தமிழ் தேசியஇனத் தனி விடுதலை!
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸைக் கவிழ்க்க
அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தை
வெடிவைத்துத் தகர்த்த தோழர் தமிழரசன்!
-------------------------------------------------------------
உயிருடன் இருந்திருந்தால், இன்றைக்கு தோழர்
தமிழரசனுக்கு 75 வயது நிரம்பி இருக்கும். ஆனால்
1987ல் தமது 42ஆவது வயதில் தமிழரசன் இறந்து
விட்டார்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர் 1960களில்
பொறியியல் (BE Chemical Engg) படித்துக் கொண்டிருந்தார்.
அவரின் காலத்தில், பொறியியல் படிப்பு என்பது
இன்றுள்ளது போல, 8 செமஸ்டர்களைக் கொண்டதல்ல.
மாறாக ஐந்தாண்டுப் பட்டப் படிப்பாகும். மொத்தத்
தமிழ்நாட்டிலுமே அன்று BE படிப்புக்கு சில ஆயிரம்
இடங்கள்தான்.
நகரங்களில் மட்டுமே பொறியியல் கல்லூரிகள் இருந்த
அக்காலத்தில் கிராமப்புற மாணவர்கள் ஹாஸ்டலில்
தங்கித்தான் படிக்க வேண்டும். இதற்கான செலவும்
சாதாரணமானதல்ல. இவ்வாறு அன்று 1960களில்
வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் மட்டுமே
பொறியியல் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
நக்சல்பாரி ஆயுத எழுச்சி, மார்க்சிய லெனினியக்
கட்சியை சாரு மஜூம்தார் தொடங்கியது ஆகியவற்றைத்
தொடர்ந்து, நாடெங்கும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத்
துறந்து புரட்சியில் ஈடுபட்டனர். தோழர் தமிழரசனும்
பொறியியல் படிப்பைத் துறந்து மா-லெ இயக்கத்தில்
சேர்ந்தார்.
ஒரு தலைசிறந்த மார்க்சிய லெனினியப் போராளியாக
களத்தில் செயல்பட்ட தமிழரசனுக்கு, ஏக இந்தியப்
புரட்சி என்பதில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
அருகிலுள்ள தமிழ் ஈழத்தில், பல்வேறு குட்டி முதலாளிய
ஆயுதக் குழுக்கள் ஈழ விடுதலை என்ற இலக்குடன்
செயல்பட்டு வருவது அவரை ஈர்த்தது.
எனவே ஏக இந்தியப் புரட்சி என்ற முடிவைக் கொண்டிருந்த,
"மக்கள் யுத்தக் குழு"வில் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல்,
தோழர் தமிழரசன் கட்சியை விட்டு விலகினார்.
தனித்தமிழ்நாடு விடுதலை, தமிழ்நாடு அளவிலான
புரட்சி ஆகிய இலக்குகளைக் கொண்ட தமிழ்நாட்டு
அளவிலான தனிக்கட்சியை தமிழரசன் அமைத்தார்.
இதில் தமிழரசனின் மேதைமையும் நேர்மையும் எதில்
பளிச்சிடுகின்றன என்றால், தனித் தமிழ்நாட்டை
ஆயுதப் போராட்டம் மூலமாகவே அடைய முடியும்
என்பதில் அவர் தெளிவாக இருந்தார் என்பதில்தான்.
எனவே அவர் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற
ஆயுதப் படையை அமைத்தார். தானும் ஆயுதப் பயிற்சி
பெற்றார்.தன்னுடன் வந்த பல இளைஞர்களுக்கும்
ஆயுதப் பயிற்சி அளித்தார். பல்வேறு சின்னஞ் சிறிய
ஆயுத நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1986ல் அவரின் தமிழ்நாடு விடுதலைப்படை ஒரு
மிகப்பெரிய ரயில் கவிழ்ப்பை நடத்தியது. தமிழரசனே
முன்னின்று நடத்தியது இது. சென்னையில் இருந்து
திருச்சி வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக்
கவிழ்த்தார் தமிழரசன்.
அரியலூரில் உள்ள மருதையாற்று ரயில் பாலத்தை
தமிழரசனே நேரில் பங்கேற்று, வெடிகுண்டு வைத்துத்
தகர்த்தார். நள்ளிரவில் இருட்டில் அவ்வழியே வந்த
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 25 பேர்
இறந்து போனார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர்.
கைகால் துண்டாகி, காலமெல்லாம் உடல் ஊனத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் சிலர்.
அப்பாவி மக்கள் மீது தமிழரசன் நடத்திய மூர்க்கத்
தனமான பயங்கரவாதச் செயலாகும் இது. இதற்கும்
மார்க்சிய லெனினியத்துக்கும் எள்முனை அளவேனும்
தொடர்பில்லை. மார்க்சியம் என்பது மக்களைப்
பாதுகாக்கத்தானே தவிர, மக்களை பச்சைப்
படுகொலை செய்வதற்கு அல்ல. தமிழரசனின்
இந்தப் பயங்கரவாதப் பச்சைப் படுகொலை
மக்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
அதுவரை மார்க்சிய லெனினியப் போராளியாகத்
திகழ்ந்து வந்த தோழர் தமிழரசன், அப்பாவித்
தமிழர்களைப் படுகொலை செய்த பின்னர் மக்களின்
எதிரியான பயங்கரவாதி ஆனார். இந்த பயங்கரவாதச்
செயலுக்குப் பின்னர், மக்களிடம் தமிழரசனுக்கு
இருந்த நற்பெயர் மறைந்து அவர் மக்களால் வெறுக்கப்
படத் தொடங்கினார். அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு
இந்த பயங்கரவாதச் செயலுக்குப் பின் மங்கத் தொடங்கியது.
அநியாயமாக இறந்து போன 25 பேரின் குடும்பங்கள்
தமிழரசனை மன்னிக்கத் தயாராக இல்லை.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு பெரும்
பணம் தேவை. அதற்கான பணத்தைக் கொள்ளை
அடித்துத்தான் திரட்ட முடியும் என்று முடிவு
செய்தார் தமிழரசன். அவரின் சொந்த ஊரான
பொன்பரப்பியில் ஸ்டேட் வங்கி உள்ளது. நிறையப்
பணம் உள்ள வங்கி அது. அங்கு கொள்ளையடிக்க
முடிவு செய்தார். 1987 செப்டம்பரில் அக்கொள்ளைச்
சம்பவம் நிகழ்ந்தது.
தமிழரசனின் நேரடித் தலைமையில் நடைபெற்ற இந்த வங்கிக் கொள்ளையில், அவரின் கூட்டாளிகள் நால்வருடன்
மொத்தம் ஐந்து பேர் பங்கேற்றனர். வங்கிக்குள் நுழைந்து
தலைமைக் காசாளரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை
வைத்து அழுத்தி, அவரிடம் இருந்து பணப்பேழையின்
(cash chest) சாவிகளைப் பறித்து, பணத்தைக் கோடிக்
கணக்கில் அள்ளிக்கொண்டு வெளியே வந்தனர்
தமிழரசனும் அவரின் கூட்டாளிகளும்.
வெளியில் வாங்கி வாசலில் மக்களோடு மக்களாக
கியூ பிராஞ்சு போலீசார் கணிசமான அளவில் நின்றனர்.
ராமச்சந்திர மேனனின் போலீசு நக்சல்பாரி ஒழிப்பில்
மிகவும் குரூரமானது.என்பதை இங்கு நினைவில்
கொள்ள வேண்டும்.
தமிழரசனிடம் ஆயுதங்களும் நாட்டு வெடிகுண்டுகளும்
உண்டு என்பதை நன்கறிந்திருந்த கியூ பிராஞ்சு போலீசார்
சற்றும் எதிர்பாரா நேரத்தில் தமிழரசனின் அக்குளுக்குள்
தங்களின் கரங்களைச் செலுத்தி, தமிழரசன் தன்
கரங்களைப் பயன்படுத்த முடியாமல் அவரை முடக்கினர்.
(He was totally immobilised). தமிழரசனின் கூட்டாளிகளும்
அவ்வாறே முடக்கப் பட்டனர். இதன் விளைவாக நவீன
ஆயுதங்களை தமிழரசன் வைத்திருந்த போதும், அவற்றைப்
பயன்படுத்த முடியாமல் போனது.
அதன் பிறகு, திரளான பொதுமக்களும் கியூ பிராஞ்சு
போலீசாரும் சேர்ந்து தமிழரசனை அடித்தே கொன்றனர்.
தமிழரசனின் கூட்டாளிகளும் அடித்தே கொல்லப் பட்டனர்.
தமிழரசனின் சரி-தவறுகள்!
--------------------------------------------
1) தேர்தல் அரசியலைப் புறக்கணித்து, ஆயுதப் போராட்ட
அரசியலை மேற்கொண்டது சரி.
2) மிகச்சிறந்த களப் போராளியாக, மார்க்சிய லெனினிய
மக்கள் ஊழியராக, அதிகபட்ச அர்ப்பணிப்புடன்
செயல்பட்டது சரி.
3) ஈழ விடுதலையை, தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்தது
சரி.
4) தனித் தமிழ்நாடு, தமிழ்நாடு அளவிலான புரட்சி
என்னும் அவரின் கோட்பாட்டுப் பிறழ்வு ஒரு
குட்டி முதலாளித்துவ விலகல் ஆகும். இதுவே அவரின்
பின்னாளையத் தவறுகள் அனைத்துக்கும் மூலம் ஆகும்.
5) ஒரு வங்கிக் கொள்ளையை ஒழுங்காக நடத்தத்
தெரியாத தமிழரசன், மொத்தத் தமிழ்நாட்டுக்கும்
ஆயுதப் போராட்டத்தின் வழியாக விடுதலை பெற்று
விட முடியும் என்று நம்பியது பெரும்
கற்பனாவாதம் ஆகும்.
6) மருதையாற்றுப் பாலத்தை வெடிகுண்டு வைத்துத்
தகர்த்தது தமிழரசனின் குட்டி முதலாளிய
பயங்கரவாதச் செயலாகும். இது உழைக்கும் மக்களுக்கு
எதிரானது. இதை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.
அந்த ரயிலில் யாரேனும் உயர் அதிகாரியோ, ஆளுநரோ
அமைச்சரோ வந்தார்களா, இல்லையே. அப்பாவிப்
பொதுமக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்கிறவன்
வெறி பிடித்த பயங்கரவாதியே தவிர புரட்சியாளன்
ஆக மாட்டான்.
7) மார்க்சியம் வன்முறையை ஏற்றுக் கொண்ட
தத்துவம்தான். மார்க்சியம் எந்த வன்முறையை
ஏற்றுக் கொள்கிறது, எந்த வன்முறையை நிராகரிக்கிறது
என்று பார்க்க வேண்டும்.
நிராயுதபாணிகளான அப்பாவி உழைக்கும் மக்கள் மீது
ஆளும் வர்க்கம் பிரயோகிக்கும் பிற்போக்கான
வன்முறையை மார்க்சியம் ஒருபோதும்
ஏற்பதில்லை. ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்கும்
மக்களின் புரட்சிகர வன்முறையை மட்டுமே
மார்க்சியம் ஆதரிக்கிறது.
ரஷ்யப் புரட்சியிலோ சீனப் புரட்சியிலோ பாலங்களை
வெடிவைத்துத் தகர்த்து ரயில்களைக் கவிழ்த்து
அப்பாவி மக்களை கம்யூனிஸ்டுகள் படுகொலை
செய்ததில்லை.
மருதையாற்றுப் பாலத்தை குண்டு வைத்துத் தகர்த்து
25 பேரைப் பச்சைப் படுகொலை செய்த தமிழரசனின்
வன்முறை உழைக்கும் மக்களுக்கு எதிரானது.
எனவே அது பிற்போக்கானது. அதை ஒருபோதும்
ஏற்க முடியாது. புரட்சி என்பது ஒன்றுமறியா அப்பாவி
மக்களைப் படுகொலை செய்வதில்லை.
---------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் (facts) யாவும்
33 ஆண்டுகளுக்கு முன்பு, 1987ல், எங்களின் யூனிட்டில்
முழுநேர ஊழியர் கூறியதாகும். இதில் எதுவும் இன்று
கிடைத்த விவரங்கள் அல்ல.
******************************************************
மார்க்சிய பால பாடம் படித்தவர்களுக்கு ஒரு
விஷயம் தெரியும். புரட்சி என்பது, அதிலும் ஆயுதம்
தாங்கிய புரட்சி என்பது ஏற்படுவதற்கு குறைந்தது
இரண்டு நிபந்தனைகள் உண்டு.
1) புரட்சிக்கான புறநிலைமைகள் (objective conditions)
கனிந்திருக்க வேண்டும்.
2) கனிந்துள்ள புறநிலைமைகளைப் பயன்படுத்தும்
அளவுக்கு வலிமையாக அகநிலைச் சக்திகள்
வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இங்கு அகநிலைச்
சக்திகள் என்பது புரட்சியை நடத்தும் கட்சியைக்
குறிக்கும்.
3) இந்த இரண்டு நிலைமைகளும் பூர்த்தி அடைந்திருந்தால்
மட்டுமே ஆயுதம் தாங்கிய புரட்சி வரும்.
இதுதான் மார்க்சிய அரிச்சுவடி. இந்தியாவில் இன்று இந்த
இரண்டு நிலைமைகளும் பூர்த்தி அடையவில்லை என்பது
அனைத்து கம்யூனிஸ்ட் கடசிகளின் ஏகோபித்த கருத்து.
இதைத்தான் புரட்சி என்பது மாலைநேரத்து விருந்து
அல்ல என்று கூறினார் மாவோ. ஆனால் புழுவினும்
இழிந்த குட்டி முதலாளித்துவம் புரட்சி என்பது
தின்பண்டம் போன்றது என்று நினைக்கிறது.
பகலவன் அவர்களே, உங்கள் தாய்நாட்டுக்குப்
போங்கள். அங்கு போய் ராஜபக்சேவை எதிர்த்துப்
போராடுங்கள். அப்போதுதான் புரட்சி என்றால்
என்னவென்று தெரியும். உங்களுடைய பெறுமதி
என்ன என்று உங்களுக்கும் தெரியும்.
வார்த்தைகளை அளந்து பேசவும்.
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பொழிப்புரை!
----------------------
(திருஞான சம்பந்தர் தேவாரம்)
------------------------------------------------
திருத்தமுற நால்வேதங்களையும் நாள்தோறும்
ஓதி வாழும் அந்தணர்கள் நிறைந்த திருப்பறியலூரில்
எங்கு நோக்கினும் பூத்துக் குலுங்கும் சோலைகளின்
காட்சி விரிந்துகொண்டே செல்கிறது.
இவ்வூரின் இறைவன் வீரட்டேசுவரன் வேறு யாரும்
அல்லன்; சிவபெருமானே. அவன் நோய் தீர்க்கும்
மருந்தாவான். உயிர் தருவிக்கும் அமுதம் ஆவான்.
மயானத்துள் நின்று கொண்டு பெருந்தாண்டவம் ஆடும்
ஈசன் ஆவான். பெருக்கெடுத்து வரும் குளிர்ந்த
கங்கை நதியைத் தன் தலையில் தாங்கிய
சிவபெருமான் ஆவான்.
-------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக