மீத்தேன் ஆய்வுத் திட்டம் ரத்து!
ஷேல் வாயு தமிழ்நாட்டில் கிடையாது!
அன்றே சொன்னது நியூட்டன் அறிவியல் மன்றம்!
இன்று ஓ என் ஜி சி நிறுவனமும் அதையே கூறுகிறது!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
காவிரிப் படுகையில் நடைபெற்று வந்த மீத்தேன் ஆய்வுத்
திட்டத்தை (ஷேல் வாயு ஆய்வுத் திட்டம்) கைவிடுவதாக
ஓ என் ஜி சி நிறுவனம் நேற்று (25.11.2009) அறிவித்துள்ளது.
இன்னும் ஓராண்டு காலம் ஆய்வு செய்வதற்கு அனுமதி
இருந்த போதிலும், காவிரிப் படுகையில் நடைபெற்று
வந்த ஷேல் வாயு (shale gas) இருப்பைக் கண்டறியும்
ஆய்வுத் திட்டத்தை, நிர்ணயித்த காலம் முடிவதற்கு
முன்பாகவே கைவிடுவதாக ONGC அறிவித்துள்ளது.
ONGCயின் இந்த அறிவிப்பானது நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தத் திட்டம்
ஆரம்பமான நிலையிலேயே, தமிழ்நாட்டில் எங்குமே
ஷேல் வாயு கிடையாது என்பதால் இத்திட்டத்தைக்
கைவிட வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
கூறி இருந்தது. இது குறித்து நடைபெற்ற இரண்டு
செய்தியாளர் சந்திப்புகளில் நியூட்டன் அறிவியல் மன்றம்
பங்கெடுத்து, ஷேல் வாயு தமிழ்நாட்டில் இல்லவே இல்லை
என்று அடித்துக் கூறி இருந்தது. அன்றே நாங்கள் கூறிய
உண்மையை ONGC இன்று ஏற்றுக் கொண்டுள்ளது.
ஷேல் வாயு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமல்,
அதை எடுக்கும் முறை பற்றி எந்த அறிவும் இல்லாமல்,
"ADSORPTION" என்றால் என்ன என்று தெரியாமல்
இருக்கும் எவராலும் இக்கட்டுரையைப் புரிந்து
கொள்ள இயலாது. முந்திய வரியில் ADSORPTION
என்று எழுதி உள்ளேன். நன்கு கவனிக்கவும்: அந்த
வார்த்தையில் உள்ள D என்ற எழுத்தை. இது
ABSORPTION அல்ல.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற
குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில்
(Children Science Congress 2019) குழந்தைகளின் performanceஐ
மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கும் ஒரு
மதிப்பீட்டாளராக நான் பங்கேற்றேன்.
அப்போது 11 வம் வகுப்பு மாணவி ஒருத்தி adsorption
phenomenonஐக் கொண்டு ஒரு திட்டத்தை வடிவமைத்து
அதை சமர்ப்பித்தார். அந்த மாணவி மதிப்பீட்டாளர்கள்
அனைவரையும் கவர்ந்தார். நாங்கள் அனைவருமே
அந்த மாணவிக்கு அதிக பட்ச மதிப்பெண்களை
வழங்கினோம். Chemistryயில் டிகிரி வாங்கிய பலருக்கே
adsorption என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கும்
நிலையில், பதினோராம் வகுப்பு மாணவி ஒருத்தி
adsorption பற்றித் தெளிவான அறிவுடன் இருந்தது
எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
Adsorption என்பது ஒரு surface phenomenon. இது chemistry
பாடத்தில் வருவது. அதே போல் SHALE GAS என்பது
வேறு எதுவுமல்ல; அதுவும் மீத்தேன்தான். மீத்தேன்
வாயுவுக்கு அது கிடைக்கும் இடத்தைப் பொறுத்து
பல்வேறு பெயர்கள் சூட்டப் படுகின்றன.
மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு இயக்கத்தில்,
சுட்டுப் போட்டாலும் சயன்ஸ் வராத ஆர்ட்ஸ் க்ரூப்
ஆசாமிகள் உட்கார்ந்து கூத்தடித்துக் கொண்டு
இருக்கிறார்கள். இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம்.
இங்கு இப்படி நடப்பதில் வியப்பில்லை.
**************************************************
பின்குறிப்பு: ADSORPTION என்றால் என்ன?
வாசகர்கள் இக்கேள்விக்கு விடையளிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------
Adhere to, adhesive ஆகிய சொற்களின் பிறப்பு
போன்றதே adsorption என்ற சொல்லின் பிறப்பும்.
ஒரு பொருளின் அணுக்களோ அயான்களோ
மூலக்கூறுகளோ இன்னொரு பொருளின் surfaceல்
ஒட்டிக் கொள்ளுதல் adsorption எனப்படும்.
எனினும் adsorption நிகழ்ந்து அதாவது ஒட்டிக் கொண்ட
பின்னால், அதை பிரித்தெடுப்பதும் கடினமே.
உதாரணமாக மீத்தேன் என்னும் வாயு, பாறையாகிய
solidல் ஒட்டிக் கொண்ட பின்னால், ஒட்டிக்கொண்ட
வாயுவின் movement கிட்டத்தட்ட முற்றிலுமாக
நின்று விடுகிறது. அதாவது entropy அறவே குறைந்து
விடுகிறது. entropy குறைந்து விட்டதால், spontaneous
process என்பதற்கு இடமில்லை.
எனவே external agent மூலமாகத்தான் movement
ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தித்தான்
ஒட்டிக் கொண்டுள்ள பொருளை surfaceல் இருந்து
பிரித்தெடுக்க முடியும். இப்படிப் பிரித்தெடுப்பது
ஒரு violent processதான்.
ஷேல் வாயு பிரித்தெடுப்பதில், ஒரு கரைசலை
(சில ரசாயனங்கள் கலந்த தண்ணீராலான கரைசல்)
அதிக வேகத்துடன், அதிக impact ஏற்படுத்தும்
விதத்தில் பீய்ச்சி அடித்தால்தான், surface ல் ஒட்டிக்
கொண்டிருக்கும் வாயு நகரும். இதுதான் ஷேல் வாயு
எடுக்கும் முறை.
:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக