ஞாயிறு, 10 நவம்பர், 2019

1) நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கருத்தியலில் ஊறிப்போன
கடைந்தெடுத்த பிற்போக்குச் சக்திகள், நூற்றாண்டு
காலமாக நீடித்து வந்த ஒரு சிக்கலுக்கு உச்சநீதிமன்றம்
முற்றுப்புள்ளி வைத்திருப்பதை விரும்ப மாட்டார்கள். 

2) நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் இன்னும் கோலோச்சும்
இந்தியா போன்ற ஒரு அரைகுறை முதலாளிய சமூகத்தில்,
நிலப்பிரபுத்துவ உணர்வுகள், செயல்பாடுகளுக்கு
காலங்காலமாக உயிர் கொடுத்து வந்திருந்த அயோத்தியா
பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ள இத்தீர்ப்பு
நல்லதொரு வாய்ப்பு.

3) தீர்ப்பில் முரண்பாடுகள் இருக்கின்றன என்று
சொல்வதெல்லாம் சட்டவாதச் சாக்கடையில்
மூழ்கிக் கிடப்போரின் கூற்று. வேதியியல் ஆய்வகத்தில்
மிகத் துல்லியத்துடன் செய்யப்படும் titration experiment
போன்று ஒரு நீதிமன்றத் தீர்ப்பு இருக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பது முதலாளித்துவ நீதிமன்றங்கள்
பற்றிய பிரமையில் மூழ்கிக் கிடப்போரின் பார்வை.
தீர்ப்பு சாரமாக, சாராம்சமாக என்ன சொல்கிறது
என்பதையே பார்க்க வேண்டும்.

4) இது ஒரு தீர்ப்பு மட்டுமல்ல; ஒரு தீர்வும் ஆகும்.
(Not only a verdict but a solution).

5) காங்கிரசின் working committee கூடி இத்தீர்ப்பை
வரவேற்றுள்ளது. ராகுல்காந்தி வரவேற்றுள்ளார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
IUML தலைவர் பேரா காதர் முஹையதீன் வரவேற்று
அறிக்கை வெளியிட்டுள்ளார்.

6) இன்னும் எத்தனை காலத்துக்கு இந்து என்றும்
முஸ்லீம் என்றும் மக்களைப் பிளவுபடுத்திக்
கொண்டே இருப்போம் என்று சிந்திக்க வேண்டும்.

7) சமூகத்தின் பொதுவெளியில் ஒரு துரும்பைக்கூட
அசைக்கத் துப்பில்லாத லும்பன்களும்
சுயஇன்பவாதிகளும், நிலப்பிரபுத்துவப்
பிற்போக்குச் சக்திகளுமே இப்பிரச்சினை
முடிவுக்கு வருவதில் அதிருப்தி அடைய முடியும்.

அயோத்திப் பிரச்சினை நீடிப்பதில்
பாட்டாளி வர்க்க நலன் என்ன உள்ளது?
-------------------------------------------------------------
இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல்  பிரதிநிதிகள்
பிரதானமாக இரண்டு பேர். 1. காங்கிரஸ்  2. பாஜக.
அயோத்திப் பிரச்சினை (பாபர் மசூதி-ராமா ஜென்ம பூமி))
இனிமேலும் நீடித்துக் கொண்டே போவதை இந்திய
ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.

எனவே இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளான
காங்கிரசும் பாஜகவும் அயோத்திப் பிரச்சினையை
முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில்
ஒத்த கருத்துடன் உள்ளன. இப்பிரச்சினை நீடிப்பதால்
இனி யாருக்கும் லாபம் இல்லை என்ற உண்மையை
இந்திய ஆளும் வர்க்கமும் சரி, அவர்களின்
பிரதிநிதிகளான பாஜகவும் காங்கிரசும் ஏற்றுக்
கொண்டுள்ளன. எனவே அவை இரண்டும் ஒத்த
கருத்துடன் அயோத்திப் பிரச்சினையை உச்சநீதிமன்றத்
தீர்ப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டு வருகின்றன.

மேலே கூறிய விஷயங்கள் யாருக்குப் புரியும்?
ART OF GOVERNANCE எனப்படும் ஆளும் கலை
பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

அயோத்தித் தீர்ப்பு குறித்து வானத்துக்கும் பூமிக்கும்
குதிக்க நினைப்பவர்களால் நினைத்தபடி குதிக்க
முடியாது. Very few disgruntled elements தவிர ஒட்டு மொத்த
ஆளும் வர்க்கமும் "போதும் அயோத்தி" என்று முடிவு
செய்து விட்டன.

இதே ஆளும் வர்க்கம்தான் ஒரு காலத்தில் பாபர் மசூதி-
ராமஜென்ம பூமி விஷயத்தை ஊதிப் பெரிதாக்கியது
என்ற வரலாறு தெரிந்தவர்களுக்கு, இன்று அவர்கள்
இந்த முடிவை எடுத்திருப்பதில் ஆச்சரியம் தோன்றாது.

இதில் அதாவது இந்தப் பிரச்சினை நீடிப்பதில்,
பாட்டாளி வர்க்க நலன் என்ன உள்ளது?
ஒரு மயிரும் இல்லை என்பதே உண்மை. 

மதம் போன்ற விஷயங்களுக்கு அளவுக்கு அதிகமான
அதீதமான முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
பிற்போக்குச் சக்திகள் மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவக்
கருத்தியலில் இருந்து தங்கள் சிந்தனையை விடுவித்துக்
கொள்ள முடியாத பலவீனம் உடையவர்களே.

நியூட்டன் அறிவியல் மன்றம்

என்னைப் பொறுத்தமட்டில் கடவுள் இல்லை
என்பது நிரூபிக்கப்பட்டு முடிந்துபோன விஷயம்.
உலக நாடுகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாக எல்லா GK புத்தகங்களும்
கூறுகின்றன. போட்டித் தேர்வு (UPSC) எழுதும்
மாணவர்கள், உலகில் உள்ள நாடுகளின்
RELIGIOUS DEMOGRAPHY பற்றிப் படிக்கும்
மாணவர்கள், நாத்திகர்களின் எண்ணிக்கை
பெருகிவருவதைப் பற்றிப் படிக்கிறார்கள்.
இதை நான் நன்கறிவேன். மாணவர்கள் என்னிடம்
தெரிவிக்கிறார்கள்.

எனவே எதிர்காலத்தில் ஆபிரகாமிய மதங்களின்
பிடியில் இருந்து விடுபடும் மக்கள் அதிகரித்துக்
கொண்டே இருப்பார்கள். அடக்குமுறையால் இதை
ஒடுக்கி விட முடியாது.

எந்த மதம் நாத்திகத்துக்கு இடம் அளிக்கிறது 


கடவுளுக்கு எவ்விதமான பௌதிக இருப்பும்
(physical existence) இல்லை. God does not exist.
எனவே கடவுளின் இருப்பு என்று பேசுவது
இயற்கைக்கு முரணானது. கடவுள் இருக்கிறார்
என்பது ஒரு புறநிலை மெய்மை அல்ல.

ஆனால் மதம் இருக்கிறது. மதத்தின் இருப்பை
யாரும் மறுக்கவில்லை. மதம் மனிதர்களால்
உண்டாக்கப்படும் ஒன்று. கடவுள் இல்லை
என்ற தெளிவு அனைவருக்கும் கிட்டும்போது
மதம் அழியும்.
 

பேரண்டம் என்பது புறநிலை மெய்ம்மை.
(universe is an objective reality).
பரம்பொருள் (அல்லது பிரம்மம்) என்பது
முற்றிலும் அகநிலைக் கருத்து (subjective idea).
பரம்பொருள் மனித சிந்தனையில் மட்டும்
வாழ்கிறது. அதற்கு பௌதிக இருப்பு
இல்லாதபோது, இருக்கிறது என்ற  அனுமானம் (assumption)
வாதத்திற்குப் பயன்படுமே தவிர நிரூபணம் ஆகாது.


அரசியல்ரீதியான விமர்சனத்தை முன்வைக்க அஞ்சும்
மார்க்சிஸ்ட் கட்சி, மீண்டும் மீண்டும் சட்டவாதச்
சாக்கடையில் வீழ்கிறது. தீர்ப்பை அரசியல்ரீதியாக
மார்க்சியப்  பார்வையுடன் திறனாய்வு செய்ய இயலாத
CPMன் சித்தாந்த ஓட்டாண்டித்தனம் வெளிப்பட்டு
விடுகிறது. தீர்ப்பின் சட்டரீதியான குறைகளை
மட்டும் சொல்லி FACE SAVING செய்து கொள்கிறது CPM.
இது தீர்ப்பை மறைமுகமாக வரவேற்கும் செயல்தான்.  

எந்தத் தீர்ப்பு வந்தாலும் தோல்வியடைந்த தரப்பு
அதிருப்தியுடன் இருக்கும்.  இரு தரப்புச் சண்டையில்
இருதரப்பும் முழுமனதுடன் ஏற்கும் தீர்ப்பு என்று
ஒரு தீர்ப்பு இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இல்லை.

இது மதச் சண்டை. மதச்சண்டை இழிவானது.
இதில் தீர்ப்பின் குறைகளை விமர்சித்துக்
கொண்டிருப்பதை விட, மதம் சார்ந்த மக்களின்
செயல்பாடுகளை DISCOURAGE செய்வதுதான்
பொருள்முதல்வாதியின் கடமை ஆகும்.
மத உணர்வுகளை விசிறி விட்டுக் கொண்டு
இருப்பது பிற்போக்குத்தனம் ஆகும்.

பொருளின் வரையறையே அதுதான்.
இது பொருள்முதல்வாதத்தின் விதி.
இதை லெனின் தம்முடைய Empirio criticism என்ற
நூலில் குறிப்பிடுகிறார். இது அறிவியல் ரீதியாக
நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே இது அறிவியலின்
(இயற்பியலின்) விதியும் ஆகும்.

அறிவியலின் விதியைப் படித்த பின்பே
எனின் பொருள் என்றால் என்ன என்று ஒரு
வரையறை தருகிறார். அறிவியலின் வரையறை
இன்னும் அகலவிரிவும் ஆழமும் கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள வெளியில் (space)
இடத்தை அடைப்பதுதான் பொருளாகும்.
இங்கு புலம் (field)) என்பதும் பொருள் ஆகும்.
 


சட்டவாதம் ( legalism) தீர்வல்ல.
சட்ட ஓட்டைகளை விவாதிக்க, நான் ஒரு சிவில்
அல்லது கிரிமினல் வழக்கை விவாதித்துக்
கொண்டிருக்கவில்லை. இது தீர்ப்பு அல்ல; தீர்வு.

அரசியலை ஆணையில் வை என்கிறது மார்சியம்.
சட்டவாதத்தை ஆணையில் வை என்று
மார்க்சியம் கூறவில்லை. அரசியல்ரீதியாக
அணுக வேண்டிய ஒரு விஷயத்தை. அப்படி
அணுக இயலாமல் சட்டவாதத்திற்குள் சென்று
புகலிடம் தேடுவது அரசியலற்ற போக்கு ஆகும்.

உங்களுக்கு சட்ட ரீதியான விளக்கம் வேண்டுமெனில்
சென்னை உயர்நீதிமன்றம் சென்று வழக்குரைஞர்களிடம்
பெறலாம். இதை நீங்கள் அறிவீர்கள்.


இது அரசியல் பேசும் இடம். சட்டம் பேசும் இடம் அல்ல.
நீங்கள் சிறந்த வழக்கறிஞரை நாடுங்கள்.
பொருள்முதல்வாத நோக்கில் இந்தத் தீர்ப்பை
அணுகுவது எப்படி என்பது பற்றி மட்டுமே
நான் பேசுகிறேன்.


மத உணர்வுகளை விசிறி விடுவது கருத்துமுதல்வாதம்.
மத உணர்வுகளை அதிகபட்ச அளவுக்கு
discourage செய்வது பொருள்முதல்வாதம்.
மதத்திற்கு எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கக் கூடாது தோழரே.

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து
சீராய்வு (revision) மனுவோ
curative மனுவோ தாக்கல் செய்யப் போவதில்லை.
சன்னி வக்ப் வாரியத்தலைவர் சுபர் பரூக்கி பேச்சு!

இந்திய மக்கள் முன்னணி


ஆக முடியும். ஏனெனில் பொருள் என்பது இருப்பைக்
கொண்டுள்ளது. quantum uncertainty is about the location of the
matter. It does not say that matter is nonexistent (quantum uncertainty
does not say that matter does not occupy space)


kalam enpathu porul alla.

காலம் என்பது பொருள் அல்ல.

அப்படி இல்லை. காலம் என்பது ஒரு entity.
It is very much in existence. காலம் என்பது
வெளியுடன் (space) பின்னிப் பிணைந்து உள்ளது.

வெளி என்பது பருப்பொருள் அல்ல (not matter)
அது போலவே காலம் என்பதும் ப்ருப் பொருள் அல்ல.
வெளி- காலத்தில்தான் பொருட்கள் இருக்கின்றன.
நிகழ்வுகள் நடக்கின்றன.space-time continuum என்கிறார்
ஐன்ஸ்டின். அதாவது வெளி-காலத்தில் எந்த ஒரு
புள்ளியை எடுத்துக் கொண்டாலும் அங்கு வெளி-காலம்
இருக்கும். பிரபஞ்சம் முழுவதும் இப்படியே.
வெளி-காலம் அல்லாத எந்த இடமும் பிரபஞ்சத்தில்
கிடையாது.

நிறையுள்ள பொருள் தான் இருக்கும் இடத்தில் வெளியை
வளைத்து விடுகிறது. இதெல்லாம் ஐன்ஸ்டின்
கூறிய சார்பியலில் உள்ளது.


 எதிர்ப்பொருளும் (antimatter) கரும்பொருளும்
(dark matter) கரும் ஆற்றலும் (dark energy)
வெளி-காலத்தில்தான் இருக்கின்றன.
எனவே வெளி-காலத்தை பருப்பொருள் (matter)
என்று கூற இயலாது. வெளி-காலம் என்பது
இருப்பைக் கொண்டிருக்கும் அனைத்தையும்
தன்னுள் கொண்டது. Whatever that exists does exist in spacetime. 

வெளி-காலம் இருப்பைக் கொண்டிருப்பது.
அது பருப் பொருள் அல்ல. பருப்பொருளுக்கு
நிறை உள்ளிட்ட நிறையப் பண்புகள் உண்டு.
வெளி-காலம் என்பது பொருளின் பண்புகளைக்
கொண்டதல்ல. வெளி-காலத்திற்கு இருப்பு உண்டு.
ஒரு கொள்கலன் (container) போல் அதனைக் கருதுக.
இது நான் கூறும் ஒரு உவமை மட்டுமே.

வெளி-காலத்தில்தான்.
எந்த ஒன்றின் இருப்பும் வெளி-காலத்தில்தான்.
கடவுள் இருப்பாரேயானால் அவரும்
வெளி-காலத்தில்தான் இருக்க வேண்டும்.
வெளி-காலத்தைத் தாண்டிய இருப்பு எந்த
ஒன்றுக்கும் கிடையாது. வெளி-காலம் தாண்டி
எதுவுமே கிடையாது.

வெளி-காலம் எங்கு
இருக்கிறது? வெளி-காலத்தில்தான்.
அது வேறு ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும்
என்று கருதுவது எப்படிச் சரி ஆகும்?

நிற்க; இயற்பியலில் குறை ஒன்றும் இல்லை.
குறை ஏதேனும் இருக்கும் என்றால்,
அது புரியும் விதத்தில் சொல்வதில் நான்
போதாமை உடையவனாக இருக்கிறேன் போலும்!

மற்றப்படி நீங்கள்கேட்ட கேள்விகள் அனைத்தும்
அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்லி இருக்கிறேன்.
I dont have any uncertainty.

சரி, நன்றி.  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக