திங்கள், 28 செப்டம்பர், 2020

 மொபைல் பயன்படுத்தும் அனைவரும்

நன்றி செலுத்த வேண்டியது யாருக்கு?
வயர்லெஸ்சின் தந்தையான ஜே.சி.போசுக்கே!
---------------------------------------------------------------------------------------
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-4)
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர்: சார், குற்றவாளி Xஐக் கைது செய்து
விட்டேன்; ஓவர்.
கமிஷனர்: அப்படியா, எங்கே, எப்போது; ஓவர்.
இன்ஸ்பெக்டர்: சற்று முன்பு; பம்பாய் VTயில்; ஓவர்.
கமிஷனர்: உடனே அவனை K-12க்குக் கொண்டு வாங்க; ஓவர்.
நிஜ வாழ்க்கையிலோ அல்லது திரைப்படத்திலோ
இதுபோன்ற உரையாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும்.
இது என்ன ஓவர்? ராமபக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவது
போல, வயர்லெஸ் பக்தர்கள் ஓவர் என்று அடிக்கொருதரம்
சொல்ல வேண்டுமா? இது என்ன நேர்த்திக் கடனா?
ஆரம்பகால வயர்லஸ் உரையாடல் இது. (இது இன்னமும்
உலகின் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது)
இந்த வயர்லஸ் ஒருவழிச் சேவை (one way working) ஆகும்.
அதாவது, ஒரே நேரத்தில் இருவரும் பேச முடியாது.
அப்படிப் பேசினால், குரல் கேட்காது; இரைச்சல்தான்
கேட்கும் (noise instead of voice). எனவே உரையாடலில்
தனது ஸ்பெல் முடிந்து விட்டது என்பதை உணர்த்தும்
பொருட்டு, ஒவ்வொரு ஸ்பெல் முடிவின்போதும் ஓவர்
என்று சொல்லியாக வேண்டும்.
மொபைல் சேவை ஒரு வயர்லெஸ் சேவை. என்றாலும்
அதற்கு முன்பே வேறு வடிவில் வயர்லெஸ் சேவை
உலகெங்கும் இருந்தது. முதன் முதலில் வயர்லெஸ்
செய்திப் பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்கியவர் இந்திய
விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்தான். ஆனால் அதற்குரிய
காப்புரிமைக்கு அவர் உரிமை கோராமல் இருந்ததால்,
இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி அந்தப் பெருமையைத்
தட்டிச் சென்றார். நோபல் பரிசும் பெற்றார்.
முதன்முதலில் இருந்த வயர்லஸ் சேவை கார்கள்,
காவல்துறை மற்றும் ராணுவ வாகனங்களில் இருந்தது.
டிரான்ஸ்மீட்டர், ரிசீவர் இரண்டும் வாகனத்தின் தலையில்
பொருத்தப் பட்டு இருக்கும். செல் தொழில்நுட்பத்துக்கு
முந்திய வயர்லஸ் சேவை இது. இது பூஜ்யம் தலைமுறை
(Zero Generation) அதாவது 0G எனப்படுகிறது.
மொபைல் வயர்லெஸ்சின் முதல் தலைமுறை,
செல் தொழில்நுட்பத்தைக் கொண்டது (Cellular technology).
சேவை வழங்கப்படும் ஏரியாக்கள் சிறு சிறு
சிற்றறைகளாகப் பிரிக்கப் படுவதால் செல் என்ற பெயர்
வந்தது. இந்த 1G, அனலாக் (analog) முறையில் ஆனது.
அதாவது, இம்முறையில் பேசப்படும் சொற்கள்
எவ்வித ரகசியக் குறியீடுகளாகவும் மாற்றப் படாது.
(No encoding and hence no decoding).
2G முதற்கொண்டு தொடர்ந்த எல்லாத் தலைமுறைகளும்
டிஜிட்டல் முறையிலானவை. இம்முறையில், பேசப்படும்
சொற்கள் பைனரி குறியீடுகளாக (Binary code) மாற்றப்படும்.
உதாரணமாக, "12" என்பது அனலாக் முறையில் 12 என்றே
டிரான்ஸ்மிட் செய்யப்படும். டிஜிட்டலில் 12 என்பது
பைனரியாக மாற்றப்பட்டு 1100 என்று டிரான்ஸ்மிட்
செய்யப்படும். தற்காலத்தில், கீழ் வகுப்புகளிலேயே
பைனரி கற்றுக் கொடுக்கப் படுவதால், இன்றைய
தலைமுறை இது குறித்து நன்கு அறிந்திருப்பர்.
வணிக ரீதியிலான 1G சேவை முதன் முதலில் 1981இல்
சவூதி அரேபியாவில் தொடங்கியது. 1980இன் பத்தாண்டுகள்
முழுவதும் 1G செயல்பட்ட காலம். தரநிர்ணயப்படி, 1G
என்பது NMT -450 (Nordic Mobile Telephony) என்று அழைக்கப்
பட்டது. (நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து,
டென்மார்க் ஆகியவையே நார்டிக் நாடுகள். இங்குதான்
1G உருவாக்கப் பட்டது. எனவேதான் NMT என்ற பெயர்).
1G அளித்த வேகம் (speed provision) 2.4 kbps மட்டுமே.
1990இன் பத்தாண்டுகள் 2Gயின் காலம். 1990-91இல் 2G
சேவை தொடங்கியது. இது அளித்த வேகம் 64 kbps வரை.
2Gயின் பிரபல தொழில்நுட்பங்கள் GSM, CDMA, IS-95
ஆகியவை ஆகும். இவற்றில் CDMA மற்றும் IS-95 ஆகிய
இரண்டும் CDMA தொழில்நுட்பங்கள். இவ்விரண்டும்
அமெரிக்காவில் பிரபலமாக இருந்தன. அமெரிக்கா
தவிர்த்த உலகின் பிற நாடுகளில் GSM தொழில்நுட்பமே
செல்வாக்குப் பெற்றது.
GSM என்பது Global System of Mobile communication ஆகும்.
CDMA என்பது Code Division Multiple Access ஆகும்.
GSMஇல் ரேடியோ அதிர்வெண் அலைக்கற்றையானது
(Radio Frequency Spectrum) பல்வேறு சானல்களாகப்
பிரிக்கப் பட்டு, FD அல்லது TD (frequency division or time division)
முறையில் பயன்படுத்தப்படும்.
CDMAயில் இவ்வாறு பிரிக்கத் தேவையில்லாமல், மொத்த
அலைக்கற்றையுமே பயன்படுத்தப் படும். இது spread spectrum
டெக்னாலஜி ஆகும். CDMA சேவைக்கென்றே
பிரத்தியேகமான மொபைல் ஃபோன்கள் உண்டு. இத்தகைய
CDMA ஃபோன்கள் GSM சேவையில் பயன்படாது.
(CDMA handsets do not have interchangeability)
--------------------------------------------------------

சனி, 26 செப்டம்பர், 2020

 காமவெறிப் பிண்டமாக இருப்பவளே புரட்சிப்பெண்!

போலிப் பெண்ணுரிமை கும்பலின் இலக்கணம்!

--------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

---------------------------------------------------------------------------

காமவெறிப் பிண்டமாக ஊரெங்கும் அம்பலப்பட்ட

யூமா எனப்படும் பிரான்சு தமிழச்சி, லூலு தேவ 

ஜமுலா ஆகியோர் தமிழகத்தின் புரட்சிப் பெண்களாகக் 

கருதப் படுகிறார்கள். முழு போதையில் முழு நிர்வாணத்துடன்

ஆம்னி பஸ்சில் பிடிபட்ட புழுத்த காமவெறிப்  பிண்டம்

மார்க்சியம் பேசுகிறது.


புரட்சிப் பெண், முற்போக்குப் பெண், இடதுசாரிப் பெண் 

என்பதற்கு தமிழ்நாட்டில் பரவலாக வழங்கப்படும் 

இலக்கணம் அப்படிப்பட்ட பெண் ஒரு காமவெறிப் 

பிண்டமாக இருக்க வேண்டும் என்பதே. இந்த இலக்கணம் 

ஈ வே ராமசாமியின் இலக்கணம்.


இந்தப் புழுத்த இலக்கணத்துக்கு மாற்றாக, புரட்சிப் 

பெண்ணுக்கு நல்லதொரு இலக்கணம் தமிழ்நாட்டில் 

தொன்றுதொட்டு இருக்கிறது. நற்றிணை குறுந்தொகை 

தொடங்கி பாரதியார் வரை நீளும் அந்த இலக்கணத்தை 

மிகவும் எளிமையாக எவரும் புரிந்திடும் வண்ணம்

பாரதியார் இப்படிக் கூறுகிறார்:


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் 

சற்றும் இளைப்பில்லை காண்.


இன்னும் நிறையக் கூறுகிறார் பாரதியார். அவற்றைப் 

படியுங்கள்.இதுதான் புரட்சிப் பெண்ணின் இலக்கணம்!

ஆணும் பெண்ணும் அறிவில் சமம்; ஆணுக்குச் சமமான

அறிவு உடையவள்தான் புரட்சிப் பெண்.


இது பாரதியின் இலக்கணம் மட்டுமல்ல; சோவியத் 

ஒன்றியத்தில் புரட்சிப் பெண்ணின் இலக்கணம் 

இதுதான். லெனின் வகுத்த இலக்கணம் இதுதான்.

யூரி ககாரின் ஒரு விண்கலத்தில் 1961ல் தமது 27ஆவது 

வயதில் விண்வெளியை வலம் வந்தார்.


1963ல் வாலன்டினா தெரெஸ்கோவோ தமது 26 வயதில் 

ஒரு விண்கலத்தில் விண்வெளியை வலம் வந்தார்.

பூமியை 48 முறை சுற்றி வந்தார். யூரி ககாரின் 

108 நிமிடங்கள் (கவனிக்கவும்: நிமிடங்கள்) மட்டுமே 

விண்வெளியில் இருந்தார். இந்தச் சாதனையைப் 

பெண்ணான தெரெஸ்கோவா முறியடித்தார். மூன்று 

நாட்கள் விண்வெளியில் இருந்தார் தெரெஸ்க்கோவா.


இதுதான் புரட்சிப் பெண்ணுக்கான இலக்கணம்!

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் சற்றும் 

இளைப்பில்லை என்று நிரூபித்தவள்தான் புரட்சிப்பெண். 


காமவெறியில் ஆணை மிஞ்சுவதும், குடிபோதையில் 

ஆணை மிஞ்சுவதும், ஆபாச வார்த்தைகள் பேசுவதில் 

ஆணை மிஞ்சுவதும், அடுத்தவள் புருஷனோடு படுத்து 

எழுந்திரிப்பதும் புரட்சிப் பெண்ணின் இலக்கணம் அல்ல.


இவ்வாறு நச்சுப் படுத்தப்பட்டுள்ள தமிழ்ச் சூழலில் 

பிரான்சு தமிழச்சியும், லூலுவும், இவர்களைப் 

பின்பற்றுவோரும்தான் புரட்சிப் பெண்களாகக் 

கொண்டாடப் படுவார்கள்.


அறிவிற் சிறந்த பெண்களைப் பற்றி தமிழ்நாட்டின் எந்த ஒரு 

பெண்ணுரிமை ஜந்துக்கும் தெரியாது. தமிழ்நாட்டுப் 

பெண்ணுரிமைக் கும்பல் அறிவியலுக்கு எதிரானது.

அறிவியலைக் கற்காத தற்குறிகளே இங்கு பெண்ணுரிமை 

அமைப்பு நடத்துகிறார்கள்.


ஓராண்டுக்கு முன், 2019 ஆகஸ்டு செப்டம்பரில், சந்திரயான்-2

தனது விண்பயணத்தைத் தொடங்கி இருந்தது. அப்போது 

சந்திரயான் குறித்து, முகநூலில் பதிவுகள், 

தொலைக்காட்சியில் விளக்கங்கள், அறிவியல் ஒளி 

ஏட்டில் கட்டுரை என்று நியூட்டன் அறிவியல் மன்றம் 

தீவிரமாகச் செயல்பட்ட நேரம்.


வனிதா முத்தையா, ரித்து கரிதால் என்ற இரண்டு பெண் 

விஞ்ஞானிகளைப் பாராட்டி நியூட்டன் அறிவியல் மன்றம் 

அப்போது பேசியும் எழுதியும் வந்தது. யார் இவர்கள்?

இவ்விருவரும் சந்திரயான்-2 திட்டத்தில் முக்கியப் 

பொறுப்பேற்றுச் செயல்பட்டவர்கள்.


வனிதா முத்தையா Project director ஆகவும் 

ரித்து கரிதால்  Mission Director ஆகவும் 

செயல்பட்டவர்கள்.


தமிழ்நாட்டில் பெண்ணுரிமை பேசும் காமவெறி 

நாய்களுக்கு, பெண்களுக்காக அமைப்பு நடத்தும் 

காமவெறிப் பிண்டங்களுக்கு, வனிதா முத்தையா 

பற்றியோ ரித்து கரிதால் பற்றியோ ஏதாவது 

தெரியுமா? ஒரு மயிரும் தெரியாது என்பதுதானே 

உண்மை!


2008 அக்டோபரில் சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப் 

பட்டபோது, அதன் Project Directorஆக இருந்தவர் டாக்டர் 

மயில்சாமி அண்ணாத்துரை. 2019ல் சந்திரயான்-2வின் 

Project Directorஆக இருந்தவர் வனிதா முத்தையா. எட்டும் 

அறிவினால் ஆணுக்குக்கே இங்கே பெண் சற்றும் 

இளைப்பில்லை என்று நிரூபித்துள்ளார் வனிதா முத்தையா.


ஆக புரட்சிப்பெண் என்றால், வாலன்டினா 

தெரெஸ்கொவாதான்! வனிதா முத்தையாதான்!

ரித்து கரிதால்தான்! காமவெறிப்  பிண்டங்களான

பிரான்ஸ் தமிழச்சியும் லூலுவும் ஆம்னி பஸ்சில் 

முழுநிர்வாணமாகப் பிடிபட்ட இழிந்த ஐந்தும் அல்ல.


பெண்ணுரிமை என்று ஊரை ஏமாற்றும் காமவெறிப் 

பிண்டங்களே, திருந்துங்கள், அல்லது சாவுங்கள்.

******************************************************        

   

              
    


           


 

.      

 ஒவ்வொரு மார்க்சியவாதியும்

ஒவ்வொரு பொருள்முதல்வாதியும்
வணங்க வேண்டிய அந்த மூவர் யார்?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
அறிவியலில் இருந்து துண்டித்துக் கொண்டும்
அறிவியலோடு எவ்விதத் தொடர்பும் அற்றதாக
இருப்பதுவும்தான் பொருள் முதல்வாதம் என்ற
தோற்றமே நமக்குத் தரப்பட்டு இருக்கிறது.
அப்படித்தான் பொருள்முதல்வாதம் நமக்கெல்லாம்
கற்பிக்கப் பட்டிருக்கிறது.
பொருள்முதல்வாதம் பற்றிய இத்தோற்றம் நூறு சதம்
தவறானது.
பொருள்முதல்வாதம் என்றாலே அறிவியல்
என்றுதான் அர்த்தம். பொருளின் பண்புகளை
ஆராய்வதே ஒவ்வொரு அறிவியல்
பரிசோதனையிலும் நடக்கும் செயல்.
கருத்தின் பண்புகளை ஆராய்வது அறிவியல் அல்ல.
பொருளை ஆராயாத எந்த ஒரு பரிசோதனையாவது
இதுவரை உலகில் நடந்தது உண்டா என்று
நான் கேட்கிறேன். இல்லை என்பதே பதில்.
பொருள்முதல்வாதத்தின் மீது அதிக அக்கறை
காட்ட வேண்டிய கடமை மார்க்சியர்களுக்கு
உண்டு. நிற்க.
ஒவ்வொரு பொருள்முதல்வாதியும், ஒவ்வொரு
மார்க்சியவாதியும் இந்த மூவரைப் பற்றி கண்டிப்பாக
அறிந்திருக்க வேண்டும். அறிந்திருக்காவிட்டால்
அவர்கள் பொருள்முதல்வாதிகளே அல்ல.
யார் அந்த மூவர்?
இவர்கள்தான்.
1. லூயி டி பிராக்லி (பிரெஞ்சு குவாண்டம் விஞ்ஞானி.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்.
2. கிளின்டன் டேவிசன் (பரிசோதனை
இயற்பியலாளர்)
3. லெஸ்டர் ஜெர்மர் (பரிசோதனை இயற்பியலாளர்)
ஒளி என்பது அலையாக இருக்கிறது என்பதை நாம்
அறிவோம். அதாவது ஒளி என்பது துகள் மட்டுமல்ல
அலையும்தான் (wave particle duality).
ஒளி மட்டுமல்ல பொருளும் அலையாக இருக்கிறது!
பொருளுக்கும் அலைப்பண்பு இருக்கிறது என்று
கூறினார் லூயி டி பிராக்லி. துகளான எலக்ட்ரான்
அலையாகவும் இருக்கிறது என்று கூறியவர் இவர்.
லூயி டி பிராக்லி கூறியதை பரிசோதனை மூலம்
நிரூபித்தவர்கள் டேவிசன், ஜெர்மன் ஆகிய
இருவரும். புகழ்பெற்ற இந்தப் பரிசோதனை
டேவிசன் ஜெர்மர் பரிசோதனை என்று
அழைக்கப் படுகிறது.
இந்தப் பரிசோதனையில் டேவிசனும் ஜெர்மரும்
எலக்ட்ரானின் அலைநீளம் 0.165 நானோமீட்டர்
என்று நிரூபித்துக் காட்டினர்.
டேவிசன் ஜெர்மன் பரிசோதனை 12ஆம்
வகுப்பு இயற்பியல் பாடப்புத்த்தகத்தில்
இருக்கிறது. வாசகர்கள் அதைப் படிக்குமாறு
வேண்டுகிறோம்.
ஆக, பொருள்முதல்வாதிகள் என்றால், இந்த
மூன்று பேரையும் தெரிந்து வைத்திருக்க
வேண்டும். தெரிந்து வைத்திருக்கவில்லை
என்றால், அவர்கள் கருத்துமுதல்வாதிகள்
என்று பொருள்படும்.
பொருள் என்று ஒன்றுமே கிடையாது. பொருள்
என்பதெல்லாம் நமது மனத்தில் எழும்
நினைப்புத்தான் என்று சொன்னானே
கருத்துமுதல்வாதி. அவன் மண்டையில் ஓங்கி
அடிக்கிறார்கள இல்லையா, இந்த மூவரும்!
அப்படிப்பட்டவர்களைத் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டாமா?
******************************************

புதன், 23 செப்டம்பர், 2020

உலகைக் குலுக்கும் எலான் மஸ்க்!

------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------- 

அண்மைக்கால மானுட வரலாறு பெருமளவில் 

தொழில்நுட்ப அறிஞர்களைப் படைத்து வருகிறது.

விஞ்ஞானிகளை விட இவர்களின் எண்ணிக்கை நாம் 

வாழும் உலகில் அதிகம். இவர்களில் பலர் நிர்வாக 

மேலாண்மையிலும் திறன் பெற்று, உலகின் முதல் தர 

கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.


ஸ்டீவ் ஜாப்ஸ் (Stevan Paul  Jobs 1955-2011), பில் கேட்ஸ் 

(Bill Gates, born:1955, வயது: 64) என்று தொடரும் இந்த வரிசையின் 

முதல் பெயராக தாமஸ் ஆல்வா எடிசனின் (1847-1931) 

பெயர் உள்ளது. தாம் கண்டுபிடித்த 1093 கருவிகளுக்கு 

காப்புரிமை பெற்றவர் எடிசன். அமெரிக்காவில் பெற்ற 

காப்புரிமை மட்டுமே இது. பிற நாடுகளில் அவர் பெற்ற 

காப்புரிமையை இங்கு கணக்கில் சேர்க்கவில்லை.

எந்த அளவுக்கு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளராக 

இருந்தாரோ, அந்த அளவுக்கு கறாரான ஒரு தொழிலதிபர் 

ஆகவும் இருந்தவர் எடிசன். 


2011ல் மறைந்த ஸ்டீவ் ஜாப்சுக்கு, அமெரிக்காவின் 

கெளரவம் மிகுந்த "தேசியத் தொழில்நுட்பப் பதக்கம்" 

(National Medal of Technology and Innovation) 1985ல் வழங்கப் பட்டது. 

தமது கூட்டாளியான  ஸ்டீவ் வாஸ்னிக் (Steve Wozniak)

என்பவருடன் ஸ்டீவ் ஜாப்ஸ் இப்பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் வழங்கிய இப்பதக்கம் 

ஸ்டீவ் ஜாப்சின் தொழில்நுட்ப மேதைமைக்குக் கிடைத்த 

உயர்ந்த அங்கீகாரம் ஆகும். 


தமது 13ஆவது வயதில், ஒரு மென்பொருள் நிரலை (software programme) வெற்றிகரமாக எழுதி உலக சாதனை புரிந்தவர் 

பில் கேட்ஸ். தாம் படித்த பள்ளியில் வேலை பார்க்கும் 

அனைவரின் சம்பளப் பட்டியல் குறித்த மென்பொருள் நிரல் 

அது. பில் கேட்சின் தொழில்நுட்ப அறிவு 13 வயதிலேயே 

வெளிப்பட்டு அவர் ஒரு குழந்தை மேதை (Child prodigy)

என்பதை உலகிற்கு உணர்த்தியது.


இந்த வரிசையில் சமீபத்திய வரவு எலான் மஸ்க் 

(Elon Musk, born: 1971, வயது 49)  ஆவார். இவரைத் தெரியாத 

எவரையும் முட்டாள் என்றே கருதுகிறது இன்றைய சமூகம்.

கனடா நாட்டுத் தாய்க்கும் தென்னாப்பிரிக்க நாட்டுத் 

தந்தைக்கும் பிறந்த இவர் கல்லூரிப் படிப்பின்போது 

அமெரிக்கா சென்று  அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.


அடிப்படையில் எலான் மஸ்க் ஓர் இயற்பியல் பட்டதாரி.

பட்டப் படிப்பை முடித்தவுடன், கலிபோர்னியாவில் உள்ள 

ஸ்டான்போர்டு பல்கலையில் பயனுறு இயற்பியலில் 

(applied physics) பிஹெச்டி படிப்பில் சேர்ந்த இவர், சேர்ந்த 

இரண்டு நாட்களிலேயே படிப்பைத் துறந்தார்.      

ஒரு வலைத்தள மென்பொருள் நிறுவனத்தை 

உருவாக்க விரும்பிய எலான் மஸ்க், பிஹெச்டி படிப்பதை விட 

தொழிலதிபர் ஆவதையே விரும்பினார். 


மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா (Tesla) என்னும் 

நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் ஆவார். இனி உலகெங்கும் 

மின்சாரக் கார்களே ஓடும். பெட்ரோல் டீசலில் ஓடும் கார்களின் 

சகாப்தம் முடிந்து விட்டது. பெட்ரோலும் டீசலும் பூமியைச் 

சூடேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதால் 

அவற்றின் பயன்பாடு உலகெங்கும் நிறுத்தப் பட்டு வருகிறது.


இயற்பியலின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப அறிஞர் 

நிக்கோலா டெஸ்லா (Nicola Tesla 1856-1943) ஆவார். ஒரு பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான இவரை கெளரவிக்கும் 

நோக்கிலேயே எலான் மஸ்க்கின் கார் நிறுவனத்துக்கு  

டெஸ்லா என்று பெயரிடப் பட்டது. 


மின்சாரக் கார் உற்பத்தியில்  மட்டுமல்ல, விண்வெளித் 

துறையிலும் பெரும் சாதனைகளைப் புரிந்தவர் எலான் மஸ்க்.

அமெரிக்காவில் தனியாரும் விண்வெளித் துறையில்

பங்கேற்க அனுமதி உண்டு. ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) எனப்படும் 

விண்வெளிச் செயல்பாடுகளுக்கான நிறுவனத்தை 2002ல் எலான்  

மஸ்க் உருவாக்கினார். செவ்வாய் கிரகத்தைக் கைப்பற்றி 

மனிதர்களை அதில் குடியேற்றுவது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 

லட்சியங்களில் ஒன்று.


2019 மே மாதத்தில் ஒரே ஏவுகணையைப் பயன்படுத்தி 

ஒரே ஏவுதலில் (in a single launch) 60 செயற்கைக் கோள்களை 

தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) அவரின் 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்தி உலகப் புகழ் பெற்றது.

ஆளில்லா விண்கலன்களை விண்ணில் செலுத்துதலில்

ஒப்பீட்டளவில் ஆபத்துகள் குறைவு. ஆனால் விண்வெளி 

வீரர்களை விண்கலத்தில் ஏற்றி, உரிய இடத்தில் கொண்டு சேர்த்தலும்,

பின்னர் பூமிக்குத் திரும்பக் கொண்டு வருதலும் எளிதானவை 

அல்ல. ஆபத்து நிறைந்த இப்பணிகளிலும் பெருவெற்றி 

அடைந்துள்ளது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.


நாசாவின் இரண்டு விண்வெளிவீரர்களை விண்வெளியில் உள்ள 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station)

அண்மையில் மே 2020ல் கொண்டு சேர்த்தது ஸ்பேஸ் எக்ஸ்.

இதற்கு இந்நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ஏவுகணை 

பயன்பட்டது. பத்திரமாகச் சென்று சேர்ந்தவர்கள் 

பென்கன் (Robert Bhenken), ஹர்லி (Douglas Hurley)    

ஆகிய இரு நாசா வீரர்கள் ஆவர். நாசா மேற்கொண்ட ஒரு 

பரிசோதனைப் பயணமே இது (test flight).


2020 மே இறுதியில் விண்வெளி நிலையம் (ISS) சென்ற நாசா வீரர்கள் 

ஆகஸ்ட் 2, 2020ல் பூமி திரும்பினர். ஸ்பேஸ் எக்சின் செலுத்து 

வாகனத்தில் பூமி திரும்பிய பென்கன், ஹர்லி இருவரும் மெக்சிகோ  வளைகுடாவில் பாரசூட் மூலம் குதித்தனர். இவ்வாறு வணிக 

ரீதியிலான விண்வெளிப்பயணம் மானுட வரலாற்றில் 

தொடங்கியது. 


மின்சாரக் கார் உற்பத்தி மற்றும் விண்வெளித் துறையைத்

தொடர்ந்து, நரம்புசார் அறிவியல் (Neuro science) துறையிலும் 

அண்மையில் தடம் பதித்துள்ளார் எலான் மஸ்க். இதற்காக 

நியூராலின்க் (Neuralink) என்ற நிறுவனத்தையும் சில ஆண்டுகளுக்கு 

முன்பு தொடங்கினார். 1) டெஸ்லா, 2) ஸ்பேஸ் எக்ஸ், 3) நியூராலின்க் 

ஆகிய நிறுவனங்கள்  எலான் மஸ்க்கின் புகழ் பரப்பும் 

நிறுவனங்களாகத் திகழ்கின்றன. இந்தியாவின் இஸ்ரோ 

நிறுவனம் 130 கோடி இந்தியர்களுக்கும் சொந்தம். ஏனெனில்  

இஸ்ரோ அரசின் நிறுவனம். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் அப்படியல்ல.

அது ஒரு தனியார் நிறுவனம். அது எலான் மஸ்க் என்னும் 

தனி ஒருவருக்கு மட்டுமே சொந்தம். எனினும் அரசுக்கு நிகராக 

தனியாரின் முன்முயற்சிகள் அமெரிக்காவில் மிகவும் தாராளமாக அனுமதிக்கப் படுகின்றன. தனியார்மயத்தில் 

அபாயகரமான அளவுக்கு உச்சம் தொட்டு நிற்கிறது அமெரிக்கா. 


மூளையில் கணினிச் சில்லுகளைப் பொருத்துவதன் மூலம் 

(implanting the chips in the brain) கொடிய நரம்பியல் நோய்களைத் 

தீர்க்க முடியும் என்று கடந்த மாதம் (ஆகஸ்டு 2020) அறிவித்து  

மொத்த உலகையும் அதிர வைத்தார் எலான் மஸ்க்.

தமது நியூரோலின்க் நிறுவனத்தின், அறுவை சிகிச்சை 

செய்யும்  ரோபோவின் (surgical robot) அருகில் நின்று கொண்டு

விளக்கவுரை ஆற்றினார் எலான் மஸ்க்.


கொடிய நரம்பியல் நோய்களான அல்சமீர், பார்க்கின்சன்,

செவித்திறன் இழப்பு, முதுகுத் தண்டுவடக் கோளாறு 

போன்ற நோய்களை, மூளையில் பொருத்தப்படும் 

சில்லுகளின் வாயிலாக செயற்கை நுண்ணறிவு 

(Artificial Intelligence) மூலம் குணப்படுத்த இயலும் என்பது  

எலான் மஸ்க் முன்வைக்கும் கோட்பாடு. நியூரோலின்க் 

நிறுவனத்தில் மூன்று பன்றிகளுக்கு தலைக்கு இரண்டு 

சில்லுகள் வீதம் அவற்றின் மூளையில் பொருத்தப் 

பட்டுள்ளன என்றார் மஸ்க். 


சில்லு ஒன்றின் விட்டம் 23 மிமீ ஆகும். அதாவது ஒரு 

சில்லுவின் ஆரம் 11.5 மிமீ ஆகும். அதாவது தோராயமாக 

1 செமீ நீளம் என்றோ அல்லது ஒரு விரற்கடை நீளம் என்றோ 

எடுத்துக் கொள்ளலாம். ஆயின், ஒரு சில்லுவின் கனஅளவு 

4.78 கன செமீ ஆகும்.  இதை 5 கன செமீ என்று எடுத்துக் 

கொண்டால், ஒரு சில்லு என்பது தோராயமாக ஒரு 

நெல்லிக்கனி அளவுக்கு இருக்கும். பன்றியின் மூளையானது 

மனித மூளையை விடச் சிறியது. வளர்ப்புப் பன்றிகளின் 

மூளையின் நிறை சராசரியாக 140 கிராம் என்று ஒரு மதிப்பீடு 

கூறுகிறது. இந்த 140 கிராம் மூளையில், இரண்டு நெல்லிக்கனி    

அளவுக்கு சில்லுகளைப் பொருத்தி இருப்பதை பன்றிகள் 

எப்படி உணரும் என்று நமக்குத் தெரியாது. எனினும் 

மூளையில் சில்லுகள் பொருத்தப்பட்ட பன்றிகள் நல்ல 

உடல்நலத்துடனும், பிற சாதாரணப் பன்றிகளிடம் இருந்து 

பிரித்தறிய முடியாதபடியும் உள்ளன என்கிறார் 

எலான் மஸ்க் மேலும்.


அரசின் அனுமதி பெற்று, பன்றிகளை அடுத்து மனிதர்களுக்கும்

இவ்வாறு சில்லுகளைப் பொருத்த முற்படுவார் எலான் மஸ்க்

என்று தெரிய வருகிறது. இது உலகை அதிர்ச்சியில் 

ஆழ்த்துகிறது.


பல்துறை தழுவிய (versatile) தமது தொழில்நுட்ப மேதைமையை 

தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் 

எலான் மாஸ்க்கின் நுண்ணறிவுக் குறியீடு (IQ) எவ்வளவு 

இருக்கும் என்று அறிவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

தற்காலத்தில் மனிதர்களின் நுண்ணறிவுக் குறியீட்டை (IQ)

அளவிடும் பல அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் 

எலான் மஸ்க்கின் IQ 155ஐ ஒட்டி இருக்கும் என்று அறிவித்துள்ளன.


எலான் மஸ்க் குறித்து நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன.

இவற்றுள் பலவும் அவரின் வாழ்க்கை வரலாறுகளே.

2015ல் வெளிவந்த ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் 

உயர்வு நவிற்சி இன்றி, அவரின் வாழ்க்கையை அப்படியே 

படம் பிடித்துக் காட்டுகிறது. அதை எழுதியவர் ஆஸ்லி வான்ஸ் 

(Ashlee Vance). 

நூலின் பெயர்: "Elon Musk: How the billionaire CEO of 

SpaceX and Tesla is shaping our future?" 

நூலின் விலை 10 டாலர். அதாவது 700 ரூபாய்.

அமேசானில் கிடைக்கிறது.  


ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், எலான் மஸ்க் போன்ற தொழில்நுட்ப

அறிஞர்களுக்கு இணையாக இந்தியாவில் எவருமே 

இல்லையா? ஏன் இல்லை? இருக்கிறார்கள். சமகால 

இந்தியா நிறையவே தொழில்நுட்ப அறிஞர்களை 

உருவாக்கி இருக்கிறது.


ஐஐடியில் படித்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி (வயது 74)

இன்போசிஸ் நிறுவனத்தைத்  தலைமையேற்று நடத்தியவர்.

சுந்தர் பிச்சை ஐஐடியில் படித்து விட்டு தற்போது கூகிள் 

நிறுவனத்தின் தலைமையில் (CEO, Google) இருக்கிறார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவரை, 2020ஆம் ஆண்டின் 

செல்வாக்கு மிக்க 100 பேரில் ஒருவராக டைம் பத்திரிகை

தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வரிசையில் சத்ய நாதெள்ளாவையும்   

(CEO, Microsoft) சேர்க்கலாம். மேலும்  அமெரிக்காவின் சிலிக்கன் 

பள்ளத்தாக்கில் தொழில்நுட்ப ரீதியாக ஆட்சி செலுத்துபவர்கள் 

மிகுதியும் இந்தியர்களே.


மேற்கூறிய மூவரும் தங்களின் தொழில்நுட்ப அறிவால் 

தொழிலதிபர்களாகி லாபம் ஈட்டுபவர்கள். இவர்களைப் போல் 

அல்லாமல், தங்களின் தொழில்நுட்ப மேதைமையை 

சமூகத்துக்கு அர்ப்பணித்தவர்கள் இந்தியாவில் உண்டு.

டாக்டர் அப்துல் கலாம் (1931-2015), சாம் பித்ரோடா (வயது 77), 

நந்தன் நிலக்கணி (வயது 65) ஆகியோரை எடுத்துக் காட்டுகளாகக்   

கூறலாம்.


வணிக நோக்கமோ, லாப நோக்கமோ துளியும் இன்றி,

அரசைச் சார்ந்து, அரசின் பிரதிநிதிகளாக இருந்து, சமூகத்துக்கும் 

மக்களுக்கும் பயன்பட்டவர்கள் இவர்கள். அணுசக்தித் துறையிலும்

விண்வெளித் துறையிலும் அளப்பரிய பங்களிப்புகளைச் 

செய்தவர் அப்துல் கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.


பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தொலைதொடர்பு

என்பது வெகுவாகப் பின்தங்கி இருந்தது. இதைச் சரிசெய்ய,

பெரும் வருமானம் தந்த தமது அமெரிக்க வாழ்க்கையைத் 

துறந்து இந்தியா வந்தார் சாம் பித்ரோடா. இந்திரா காந்தி,

ராஜிவ் காந்தி ஆகிய இரு பிரதமர்களின் ஆதரவுடன் 

செயல்பட்டார் இவர். இந்தியத் தொலைதொடர்பு ஆணையத்தின் 

(Telecom Commission) தலைவராகச் செயல்பட்டார். இந்தியாவின் 

தொலைதொடர்புப் புரட்சியை நடத்தினார். இன்றைய 

தொலைத்தொடர்பு வளர்ச்சியின் மூலவித்து சாம் பித்ரோடாவே.


ஆரம்பத்தில் இன்போசிஸ்சில் பணியாற்றிய நந்தன் நிலக்கணி 

அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று,

இந்தியக் குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை 

உருவாக்கித் தரும் பணியில் ஈடுபட்டார். ஆதார் என்பது 

நந்தன் நிலக்கணியின் மூளையின் விளைச்சல் (brain child) ஆகும்.

அப்துல் கலாம், சாம் பித்ரோடா, நந்தன் நிலக்கணி ஆகியோர் 

தங்களின் மேதைமையை லாபத்துக்குரிய விற்பனைப் 

பண்டமாகக் கருதாமல் சமூகத்தின் பொதுச்சொத்தாக 

ஆக்கி விட்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் மேன்மக்கள்! 


எடிசன், ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் போன்றோருக்கு நிகராக 

அல்லது சிறிது மாற்றுக் குறைவாக இந்தியாவில் தொழில்நுட்ப 

அறிஞர்கள் உண்டு. ஆனால் இந்தியாவின் அப்துல் கலாம், சாம் பித்ரோடா, 

நந்தன் நிலக்கணி போன்றோருக்கு நிகராக, தங்களின் தொழில்நுட்ப  அறிவை, மொத்த சமூகத்தின் பொதுவுடைமை ஆக்கிய 

எவரேனும் அமெரிக்காவில் உண்டா? இருந்தால் சொல்லுங்கள்!

அப்படிப் பட்டவரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்!

*******************************************************************************

       

 


    


  
       


                    

  

       

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

 இலான் மஸ்க் பயோகிராபி!

----------------------------------------------

இலான் மஸ்க் குறித்து நிறையவே நூல்கள்

வந்திருக்கின்றன. இவற்றில் பலவும்

biographyகள்.


2015ல் வெளிவந்த ஒரு biography, Ashlee Vance எழுதியது

வெகுவாகப் பிரசித்தம்.

Elon Musk: How the Billionaire CEO 

of SpaceX and Tesla is Shaping our Future


அமேசானில் கிடைக்கிறது. 10 டாலர் விலை;

அதாவது ரூ 700 விலை.


விரும்புவோர் வாங்கிப் படிக்கலாம்.

இளைய தலைமுறைக்கு இந்த நூல் பயன்படும்.

நண்பர் பத்ரி சேஷாத்ரி இந்த நூலை வெகுவாகப்

பரிந்துரைக்கிறார். வாங்குங்கள்; படியுங்கள்;

அறிவைப் பெருக்குங்கள்!  


எனினும் நான் வாங்கப் போவதில்லை. காலம் கடந்து

விட்டது; அவ்வளவுதான்! படித்தவரகள் எவரேனும்

சுவாராஸ்யமாகச் சொன்னால் கேட்கலாம்.

**************************************************

இலான் மஸ்க்கின் இமாலயச் சாதனை!

------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

----------------------------------------------------------------

இலான் மஸ்க் (Elon Musk)! இவரைத் தெரியவில்லை என்று

சொல்லும் யாரும் முட்டாள் என்றுதான் கருதப்

படுகிறார்கள். சற்றுமுன் இவர் மகத்தானதொரு

உலக சாதனையைப் புரிந்துள்ளார். இவர் புரிந்த

சாதனை விண்வெளிச் சாதனை ஆகும்.


இவரைக் குறித்து நாலைந்து வாரங்களுக்கு முன்பு

ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அது மனதில்

பதிந்து இருக்கிறதா?


இலான் மஸ்க் ஒரு அமெரிக்கர். உலக அளவில்

புகழ் பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்.

மேலும் அவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் ஆவார்.


இனி உலகம் முழுவதும் மின்சாரக் கார்தான் என்று

உங்களுக்குத் தெரியுமா?

டெஸ்லா என்னும் பெயரிலான மின்சாரக் கார்

தயாரிக்கும் தொழிலதிபர்தான் இந்த இலான் மஸ்க்.


அதோடு Space X என்னும் விண்வெளி நிறுவனத்தின்

தலைவரும் இவரே. ஒரே ஒரு ஏவுகணையைப்

பயன்படுத்தி ஒரே launchல் 60 செயற்கைக்கோள்களை

விண்ணில் ஏற்றி சாதனை புரிந்தவர் இந்த இலான் மஸ்க்.


ஒரே ஏவுகணை!

ஒரே LAUNCH!

ஆனால் 60 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏற்றி

ORBITல் பொருத்தியவர் இலான் மஸ்க். இந்த சாதனையை

யாராவது முறியடித்து இருக்கிறார்களா?


சரி, இவருடைய லேட்டஸ்ட் சாதனை என்ன? ஆளில்லா

விண்கலங்களை விண்ணில் ஏற்றிய சாதனை மானுட

வரலாற்றில் நிறையவே உண்டு. இலான் மஸ்க் தற்போது

நாசா நிறுவனத்தின் இரண்டு விண்வெளி வீரர்கள்

பயணம் செய்த ஒரு விண்கலத்தை விண்ணில்

செலுத்தி இருக்கிறார்.


இது குறித்த செய்திகளை படியுங்கள்!

இலான் மாஸ்க் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

அமெரிக்காவில் தனியாருக்கும் விண்வெளி ஆய்வில்

ஈடுபட அனுமதி உண்டு.

************************************************* 

அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!

அதற்கு விநோதமாகப் பெயரிட்டார் அவர்!

அறியாமையோடு இருப்பது பசியோடு இருப்பது போல!

------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

---------------------------------------------------------------

யார் அவர்? அவர்தான் இலான் மஸ்க் (Elon Musk).

அவரைத் தெரியவில்லை என்று சொல்லும் யாரும்

முட்டாள் என்றுதான் கருதப் படுகிறார்கள்.


இலான் மஸ்க் ஒரு அமெரிக்கர். உலக அளவில்

புகழ் பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்.

மேலும் அவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் ஆவார்.


இனி உலகம் முழுவதும் மின்சாரக் கார்தான் என்று

உங்களுக்குத் தெரியுமா? பெட்ரோல் டீசலை

எரிபொருளாக உலகம் இனி பயன்படுத்தாது.

அநேகமாக 2030க்குள் உலகம் முழுவதும்

மின்சாரக் கார்கள், பைக்குகள் மட்டுமே இருக்கும்.


டெஸ்லா கார் (Tesla car) என்னும் மின்சாரக் கார்

தயாரிக்கும் தொழிலதிபர் இந்த இலான் மஸ்க்.

அதோடு Space X என்னும் விண்வெளி நிறுவனத்தின்

தலைவரும் இவரே. ஒரே ஒரு ஏவுகணையைப்

 பயன்படுத்தி ஒரே launchல் 60 செயற்கைக்கோள்களை

விண்ணில் ஏற்றியவர் இந்த இலான் மாஸ்க்.


அறிவியல் ஒளி படிக்கிற பழக்கம் உண்டா? இது

ஒரு அறிவியல் சஞ்சிகை; மாத வெளியீடு.

இதில் சந்திரயான்-2 பற்றி ஒரு கட்டுரை எழுதினேன்.
     

அதில் இலான் மஸ்க் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.


இலான் மஸ்க் தன்  குழந்தைக்கு விநோதமாகப்

பெயரிட்டு உள்ளார்.

X Æ A-12 என்று அக்குழந்தைக்குப்

பெயரிட்டுள்ளார். இது உலகம் 

முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கட்டுரையை ஏன் வெளியிடுகிறோம்? குழந்தையின் 

வினோதமான பெயருக்காகவா?

இல்லை. உலகலாவிய புகழ் பெற்ற 

அறிவியல் தொழில்நுட்ப நிபுணரைப் 

பற்றி ஒன்றும் தெரியாமல் அறியாமையுடன் இருக்கக் கூடாது 

என்பதற்காக!

*******************************************  


செவ்வாய், 8 செப்டம்பர், 2020

Sin 90, cos 90 விகிதங்கள் எப்படி மதிப்பைப்
பெறுகின்றன என்பது 10,11 வகுப்புகளின்
கணக்குப் பாடம். இதைப் புரிந்து படித்துத்தான்
12ஆம் வகுப்பு, பின் B.Sc, பின் M.Sc என்று
தேற முடியும். மனப்பாடக் கல்வி, கிளிப்பிள்ளைக்
கல்வி என்பதெல்லாம் கணிதத்தில் செல்லுபடி
ஆகாது. கொஞ்சமேனும் subject புரிந்தால்தான்
M.Sc வரை செல்ல முடியும். 

அடுத்து, நீங்கள் குறிப்பிடும் நபர் திரிகனாமெட்ரியை
நன்கு அறிந்திருக்கக் கூடும். ஆனால் சொல்லிக்
கொடுக்கத் தெரியாதவராக இருக்கக் கூடும்.

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
விரித்து உரையா தார்.
இத்திருக்குறளின் பொருளை அறியவும். 

நன்னூல் ஆசிரியர்களுக்கு இலக்கணம் வகுக்கிறது.
அது போல மாணவர்களுக்கும் இலக்கணம் வகுக்கிறது.
சிறந்த ஆசிரியர்கள், மோசமான ஆசிரியர்கள்
என்று வகை பிரித்துச் சொல்கிறது.
அதே போல மாணவர்களையும் தலை மாணாக்கன்,
இடை மாணாக்கன், கடை மாணாக்கன் என்று வகை
பிரிக்கிறது.
optical camera மூலம் படம் எடுக்க சிறிதளவேனும்
வெளிச்சம் வேண்டும். infrared cameraவுக்கு
வெளிச்சம் தேவை இல்லை. நிலவைச் சுற்றி வரும்

ஆர்பிட்டர் சூரிய வெளிச்சம் இருக்கும் பகலிலும்,
சூரிய வெளிச்சம் இல்லாத இரவிலும் நிலவைச்
சுற்றி வரும். அப்போது இரவிலும் படம் எடுக்க
வேண்டுமெனில் infrared camera தேவைப்படும்.
இதனால்தான் ஆர்பிட்டரில் infrared camera வைக்கப்
பட்டுள்ளது.

திங்கள், 7 செப்டம்பர், 2020

கரக்பூர் ஐஐடி பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே
ஆறு மாதமாய் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது ஏன்?
அறிவாளிகளின் கைதும்
காலணி வைரஸ் தாக்கி
இறந்து போன நீதியும் !
.............................................
மூத்த வழக்கறிஞர் தி.லஜபதிராய்
-------------------------------------
ஆனந்த் தெல்தும்ப்டே .!
முதுகெலும்பற்ற மெல்லுடலிகள் அதிகார மையங்களாக உலவும் இந்தியாவில் வாழும் மெய்யான அறிவாற்றல் கொண்ட மனிதர். கரக்பூர் ஐஐடி பேராசிரியர்,
அறிஞர்கள் இந்தியாவைப் படிக்க , அறிய பெரிதும் நம்பும் எகானமிக் அண்ட் பொலிலிடிக்கல் வீக்லி என்ற இதழ் உலக அளவில் வெளிவரும் 951 சமூக அறிவியல் இதழ்களில் ஏழாவது இடமும், ஆசிய அளவில் வெளியாகும் 197 இதழ்களில் இரண்டாவது இடமும், இந்தியாவில் வெளியாகும் 37 இதழ்களில் முதலிடத்தையும் பெறுவது வேடிக்கையல்ல.
இந்தியாவின் தலை சிறந்த அறிஞர்கள் ரொமிலா தாப்பர், அண்ரே பெடெய்ல், தீபக் நய்யர் போன்ற 200 பேருக்கும் மேற்பட்டோர் தங்களது கட்டுரைகளை பதிவிடும் இதழ்.
எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் தெல்தும்ப்டேயின் மார்ஜின் ஸ்பீக் அல்லது விளிம்புநிலை மக்களின் குரல் என்ற அவரது பக்கங்கள் மிகப் பிரபலம்.
எகானமிக்கல் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் அவரது 20.10.2018 கட்டுரையில் காங்கிரஸ் தலைமையிலான முற்போக்கு கூட்டணி அரசின் 23 திட்டங்களை திருவாளர் மோடி பெயர் மாற்றம் செய்து தனது திட்டங்களாக்கியதை அம்பலப்படுத்தினார்.14.04.2018 அன்று வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகும் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்தை கண்டித்து ஜூடிசியல் அட்ராசிட்டி Judicial Atrocity என்ற கட்டுரையை எழுதினார். 30.06.2018 அன்று அர்பன் மாவோயிஸ்ட்ஸ் மற்றும் 04.08.2018 அன்று அவரது நியூ நார்மல் இன் மோடி’ஸ் நியூ இந்தியா
New normal in Modi’s new India ஆகிய கட்டுரைகள் அறிஞர்கள் மத்தியில் புகழ்பெற்றவை. எதிர்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் எழுதியுள்ளார் .
ஹிந்துத்வா அண்ட் தலித்ஸ்,
Hindutva and dalits
தி ரேடிக்கல் இன் அம்பேத்கர்,
The radical in Ambedkar
ரிபப்ளிக் ஆப் கேஸ்ட்,
Republic of caste
தலித்ஸ் பாஸ்ட் ப்ரசன்ட் ஆன்ட் ஃபியூச்சர்,
Dalits past present and future
‘மஹத்’தி மேக்கிங் ஆப் ஃபஸ்ட் தலித் ரிவோல்ட்
‘Mahad’ The making of first dalit revolt
போன்ற மேற்சொன்ன நூல்கள் உள்ளிட்ட 26 புகழ் பெற்ற நூல்களை எழுதியவர் தொகுத்தவர்.
டாக்டர் அம்பேத்கரின்
அனிகிலேஸன் ஆப் காஸ்ட்
Annihilation of caste என்ற
சாதியை அழித்தொழித்தல் என்ற இந்தியப் பேரறிஞர் அம்பேத்கரின் புகழ்பெற்ற உரையை நூலாக மாற்றி
அறிமுகம் செய்யும்போது கம்யூனிஸ்ட் பேரறிக்கை communist manifesto முதலாளித்துவ உலகிற்கு என்னவாக இருந்ததோ அதைப் போன்றே சாதீய இந்தியாவுக்கு ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலும் எனத் திறம்படக் கூறியவர்.
சாம்ஸ்க்கி உட்பட 600 உலகளாவிய அறிஞர்கள் அவரது கைதுக்கு எதிராக வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.ஆனால் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய அறிவு படைத்தோருக்கு அவ்வேண்டுகோளைப் புரிந்து கொள்வது கடினம்.
டாக்டர் அம்பேத்கரின் பேத்தி ரமாவை திருமணம் செய்ததாலோ, அல்லது அம்பேத்கரைப் படித்ததாலோ பாபாசகேப்பை போலவே சமூக விடுதலைக்கு அறிவாயுதத்தை நம்புபவர், அணு ஆயுதங்களையோ ஆயுத போராட்டங்களையோ நம்பாதவர்.
01.01.1818 ஆம் நாள் 800 பட்டியல் சாதி மஹர்களைக் கொண்ட படை 20000 பேஷ்வா படையினரை வெற்றி கொண்ட நிகழ்வுக்கு எழுப்பப்பட்ட நினைவுத் தூண் அமைந்த பீமா கொரேகாவ்னில் கூடும் 200 ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள்
நீதிபதி பி ஃபி சாவந்த் கலந்து கொண்ட விழாவில் பட்டியல் சாதியினரும், மராத்தாக்களும் , இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து இருபது இலட்சம் பேர் கலந்து கொண்டதைத் சீர்குலைக்க அரசின் உதவியோடு திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. போலிஸ் தடியடி நடத்தப்பட்டதில். பட்டியல் சாதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் காயமடைந்து இறந்தான். ஆனால் பழி என்னவோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர்கள் மீது.
அவரது செல்பேசி ஒற்றறிய பயன்படும்
இஸ்ரேலிய மென் பொருளான பெகாசஸ் மூலம் சிதைக்கப்பட்டு அவரது பதிவுகள் போலியாக மறு உருவாக்கம் செய்யப்பட்டதை அவர் மாணவர்கள் கண்டுபிடித்து கூறியதை தனது கைதுக்கு பல மாதங்கள் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.
29.08.2018 ஆம் நாள் நீதிபதி டி ஒய் சந்திரசூட் உச்சநீதிமன்றத்தில் கோரேகாவ்ன் வழக்கின் புலனாய்வு ஒரு சார்புடையதாக உள்ளதாக கூறினார்.
பிரதமர் திருவாளர் மோடி அவர்களை கொலை செய்ய தெல்தும்ப்டே சதி செய்தார் என கூறுவதற்கு, காக்காவைப் பாட வைத்து வடையைப் பறித்த நரியின் கதையை உண்மை என்று நம்பும் இரண்டாம் வகுப்பு குழந்தையின் அறிவை விட சற்றுக் குறைவாகவே இருக்க வேண்டும்.
ஆனந்த் தெல்தும்ப்டேவைப் போன்றே கவுதம் நவ்லக்கா அவர் 01.09.2012 ஆம் ஆண்டு பஸ்தரில் மாவோயிஸ்ட்களின் கிராமங்களில் பயணம் செய்து டேஸ் அண்ட் நைட் இன் தி ஹார்ட் ஆப் ரெபல்லியன் Days and night in the heart of rebellion என்ற நூலை எழுதியவர் எகானமிகல் அண்ட் பொலிடிக்கல் வீக்லி ஆசிரியக்குழு ஆலோசகர்களில் ஒருவர்.
கொரானோ ஊரடங்கின்போது 08.04.2020 அன்று அவர்களது பிணை மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்ற நீதிபதி அருண்மிஸ்ராவுக்கு இருவரின் கல்வி பின்புலமும் அவர்கள் நிரபராதிகள் என்பதும் தெரியாததல்ல.
அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு அளவிலான இடைவெளி இருக்கும் அது அவ்வப்போது தென்படும் அப்போதெல்லாம் மக்களுக்கு நீதியமைப்பின் மீது நம்பிக்கை பிறக்கும். ஜூடிசியல் லாட்டரி போன்ற தீர்ப்புகள் ஆயிரத்தில் ஒன்றே. ஆனால் 08.04.2020 அன்று உச்ச நீதிமன்றம் தங்களது அரசியலமைப்பு சட்ட முகமூடிகளை கழற்றி விட்டு அரசு ஊழியர் மெய் முகத்தை முழுமையாக வெளிக்காட்டிய நாள் அன்றே அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான கோடு அளவு இடைவெளி முற்றிலுமாக மறைந்து விட்டது.
24.03.2020 அன்றே ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழ் இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறையின் அழிவு முழுமையடைந்து விட்டது என எழுதியது. அது சற்று தாமதமான செய்தி.
அதென்னவோ தெரியவில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு 28.01.2020 அன்று குஜராத்தில் சர்தார்புரா படுகொலை என்ற இரத்தத்தை சில்லிட வைக்கும் முறையில் கொடூரமாக மின்சாரம் பாய்ச்சியும் , அமிலத்தை வீசியும் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்த 31 இஸ்லாமியரில் 29 பேர்களை படு கொலை செய்து விசாரணை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட 17 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கி அவர்களை மத்திய பிரதேசத்தில் சமூக சேவை செய்யச் சொல்லியது.அவ்வாறே ஒடே என்ற கிராமத்தில் 26 இஸ்லாமியர் எரித்து கொல்லப்பட்ட வழக்கிலும் 14 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியது.2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்குகளில் இவ்விரண்டு வழக்குகளும் அடங்கும்.
குற்றமற்ற அறிவாளிகளுக்கு பிணை மறுக்கும் உச்ச நீதிமன்றம் இரு நீதிமன்றங்களால் தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியதில் ஆச்சரியம் இல்லை எதிர்காலத்தில் மத்திய பிரதேசத்தில் உச்ச நீதிமன்றத்தின்
வேண்டுகோளுக்கிணங்கி சமூக சேவை செய்யப்போகும் அவர்களது ஒளிப்படங்கள் நாடாளுமன்ற மைய அரங்கில் இடம் பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் ஜூன் மாதம் 1975 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் 103 பத்திரிகையாளர்களை அழைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி அவசர நிலை அறிவிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தார், பின்னர் கைதாகி மூன்று மாதம் சிறைக்குச் சென்றார்.
அந்த கால கட்டத்தில் ஊடக முதலாளிகள் பெரும்பாலோனோர் மண்புழுக்களைப் போல் ஊர்ந்து திரிகின்றார்கள் எனக் கூறியது திருவாளர் எல் . கே. அத்வானி , இன்று அவருக்கே அதே நிலைதான்.
கொரானோவை விடக் கொடிய காலணி வைரஸ் ஒன்று உண்டு அது பெரும் அதிகாரம் கொண்டவர்களின் ஷூக்களின் மேல் தூசியாக படர்ந்திருக்கும் , கொரானோவைப் போன்றே சமூக விலகல் இல்லாமல் தொடுவதன் மூலமும் நாக்கின் மூலமும் பரவி முதுகெலும்பைத் தாக்கும் அந்த வைரஸ் மனித குலத்திற்கே எதிரானது.
@ மூத்த வழக்கறிஞர்
தி.லஜபதி ராய்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

இலான் மஸ்க் பயோகிராபி!
----------------------------------------------
இலான் மஸ்க் குறித்து நிறையவே நூல்கள்
வந்திருக்கின்றன. இவற்றில் பலவும்
biographyகள்.

2015ல் வெளிவந்த ஒரு biography, Ashlee Vance எழுதியது
வெகுவாகப் பிரசித்தம்.

Elon Musk: How the Billionaire CEO 

of SpaceX and Tesla is Shaping our Future


அமேசானில் கிடைக்கிறது. 10 டாலர் விலை;
அதாவது ரூ 700 விலை.

விரும்புவோர் வாங்கிப் படிக்கலாம்.
இளைய தலைமுறைக்கு இந்த நூல் பயன்படும்.
நண்பர் பத்ரி சேஷாத்ரி இந்த நூலை வெகுவாகப்
பரிந்துரைக்கிறார். வாங்குங்கள்; படியுங்கள்;
அறிவைப் பெருக்குங்கள்! 

எனினும் நான் வாங்கப் போவதில்லை. காலம் கடந்து
விட்டது; அவ்வளவுதான்! படித்தவரகள் எவரேனும்
சுவாராஸ்யமாகச் சொன்னால் கேட்கலாம்.
**************************************************
இலான் மஸ்க்கின் இமாலயச் சாதனை!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
இலான் மஸ்க் (Elon Musk)! இவரைத் தெரியவில்லை என்று
சொல்லும் யாரும் முட்டாள் என்றுதான் கருதப்
படுகிறார்கள். சற்றுமுன் இவர் மகத்தானதொரு
உலக சாதனையைப் புரிந்துள்ளார். இவர் புரிந்த
சாதனை விண்வெளிச் சாதனை ஆகும்.

இவரைக் குறித்து நாலைந்து வாரங்களுக்கு முன்பு
ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அது மனதில்
பதிந்து இருக்கிறதா?

இலான் மஸ்க் ஒரு அமெரிக்கர். உலக அளவில்
புகழ் பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்.
மேலும் அவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் ஆவார்.

இனி உலகம் முழுவதும் மின்சாரக் கார்தான் என்று
உங்களுக்குத் தெரியுமா?
டெஸ்லா என்னும் பெயரிலான மின்சாரக் கார்
தயாரிக்கும் தொழிலதிபர்தான் இந்த இலான் மஸ்க்.

அதோடு Space X என்னும் விண்வெளி நிறுவனத்தின்
தலைவரும் இவரே. ஒரே ஒரு ஏவுகணையைப்
பயன்படுத்தி ஒரே launchல் 60 செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏற்றி சாதனை புரிந்தவர் இந்த இலான் மஸ்க்.

ஒரே ஏவுகணை!
ஒரே LAUNCH!
ஆனால் 60 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏற்றி
ORBITல் பொருத்தியவர் இலான் மஸ்க். இந்த சாதனையை
யாராவது முறியடித்து இருக்கிறார்களா?

சரி, இவருடைய லேட்டஸ்ட் சாதனை என்ன? ஆளில்லா
விண்கலங்களை விண்ணில் ஏற்றிய சாதனை மானுட
வரலாற்றில் நிறையவே உண்டு. இலான் மஸ்க் தற்போது
நாசா நிறுவனத்தின் இரண்டு விண்வெளி வீரர்கள்
பயணம் செய்த ஒரு விண்கலத்தை விண்ணில்
செலுத்தி இருக்கிறார்.

இது குறித்த செய்திகளை படியுங்கள்!
இலான் மாஸ்க் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
அமெரிக்காவில் தனியாருக்கும் விண்வெளி ஆய்வில்
ஈடுபட அனுமதி உண்டு.
*************************************************
அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!
அதற்கு விநோதமாகப் பெயரிட்டார் அவர்!
அறியாமையோடு இருப்பது பசியோடு இருப்பது போல!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
யார் அவர்? அவர்தான் இலான் மஸ்க் (Elon Musk).
அவரைத் தெரியவில்லை என்று சொல்லும் யாரும்
முட்டாள் என்றுதான் கருதப் படுகிறார்கள்.

இலான் மஸ்க் ஒரு அமெரிக்கர். உலக அளவில்
புகழ் பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்.
மேலும் அவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் ஆவார்.

இனி உலகம் முழுவதும் மின்சாரக் கார்தான் என்று
உங்களுக்குத் தெரியுமா? பெட்ரோல் டீசலை
எரிபொருளாக உலகம் இனி பயன்படுத்தாது.
அநேகமாக 2030க்குள் உலகம் முழுவதும்
மின்சாரக் கார்கள், பைக்குகள் மட்டுமே இருக்கும்.

டெஸ்லா கார் (Tesla car) என்னும் மின்சாரக் கார்
தயாரிக்கும் தொழிலதிபர் இந்த இலான் மஸ்க்.
அதோடு Space X என்னும் விண்வெளி நிறுவனத்தின்
தலைவரும் இவரே. ஒரே ஒரு ஏவுகணையைப்
 பயன்படுத்தி ஒரே launchல் 60 செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏற்றியவர் இந்த இலான் மாஸ்க்.

அறிவியல் ஒளி படிக்கிற பழக்கம் உண்டா? இது
ஒரு அறிவியல் சஞ்சிகை; மாத வெளியீடு.
இதில் சந்திரயான்-2 பற்றி ஒரு கட்டுரை எழுதினேன்.    
அதில் இலான் மஸ்க் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

இலான் மஸ்க் தன்  குழந்தைக்கு விநோதமாகப்
பெயரிட்டு உள்ளார்.

X Æ A-12 என்று அக்குழந்தைக்குப்

பெயரிட்டுள்ளார். இது உலகம் 

முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கட்டுரையை ஏன் வெளியிடுகிறோம்? குழந்தையின் 

வினோதமான பெயருக்காகவா?

இல்லை. உலகலாவிய புகழ் பெற்ற 

அறிவியல் தொழில்நுட்ப நிபுணரைப் 

பற்றி ஒன்றும் தெரியாமல் அறியாமையுடன் இருக்கக் கூடாது 

என்பதற்காக!

*******************************************  

அப்படியானால் வினோதமான பெயர்?
அது எனக்கு மயிருக்குச் சமம்.கடந்த காலத்துக்குச் செல்ல முடியுமா?
செல்ல முடிந்தால், அதுதான் டைம் டிராவல்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
ஹெச் ஜி வெல்ஸ் தெரியுமா? ஆங்கிலேயே விஞ்ஞானி.
அறிவியல் எழுத்தாளர். அறிவியல் புனைவுகளின்
தந்தை!

இவர் 1895ல் ஒரு புத்தகம் எழுதினார். The Time Machine
என்ற புத்தகமே அது. சிறிய புத்தகம், இது ஒரு
science fiction novel. 100 பக்கத்தை விடக் குறைவாகத்தான்
இருக்கும். இணையத்தில் இந்நூல் இலவச டவுன்லோட்
மூலம் கிடைக்கலாம். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால்
இலவசமாக இந்நூலைப் படிக்கலாம்.

படியுங்கள். கடந்த காலத்துக்குள்  செல்வது பற்றிய
அறிவியல் புனைவு.   

ஹெச் ஜி வெல்ஸின் இந்த நாவல் பலமுறை
படமாக்கப் பட்டுள்ளது. கடைசியாக 2002ல்
தயாரிக்கப்பட்ட படம் உள்ளது. அப்படத்தில் இருந்து
TIME TRAVEL பற்றிய காட்சி மட்டும் 8 நிமிடம்
ஓடும் வீடியோவாக யூடியூப்பில் உள்ளது. அந்த
வீடியோவை 21 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அதை இங்கு கொடுத்துள்ளேன். பார்க்கவும்.

ரிலேட்டிவிட்டி தியரி வந்த பிறகுதான், TIME TRAVEL 
என்பது பிரபலமானது. ஆனால் அதற்கு முன்பே
ஹெச் ஜி வெல்ஸ் TIME TRAVEL பற்றி எழுதியது
பெரும் பிரமிப்புக்கு உரியது.

தற்போது TIME TRAVEL பற்றிய சுமார் 20, 30 படங்கள்
இதுவரை வெளிவந்துள்ளன. இந்தப் படங்களைப்
பாருங்கள். எல்லாப் படங்களும் ஆங்கிலப்
படங்கள். எனவே ஆங்கிலம் தெரிந்தால்தான்
இப்படங்களைப் பார்க்க முடியும்.

30 படங்கள் குறித்த பட்டியலைக் கொண்ட
ஒரு வீடியோவையும் இங்கு கொடுத்துள்ளேன்.

ஆசிரியர் தினமான இன்று, TIME TRAVEL குறித்த
ஓர் எளிய போதனை இது.
************************************************  வியாழன், 3 செப்டம்பர், 2020

இதுவரை உருதுவும் ஆங்கிலமும் மட்டுமே
ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழிகளாக
இருந்தன. தற்போது மேலும் மூன்று மொழிகளைச்
சேர்க்க (காஷ்மீரி, டோக்ரி,இந்தி) ஒரு மசோதா
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெரிவித்து உள்ளது.

இதுதான் உண்மை. காஷ்மீரி மொழி இதுவரை
ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழியாக
இருந்ததே இல்லை.


ஆ ராசாவுக்கு பதவி வழங்க சபரீசன், துர்கா
கடும் எதிர்ப்பு! நாளைக்கு உதயநிதிக்கு
போட்டியாக வந்து விடுவான் என துர்கா அச்சம்! 


இதெல்லாம் மிக மிக எளிய விஷயம்.
நாடாளுமன்றத்தில் ஒரு குரல் கொடுத்தாலோ,
அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்துப்
பேசினாலோ வேலை முடிந்து விடும்.


சும்மா தொட்டதெற்கெல்லாம், "நாம் அடிமை,
நாம் அடிமை" என்று புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.
கருணாநிதி ஒரு படிக்காத முட்டாள்; அவருக்கு
ஆங்கிலம் தெரியாது. எனவே சொந்தமாக ஆங்கில
ஏடுகளை படித்து, ஐநா பற்றியெல்லாம் அவரால்
தெரிந்து கொள்ள முடியாது.

யாராவது அவரிடம் போய், " ஐநா சபையில் தமிழை
அலுவல் மொழியாகக் கொண்டு வர மனுக் கொடுக்க
வேண்டும்" என்று சொன்னால் அவரே அதற்கான
ஏற்பாட்டைச் செய்திருப்பார். இதெல்லாம் திமுக போன்ற
அரசியல் கட்சிகளுக்கு லட்டு சாப்பிடுவது போன்றது.மு க ஸ்டாலினுக்கு வைகோ போட்டியாக வந்தபோது
முரசொலி மாறனும் கருணாநிதியும் சேர்ந்து
வைகோவை ஒழித்துக் கட்டினார்கள். காலப்போக்கில்
உதயநிதிக்குப் போட்டியாக ஆ ராசா வந்து விடுவார்
என்பதனால், இப்போதே அவரை குறுக்கியும்
சுருக்கியும் வைக்கின்றனர் துர்காவும்  சபரீசனும்.

    

  புதன், 2 செப்டம்பர், 2020

பரித்ராணாய ஸாதூனாம் - விநாசாய ச துஷ்கிருதாம்! தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய - ஸம்பவாமி யுகே யுகே!
பரித்ராணம் - பாதுகாப்பு.
காலில் அணியும் செருப்பைக் கூட "பாதத்ராணம் - என்று குறிப்பிடுவதுண்டு - பாதத்துக்கான பாதுகாப்பு!
அதை 'செருப்பு' என்று குறிப்பிடாமல் 'பாதரட்சை'
(பாதரக்ஷா) எனக் குறிப்பிடுவது உண்டு.
பாதத்தின் காப்பு - என்று பொருள்.
அதனால்தான் அதைக் கழற்றும் போது கூட, மூலைக்கு ஒன்றாக உதறி எறியாமல், அருகருகே அந்த ஜோடி சீராக இருக்கும்படி வைக்க வேண்டும்.
பரித்ராணம் - பாதுகாப்பு.
பரித்ராணய - பாதுகாப்புக்காக...
யாருடைய பாதுகாப்புக்காக?
ஸாதூனாம் - நல்லவர்களுடைய...
விநாசாய ச - மற்றும் அழிவுக்காகவும் (சமஸ்கிருதத்தில் இந்த 'ச' என்பது இங்கிலீஷில் "And" போல)
யாருடைய அழிவுக்காக?
துஷ்க்ருதாம் - தீய செயல்களைச் செய்வோருடைய...
அதன் விளைவு என்னவாக இருக்கும்?
"தர்மம் நிலை நிறுத்தப்படும்"-
வெறுமனே தீயவர்களை அழித்துவிட்டு மட்டும், இனி எப்படியோ ஆகட்டும் என்று போய்விடக் கூடாது!
நல்லவர்கள் இனி அச்சமின்றி வாழ ஒரு தர்மத்தையும் நிலை நாட்ட வேண்டும்!
ஸ்தாபித்தல் - என்றால் நிறுவுகின்ற என்ற வினைச்சொல்.
அதன் அந்த வினைச் சொல்லுக்கு உரிய "பெயர்ச் சொல் வடிவம்"- ஸ்தாபனம்!
(நட - வினைச்சொல் ; நடை - அதற்குரிய பெயர்ச்சொல் வடிவம் போல)
ஸம்ஸ்தாபனம் - நன்கு நிறுவுதல்.
எதை? தர்மத்தை.
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தம் - தர்மத்தை நிறுவும் நோக்கம்!
'அர்த்தம்'- என்றால் நோக்கம் என்பதும் ஒரு அர்த்தம்!
"அவன் காரியார்த்தமாகப் பழகுகிறான்"- என்கிறோம் அல்லவா?
ஒரு நோக்கத்துக்காகச் செயல்படுவது!
இங்கே - தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய - தர்மத்தை நிலை நாட்டும் நோக்கத்துக்காக!
ஸம்பவாமி - நான் தோன்றுகிறேன்.
எப்போது?
யுகே - யுகே. (ஒவ்வொரு யுகத்திலும்)
இப்போது ஸ்லோகத்தை உரைநடை பாணியில் வரிசைப்படுத்துவோம்.
ஸாதூனாம் பரித்ராணாய - நல்லவர்களுடைய பாதுகாப்புக்காகவும்,
துஷ்க்ருதாம் விநாசாய - தீயவர்களுடைய பேரழிவுக்காகவும்,
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ச - தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
(அஹம்) - (நான்)
யுகே யுகே ஸம்பவாமி - ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்!
காக்கும் கருணைக் கடவுளான திருமால் -
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக இந்த மண்ணில் இறங்கிய அவதாரத் திருநாள் இன்று!
அவதரதி - என்றால் மேலிருந்து இறங்குகிறான் என்று பொருள்.
அவதரணம் - என்றால் அவதரித்தல்!
விண்ணுலகில் இருந்து மண்ணில் இறங்குவதால் "அவதாரம்" என அழைக்கப்பட்டனர்!
கிருஷ்ண - அவதாரம் - கிருஷ்ணாவதாரம்!
"அல்லவை தேய அறம் பெருகும் - நல்லவை நாடி இனிய சொலின் "- என்று வள்ளுவர் பிற்காலத்தில் கூறியதும் இதுதான்!
'அல்லவை தேய வேண்டும் - அறம் பெருக வேண்டும்'- கீதை கூறியதைக் குறளும் ஏற்கிறது!
அதற்கான வழியை மேலும் இன்னொரு வகையிலும் வள்ளுவர் கூறுகிறார்.
"கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் - பைங்கூழ் களை கட்டதனொடு நேர்"- என்பார்!
'இனிய சொலின்'- திருந்தாதவர்களை, வேந்தன் 'ஒறுத்துதான்'- தண்டித்துதான் ஆக வேண்டும்!
வள்ளுவரின் நீதிமன்றத்தில் 'கருணை மனு'- வுக்கு எல்லாம் இடமில்லை!
அப்படித் தீயோரை மாய்ப்பது - "பசுமையான விளைச்சலுக்கு நடுவே முளைத்துள்ள களைகளை அறுத்து எடுப்பது போல"- என்கிறார் வள்ளுவர்.
"பைங்கூழ் களை கட்டதனொடு நேர்" - "துஷ்கிருதாம் விநாசாய"...!
அல்லவை தேய - அறம் பெருக...
"தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய"...
நல்லவை நாடி இனிய சொலின் ...
ஆம், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு...
'நல்லவை நாடி இனியவே சொன்னதால்'- கீதையை உபதேசித்ததால்...
'அல்லவை தேய்ந்தது - அறம் பெருகியது
makkal yuththakkuzhuvil


மக்கள் யுத்தக்குழுவில் இருக்கும் வரை
மார்க்சிய லெனினியவாதியாகத்தான் இருந்தார்.
ஈழப் போராளிக் குழுக்களைப் பார்த்து,
தேசியஇன விடுதலையே பிரதானமானது
என்ற குட்டி முதலாளியச்  சேற்றுக்குள் வீழ்ந்தார்.

உடன் இருந்தவர்களைக் கொண்டு ஏற்கனவே
இதற்கு முன்பு சிறு அளவில் சில வங்கிக் கொள்ளைகளை
நடத்தி இருந்தார். பணம் கைநிறையக்
கிடைத்ததும் சிந்தனை மாற்றம் அடைந்தது.
சொகுசு வாழக்கையில் தஞ்சம் அடைய நேரிட்டது.
மக்கள் யுத்தக் குழு தியாகத்தையும் அர்ப்பணிப்பையும்
கோரியது. சொந்தமாக ஆரம்பித்த தனிக்கட்சி
சொகுசைத் தந்தது. விளைவு பெருத்த சீரழிவு.
  

ஜல்கான் மாவட்ட

1986 டிசம்பரில் அரசியல் சட்ட எரிப்பு என்பதற்காக
திமுகவின் 10 MLAகள் பி ஹெச் பாண்டியனால்
தகுதிநீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்தனர்.
இதற்கும் தமிழரசனுக்கும் தொடர்பில்லை. திமுக
அதிமுக போன்ற கட்சிகளின் பூசல்களை தமிழரசன்
ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை. தமிழரசன்
அந்த அளவுக்கு இழிந்தவர் அல்லர்.

மார்க்சியம் பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும்
ஏற்பதில்லை. தமிழரசனின் அரியலூர் ரயில் கவிழ்ப்பு
என்பது குட்டி முதலாளிய பயங்கரவாத நடவடிக்கை. அது
ஒருபோதும் மார்க்சியச் செயல்பாடு ஆகாது.

அப்படியானால் கோவை குண்டு வெடிப்பு நடத்தி பலரைக்
கொன்ற அல்உம்மா பாட்சாவும் சரி, மும்பையில்
குண்டு வெடிப்பு நிகழ்த்தி விட்டு வெளிநாட்டுக்கு
ஓடிவிட்ட தாவூத் இப்ராஹிமும் புரட்சியாளர்கள்
என்று ஆகி விடும். தாவூத் இப்ராஹிமை புரட்சியாளர்
என்று மார்க்சியம் ஏற்பதில்லை.


தங்களின் இரண்டாவது பத்தி முற்றிலும் அபத்தம்.
CPM புரட்ச்சியை நடத்தும் என்றால், தாராளமாக எவர்
ஒருவரும் அங்கு சென்று சேரலாம். சபரீசனிடம்
கோடி கோடியாக வாங்கி புரட்சி நடத்துவார்கள்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

தமிழ் தேசியஇனத் தனி விடுதலை!
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸைக் கவிழ்க்க
அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தை
வெடிவைத்துத் தகர்த்த தோழர் தமிழரசன்!
-------------------------------------------------------------
உயிருடன் இருந்திருந்தால், இன்றைக்கு தோழர்
தமிழரசனுக்கு 75 வயது நிரம்பி இருக்கும். ஆனால்
1987ல் தமது 42ஆவது வயதில் தமிழரசன் இறந்து
விட்டார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர் 1960களில்
பொறியியல் (BE Chemical Engg) படித்துக் கொண்டிருந்தார்.

அவரின் காலத்தில், பொறியியல் படிப்பு என்பது
இன்றுள்ளது போல, 8 செமஸ்டர்களைக் கொண்டதல்ல.
மாறாக ஐந்தாண்டுப் பட்டப் படிப்பாகும். மொத்தத்
தமிழ்நாட்டிலுமே அன்று BE படிப்புக்கு சில ஆயிரம்
இடங்கள்தான்.

நகரங்களில் மட்டுமே பொறியியல் கல்லூரிகள் இருந்த
அக்காலத்தில் கிராமப்புற மாணவர்கள் ஹாஸ்டலில்
தங்கித்தான் படிக்க வேண்டும். இதற்கான செலவும்
சாதாரணமானதல்ல. இவ்வாறு அன்று 1960களில்
வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் மட்டுமே
பொறியியல் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

நக்சல்பாரி ஆயுத எழுச்சி, மார்க்சிய லெனினியக்
கட்சியை சாரு மஜூம்தார் தொடங்கியது ஆகியவற்றைத்
தொடர்ந்து, நாடெங்கும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத்
துறந்து புரட்சியில் ஈடுபட்டனர். தோழர் தமிழரசனும்
பொறியியல் படிப்பைத் துறந்து மா-லெ இயக்கத்தில்
சேர்ந்தார்.

ஒரு தலைசிறந்த மார்க்சிய லெனினியப் போராளியாக
களத்தில் செயல்பட்ட தமிழரசனுக்கு, ஏக இந்தியப்
புரட்சி என்பதில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
அருகிலுள்ள தமிழ் ஈழத்தில், பல்வேறு குட்டி முதலாளிய
ஆயுதக் குழுக்கள் ஈழ விடுதலை என்ற இலக்குடன்
செயல்பட்டு வருவது அவரை ஈர்த்தது.
எனவே ஏக இந்தியப் புரட்சி என்ற முடிவைக் கொண்டிருந்த,
"மக்கள் யுத்தக் குழு"வில் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல்,
தோழர் தமிழரசன் கட்சியை விட்டு விலகினார்.

தனித்தமிழ்நாடு விடுதலை, தமிழ்நாடு அளவிலான
புரட்சி ஆகிய இலக்குகளைக் கொண்ட தமிழ்நாட்டு
அளவிலான தனிக்கட்சியை தமிழரசன்  அமைத்தார்.
இதில் தமிழரசனின் மேதைமையும் நேர்மையும் எதில்
பளிச்சிடுகின்றன என்றால், தனித் தமிழ்நாட்டை
ஆயுதப் போராட்டம் மூலமாகவே  அடைய முடியும்
என்பதில் அவர் தெளிவாக இருந்தார் என்பதில்தான்.

எனவே அவர் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற
ஆயுதப் படையை அமைத்தார். தானும் ஆயுதப் பயிற்சி
பெற்றார்.தன்னுடன் வந்த பல இளைஞர்களுக்கும்
ஆயுதப் பயிற்சி அளித்தார். பல்வேறு சின்னஞ் சிறிய
ஆயுத நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1986ல் அவரின் தமிழ்நாடு விடுதலைப்படை ஒரு
மிகப்பெரிய ரயில் கவிழ்ப்பை நடத்தியது. தமிழரசனே
முன்னின்று நடத்தியது இது. சென்னையில் இருந்து
திருச்சி வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக்
கவிழ்த்தார் தமிழரசன்.

அரியலூரில் உள்ள மருதையாற்று ரயில் பாலத்தை
தமிழரசனே நேரில் பங்கேற்று, வெடிகுண்டு வைத்துத்
தகர்த்தார். நள்ளிரவில் இருட்டில் அவ்வழியே வந்த
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 25 பேர்
இறந்து போனார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர்.
கைகால் துண்டாகி, காலமெல்லாம் உடல் ஊனத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் சிலர்.

அப்பாவி மக்கள் மீது தமிழரசன் நடத்திய மூர்க்கத்
தனமான பயங்கரவாதச் செயலாகும் இது. இதற்கும்
மார்க்சிய லெனினியத்துக்கும் எள்முனை அளவேனும்
தொடர்பில்லை. மார்க்சியம் என்பது மக்களைப்
பாதுகாக்கத்தானே தவிர, மக்களை பச்சைப்
படுகொலை செய்வதற்கு அல்ல. தமிழரசனின்
இந்தப் பயங்கரவாதப் பச்சைப் படுகொலை
மக்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

அதுவரை மார்க்சிய லெனினியப் போராளியாகத்
திகழ்ந்து வந்த தோழர் தமிழரசன், அப்பாவித்
தமிழர்களைப் படுகொலை செய்த பின்னர் மக்களின்
எதிரியான பயங்கரவாதி ஆனார். இந்த பயங்கரவாதச்
செயலுக்குப் பின்னர், மக்களிடம் தமிழரசனுக்கு
இருந்த நற்பெயர் மறைந்து அவர் மக்களால் வெறுக்கப்
படத் தொடங்கினார். அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு
இந்த பயங்கரவாதச் செயலுக்குப் பின் மங்கத் தொடங்கியது.  
அநியாயமாக இறந்து போன 25 பேரின் குடும்பங்கள்
தமிழரசனை மன்னிக்கத் தயாராக இல்லை. 

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு பெரும்
பணம் தேவை. அதற்கான பணத்தைக் கொள்ளை
அடித்துத்தான் திரட்ட முடியும் என்று முடிவு
செய்தார் தமிழரசன். அவரின் சொந்த ஊரான
பொன்பரப்பியில் ஸ்டேட் வங்கி உள்ளது. நிறையப்
பணம் உள்ள வங்கி அது. அங்கு கொள்ளையடிக்க
முடிவு செய்தார். 1987 செப்டம்பரில் அக்கொள்ளைச்
சம்பவம் நிகழ்ந்தது.

தமிழரசனின் நேரடித் தலைமையில் நடைபெற்ற இந்த வங்கிக் கொள்ளையில், அவரின் கூட்டாளிகள் நால்வருடன்
மொத்தம் ஐந்து பேர் பங்கேற்றனர். வங்கிக்குள் நுழைந்து
தலைமைக் காசாளரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை
வைத்து அழுத்தி, அவரிடம் இருந்து பணப்பேழையின்
(cash chest) சாவிகளைப் பறித்து, பணத்தைக் கோடிக்
கணக்கில் அள்ளிக்கொண்டு வெளியே வந்தனர்
தமிழரசனும் அவரின் கூட்டாளிகளும்.

வெளியில் வாங்கி வாசலில் மக்களோடு மக்களாக
கியூ பிராஞ்சு போலீசார் கணிசமான அளவில் நின்றனர்.
ராமச்சந்திர மேனனின் போலீசு நக்சல்பாரி ஒழிப்பில்
மிகவும் குரூரமானது.என்பதை இங்கு நினைவில்
கொள்ள வேண்டும்.

தமிழரசனிடம் ஆயுதங்களும் நாட்டு வெடிகுண்டுகளும்
உண்டு என்பதை நன்கறிந்திருந்த கியூ பிராஞ்சு போலீசார்
சற்றும் எதிர்பாரா நேரத்தில் தமிழரசனின் அக்குளுக்குள்
தங்களின் கரங்களைச் செலுத்தி, தமிழரசன் தன்
கரங்களைப் பயன்படுத்த முடியாமல் அவரை முடக்கினர்.
(He was totally immobilised). தமிழரசனின் கூட்டாளிகளும்
அவ்வாறே முடக்கப் பட்டனர். இதன் விளைவாக நவீன
ஆயுதங்களை தமிழரசன் வைத்திருந்த போதும், அவற்றைப்
பயன்படுத்த முடியாமல் போனது.    

அதன் பிறகு, திரளான பொதுமக்களும் கியூ பிராஞ்சு
போலீசாரும் சேர்ந்து தமிழரசனை அடித்தே கொன்றனர்.
தமிழரசனின் கூட்டாளிகளும் அடித்தே கொல்லப் பட்டனர்.

தமிழரசனின் சரி-தவறுகள்!
--------------------------------------------
1) தேர்தல் அரசியலைப் புறக்கணித்து, ஆயுதப் போராட்ட
அரசியலை மேற்கொண்டது சரி.
2) மிகச்சிறந்த களப் போராளியாக, மார்க்சிய லெனினிய
மக்கள் ஊழியராக, அதிகபட்ச அர்ப்பணிப்புடன்
செயல்பட்டது சரி.
3) ஈழ விடுதலையை, தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்தது
சரி.     
4) தனித் தமிழ்நாடு, தமிழ்நாடு அளவிலான புரட்சி
என்னும் அவரின் கோட்பாட்டுப் பிறழ்வு ஒரு
குட்டி முதலாளித்துவ விலகல் ஆகும். இதுவே அவரின்
பின்னாளையத் தவறுகள் அனைத்துக்கும் மூலம் ஆகும்.
5) ஒரு வங்கிக் கொள்ளையை ஒழுங்காக நடத்தத்
தெரியாத தமிழரசன், மொத்தத் தமிழ்நாட்டுக்கும்
ஆயுதப் போராட்டத்தின் வழியாக விடுதலை பெற்று
விட முடியும் என்று நம்பியது பெரும்
கற்பனாவாதம் ஆகும்.
6) மருதையாற்றுப் பாலத்தை வெடிகுண்டு வைத்துத்
தகர்த்தது தமிழரசனின் குட்டி முதலாளிய
பயங்கரவாதச் செயலாகும். இது உழைக்கும் மக்களுக்கு
எதிரானது. இதை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.
அந்த ரயிலில் யாரேனும் உயர் அதிகாரியோ, ஆளுநரோ
அமைச்சரோ வந்தார்களா, இல்லையே. அப்பாவிப்
பொதுமக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்கிறவன்
வெறி பிடித்த பயங்கரவாதியே தவிர புரட்சியாளன்
ஆக மாட்டான்.
7) மார்க்சியம் வன்முறையை ஏற்றுக் கொண்ட
தத்துவம்தான். மார்க்சியம் எந்த வன்முறையை
ஏற்றுக் கொள்கிறது, எந்த வன்முறையை நிராகரிக்கிறது
என்று பார்க்க வேண்டும்.

நிராயுதபாணிகளான அப்பாவி உழைக்கும் மக்கள் மீது
ஆளும் வர்க்கம் பிரயோகிக்கும் பிற்போக்கான
வன்முறையை மார்க்சியம் ஒருபோதும்
ஏற்பதில்லை. ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்கும்
மக்களின் புரட்சிகர வன்முறையை மட்டுமே
மார்க்சியம் ஆதரிக்கிறது.

ரஷ்யப் புரட்சியிலோ சீனப் புரட்சியிலோ பாலங்களை
வெடிவைத்துத் தகர்த்து ரயில்களைக் கவிழ்த்து
அப்பாவி மக்களை கம்யூனிஸ்டுகள் படுகொலை
செய்ததில்லை.

மருதையாற்றுப் பாலத்தை குண்டு வைத்துத் தகர்த்து
25 பேரைப் பச்சைப் படுகொலை செய்த தமிழரசனின்
வன்முறை உழைக்கும் மக்களுக்கு எதிரானது.
எனவே அது பிற்போக்கானது. அதை ஒருபோதும்
ஏற்க முடியாது. புரட்சி என்பது ஒன்றுமறியா அப்பாவி
மக்களைப் படுகொலை செய்வதில்லை.

---------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் (facts) யாவும்
33 ஆண்டுகளுக்கு முன்பு, 1987ல், எங்களின் யூனிட்டில் 
முழுநேர ஊழியர் கூறியதாகும். இதில் எதுவும் இன்று
கிடைத்த விவரங்கள் அல்ல.
****************************************************** 

மார்க்சிய பால பாடம் படித்தவர்களுக்கு ஒரு
விஷயம் தெரியும். புரட்சி என்பது, அதிலும் ஆயுதம்
தாங்கிய புரட்சி என்பது ஏற்படுவதற்கு குறைந்தது
இரண்டு நிபந்தனைகள் உண்டு.
1) புரட்சிக்கான புறநிலைமைகள் (objective conditions)
கனிந்திருக்க வேண்டும்.
2) கனிந்துள்ள புறநிலைமைகளைப் பயன்படுத்தும்
அளவுக்கு வலிமையாக அகநிலைச் சக்திகள்
வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இங்கு அகநிலைச்
சக்திகள் என்பது புரட்சியை நடத்தும் கட்சியைக்
குறிக்கும்.
3) இந்த இரண்டு நிலைமைகளும் பூர்த்தி அடைந்திருந்தால்
மட்டுமே ஆயுதம் தாங்கிய புரட்சி வரும்.
இதுதான் மார்க்சிய அரிச்சுவடி. இந்தியாவில் இன்று இந்த
இரண்டு நிலைமைகளும் பூர்த்தி அடையவில்லை என்பது
அனைத்து கம்யூனிஸ்ட் கடசிகளின் ஏகோபித்த கருத்து.

இதைத்தான் புரட்சி என்பது மாலைநேரத்து விருந்து
அல்ல என்று கூறினார் மாவோ. ஆனால் புழுவினும்
இழிந்த குட்டி முதலாளித்துவம் புரட்சி என்பது
தின்பண்டம் போன்றது என்று நினைக்கிறது.

பகலவன் அவர்களே, உங்கள் தாய்நாட்டுக்குப்
போங்கள். அங்கு போய் ராஜபக்சேவை எதிர்த்துப்
போராடுங்கள். அப்போதுதான் புரட்சி என்றால்
என்னவென்று தெரியும். உங்களுடைய பெறுமதி
என்ன என்று உங்களுக்கும் தெரியும்.
வார்த்தைகளை அளந்து பேசவும்.


மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்

பொழிப்புரை!
----------------------
(திருஞான சம்பந்தர் தேவாரம்)
------------------------------------------------

திருத்தமுற நால்வேதங்களையும் நாள்தோறும்
ஓதி வாழும் அந்தணர்கள் நிறைந்த திருப்பறியலூரில் 
எங்கு நோக்கினும் பூத்துக் குலுங்கும் சோலைகளின்
காட்சி விரிந்துகொண்டே செல்கிறது.

இவ்வூரின் இறைவன் வீரட்டேசுவரன் வேறு யாரும்
அல்லன்; சிவபெருமானே. அவன் நோய் தீர்க்கும்
மருந்தாவான். உயிர் தருவிக்கும் அமுதம் ஆவான்.
மயானத்துள் நின்று கொண்டு பெருந்தாண்டவம் ஆடும்
ஈசன் ஆவான். பெருக்கெடுத்து வரும் குளிர்ந்த
கங்கை நதியைத் தன் தலையில் தாங்கிய
சிவபெருமான் ஆவான்.
-------------------------------------------------------------------------------