சனி, 16 நவம்பர், 2019

YUVA YUVARAJ
--------------------------
நான் மிலிண்ட் அவரோட 1.5 வருடம் பணியாற்றி இருக்கிறேன். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் நிர்வாகத்தால் அங்கிகரிக்கப்படுவதற்க்கு முன்னமே மிலிண்ட் ஆலோசகராக இருந்தார். பிறகு அந்த பெரிய பிரச்சனைக்கு பிறகு அங்கீகாரத்திற்காக ஒரு பேராசிரியரை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது APSC அவரை அனுகியது. (இங்கு வேறு யாரும் முன்வரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்). பிறகுதான் நிர்வாகம் அவரை அலோசகராக அங்கீகரித்தது. அதன் பிறகும் பல கூடங்களுக்கு அனுமதி வாங்கவும், பேச்சாளர்கள் தேர்வு செய்யவும் பல வகையான தடங்கல்களை நிர்வாகம் செய்தது




பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர்களின்
சோகம் நியாயமானது; அது தாங்க முடியாதது.
அந்தத் தகப்பனின் துயரத்தில் நாமும் ஒரு
தகப்பனாகப் பங்கேற்போம்; அவருக்கு ஆறுதல்
கூறுவோம்.

பெற்றோர்களின் சோகத்தை அங்கீகரிக்கும் அதே நேரத்தில்
அவர்களின் புகார்களை அப்படி ஏற்க முடியாது.
அவர்களின் புகாரில் தர்க்கம் இருக்காது. உணர்ச்சி
வயப்பட்ட நிலையில், இந்த ஒட்டு மொத்த உலகமே
தங்களுக்கு எதிராகச் சதி செய்கிறது என்னும்
எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவது இயல்பே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக