இதழில் வெளியாகி உள்ளது. திரு சுரேஷ் கண்ணன்
போன்றவர்கள் அக்கட்டுரையைப் படிக்கக்
கடமைப் பட்டவர்களாய் இருக்கிறார்கள்.

திரு சுரேஷ் கண்ணன் அவர்களைத் தாக்குவது
எமது நோக்கம் அல்ல. இது ஒரு constructive criticism.
திரு சுரேஷ் கண்ணன் எல்லா நலன்களும் பெற்று
வாழ்வாங்கு வாழ்ந்திடுக!
*************************************************          
மிஸ்டர் ஸ்டான்லி ராஜன்,
உம்மை வாழ்த்துகிறேன்; வெறும் வியங்கோளாக அல்ல;
மெய்யாக, மானசீகமாக வாழ்த்துகிறேன்.

நீர் சர் சி வி ராமனை நினைவு கூர்கிறீர்.
அவரின் புகழை அவனியெங்கும் எடுத்து உரைக்கிறீர்.
நீவிர் நீடு வாழ்க!

ராமன் விளைவு (Raman Effect) உலக இயற்பியலாளர்களின்
கவனத்தை ஈர்த்தது. 1925-30 காலக்கட்டத்தில்தான்
quantum mechanics உருவெடுக்கத் தொடங்கி இருந்தது.
குவான்டம் தியரியின் சரித்தன்மை குறித்து
இயற்பியல் உலகிலியே ஐயம் இருந்தது.

இந்த நேரத்தில் ராமன் விளைவு வெளிவந்தது. அது
குவான்டம் தியரியின் சரித்தன்மையை உறுதி செய்தது.
எனவே ராமன் இயற்பியல் உலகின் கவனத்தை
ஈர்த்தார். நோபல் பரிசும் அவருக்கு வழங்கப் பட்டது.

1930ல் ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.
அதற்குப் பின்னர்தான் வெர்னர் ஹெய்சன்பர்க்
அவர்களுக்கு 1932ல் நோபல் பரிசு கிடைத்தது.
இதுவே ராமனின் மகிமையை உணர்த்தும்.

-------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக