மோடி ஆதரவாளர்களுக்கு மறுப்பு!
மருத்துவ அட்மிஷனில், 26 மாநிலங்களில் இருந்து
பெறப்படும் இடங்களில் OBCக்கு இடஒதுக்கீடு இல்லை!
இது உண்மை! இதைப் புரளி என்று சொல்லும்
மோடி ஆதரவாளர்களே, திருந்துங்கள்!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மூன்று
மாநிலங்கள் தவிர மீதியுள்ள 26 மாநிலங்களும்
மருத்துவப் படிப்புக்கான இடங்களை மத்தியத் தொகுப்புக்கு
வழங்குகின்றன.
2) மேற்கூறிய 26 மாநிலங்களும் வழங்கும் அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் (All India Quota) இதர பிற்பட்ட
வகுப்பினருக்கு (OBC), அவர்களுக்குரிய 27 சத இட ஒதுக்கீடு
கிடையாது; வழங்கப் படுவதில்லை.
3) ஆனால் SC, ST பிரிவினருக்கு உரிய 15 சதம் மற்றும்
7.5 சதம் அட்டியின்றி வழங்கப் படுகிறது. இதில் நமக்கு
ஆட்சேபணை இல்லை. இதை வரவேற்கிறோம்.
4) ஆனால் OBCக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை மறுக்கும் இந்த
ஓர வஞ்சனை 2007 முதல் டாக்டர் மன்மோகன்சிங் ஆடசிக்
காலம் தொட்டே இருந்து வருகிறது.
5) இந்த உண்மையைச் சுட்டிக் காட்டி, " மருத்துவப் படிப்பில்
இட ஒதுக்கீட்டுக்குக் கொள்ளி வைத்தது யார்?" என்ற
தலைப்பில் ஒரு கட்டுரையை முகநூலில் வெளியிட்டு
இருந்தேன். மன்மோகன் சிங்கின் ஒரவஞ்சனையை
அதில் அம்பலப் படுத்தி இருந்தேன்.
6) அக்கட்டுரையைப் படித்த மோடி ஆதரவாளர்கள் சிலர்
நான் புரளி கிளப்புவதாகவும் பொய்ப்பிரச்சாரம்
செய்வதாகவும் கூறித் திரிந்தனர். அவர்கள் கூறுவது
முற்றிலும் தவறு.
7) 26 மாநிலங்களில் இருந்து மத்தியத் தொகுப்புக்குச்
செல்லும் இடங்களில் OBCக்கு இட ஒதுக்கீடு இல்லை!
இல்லை!! இல்லை!!! 2007 முதலே இல்லை!!!
இதை நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.
8) குட்டி முதலாளியர்களைப் போல, சுயஇன்பப்
பதிவுகளை முகநூலில் நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதுவது இல்லை. நிரூபிக்கப்பட்ட தேற்றங்களை
மட்டுமே நியூட்டன் அறிவியல் எழுதுகிறது.
9) நியூட்டன் அறிவியல் மன்றம் எதை எழுதினாலும்,
அது நிரூபிக்கப்பட்ட தேற்றத்திற்குச் சமமானது.
10) கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ அட்மிஷனை
நியூட்டன் அறிவியல் மன்றம் தொடர்ந்து பின்பற்றியும்
கண்காணித்தும் வருகிறது. நீட் அறிமுகப் படுத்தப்
பட்ட காலத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
இலவசமாக ஆலோசனைகளை நியூட்டன் அறிவியல்
மன்றம் வழங்கியது. இது இந்த நாட்டின் வரலாறு.
11) நான் இலவசமாக வழங்கிய ஆலோசனைகளை
NEET Consultant என்று போர்டு மாட்டிக் கொண்டு
வழங்கியவர்கள் லட்சக் கணக்கில் சம்பாதித்தார்கள்.
12) மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு
இடஒதுக்கீடு இல்லை என்பதை மூன்றாண்டுகளுக்கு
முன்பே, இதே முகநூலில் எழுதி இருக்கிறேன்.
2008ல் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி
இருக்கிறேன்.
13) என்னுடைய நண்பர் டாக்டர் ரவீந்திரநாத் அவர்கள்
மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு
இடஒதுக்கீடு கோரி சில ஆண்டுகளுக்கு முன்பே,
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர்
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர்.
14) ஜே பி நட்டா அவர்கள் மத்திய சுகாதார அமைச்சராக
இருந்தபோது, டில்லி சென்று அவரை நேரில் சந்தித்து
OBC இடஒதுக்கீடு வேண்டுமென்று வலியுறுத்தியவர் அவர்.
15) இவ்வளவு உண்மைகளையும் மறுத்து விட்டு,
மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு இட ஒதுக்கீடு
இருக்கிறது என்று பச்சைப் பொய்யைக் கூறும்
மோடி அன்பர்கள் திருந்த வேண்டும். அரங்கின்றி
வட்டாட வேண்டாம்.
16) மாநிலங்கள் வழங்கும் இடங்களில் OBCக்கு உரிய
27 சதம் இடங்களைப் பெற நியூட்டன் அறிவியல் மன்றமும்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கமும்
போராடும். நாங்கள் வெற்றி பெறுவோம்! 27 சதம்
OBC இடஒதுக்கீட்டைப் பெறாமல் ஓய மாட்டோம்!
**********************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக