சனி, 2 நவம்பர், 2019

இணைக்கப்பட்ட படத்தில் ஒரு OR GATEஐ
விளக்கி, படம் வரைந்து காட்டி உள்ளேன்.
அந்த சர்க்யூட் டயகிராம் புரிகிறதா?
அது புரிந்தால் OR gateஐயும் புரிந்து கொள்ளலாம்.

படத்தில் வரைந்துள்ள அதே CIRCUIT DIAGRAMஐ
நீங்களும் வரைந்து பாருங்கள்.
எமது அறிவியல் பதிவுகள் வெறுமனே வாசித்து
விட்டுப் போவதற்கு அல்ல.  அது உங்களின்
வாசிப்புடன் செயல்பாட்டையும் கோருகிறது.  

அஞ்சலி செலுத்துவது எப்படி? 
--------------------------------------------
ஜார்ஜ் பூலே அவர்களின் படத்துக்கு
மலர் தூவுவது அல்ல அஞ்சலி.
OR GATEன் COMMUTATIVE LAWஐ
படத்தில் கொடுத்துள்ளேன். அதை நிரூபிக்கவும்.
தயவு செய்து யாராவது நிரூபியுங்கள்.
ஏனெனில் எனக்கு நிரூபணம் மறந்து விட்டது.  

கல்லறையில் தூங்கும் ஜார்ஜ் பூலே அவர்களைத்
தாலாட்டும் பொருட்டு, உலகின் தலைசிறந்த ஒரு
தாலாட்டுப் பாடலை பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்.
ஷ்ரேயா கோஷல் யேசுதாஸ் இருவரின் பாட்டு.
அதைக் கேளுங்கள். சந்தடி சாக்கில் சிறிது ஆங்கிலமும்
அறிந்திருக்க. தாலாட்டு என்பதற்குரிய ஆங்கிலச் சொல் எது?


டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையை
மகாராஷ்டிர முதல்வராக்க ஜனாதிபதி முடிவு!
நான் துணை முதல்வர்! பட்நாகர் விருது
பெற்றவர்கள் அமைச்சர் ஆகிறார்கள்.


பட்நாகர் யார்? ஏன் அவர் பெயரால் விருது
வழங்கப் படுகிறது? இக்கேள்விகளுக்கு
விடை அறிந்திடுங்கள் வாசகர்களே.


பட்நாகர் விருது பெற்ற யாராவது சிலர்
அல்லது யாராவது ஒருவர் பெயரை வாசகர்கள்
கூற வேண்டும். சில நாட்களுக்கு முன்
பட்நாகர் விருது பற்றி எழுதி இருந்ததைப்
படியுங்கள்.

கண்டவனையும் பாசிஸ்டு என்று சொல்லும்
மாவோயிஸ்டுகள், கேரளத்தின் பினராயி விஜயனை
பாசிஸ்டு என்று ஏன் சொல்லுவதில்லை?
பின்ராயி விஜயன் பாசிஸ்டு இல்லாவிட்டால்
வேறு யார்தான் இந்தியாவில் பாசிஸ்டு?


கல்லறையில் தூங்கும் ஜார்ஜ் பூலே அவர்களுக்கு  கி
இன்னொரு தாலாட்டுப் பாட்டு! இது மலையாளப்
பாட்டு! பாடகி சித்ரா பாடியது. பரிந்துரைத்த
நண்பருக்கு நன்றி!  ("ஓமனத் திங்கள் கடாவு")

அட்ட

அய்யன் திருவள்ளுவர் என்று எவரும் இல்லை.
திருவள்ளுவர் அல்லது வள்ளுவர் மட்டுமே இங்குண்டு.
அடுத்து, அய்யன் என்று எழுதுவது தவறு மட்டுமின்றி,
கயமையும் ஆகும். திருந்துங்கள்.


டிஜிட்டல் இந்தியா ஒழிக என்று கூச்சலிடும்
குட்டி முதலாளியத் தற்குறிக் காடையர்கள்
ஜார்ஜ் பூலே பற்றி அறிவார்களா?
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் இல்லாவிட்டால்
முகநூல் கிடையாது என்று இந்த முட்டாள்களுக்குத்
தெரியுமா?


கிணற்றை மூடாமல் விட்டது criminal negligence என்று
சட்டம் கூறுகிறது. எனவே தற்போதுள்ள சட்டப்படியே
அவர் மீது வழக்குத் தொடர இயலும். ஆனால் வழக்குத்
தொடர்வது என்பது அரசின் வேலை. தமிழக அரசு
அப்படி எதுவும் வழக்குத் தொடராது என்பது தெள்ளத்
தெளிவு. 


அய்யன் திருவள்ளுவர்!
-----------------------------------
அய்யன் = தவறு.
ஐயன் = சரி.
உயிரெழுத்துக்கள் 12. அவற்றுள் ஐ ஒன்று.
அந்த உயிரெழுத்தை நீக்கி விட்டு "அய்" என்று
எழுதுவது தவறு மட்டுமின்றி கயமையும் ஆகும்.

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின்ற வர்.

இந்தக் குறளைப் படியுங்கள்.
இங்கு,  என்னை = என்+ ஐ = என் தலைவன் என்று பொருள்படும்.
ஐ = தலைவன்.
அய் = பொருளற்ற ஒரு சொல்.   

திருவள்ளுவருக்கு வேறெந்த அடைமொழியும்
தேவை இல்லை! உணருங்கள்!
*************************************



 



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக