திங்கள், 4 நவம்பர், 2019

ச் வராது; வரக் கூடாது.
ஆத்தி என்பது பூ. சோழ மன்னர்களின்
அடையாளப் பூ.

(இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே........ புறம்)

மல்லிகை சூடி என்றுதான் எழுத வேண்டும்.
மல்லிகைச் சூடி என்று எழுதக் கூடாது.
முல்லை சூடி என்பதே சரி. முல்லைச்சூடி என்பது பிழை.
அது போலவே ஆத்தி சூடி என்பதே சரி.
ஆத்திச்சூடி என்பது பிழை.

ஆத்தி சூடி என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை.
ஆத்தியைச் சூடி என்று விரியும்.
இரண்டாம் வேற்றுமைத் தொகையான "ஆத்திசூடி" 
என்பதில் வல்லினம் மிகாது.
இரண்டாம் வேற்றுமை விரியில்தான் வல்லினம் மிகும். 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக