செவ்வாய், 19 நவம்பர், 2019

science in ancient india
=====================
“வெள்ளைக்காரனுக்கு கணித (mathematics), வான சாஸ்திர (astronomy) அறிவு பொதுயுகம் பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும் இல்லை என்பது தவறு. கிரேக்கர்கள் ஐரோப்பியர்கள்தானே? அவர்களுக்கு கணித அறிவும், வான சாஸ்திர அறிவும் இல்லையா என்ன? எனவே நீ சொல்வது தவறு!” என்கிற விவாதத்திற்கு புரெஃபஸர் K.C. Raju போன்ற மேதைகள் ஏற்கனவே அற்புதமான விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஆர்வமிருப்பவர்கள் புரெஃபஸர் கே.சி. ராஜுவின் யூ-ட்யூப் வீடியோக்களைப் பாருங்கள் என சிபாரிசு செய்கிறேன். அவரைப் போன்றவர்கள் இந்தியாவில் இருப்பதே பெரும்பாலான இந்தியர்கள் அறியவில்லை என்பதே கேவலம்தான்.
ரோமானியர்களின், கிரேக்கர்களின் கணித அறிவும், வான சாஸ்திர அறிவும் இந்தியாவிலிருந்து பெறப்பட்டது. கிரேக்கம் பழங்காலந்தொட்டே இந்தியாவுடன், குறிப்பாக தமிழகத்துடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்ததொரு தேசம். சேர நாட்டின் தொண்டி, முசிறி துறைமுகங்கள் வழியாக மிளகும், வாசனைத் திரவியங்களும், மயிலிறகும் வாங்கிக் கொண்டு போன வரலாற்றை அவர்களே எழுதி வைத்திருக்கிறார்கள். தங்கத்தைப் பண்டமாற்றாகக் கொடுத்து அந்தப் பொருட்களை வாங்கி போனார்கள். இந்தியாவுடனான வாணிபத் தொடர்பு காரணமாக கிரேக்க, ரோமானிய நாடுகளின் ஏராளமான தங்கம் இந்தியாவிற்குப் போவதாக அவர்களே புலம்பி எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.
அதற்கும் மேலாக கிரேக்க, ரோமானியர்கள் பாண்டிய நாட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நாடு. இன்றைக்கும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் கிரேக்க, ரோமானிய நாணயங்கள் கிடைப்பதைக் காணலாம் (இன்றைய கோயம்புத்தூர் பழங்கால சேர நாட்டைச் சேர்ந்தது). பாண்டிய மன்னர்களின் தூதர்கள் ஜூலியஸ் சீசர் ஆண்ட காலங்களில் கிரேக்கத்திற்கும், ரோமனுக்கும் சென்ற வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அகஸ்டஸ் சீஸர் இந்தியாவில் ஒரு கிரேக்க ஆலயம் அமைத்த குறிப்பும் உண்டு. நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையே அந்தக் கோவில் இருந்ததாகவும், காலப் போக்கில் அது மறைந்துவிட்டதாகவும் தெரிகிறது.
அதே கிரேக்கர்கள், ரோமானியர்கள் பாண்டியர்களின் அரண்மனைக் காவலர்களாக பணிபுரிந்தார்கள். தமிழர்கள் அவர்களை “யவனர்” என அழைத்தார்கள். சோழநாடின் தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்தில் அவர்கள் வசிக்க ஊருக்கு வெளியே ஒரு பெரிய சேரிப்பகுதி இருந்ததது. அவர்கள் கொண்டு வந்த திராட்சை மதுவை தமிழர்கள் ஆர்வமுடன் குடித்தார்கள். “யவனர் அளித்த நறுந்தேறலைக்” குறித்து அவ்வை பாடியது நமக்கு நினைவில்லை (தேறல் = மது). தாலமி, பிளினி (Philiny the elder) போன்றவர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்து எழுதிய குறிப்புகள் இன்றைக்கும் இணையத்தில் கிடைக்கிறது.
எதற்கு இவ்வளவு பீடிகையென்றால், கிரேக்கர்களின், ரோமானியர்களின் தத்துவ, கணித, வான சாஸ்திர அறிவு இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்று நிரூபிக்கத்தான். இங்கிருந்து கற்றதைத்தான் கிரேக்கர்கள் தங்களுடைய பாணியில் எழுதி வைத்தார்கள். எனினும், கணிதத்தை அவர்கள் முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பியர்கள் 16-ஆம் நூற்றாண்டு வரைக்கும், அதாகப்பட்டது வாஸ்கோ-ட-காமா போன்றாவர்கள் இந்தியாவிற்கு வருவது வரைக்கும் ரோமானிய எண்களைத்தான் பயன்படுத்தினார்கள்.
ரோமானிய எண் – I, II, III, IV, V, VI, VII, VIII, IX, X……..
ஆனால் ரோமானிய எண்களைக் கொண்டு வகுப்பது கடினம். பின்னம் (fraction) போன்றவற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை. உதாரணமாக, 55/19 = 2.894736…. என்பதை ரோமானிய எண்ணில் எப்படி எழுத முடியும்? அப்படி எழுதியதைப் பார்த்தவர்கள் எவரேனும் உண்டா? அனேகமாக இல்லை. எனவே அவர்கள் கண்டறிந்த(!) கணித சூத்திரங்கள் பெரும்பாலும் தவறாகவே இருந்தன. இதன் காரணமாக சரியானதொரு நாட்காட்டியை 16-ஆம் நூற்றாண்டுவரைக்கும் ஐரோப்பியர்கள் கண்டறிய இயலவில்லை. அதாகப்பட்டது கொச்சி வழியாக கிறிஸ்தவ பாதிரிகளால் இந்தியாவிலுருந்து திருடப்பட்டு ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகளின் மூலமாகப் பெறப்பட்ட அறிவு அது. சமஸ்கிருதத்திலிருந்த அந்த ஓலைச் சுவடிகளை அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல பிராமணர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக அதே கிறிஸ்தவ பாதிரி குறிப்பு எழுதி வைத்திருக்கிறான்.
இந்தியர்கள் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்று ஐரோப்பிய கைக்கூலிகளான இந்தியக் கிறிஸ்தவ வேசி மகன்கள் சொல்வதற்கான பின்னனிக் காரணம் இது. இந்தியன் சமஸ்கிருதம் கற்றால் ஐரோப்பியனின் சாயம் வெளுத்துவிடும். அவனது அறிவியல், கணித கண்டுபிடிப்புகளின் அடிப்படை இந்தியர்களுடையது என்கிற உண்மை வெளிவந்துவிடும். எனவே அவன் சமஸ்கிருதம் படிப்பதை எப்பாடுபட்டேனும் தடுக்க இந்திய கிறிஸ்தவ வேசிமகன் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறான்.
பிரிட்டிஷ் பல்கலைக் கழகங்களில் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் சமஸ்கிருதமும் சொல்லித்தரப்பட்டது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பதில்லை. “சும்மாவாச்சும்” சமஸ்கிருதம் படிக்க வெள்ளைக்காரன் கிறுக்கன் ஒன்றுமில்லை. இந்தியாவிலிருந்து கப்பல், கப்பலாக எடுத்துச் செல்லப்பட்ட இந்திய நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ள அவர்களுக்கு அவசியம் இருந்ததால் அங்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டது என்பதினை நீங்கள் உணரவேண்டும்.
இன்றைக்கும் ஜெர்மனியர்களும், டச்சுக்காரர்களும் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கிறார்கள். காரணம், அவர்கள் இந்தியாவிலிருந்து அள்ளிச் சென்ற பல சமஸ்கிருதப் புத்தகங்கள் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான். இல்லாவிட்டால் ஐரோப்பியாவில் வெள்ளைக்காரன் ஆர்வத்தோடு சமஸ்கிருதம் படிக்கக் காரணம் எதுவுமே இல்லை.
ஏற்கனவே சொன்னபடி நியூட்டனும், கலிலியோவும் இன்னபிற ஐரோப்பிய “அறிவியல் மேதைகளும்” இந்தியக் கண்டுபிடிப்புகளைத் தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொண்டார்கள் என்கிற உண்மை இன்றைக்கு மெல்ல,மெல்ல வெளியே வருகிறது. அது வெளியே வராமல் தடுக்க வெள்ளைக்காரர்கள் அத்தனை முயற்சிகளையும் இன்றைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கே.சி. ராஜூ போன்றவர்கள் வைக்கும் அசைக்கமுடியாத ஆதாரங்களின் காரணமாக “நியூட்டனின் தியரி” திருடப்பட்டது என்கிற உண்மை வெளியே வந்திருக்கிறது. இது வைக்கோல் போரில் இருக்கிற ஒரே ஒரு வைக்கோல்தான். இதற்கும் மேலாக இந்தியர்கள் தொடர்ந்து தோண்டி ஐரோப்பியப் பொய்களை கட்டவிழ்க்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்தியர்கள் தங்களின் வரலாற்றை உணர்ந்து கொள்வதும், சமஸ்கிருதம் படிப்பதும் மட்டும்தான்.
இன்றைக்கு ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9 போன்ற எண்களும் இந்திய எண்களை அடிப்படையாகக் கொண்டவை. அதாகப்பட்டது அரபி எண்களின் மாற்றப்பட்ட வடிவம் (அரபி எண்கள் :٠‎ - ١‎ - ٢‎ - ٣‎ -٤‎ - ٥‎ - ٦‎ - ٧‎ - ٨‎ - ٩ ). அரபி எண்களுக்கு அடிப்படை இந்திய தேவநாகரி எண்கள் (தேவநாகரி: ०.१.२.३.४.५.६.७.८.९). ஐரோப்பியர்கள் பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் ரோமானிய எண்களை மட்டுமே எழுதியவர்கள் என்பதினை நாம் நினைவில் கொள்ளவேண்டும். முன்பே சொன்னபடி ரோமானிய எண்களைக் கொண்டு கணித சூத்திரங்கள், நாட்காட்டிகள் எழுதுவது கடினம்.
இந்தியாவிலிருந்து கணிதம் பயின்ற, சைஃபரின் (0) உபயோகம் குறித்து அறிந்த அரேபியர்கள் அதனை மேலும் விரிவுபடுத்தினார்கள். பல இந்திய கணித நூல்களை மொழிபெயர்த்து எழுதிவைத்தார்கள். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட பல நூல்களை தாங்கள் ஆண்ட ஸ்பெயின் நாட்டின் டொலிடோ நகர நூலகத்தில் சேகரித்து வைத்திருந்தார்கள். ஸ்பெயினிலிருந்து அரேபியர்களை விரட்டியடித்துவிட்டு டொலிடோ நகரைக் கைப்பற்றிய ஐரோப்பியர்கள் அங்கிருந்தே தங்களின் கணித, அறிவியல் அறிவைப் பெருக்கிக் கொண்டார்கள்.
வரலாற்றைப் படியுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக