திங்கள், 25 நவம்பர், 2019

1. 'லாபம் ஈட்ட முடியாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.' என்று எழுதுகிறார். இந்தியாவில் எந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது? நாம் மட்டும் நஷ்டத்தில் இயங்குவது போன்ற த்வனியில் தொடங்குதல் அறிவுடமையா? வன்மமா? 2. 'அதற்கான  நிதி இன்மையால் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை' என்கிறார் கட்டுரையாளர். நிதி இல்லை என்று இவருக்கு எப்படித் தெரியும்? மற்ற நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? நிதி இல்லையா அல்லது நமக்கு நிதி ஒதுக்க 'அவர்களுக்கு' மனமில்லையா? இந்த ஆளே நிதி அமைச்சர் போலப் பேசுகிறாரே? முறைதானா? மேலும் நமக்கு ஏன் நிதி? நம்மிடம் இருந்த நிதியை வீணடிக்காமல் இருந்தாலே போதுமே? வீணடித்து யார்? வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமாவது மூலதனத்தை முட்டாள்தனமாக வீணடிக்குமா? யாரால் நமது மூலதனம் வறண்டப் பட்டது? அழிந்து கொண்டிருக்கும்  LL  சேவையில் நவீனம் என்ற பெயரில் NGN ஸ்விட்சில் பல்லாயிரம் கோடி கொட்டி அழித்தது யார்? CDMA, Cor-Dect, PMP,  என விதவிதமாக எத்தனை ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்பட்டன?   லாபகரமான   Wimax ஏன் யாரால் தட்டிப் பறிக்கப்பட்டது? அந்த  frequency band தான் ஜியோவிற்கு அளிக்கப்பட்டது என்பதை அறிவாரா இவர்? அந்த நுண்ணலைக்கற்றைக்கு நாம் கொட்டியழுதபணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்பதை அறிவாரா இவர்? இவற்றுக்கெல்லாம் BSNL காரணமா? அல்லது Ministerம் CMDம் அதாவது Government காரணமா? ஒரு முன்னாள் ஊழியர், இன்னும் BSNL பணத்தில் வயிறு வளர்க்கும் நபர் இப்படி எழுதலாமா? மீடியா இவ்வாறெல்லாம் அரசின் தவறுகளை மறைத்து பிஎஸ்என்னெலை குறை சொன்னால் புரிந்து கொள்ள முடியும். மீடியா சொல்வதை அப்படியே வேறு வார்த்தைகளில் ஒரு முன்னாள் ஊழியர் இப்படிச் சொல்வதை எப்படி பொறுத்துக் கொள்ள? 3. 'சந்தையில் கடும் போட்டி. பிற நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல்....பிஎஸ்என்எல்......." என்றெல்லாம் எழுதுகிறாரே....அறிவுடன் தான் எழுதுகிறாரா? சந்தையில் போட்டி என்றால் என்ன? சேவை தொடங்கி ஓரிரு ஆண்டுகளுக்கு கட்டணமே இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக சேவை தருவதா? அதை போட்டி என்று கொண்டால் ஜியோவிற்கு வழங்கப்பட்டதுபோல் நமக்கும் லட்சம் லட்சம் கோடிகளாய் கடன் வழங்கப்பட்டு நாமும் முற்றிலும் இலவசமான சேவை அதுவும் 4G சேவை அளிக்க அரசு அனுமதித்திருந்தால் அது போட்டி. ஆனால் ஜியோவை ரேஸ் குதிரை மேல் உட்கார்த்தி விட்டு நம்மை இரண்டுகால்களையும் மடக்கிக் கட்டி ஓடவிட்டார்களே அதன் பெயர் போட்டியா? சூதா? நம்மை அழிக்க நினைக்கும் அரசு ஜியோ கூட்டணியின் சூதாட்டத்தைப்பற்றி வாயே திறக்காமல் நம்மால் போட்டிபோட முடியாமல் நமது வாடிக்கையாளர் அடித்தளம் அரிக்கப்பட்டு விட்டது என்று எழுதுகிற இவரை பழைய முகிலனாயிருந்தால் மயிராண்டி என்று விளித்திருப்பேன். என்ன செய்ய ரத்தம் சுண்டிவிட்டதே. இந்த ஆளுக்குத் தெரியுமா, ஜியோவின் வருகைக்குப்பின்னரும் ஜியோ தவிர  BSNL மட்டும்தான் SIM விற்பனையில் positiveஆக இருக்கும் ஒரே நிறுவனம் என்பது? அதனால்தான் மூர்க்கத்தனமாக நம்மை அழிக்கிறார்கள் என்பது இந்த ஆளுக்குத் தெரியுமா? 4. ஏதோ பாதுகாப்புத் துறையின் பரிந்துரையில் நாம் பிழைத்திருப்பது போல் எழுதுகிறாரே...? இன்றைக்கும் காஷ்மீரத்தில் BSNLஐ அரசுப் மக்களும் சார்ந்திருப்பது பாதுகாப்புக் காரணங்களுக்காக வா? அதை மீறிய அரசியல் சமூகக் காரணங்கள் இல்லையா? மும்பை தொடர் குண்டு வெடிப்புகளின்போதும் நாடெங்கும் நடந்த பல்வேறு புயல்களின்போதும் தொடர்மழை வெள்ளங்களின் போதும் கலவரங்களின் ஊடேயும் நக்சல்ஆதிக்கத்தின் கீழுள்ள மாவட்டங்களிலும் தனியார்கள் பொத்திக்கொண்டு போவது பொருளாதாரக் காரணங்களாலும் நாம் சேவையாற்றுவது நமது சமூகப் பொறுப்பினாலும் இல்லையா? 5.  தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்திருக்கவேண்டும் என்று சொல்கிறாரே எப்படி வேலை நிறுத்தம் செய்ய முடியும்? வேலைநிறுத்தம் சேவை முடக்கத்திலும், சேவை முடக்கம் மக்கள் நம் மீது கோபம் கொள்வதிலும் முடியாதா?  தொடர்ச்சியான கடுமையான வேலை நிறுத்தங்களை நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு சூழலில் தொழிற் சங்கங்கள் இருக்கின்றன என்பதை பொறுப்பாக யோசித்தால் புரிந்து கொள்ள முடியும். வக்கிரமாக யோசித்தால்? தோழர்களே பிரகலாத்ராய் சிவக்குமார் துரையரசன் என எல்லோரும் மெலிதான(?) இடதுசாரிகள் என்கிற ஒரு கடுமையான உண்மையை கண்டுபிடித்து சொன்ன கட்டுரையாளரை எவ்விதம் பாராட்ட? அதிகாரிகளின் சங்கங்கள் ஒருபோதும் அரசியல் சார்புடைய இருந்ததில்லை என்பது மட்டுமல்ல முடியாது என்பதும் மட்டுமல்ல தொலைத்தொடர்பு பொறுத்தவரையில் நான்-எக்ஸிக்யூட்டிவ் பிரிவு ஊழியர்களின் சங்கங்களும் கூட அரசியல் சார்புகளுடன் எந்த முடிவுகளையும் பெரிதாக எடுத்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய் சொல்வேன் ஒரு பாரம்பரியம் மிக்க இடதுசாரி சிந்தனை உள்ள தலைமையால் தான், தபாலோடு போயிருக்க வேண்டிய இந்த தந்திக்காரர் தொலைத் தொடர்பில் வந்து சேர்ந்து வக்கணை பேசிக்கொண்டிருக்கிறார். 6. 'அரசின் நல்லெண்ணத்தால்' BSNLக்கு  புத்துயிர் ஊட்டுகிறார்களாம்.' அடமட ஹைக்கோர்ட்டானே......அரசு ஜியோ வை வாழவைத்து நம்மை அழிக்க ஆயத்தம் செய்துகொண்டுள்ளது தெரியாதா? பிஎஸ்என்எலைப் பொறுத்து மட்டும் அல்ல வேறு எந்த ஒரே ஒரு விஷயத்திலாவது இந்த அரசு நல்லெண்ணம் கொண்ட அரசென்று சொல்லமுடியுமா? பிஎஸ்என்னெலை அரசு நல்லெண்ணம் கொண்டு காக்கிறது என்று எழுதுகிறவன் ஆறறிவு உள்ள மனிதனா?  நல்லெண்ணமிருந்தால் 8 மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களை பட்டினி போடுவார்களா? நல்லெண்ணம் இருந்தால் கடந்த ஆண்டு முழுதும் நாம் வாடகைக்கு எடுத்து இருக்கிற இடங்களுக்கு வாடகை அளிக்காமல் இருப்பார்களா? நல்லெண்ணம் இருந்தால் மின் கட்டண பாக்கிகளுக்காக சேவையை துடிக்க விடாமல் மாநில அரசுகளை ஒற்றை ஆணையில் அவர்களால் காப்பாற்றி இருக்க இருக்க முடியாதா? நல்லெண்ணம் இருந்தால் நேரா நேரத்திற்கு ஊதியம் அளித்திருக்க முடியாதா? நல்லெண்ணம் இருந்தால் பல லட்சம் கோடிகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கிற அரசே நமக்கு ஒரு ரூபாய் கூட  கடன் வழங்காமல் தடுக்குமா? எவ்வளவு வன்மம்  பாருங்கள் கட்டுரையாளர் மனதில்? VRS BSNL  க்கு நலம்பயக்க என்கிற நம்பிக்கை, மடமை நிறைந்தது இல்லையா?  அதற்கு எதற்கு வீஆர்எஸ்? நம்மை வெவ்வேறு துறைகளுக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பலாமே!6.  Is it a golden hand shake? Is it not utter foolishness to define this  compensated compulsory retirement as golden hand shake? நேரம் போதவில்லை. பிறகு பேசலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக