சனி, 2 நவம்பர், 2019

அவ்வையார் தவறு! ஒளவையார் சரி!
கவுதம புத்தர் தவறு! கெளதம புத்தர் சரி!
-----------------------------------------------------------
ஒள என்பது தமிழின் 12 உயிரெழுத்துக்களுள் ஒன்று.
எனவே ஒள என்பதற்குப் பதிலாக அவ் என்று எழுதுவது
பெருந்தவறு. தமிழின் உயிரெழுத்தைக் குறைக்க
எவருக்கும் உரிமை இல்லை.    

அவ்வையார் (தவறு);  ஒளவையார் (சரி)
கவுரவம்  (தவறு); கெளரவம் (சரி)
சவுந்திரராசன் (தவறு); செளந்திரராசன் (சரி)
கவுரி (தவறு); கெளரி (சரி)

கவுதம புத்தர் (தவறு); கெளதம புத்தர் (சரி)
மவுரியப் பேரரசு (தவறு); மெளரியப் பேரரசு (சரி) 
சவுதாமினி (தவறு); செளதாமினி (சரி)
யவ்வனம் (தவறு); யெளவனம் (சரி)   (யெளவனம் = இளமை) 

ரவுத்திரம் பழகு (தவறு); ரெளத்திரம் பழகு (சரி)
லவுகீகம் (தவறு); லெளகீகம் (சரி)

வேண்டுகோள்:
அருள் கூர்ந்து ஒள என்ற உயிரெழுத்தை நீக்கி விட்டு
அதன் இடத்தில் அவ் என்று எழுதாதீர்கள்.
உயிர்மெய் எழுத்துக்களிலும் ஒள என்ற எழுத்துக்குப்
பதிலாக அவ் என்று பயன்படுத்தாதீர்கள்.

அதே நேரத்தில், அவ்வளவு என்பதை அவ்வளவு
என்றே எழுதுங்கள். அதை ஒளவளவு என்று
எழுதி விடாதீர்கள்.
அ+ அளவு = அவ்வளவு. (இங்கு அ என்பது சுட்டு)
அ என்ற எழுத்தும் அளவு என்ற சொல்லும்
புணரும்போது, இரண்டும் உயிரெழுத்து என்பதால்,
வகர உடம்படு மெய் தோன்றி அவ்வளவு என்றாகிறது.
அருள் கூர்ந்து கீழ்வகுப்பு  இலக்கண நூற்களைப் படியுங்கள்.
**************************************************  
   
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக