சனி, 26 செப்டம்பர், 2020

ஒவ்வொரு மார்க்சியவாதியும்
ஒவ்வொரு பொருள்முதல்வாதியும்
வணங்க வேண்டிய அந்த மூவர் யார்?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
அறிவியலில் இருந்து துண்டித்துக் கொண்டும்
அறிவியலோடு எவ்விதத் தொடர்பும் அற்றதாக
இருப்பதுவும்தான் பொருள் முதல்வாதம் என்ற
தோற்றமே நமக்குத் தரப்பட்டு இருக்கிறது.
அப்படித்தான் பொருள்முதல்வாதம் நமக்கெல்லாம்
கற்பிக்கப் பட்டிருக்கிறது.
பொருள்முதல்வாதம் பற்றிய இத்தோற்றம் நூறு சதம்
தவறானது.
பொருள்முதல்வாதம் என்றாலே அறிவியல்
என்றுதான் அர்த்தம். பொருளின் பண்புகளை
ஆராய்வதே ஒவ்வொரு அறிவியல்
பரிசோதனையிலும் நடக்கும் செயல்.
கருத்தின் பண்புகளை ஆராய்வது அறிவியல் அல்ல.
பொருளை ஆராயாத எந்த ஒரு பரிசோதனையாவது
இதுவரை உலகில் நடந்தது உண்டா என்று
நான் கேட்கிறேன். இல்லை என்பதே பதில்.
பொருள்முதல்வாதத்தின் மீது அதிக அக்கறை
காட்ட வேண்டிய கடமை மார்க்சியர்களுக்கு
உண்டு. நிற்க.
ஒவ்வொரு பொருள்முதல்வாதியும், ஒவ்வொரு
மார்க்சியவாதியும் இந்த மூவரைப் பற்றி கண்டிப்பாக
அறிந்திருக்க வேண்டும். அறிந்திருக்காவிட்டால்
அவர்கள் பொருள்முதல்வாதிகளே அல்ல.
யார் அந்த மூவர்?
இவர்கள்தான்.
1. லூயி டி பிராக்லி (பிரெஞ்சு குவாண்டம் விஞ்ஞானி.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர்.
2. கிளின்டன் டேவிசன் (பரிசோதனை
இயற்பியலாளர்)
3. லெஸ்டர் ஜெர்மர் (பரிசோதனை இயற்பியலாளர்)
ஒளி என்பது அலையாக இருக்கிறது என்பதை நாம்
அறிவோம். அதாவது ஒளி என்பது துகள் மட்டுமல்ல
அலையும்தான் (wave particle duality).
ஒளி மட்டுமல்ல பொருளும் அலையாக இருக்கிறது!
பொருளுக்கும் அலைப்பண்பு இருக்கிறது என்று
கூறினார் லூயி டி பிராக்லி. துகளான எலக்ட்ரான்
அலையாகவும் இருக்கிறது என்று கூறியவர் இவர்.
லூயி டி பிராக்லி கூறியதை பரிசோதனை மூலம்
நிரூபித்தவர்கள் டேவிசன், ஜெர்மன் ஆகிய
இருவரும். புகழ்பெற்ற இந்தப் பரிசோதனை
டேவிசன் ஜெர்மர் பரிசோதனை என்று
அழைக்கப் படுகிறது.
இந்தப் பரிசோதனையில் டேவிசனும் ஜெர்மரும்
எலக்ட்ரானின் அலைநீளம் 0.165 நானோமீட்டர்
என்று நிரூபித்துக் காட்டினர்.
டேவிசன் ஜெர்மன் பரிசோதனை 12ஆம்
வகுப்பு இயற்பியல் பாடப்புத்த்தகத்தில்
இருக்கிறது. வாசகர்கள் அதைப் படிக்குமாறு
வேண்டுகிறோம்.
ஆக, பொருள்முதல்வாதிகள் என்றால், இந்த
மூன்று பேரையும் தெரிந்து வைத்திருக்க
வேண்டும். தெரிந்து வைத்திருக்கவில்லை
என்றால், அவர்கள் கருத்துமுதல்வாதிகள்
என்று பொருள்படும்.
பொருள் என்று ஒன்றுமே கிடையாது. பொருள்
என்பதெல்லாம் நமது மனத்தில் எழும்
நினைப்புத்தான் என்று சொன்னானே
கருத்துமுதல்வாதி. அவன் மண்டையில் ஓங்கி
அடிக்கிறார்கள இல்லையா, இந்த மூவரும்!
அப்படிப்பட்டவர்களைத் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டாமா?
****************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக