செவ்வாய், 5 நவம்பர், 2019

அரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த
குழந்தை இறந்த நிலையில் மீட்கப் பட்டது!
குற்றவாளிக் கூண்டில் ஊடகத்தினர்!
STRESS TENSOR பற்றி ஏண்டா பேச மறுக்கிறீர்கள்?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------- 
 மாநிலம்: அரியானா; மாவட்டம்: கர்னால்.
ஊர்: ஹர்சிங்பூர் கிராமம்.
விழுந்த இடம்: தங்கள் சொந்த வயலில் உள்ள
மூடப்படாத ஆழ்துளைக் கிணறு.

50 அடி ஆழத்தில் விழுந்த 5 வயதுக் குழந்தையை
மீட்புக் குழுவினர் 18 மணி நேரம் போராடி
சடலமாக மீட்டனர்.

படிப்பினை:
Prevention is better than cure.   

என்னதான் தொழில்நுட்பம் இருந்தாலும்,
ஆழத்தில் விழுந்த குழந்தையின் மீது செயல்படும்
STRESS TENSOR  அந்தக் குழந்தையைக் கொன்று விடும்
வாய்ப்பு மிகவும் அதிகம்.

stress tensor என்றால் என்னவென்று தெரியாத யார் எவரும்
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியாது.

ஒருவேளை குழந்தை உயிருடன் மீட்கப் பட்டாலும்
அது உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
ஏனெனில் மண்ணுக்கு அடியில் ஆழத்தில்
பாக்டீரியாக்களின் ஆதிக்கம் அதிகம்.

கிருமித்தொற்று குழந்தைக்கு ஏற்பட்டு விடும்.
அது குழந்தையின் சுவாச உறுப்புகளைப் பாதிக்கும்.
எனவே மூச்சுத் திணறலால், நுரையீரல் செயலிழப்பால்
குழந்தை உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்.

எனவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.
அருள்கூர்ந்து ஆழ்துளைக் கிணறுகளை,
1) அவை தோண்டப்படும்போதும்,
2) செயல்பாட்டில் இருக்கும்போதும்
3) பயனற்ற நிலையில் கைவிடப்படும்போதும்
பாதுகாப்பான முறையில் மூடி வையுங்கள்.

கிணற்றை மூட ஒரு கான்கிரீட் ஸ்லாப் போதுமே!
நாலைந்து இரும்புக் கம்பிகளை கிணற்றின் மீது
குறுக்கு மறுக்காகப் போட்டு, ஒரு 3x3 அடி
கான்கிரீட் ஸ்லாபைப் போட்டு மூடினால்
போதுமே. இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றாலும்
குழந்தைகளைப் பாதுகாக்குமே.

ஒரு 3x3 அடி கான்கிரீட் ஸ்லாப் என்ன விலை இருக்கும்?
2000 ரூபாய் இருக்குமா? தேவையான அளவில்
இரும்புக் கம்பிகளும் கான்கிரீட் ஸ்லாபும்
ரூ 5000 செலவில் முடிந்து விடுமே!
 
ஊடகத்தினரும் சரி, குழந்தை சுஜித் மரணம் குறித்து
வீடியோ வெளியிட்ட, கருத்துக் கூறிய எவர் ஒருவரும்
ஆழ்துளைக் கிணற்றை எப்படி மூடுவது என்ற
அம்சத்தையே பேசவில்லையே!

தமிழ்நாடு அறிவியல் தற்குறிகளின் தேசம் என்பது
மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் படுகிறது. ஊடகத்தினர்
அனைவரும் நாணமின்றி குற்றவாளிக் கூண்டில்
நிற்கின்றனர். நியூட்டன் அறிவியல் மன்றம் சுட்டிக் காட்டிய
உண்மைகளின் கனம் தாங்காமல், வாயில்
கொழுக்கட்டையை அடைத்துக் கொண்டு
இருக்கின்றனர்.
****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக