செவ்வாய், 26 நவம்பர், 2019

விருப்ப ஓய்வில் செல்லும் முடிவு சரிதானா?
60 வயதில் ஒய்வு என்பது மாரீச மானா?
BSNL VRSன் நாடு தழுவிய கதிர்வீச்சு தீங்கானதா?
பாம்படம் அணிந்த பாட்டிகளின் VRS எதிர்ப்பு!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
-----------------------------------------------------------------
ஒளியின் வேகத்தில் BSNL ஊழியர்களும் அதிகாரிகளும்
VRSக்கு விண்ணப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிமிடம் வரை BSNLல் 80,000  பேரும் MTNL ல் 12,000
பேரும் விண்ணப்பித்து உள்ளனர். கடைசி நாளான
டிசம்பர் 3க்குள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடக்கூடும்.

There was a mad rush  to opt for VRS among BSNL staff என்று
எவரேனும் கூறினால் அது ஒரு குறைமதிப்பீடே ஆகும்.
Maddest ever rush என்பதே உண்மையாகும். உரிய
superlativeகள் இல்லாமல் BSNL VRSஐ வர்ணிக்க இயலாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி 37 பந்துகளில்
செஞ்சுரி அடித்து உலக சாதனை புரிந்த வேகத்தில்,
BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் VRSக்கு
விண்ணப்பம செய்கின்றனர். என்ன காரணம்?

இங்கு ஒரு TINA Factor செயல்படுவதுதான் காரணம்.
TINA என்றால் There Is No Alternate என்று பொருள்.
முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்று
இல்லை என்பதை வலியுறுத்தும் நோக்கில் மார்கரெட்
தாட்சர் அடிக்கடி TINA என்ற சொல்லைப் பயன்படுத்துவார்.

நிலவுகிற சமூக, பொருளாதாரச் சூழலில், 50 வயதை
எட்டி விட்ட ஒரு BSNL ஊழியருக்கோ அதிகாரிக்கோ
இந்த VRSஐ ஏற்பதைத் தவிர வேறு வழியே இல்லை!

VRS மட்டுமல்ல, ஒய்வு பெறும் வயதை 58ஆகக் குறைப்பதும்
BSNLன் புத்தாக்கத் திட்டத்தில் உள்ளது. 2020 மார்ச் 31
அன்றே ஒய்வு பெறும் வயது 58 என்று ஆகிவிடலாம்.
சங்கங்களால் இதைத் தடுக்க இயலாது. ஏனெனில் புத்தாக்கத்
திட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு 58 வயதில் ஒய்வு
என்பதை எதிர்க்க இயலாது.

எனவே மற்றவர்களை விட 58 வயதுக்காரர்கள் கூடுதல்
கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும். "எனக்கு VRS
வேண்டாம்; 60 வயது வரை வேலை செய்யப் போகிறேன்"
என்று கூறும் தோழர்களே, நாளையே ஒய்வு
பெறும் வயது 58 என்று உத்தரவு வந்து விட்டால்,
உங்களின் வாழ்வு நீர்க்கோலம் ஆகி விடும்!
60 வயதில் superannuation என்பது வெறும் மாரீச மான்!
அதை விரும்புவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

VRSக்குப் பிந்திய நிலைமைகள்! (Post VRS Scenario)
----------------------------------------------------------------------------
VRS க்குப் பிந்திய BSNL எப்படி இருக்கும்? யுத்தம் முடிந்து
துருப்புகள் வெளியேறிய பிறகு கைவிடப்பட்ட ராணுவ
முகாம்களைப் போல, BSNL அலுவலகங்கள் காட்சி அளிக்கும்.

ஊழியர்களின் வேலைப்பளு அதிகரிக்கும். போதிய
ஊழியர்கள் இல்லாத இடங்களில், தனியார் உரிமதாரர்களுக்கு
(Franchise) BSNLன் வேலைகள் கையளிக்கப்படும்.
முற்றிலும் புதிய ஒரு வேலைக் கலாச்சாரத்துக்கு
ஊழியர்கள் மாறினால் ஒழிய தாக்குப் பிடிக்க இயலாது.

நேரடி நியமனம் செய்யப்பட்ட (direct recruits of BSNL)
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமாதாரர்களால்
புதிய தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்வது எளிது.
DOTயில் இருந்து வந்த Promotee officerகளுக்கு இது
ஒப்பீட்டளவில் கடினம்..Accounts sideம் இதே
நிலைமையில்தான் உள்ளது. பலருக்கும் ஏற்படும்
தர்ம சங்கடங்களைத் தவிர்க்க இதற்கு மேல்
விவரித்துச் சொல்ல விரும்பவில்லை.

இது survival of the fittest என்னும் கோட்பாடு முழுவீச்சில்
செயல்படும் நேரம். இதன் மூலம் யாப்புறுத்த விரும்புவது
என்னவெனில், யாரினும் கூடுதலாக, DOTயில் இருந்து
வந்த Promotee Officersக்கே இந்த VRS 2019 ஓர் வரப்பிரசாதம்
என்பதை உணர வேண்டும்.
Unsung Unwept Unhonoured என்ற நிலையில் Unceremonious exitக்குப்
பதிலாக an exit with due honours. 21 குண்டுகள் முழங்க
80 லட்ச ரூபாய் பணத்துடன் இல்லம் ஏக வேறென்ன வழி?

தொழிற்சங்கங்களின் வலிமை குறையும்!
----------------------------------------------------------------
VRSக்குப் பிந்திய நிலைமைகளில் தொழிற்சங்கங்களின்
வலிமை பெரிதும் குன்றிவிடும். காற்றில் கரைந்த
கற்பூரமாய், ஒரு லட்சம் பேர் வெளியேறிய பின்னர்,
யாரை வைத்துச் சங்கம் நடத்துவது?

தற்போது SNEAவின் உறுப்பினர்கள் 20,000 பேர்.
AIBSNLEAவில் 9000 பேர். பட்டதாரிப் பொறியாளர் சங்கமான
AIGETOAவில் 5500 பேர். VRSக்குப் பின் தற்போது மூன்றாம்
இடத்தில் உள்ள AIGETOA இனி decisive roleஐ மேற்கொள்ளும்.
அது போல SNATTAவும் பெரிதும் முக்கியத்துவம் பெறும்.

NFTE, BSNLEU ஆகிய இருபெரும் சங்கங்களும் மிகக்
கடுமையான இழப்பைச் சந்திக்கும். இந்தியாவிலேயே
அதிகபட்ச நஷ்டத்தை அடையும் சங்கங்கள்
இவ்விரண்டுமே. ரிட்டயர்டு ஆன ஆசாமிகளைத்
தலைமையில் வைத்துக் கொண்டிருக்கும் சங்கங்கள் இவை!
இவற்றை நம்பியா VRSக்குப் பிந்திய புயல் சூழலில்
ஊழியர்களால் கரையைக் கடக்க இயலும்?

VRSஐ எதிர்ப்பது என்ற பெயரில் தமிழ்நாடு CGM அலுவலக
வளாகத்தில் மார்க்சிஸ்ட் ஆதரவு தொழிற்சங்கம் நேற்று
ஒரு கூத்தை நடத்தியது. இதில் பங்கேற்ற பலரும்
ரிட்டயர்டு ஆனவர்களே. VRS என்பது fait accompli ஆன பிறகு,
80,000 பேர் விண்ணப்பித்த பிறகு, முக்கால்வாசி ஊர் எரிந்த
பிறகு, மிகவும் சாவகாசமாக வெறும் கண்துடைப்பாக
நடத்தப்படுகிறது இந்தக் கூத்து.

பழைய காலத்தில் பாட்டி என்றால் பாம்படம்
அணிந்திருக்க வேண்டும்; அது போல யூனியன் என்றால்
VRSஐ எதிர்க்க வேண்டும் என்பது அருதப் பழசான ஒரு
தொழிற்சங்க ஐதீகம்!

VRS குறித்த, மார்க்சிய வழிப்பட்ட புறவய ஆய்வோ
மதிப்பீடோ இல்லாமல், தனது conservative எச்சங்களை
வெளித்தள்ளுவதால் என்ன பயன்? VRSக்கு என்ன
மாற்று வைத்து இருக்கின்றனர் இந்த hypocrites?

தற்போது BSNLல் உள்ள ஊழியர்கள் = 1,17,305
அதிகாரிகள் = 46,597
மொத்தம் = 1,63,902
BSNLன் சராசரி வயது = 50க்கு மேல்
VRSக்கு தகுதி உள்ள அதிகாரிகள் (age > 50) = 17,632
விண்ணப்பித்த அதிகாரிகள் = 13,204
VRSக்கு தகுதி உள்ள ஊழியர்கள் = 86,839
விண்ணப்பித்துள்ள ஊழியர்கள் = 65,999.
இந்தப் புள்ளி விவரம் பல உண்மைகளை உணர்த்தும்.

RSS and BJP need not be collinear always!
-----------------------------------------------------
தொலைதொடர்பின் வரலாற்றில், நிறைய
அமைச்சர்களைப் பார்த்து இருக்கிறோம். 1970களில்
இருந்த காங்கிரஸ் அமைச்சர் சி எம் ஸ்டீபன்,
1990களின்  சுக்ராம் ஆகிய இருவருமே மிக மோசமான
மக்கள் விரோத அமைச்சர்கள்.

திமுக அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ ராசா
ஆகியோர் காலத்தில் BSNL செயல்படத் தொடங்கி
விட்டது. BSNLக்கு 3G அலைக்கற்றை (UMTS 2100 MHz)
மற்றும் WiMAX அலைக்கற்றை ஆகிய இரண்டும்
எந்த முன்பணமும் செலுத்தாமல் (without any upfront payment)
மத்திய அரசால் வழங்கப் பட்டன. ஆனால் சேவையைத்
தொடங்க இயலாமல் WIMAX அலைக்கற்றையை BSNL
அரசிடமே திரும்ப ஒப்படைத்து விட்டது. இது வரலாறு.

ஒரு கட்டத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாயே
தொலைத்தொடர்புத் துறையை தம் வசம் வைத்து
நிர்வகிக்க நேரிட்டது.

தற்போதைய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,
தாம் பதவி ஏற்றது முதலே BSNL ஒரு கேந்திரமான
பொதுத் துறை நிறுவனமாக (BSNL as a strategic PSU) நீடிக்க
வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

2014 முதலே இந்தியாவின் அரசியல் விவகாரங்களையும்
மத்திய அரசின் கொள்கைகளையும் ஆர் எஸ் எஸ்
அமைப்புதான் தீர்மானித்து வருகிறது. BSNLஐ மூட
வேண்டும் என்றும் அதன் சொத்துக்களை விற்க வேண்டும்
என்றும் ஆர் எஸ் எஸ் மோடி அரசை வலியுறுத்தியது.
இன்று நேற்றல்ல, மனோஜ் சின்ஹா நமது அமைச்சராக
இருந்தபோதே, BSNLஐ மூடச்சொல்லி ஆர் எஸ் எஸ்
வலியுறுத்தி வந்தது. தற்போது ரவிசங்கர் பிரசாத்தையும்
வலியுறுத்தியது.

ஆர் எஸ் எஸ்சின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர்
ஏட்டில் (ஜூலை 16, 2019) அரசுடைமைத் தத்துவம்
தோல்வி அடைந்து விட்டதால் BSNLஐ மூட வேண்டும்
என்று கட்டுரை வெளியானது.

ஆர் எஸ் எஸ்சின் நெருக்குதலையும் மீறி, ரவிசங்கர்
பிரசாத் உறுதியுடன் நின்றார். பாதுகாப்புத் துறையும்
அரசின் ரகசியங்களைக் காக்க BSNL நீடிக்க வேண்டும்
என்ற நிலையை எடுத்தது. இதன் விளைவாகவே
BSNL இன்று புத்தாக்கம் பெறுகிறது. ஆர் எஸ் எஸ்சும்
பாஜகவும் எப்போதுமே collinearஆக இருக்க வேண்டும்
என்று IQ குன்றிய குட்டி முதலாளிய Pseudo left ஆட்கள்
கருதலாம். RSS and BJP need not be collinear always!

ஆக இன்று தன் கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த வாளை அறுத்தெறிந்து விட்டு, ஒரு புது மணப்பெண்ணைப்
போல  புத்தாக்கத்தை எதிர்நோக்கி BSNL நாணத்துடன்
காத்திருக்கிறது. BSNLன் வளைக்கரங்களுக்கு மருதாணி
இட பிரபஞ்சத்தின் பேரழகிகள் வரிசையில் நிற்கின்றனர்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
****************************************************************
ஆண்டாள் தன்னை மணக்க, மறுநாள் வரும் கண்ணனை
காளை என்றாள்..ஆண்டாள் personification செய்தாள்.
மானுடக் கண்ணனை தெய்வ நிலைக்கு ஏற்றிட அந்த
personification தேவைப்பட்டது.

ஆண்டாளை மேற்கோள் காட்டுகையில், நான் எந்த ஒரு
குறிப்பிட்ட நபரையும் காளை என்று personification
செய்யவில்லை. எதிர்காலத்தில் வரும் வளத்தையே
வாழ்வாங்கு வாழப்போகும் வாழ்வையே நான் காளை
என்ற பதத்தால் குறிப்பிட்டேன்.

நாளைக்குப் பிறக்கும் நல்ல காலமே BSNLஐ
மணக்க இருக்கும் காளை.
       



  

   



              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக