சனி, 2 நவம்பர், 2019

க்+ஐ = கை
ப்+ஐ = பை
ம்+ஐ = மை
இப்படித்தான் எழுத வேண்டும்; எழுதுகிறோம்.

ஐ என்ற உயிரெழுத்தை நீக்கி விட்டு அய் என்று எடுத்துக்
கொண்டால்,
க்+அய் = கய்
ப் + அய் = பய்
ம்+அய் = மய்
என்றல்லவா வரும்?

இப்படி எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்?
தலை = தலய்
விலை = விலய்
சிலை = சிலய்
என்று எழுத நேரிடும். இது எவ்வளவு பெரிய மடமை!

சுமை என்பதை சுமய் என்றும்
பகை என்பதை பகய் என்றும்
தரை என்பதை தரய் என்றும்
எழுத நேரிடும்.

படை = படய்
பாடை = பாடய்
குடை = குடய்
என்றெல்லாம் முட்டாள்தனம் நீளும்; விரியும்.

கலைஞர் என்பதை  கலய்ஞர் என்று எழுத வேண்டும்.
விடுதலை என்பதை விடுதலய் என்று எழுத வேண்டும்.

இப்படி எழுதக் கூடாது என்று ஆயிரம் முறை
கண்டித்த பிறகும் தமிழின் எதிரிகள் இப்படி
எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். 
----------------------------------------------------

கமலஹாசன் மய்யம் என்று எழுதுகிறார்.
இது தவறு என்று அவருக்கு உணர்த்துவது எப்படி?   நேரும்.
அது யாரால் முடியும்?

அய்யன் திருவள்ளுவர் என்று அசிங்கப் படுத்தக் கூடாது.
திருவள்ளுவர் என்று சொன்னாலே    

ஆம்; மய்யம் என்பது தவறு. மையம் என்றுதான்
எழுத வேண்டும்.
----------------------------------------------------
அய்ந்து (தவறு)... ஐந்து (சரி)
அய்வர் (தவறு) .... ஐவர் (சரி)
அய்ங்கரன் (தவறு) ....  ஐங்கரன் (சரி)
அய்ப்பசி (தவறு) ....ஐப்பசி (சரி)
அய்யர் (தவறு) ....ஐயர் (சரி).


இப்படி எழுதும் அனைவருமே அறியாமை காரணமாக
அப்படி எழுதுகிறார்கள். இந்தப் பெரும் அறியாமையை
ஒரு தீவிர இயக்கமாகவே நடத்தின திக, திமுக
கட்சிகள்.  அதற்கு இரையானவர்தான் கமல்ஹாசன்.

அவர் பள்ளி கல்லூரிகளில் முறையாகப் படித்திருந்தால்
இப்படி எழுதுவது தவறு என்று அவருக்குத் தெரிந்திருக்கும்.
கருணாநிதியின் குற்றமும் அதுதான். அவரும் முறையான
பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு படித்திருந்தால்,
தன்னுடைய குருநாதர் ஐ என்பதை அய் என்று
மாற்றியது தவறு என்று அவர் உணர்ந்திருப்பார்.

அடுத்து கமலஹாசன் புழுவினும் இழிந்தவர் அல்லர்.
அவரை அப்படிக் கூறக் கூடாது.
யார் புழுவினும் இழிந்தோர் என்று முடிவு செய்வது
என்னுடைய domainக்குள் மட்டும் வரும். It is my prerogative. 


"ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி"
என்கிறார் ஆண்டாள் (திருப்பாவை).
பிச்சை என்பது வந்து கேட்பவர்க்குச் செய்யும்
ஈகை. ஐயம் என்பது யாரும் வந்து கேட்காமலேயே
நாமே உணர்ந்து, தேடிச்சென்று செய்யும் ஈகை.
வீட்டு வாசலுக்கு வந்து ஒருவன் கேட்டால் அது பிச்சை.
கோவிலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை
நாமே தேடிச் சென்று ஈகை செய்தால், அது
ஐயம் இடுதல் ஆகும்.  

ஐயம் என்பது சந்தேகம் என்றும் பொருள் தரும்.
"ஐயம் திரிபற" என்ற தொடரை நாம் அறிவோம்.
Beyond any reasonable doubt என்ற தொடரை
ஐயம் திரிபற என்று தமிழில் சொல்லி வருகிறோம்.

 
 

   
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக