வெள்ளி, 1 நவம்பர், 2019

மீட்புப்பணி பயனற்று குழந்தை இறந்ததற்கு
பிரதான காரணம் என்ன?
1) ஆழ்துளைக் கிணறு வெறும் நாலரை அங்குல விட்டமே உடையது.
எனவே பலூனை உள்ளே செலுத்தி, ஊதி, குழந்தையை
வெளியே எடுக்க இயலவில்லை. இன்னும் சில கருவிகள்
குறுகிய துளையினுள் செல்லவில்லை.
எனினும் 23 நிமிடம் நீடித்த உரையாடலில் சாரமான
இதைப்பற்றி அறவே பேசப்படவில்லை.

2) குழந்தை மீது செயல்பட்ட STRESS TENSOR குழந்தையின்
இறப்பை விரைவு படுத்தியது. மேலும் குழந்தையின் வயது
இரண்டுதான் என்பதால் (child is tender) மீட்புப் பணியின்போது
எந்த instructionக்கும் குழந்தை respond செய்யாது.

3) இப்படிப்பட்ட tender தன்மை உடைய குழந்தை ஒரு குறுகிய
குழியில் விழுந்தால் எந்தத் தொழில்நுட்பமும் அதைக்
காப்பாற்ற இயலாது. எனவே in the given situation ஆழ்துளைக்
கிணற்றை மூடுவது மட்டுமே தீர்வு.

4) கிணற்றை மூடாமல் விடுவது criminal negligence. அதுவும்
குறுகலான கிணற்றை மூடாமல் விடுவது gross negligence. இதற்கு
குழந்தையின் தந்தையே solely responsible. இந்திய அரசமைப்புச்
சட்டம் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை
வழங்குகிற அதே நேரத்தில் அடிப்படைக் கடமைகளையும்
வரையறுத்துள்ளது.  குடிமக்களுக்கு Scientific temper இருக்க
வேண்டும் என்று 51 A (h) வலியுறுத்துகிறது. எனவே குழியை
மூடாமல் விடுவதை நியாயப் படுத்துவது பெருந்தவறு.
இது சமூகத்திற்குப் பிற்போக்காக வழிகாட்டுவதாகும்.

5) இது science subject என்பதை அருள்கூர்ந்து எம்தமிழ் சானல்
கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.       

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக