திங்கள், 18 நவம்பர், 2013

world chess: results after 7th game

உலக சதுரங்கப்போட்டி :
7ஆவது ஆட்டத்தின் பின்னர்
உள்ள நிலை (18 நவம்பர் 2013)
----------------------------------------------------------
ஆட்டங்கள் 1 முதல் 4 முடிய : 
4 ஆட்டங்களும் டிரா.

5ஆவது ஆட்டம்: 
கார்ல்சென் வெற்றி; 
ஆனந்த் தோல்வி.

6ஆவது ஆட்டம்:
கார்ல்சென் வெற்றி;
ஆனந்த் தோல்வி.

7ஆவது  ஆட்டம்: டிரா.

7ஆவது ஆட்டத்தின் இறுதியில்
புள்ளிகள் நிலவரம்:
-------------------------------------------  
கார்ல்சென்: 4.5
ஆனந்த்: 2.5

இன்னும் 5 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
******************************************************   

வியாழன், 14 நவம்பர், 2013

THIRD GAME ALSO DRAWN IN WORLD CHESS

உலக சதுரங்கம்:
மூன்றாவது ஆட்டமும் டிரா ஆனது!
--------------------------------------------------- 
பி. இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------
ஆனந்த் கார்ல்சன் இடையிலான 
உலக சதுரங்க சாம்பியன் போட்டியின் 
மூன்றாவது ஆட்டமும் டிரா ஆனது.

விவரங்கள்:
----------------  

ஆட்டம் :3
நாள்: நவம்பர் 12, 2013
மேக்னஸ் கார்ல்சன் :வெள்ளை
விஸ்வநாதன் ஆனந்த்: கருப்பு
முடிவு: டிரா 
புள்ளிகள்: ஆனந்த்:1.5 , கார்ல்சன்:1.5
-------------------------------------------------  
நகர்த்தல்கள்:
--------------------  செவ்வாய், 12 நவம்பர், 2013

WORLD CHESS: SECOND GAME ALSO DRAWN

உலக சதுரங்கப் போட்டி:
இரண்டாவது ஆட்டமும் டிரா!!
----------------------------------------------  
பி. இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------  
சாம்பியன் ஆனந்த் (43)
சாலஞ்சர் மேக்னஸ் கார்ல்சன் (22)
ஆகியோருக்கு இடையிலான 
இரண்டாவது ஆட்டம் 
ஞாயிறு அன்று , (நவம்பர் 10, 2013 )
நடைபெற்றது.
 25ஆவது நகர்த்தலின் பின் டிரா ஆனது.

 The moves
Caro-Kann Defence (Game 2)

1.e4 c6 2.d4 d5 3.Nc3 dxe4 4.Nxe4 Bf5

5.Ng3 Bg6 6.h4 h6 7.Nf3 e6

8.Ne5 Bh7 9.Bd3 Bxd3 10.Qxd3 Nd7 

11.f4 Bb4+ 12.c3 Be7 

13.Bd2 Ngf6 14.0-0-0 0-0 

15.Ne4 Nxe4 16.Qxe4 Nxe5 

17.fxe5 Qd5 18.Qxd5 cxd5

19.h5 b5 20.Rh3 a5

21.Rf1 Rac8 22.Rg3 Kh7 23.Rgf3 Kg8 

24.Rg3 Kh7

25.Rgf3 0.5-0.5

முந்திய ஆட்டத்தைப்போலவே, இதிலும் 

மீண்டும் அதே  நகர்த்தல்கள் 

(REPETITION OF MOVES) 

நிகழ்ந்தன. விளைவு: டிரா!

மூன்றாவது ஆட்டம் 
செவ்வாய் அன்று (நவம்பர் 12, 2013)
நடைபெறும்.

---------------------------------------------------------------------------------------------------------------

சனி, 9 நவம்பர், 2013

WORLD CHESS: FIRST GAME DRAW

உலக சதுரங்கப் போட்டி:
முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது!
------------------------------------------------- --- 
பி. இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------
உலக சதுரங்க சாம்பியன் போட்டி 
முதல் முதலாக இந்தியாவில், 
அதுவும் சென்னையில் 
நடக்கிறது.

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் (43),
நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் (22)
ஆகிய இருவரும் மோதும்
போட்டியின் முதல் ஆட்டம் 
நவம்பர் 11, சனிக்கிழமை 
பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது.  

ஆட்டத்தின் 16ஆவது நகர்த்தலுக்குப் பின்னர்,
போட்டி டிராவில் முடிந்தது.

இருவரும் மொத்தம் 12 ஆட்டங்கள் ஆட வேண்டும்.
இதில் யார் 6.5 புள்ளிகள் பெறுகிறார்களோ 
அவர் வெற்றி பெறுவார்.

முதல் ஆட்டத்தின் நகர்த்தல்கள்:
----------------------------------------------  
கார்ல்சன்( எதிர் )ஆனந்த்
--------------------------------- 
1. Nf3  d5
2. g3    g6
3. Bg2  Bg7
4. d4    c6
5. 0-0  Nf6
6. b3   0-0
7. Bb2  Bf5
8. c4   Nbd7
9.Nc3  dxc4
10. bxc4  Nb6
11. c5   Nc4
12. Bc1  Nd5
13. Qb3  Na5
14. Qa3  Nc4
15. Qb3  Na5 
16. Qa3  Nc4
(1/2, 1/2)

11ஆவது நகர்த்தலில், குதிரையை c4 கட்டத்துக்கு 
கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆனந்த்.
அக் குதிரையை விரட்டி விடுகிறார் கார்ல்சன்.
மீண்டும் 14ஆவது நகர்த்தலில் 
அதே c4 கட்டத்துக்கு 
குதிரையைக் கொண்டு வந்து
 நிறுத்துகிறார் ஆனந்த்.
இம்முறையும் விரட்டி விடுகிறார் கார்ல்சன்.

16ஆவது நகர்த்தலில்
மீண்டும் குதிரையை 
அதே c4 கட்டத்தில் கொண்டு வந்து
நிறுத்துகிறார் ஆனந்த்.
மீண்டும் மீண்டும் அதே நகர்த்தல்கள்!
(repetition of moves )
இந்நிலையில் ஆட்டம் டிரா ஆகிறது.

அடுத்த ஆட்டம் (எண்:2) 
நாளை நவம்பர் 10 ஞாயிறு
பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.
************************************************       

வியாழன், 7 நவம்பர், 2013

WATCH WIN TV TODAY (7 NOV 2013 9.00 PM)

செவ்வாய்க்கு விண்கலன்!
-------------------------------------------  
வின் டிவியின் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் 
பங்கேற்று 
அறிவியல் விளக்கம் அளிக்கிறார் 

தோழர் பி. இளங்கோ சுப்பிரமணியன் 

வின் தொலைகாட்சி 
நாள்: 7.11.2013
நேரம்: இரவு 9.00 முதல் 9.30 வரை 
நிகழ்ச்சி: எதிரும் புதிரும் 
பொருள்: செவ்வாய்க்கு விண்கலன் 

கண்டு களியுங்கள்!

நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------

125th birthday of scientist c v raman

இயற்பியல் அறிஞர்  சி வி ராமன் 
125ஆவது பிறந்த நாள்!
---------------------------------------------------------------------- 
7 நவம்பர் 2013
----------------------------------------------------------------------  
ராமன் விளைவைக் கண்டறிந்த 
நோபல் பரிசு பெற்ற 
தமிழ்நாட்டு இயற்பியலாளர் 
சி வி ராமன் அவர்களின் 
125 ஆவது பிறந்த நாள் 
இன்று ( நவம்பர் 7, 2013).
ராமனைப் போற்றுவோம்!
அறிவியலைக் கற்போம்!!
--------------------------------------------------------------------- 

வெள்ளி, 1 நவம்பர், 2013

CHESS IS A PSYCHIC MURDER?!

சதுரங்கமா 

உளவியல் படுகொலையா?

---------------------------------------------------------- 
பி.இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------  
சதுரங்கத்தின் தாயகம் இந்தியாதான். 
என்றாலும் இந்தியா நீண்ட
காலமாக இதில் சோபிக்கவில்லை.
விஸ்வநாதன் ஆனந்த்தின் வெற்றிக்குப்  
பின்னர்தான் சதுரங்கம் இந்திய மக்கள் மத்தியில்
பரவலான கவனிப்பைப் பெற்றது.

சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தவன் 
ஒரு கணித நிபுணன் என்பது குறிப்பிடத்தக்கது.
"சதுரங்கம் ஒரு மனப்பயிற்சிக் கூடம்"
(  CHESS IS THE GYMNASIUM OF MIND" )   
என்றார் லெனின்.
லெனினும் கார்க்கியும் அவ்வப்போது 
சதுரங்கம் விளையாடுவது உண்டு; 
வழக்கம் போல் லெனின் தோற்பார்; கார்க்கி ஜெயிப்பார்.

"சதுரங்கம் ஒரு உளவியல் படுகொலை!" 
(CHESS IS A PSYCHIC MURDER )
என்றார் பாபி பிஷெர் ( BOBBY பிஷேர்).
அமெரிக்கரான இவர் உலக சாம்பியன். 
போரிஸ் பாஸ்கி ( BORRIS SPAASKEY )
என்ற ரஷ்யரிடமிருந்து 
உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவர் இவர்.

---------------------------------- தொடரும்------------------------------------------------

MAGNUS CARLSON WILL BE THE WORLD CHESS CHAMPION

உலக சதுரங்கப் போட்டி!
-------------------------------------  
மேக்னஸ் கார்ல்சனே வெல்வார்!
-----------------------------------------------

விஸ்வநாதன் ஆனந்த் 
மகத்தான சதுரங்க வீரர்தான்!
என்றாலும் உலக அளவில் 
ரஷ்யாவின் 
காரி காஸ்பரோவ்தான் 
தலைசிறந்த வீரராகக் 
கருதப்படுகிறார்( இன்று வரை) .

சென்னையில் நடைபெற இருக்கும் 
உலக சதுரங்கப் போட்டியில்
நார்வேயின் இளம் வீரர் (வயது 23)
மேக்னஸ் கார்ல்சன் 
விஸ்வநாதன் ஆனந்த்தை(வயது 43) வீழ்த்தி 
சாம்பியன் பட்டத்தை வெல்வார் 
என்று நிபுணர்கள் 
கருதுகிறார்கள்!  

இதுகுறித்த விரிவான கட்டுரை 
நாளை வெளிவரும்.
---------------------------------------------------------------
  

INDIA MUST ATTEND COMMONWEALTH MEET

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா 
கட்டாயம் பங்கேற்க வேண்டும்! ஏன் ? 
------------------------------------------------------  
பி.தமிழ்த்தொண்டன் 
------------------------------------------------------- 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா 
கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
அதுவும் இந்தியப் பிரதமரே 
நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.
ஒரு உண்மையான தமிழின உணர்வாளன், 
மானமுள்ள தமிழன் இப்படித்தான் சிந்திப்பான்.

தொலைநோக்குப் பார்வையோடு 
பார்க்கிற யாரும் 
இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் 
பங்கேற்பதையே விரும்புவார்கள்!

                                       ஏனென்றால்,

அப்போதுதான் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் 
கருமாதி பண்ண முடியும்.
ஈ.வே.கி.ச. இளங்கோவன் போன்ற 
நிரந்தரத் தமிழின விரோதிகளை 
மொட்டை அடித்து 
மூலையில் உட்கார வைக்க முடியும்.

காங்கிரசுக்குக்  கருமாதி பண்ணாமல் 
தமிழினத்துக்கு விடிவு என்பது கிடையாது.
******************************************************                                

செவ்வாய், 22 அக்டோபர், 2013

WORLD CHESS CHAMPIONSHIP MATCH IN CHENNAI

இதுதான் ஹியாத் ரிஜென்சி ஓட்டல் 

உலக சதுரங்கப் போட்டி!
முதல் முதலாக இந்தியாவில்!!
அதுவும் சென்னையில்!!!
---------------------------------------------------
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தும் (43) 
நார்வேயின் மக்னஸ் கார்ல்சென்னும் (22)
மோதும் உலக சதுரங்க சாம்பியன் போட்டி 
முதல் முதலாக இந்தியாவில், அதுவும் சென்னையில் நடக்க இருக்கிறது.

நவம்பர் 6 முதல் நவம்பர் 26 வரை இப்போட்டி நடைபெறும்.
போட்டி நடைபெறும் இடம், சென்னை தேனாம்பேட்டையில் 
(அண்ணா  சாலை) உள்ள ஹயாத் ரிஜென்சி  ( HYATT REGENCY)
எனப்படும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இப்போட்டி நடைபெற உள்ளது.

83 கிரவுண்டு பரப்பளவில் அமைந்த இந்த ஓட்டல்/விடுதியில் 
327 அறைகள் உள்ளன. சதுரங்க உலகமே போட்டியின் போது
இந்த ஓட்டலில் திரளும். 

இந்தியாவில் சதுரங்க விளையாட்டை முன்னேற்ற, 
இப்போட்டிசென்னையில் நடப்பது பெரிதும் உதவும்.   

கார்ல்சென்னா, ஆனந்தா?
பொறுத்திருப்போம்!

SCIENCE MEETING... PLEASE ATTEND.

NEWTON SCIENCE CLUB
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------------------------ 
தொடர்புக்கு: ilangophysics@gmail.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அறிவியல் கூட்டத்துக்கு வருக!
-------------------------------------------------------------------------------- 
இடம்: அன்னை மணி அம்மையார் அரங்கம்,
             பெரியார் திடல், தினத்தந்தி அலுவலகம் அருகில்,
              வேப்பேரி, சென்னை 007

நாள்: 24/10/2013 வியாழன் 
நேரம்:மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை.

பொருள்: பிரபஞ்சம் தோன்றியது எப்படி? 
                   ஓர் அறிவியல் விளக்கம்.

சொற்பொழிவாளர்: 

பி. இளங்கோ சுப்பிரமணியன் 
இயக்குனர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை.

கூட்ட ஏற்பாடு: பெரியார் நூலக வாசகர் வட்டம் 

குறிப்பு:
 இது முற்றிலும் அறிவியல் சொற்பொழிவு.
              இது முழுமையான ஒரு மணி நேர உரை. 
              மாலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை 
              தோழர் இளங்கோ பேசுவார்.

பேசுபொருள்:

பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன?
ஹிக்ஸ் புலம், ஹிக்ஸ் துகள் என்றால் என்ன?
ஸ்டாண்டர்ட் மாடல் என்றால் என்ன?
குவார்க்குகள், குளுவான்கள் முதலிய துகள்களின் பண்பு என்ன? 
பொருள்கள் நிறையைப் பெறுவது எப்படி?
நடப்பாண்டின் இயற்பியல் நோபல் பரிசு
பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
இயங்குவது எப்படி?
பிரபஞ்சத் தோற்றத்தில் கடவுளுக்கு
ஏதேனும் பங்கு உண்டா?

அனைவரும் வருக!
நேரத்துடன் வருக!!

அன்புடன் அழைக்கும்,
 நியூட்டன் அறிவியல் மன்றம் 
பெரியார் நூலக வாசகர் வட்டம்  
                             

வியாழன், 17 அக்டோபர், 2013

DEATH PENALTY COMMUTTED TO LIFE IN NAINA SAHANI CASE

தலைவாழை இலையில்
லட்டும் ஜிலேபியும் பாதாம் அல்வாவும்!
-------------------------------------------------------------------- 

கொடுத்து வைத்தவர்கள்தான் அவர்கள்!
யார்? மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்!


ஒன்றல்ல, இரண்டல்ல;
16 மரண தண்டனைகளை
பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது.
தூக்கில் தொங்கி, நாக்கு வெளித்தள்ளிச்  
செத்துப் போய் இருக்க வேண்டிய

16 குற்றவாளிகள்
தப்பித்து விட்டார்கள். 

சிறையில் இருந்து விடுதலை ஆன
அத்தனை பேரும் உயர் நீதிமன்றம் வழங்கிய
நிரபராதிகள் என்ற பட்டத்துடன்

தெருக்களில் திமிருடன் நடந்து செல்கிறார்கள்.
58 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட
லட்சுமண்புர் பதே வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம்
குற்றவாளிகள் அனைவரையும்

 விடுதலை செய்து
வழங்கிய தீர்ப்பை ஒட்டி 

நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

ஒருவேளை 58 தலித்துகளும் கொல்லப்படவில்லையோ?
உயிருடன்தான் இருக்கிறார்களோ!
எங்கேனும் தலைமறைவாக வாழ்கிறார்களோ?


எது எப்படி இருப்பினும், கொடுத்து வைத்தவர்கள்
மரண  தண்டனை எதிர்ப்புப் போராளிகள்(!!!)தான். 
ஒரு தீர்ப்பா,  இரண்டு தீர்ப்பா?
எல்லாத் தீர்ப்புகளுமே
மரண தண்டனை எதிர்ப்புப்  போராளி(!!!)களுக்குச் சாதகமாக அல்லவா
வந்து கொண்டு இருக்கின்றன!


நைனா சஹானி கொலை வழக்கிலும்
மரண தண்டனையை  ரத்து செய்து
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பந்தியில் உட்கார்ந்து இருக்கிறார்கள் 
மரண தண்டனை எதிர்ப்புப் 'போராளிகள்'.
அவர்களுக்கு முன் விரித்து இருக்கிற 

தலை வாழை இலையில்
லட்டு, ஜிலேபி, பாதாம் அல்வா, முந்திரி கேக்
என்று இனிப்புகளாகப் பரிமாறப் படுகிறது!


நைனா சஹானி ஒரு இளம் பெண். 
இளம் மனைவி. வயது 29.
இவள் கணவன் சுசீல் சர்மா இவளைச் சுட்டுக்கொன்று,
பிரேதத்தை கண்டம் துண்டமாக வெட்டி
தந்தூரி அடுப்பில் நெய்யை விட்டு எரித்தவன்.
சுசீல் சர்மா ஒரு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பதற்கு
அருகதை உள்ளவர். இல்லாவிடில் மனைவியைக் கொன்று
தந்தூரி அடுப்பில் வைத்து எரிக்க முடியுமா?   


இச் சம்பவம் நடந்தது ஜூலை 2, 1995 அன்று. அதாவது,
18 ஆண்டுகளுக்கு முன்பு.

புதுடில்லி செசன்சு நீதிமன்றம்
சுசீல்  சர்மாவுக்கு மரண தண்டனை விதித்தது. (தீர்ப்பு நாள்: நவம்பர் 7, 2003)
புதுடில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனையை
உறுதிபடுத்தியது.

(தீர்ப்பு நாள்: பெப்ரவரி 19, 2007)

உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை
ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

( தீர்ப்பு நாள்: அக்டோபர் 8, 2013)
தீர்ப்பு வழங்கிய மூவர் அமர்வில் 

( 3 member division bench )   
தலைமை நீதியரசரான 

மேதகு தமிழர் சதாசிவம் அவர்களும் அடக்கம்.

ஆக, மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்
ஆனந்தக் கூத்தாடி வருகிறார்கள்.
குற்றவாளிகளுக்குத் தண்டனையே 

விதிக்கப் படக்கூடாது
என்ற தங்களின் லட்சியம் கைகூடி வருவது கண்டு 
களிப்பும்  எக்களிப்பும் அடைகிறார்கள்!


*****************************************************************************************************
 

புதன், 16 அக்டோபர், 2013

DALIT MASSACRE CASE: ALL 26 ACCUSED ARE ACQUITTED

மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு 
பால் பாயாசம் வழங்கிய தீர்ப்பு!
--------------------------------------------------------
மரண தண்டனையை எதிர்க்கும் 
மனித உரிமைப் போராளி (!!!)களின்
காட்டில் மழை!
பாட்னா உயர்நீதி மன்றம் 
கடந்த அக்டோபர் 9, 2013 அன்று 
வழங்கிய தீர்ப்பு மேற்படி மனித நேயப் போராளிகளின் வயிற்றில் 
பால் பாயாசத்தை வார்த்திருக்கிறது.

 கீழமை நீதிமன்றம் வழங்கிய
 ( 16 பேருக்குத் தூக்கு, 10 பேருக்கு ஆயுள்)
தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்து, 
26 பேரையும் விடுதலை செய்து 
தீர்ப்பளித்து இருக்கிறார்கள் பாட்னா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சின் 
நீதியரசர்கள் வி.என்.சின்ஹா மற்றும் ஏ.கே.லால் ஆகிய இருவரும்.
58 தலித்துகளைப் படுகொலை செய்த, லட்சுமணபூர் பதே வழக்கு 
( LAXMANPUR BATHE   MASS MASSACRE CASE OF 58 DALITS ) என்று
அறியப்படும் வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு.

வழக்கின் வரலாறு
------------------------------  
பீகார் மாநிலம், லட்சுமண்பூர்   பதே என்ற கிராமம் தற்போது ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ளது.டிசம்பர் 1, 1997 அன்று,
( 16 ஆண்டுகளுக்கு முன்பு)
நள்ளிரவில் ரன்வீர் சேனா என்ற 
பூமிஹார் சாதி நிலப்பிரபுக்களின் படை 
மேற்படி கிராமத்துக்குள் நுழைந்து
58 தலித்துக்களைச்  சுட்டுக் கொன்றது.

தமிழ்நாட்டில் கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்ட 44 தலித்துக்களை 
உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவின் 
வடஇந்தியப் பங்காளிகள்தான் ரண்வீர் சேனாவினர்.

பாட்னா செசன்சு நீதிமன்றத்தின் 
நீதியரசர் விஜய் பிரகாஷ் மிஸ்ரா 
கடந்த ஏப்ரல் 7, 2010 அன்று,
16 பேருக்குத் தூக்குத் தண்டனையும்,
10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்;
19 பேர் நிரபராதிகள் என்று கூறி 
அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஆக, மொத்தம் குற்றம் சாட்டப் பட்டவர்கள்
45 பேர்.இதில் 19 பேர் விடுதலை ஆகி விட 
மீதி 26 பேருக்கு மட்டுமே தண்டனை!

தற்போது பாட்னா உயர்நீதிமன்றம் மேற்குறித்த 26 பேரையும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்து விட்டது.  
ஆக, 58 பேரைப் படுகொலை செய்த வழக்கில் 
( 26 பெண்கள்,16 குழந்தைகள் உட்பட) 
யாருக்கும் தண்டனை இல்லை!

மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று உச்சி மோந்து கொண்டாடுகிறார்கள்! இனிப்புப் பரிமாறி மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!

மரண தண்டனை எதிர்ப்புப் போராளி (!!!)களும் மனித உரிமைப் போராளி(!!!)களும் 
இந்தத் தீர்ப்பால் பெருத்த உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் குற்றவாளிகள் தண்டிக்கப் படவே கூடாது என்ற தங்களின் லட்சியம் இத்தகைய தீர்ப்புகளால் 
நிறைவேறி வருவது கண்டு அவர்கள் குதூகலிக்கிறார்கள்.

58 தலித்துகள் செத்ததில் 
அவர்களுக்கு வருத்தம் இல்லை!
ஆனால் 45 ACCUSEDகள் விடுதலை ஆகி விட்டதில் அவர்களுக்கு 
சந்தோசம்! 
அவர்களின் மனித உரிமை (!!!)
 நிலைநாட்டப் பட்டு விட்டதில்
மனித உரிமை மற்றும்
மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள் (!!!)
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

     மக்களே போல்வர் கயவர்  அவரன்ன 
    ஒப்பார் யாம்கண்ட(து) இல்.  
******************************************************
 

   

திங்கள், 14 அக்டோபர், 2013

WATCH WIN TV PROGERAM

WATCH WIN TV
----------------------- 
WIN TV வின் தொலைக்காட்சியில் 
எதிரும் புதிரும் நிகழ்ச்சியைப் 
பாருங்கள்! நிகழ்ச்சியில் பங்கேற்று 
போலிச்சாமியார்களின் 
முகத்திரையைக் கிழிக்கிறார் 
தோழர் இளங்கோ 
(இயக்குனர், நியூட்டன் அறிவியல் மன்றம்).

நாள்: செவ்வாய் 15/10/2013
நேரம்: இரவு 9 மணி முதல் 9.30 வரை.  
 ***************************************************

சனி, 12 அக்டோபர், 2013

RESPONSE FROM READERS ARE INVITED


தேவை எதிர்வினை!
--------------------------------  
நெல்லை இளவரச வேலனின் 
தான்சேனும் குளியலறைப் பாடகர்களும் 
என்ற கட்டுரைக்கு
ஒரு நீண்ட பின்னூட்டம் வந்துள்ளது.
முக்கியத்துவம் கருதி 
அப்பின்னூட்டத்தை நமது வலைப்பூவில் 
தனியாகப் பிரசுரித்துள்ளோம் .(கீழே காண்க.)
 இப் பின்னூட்டத்தின் மீதான எதிர்வினைகள் 
வரவேற்கப் படுகின்றன.                     பின்னூட்டமும் விளக்க வரைபடமும் 

இந்துக்களிடமிருந்து பறிபோகும் இந்தியா

-------------------------------------------------------------------------------  
இந்தியாவும் பாகிஸ்தானும் தனி நாடாக பிரிக்கப்பட்ட பிறகு 1951 
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்களாதேசில் (கிழக்கு பாகிஸ்தான்)இந்துக்களின் எண்ணிக்கை 22 சதவீதம்.பாகிஸ்தானில்(மேற்கு பாகிஸ்தான்) 20 சதவீதம். 

அதன் பிறகு 1961 கணக்கெடுப்பின் போது பங்களாதேசில் (கிழக்கு பாகிஸ்தான்)இந்துக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக குறைந்தது.பாகிஸ்தானில் (மேற்குபாகிஸ்தான்)அது 15 சதவீதமானது.

1974 ல் பாகிஸ்தான் -பங்களாதேஷ் போர் ஏற்பட்டது.அந்த காலத்தில் பல லட்சம் இந்துக்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது. அதன்பின் பங்களாதேசில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்துக்களின் மக்கள் தொகை 13 சதவீதம்
பாகிஸ்தானில் 10 சதவீதமாக குறைந்தது.

2001ல் எடுக்கப்ட்ட கணக்கெடுப்பில் பங்களாதேசில் இந்துக்களின் எண்ணிக்கை 10 சதவீதம்.பாகிஸ்தானில் 3 சதவீதம்

தற்போது பங்களாதேசில் இந்துக்கள் 9 சதவீதம். பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் 1.7 சதவீதம் பேர்.

இனிவரும் காலத்தில் இது இந்துக்கள் இல்லாத நாடாக மாறிவிட வாய்ப்புள்ளது.
------------------------------------------------------------------------------------
ஆனால் இந்தியாவில் சுதந்திர காலத்திற்கு பின் முஸ்லீம்களின் எண்ணிக்கையை பாருங்கள்
------------------------------------------------------------------------------------  
முஸ்லீம்களுக்கு தனிநாடு பிரிக்கப்பட்ட பின் 1951ல் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9 சதவீதம்.

2001ல் இந்தியாவில் முஸ்லீம்கள் எண்ணிக்கை 14 சதவீதம்.

2011ல் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 18 சதவீதம்.

அடுத்த 50 ஆண்டுகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டும் வாய்ப்புள்ளது. அப்போது இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதமாக இருக்கும்.

இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அதிக சுதந்திரத்தையும்.வசதியாள வாழ்க்கையையும் அனுபவிக்கிறார்கள்.ஆனால் பாகிஸ்தானிலும்,பங்களாதேசிலும் வாழும் இந்துக்கள் சுதந்திரம் இன்றியும்,பாதுகாப்பான வாழ்க்கை இன்றியும் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

வியாழன், 10 அக்டோபர், 2013

இயற்பியல் நோபல் பரிசு!
-------------------------------------------  
2013-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் 
நோபல் பரிசு 
பிரான்கோய்ஸ் இங்க்லெர்ட் ( பெல்ஜியம் )
பீட்டர் ஹிக்ஸ் ( இங்கிலாந்து)
ஆகிய இருவருக்கும் பகிர்ந்து 
வழங்கப் படுகிறது!    

திங்கள், 7 அக்டோபர், 2013

rasheed masood jailed

குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரின் யோக்கியதை!

-----------------------------------------------------   

ரசீத் மசூது! 
அண்மையில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை 
பெற்றவர். புது தில்லி திஹார் சிறையில் 
கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்
இவர் நாட்டிலேயே முதல் முதலில் 
எம்.பி பதவியை இழக்கப் போகிறார். 
( உபயம்: குற்றவாளி சட்ட மன்ற நாடாளுமன்ற 
பதவிகளில் தொடரக் கூடாது என்ற 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு )

இவர் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் 
பதவிக்குப் போட்டி இட்டவர். ஹமீத் அன்சாரி 
காங்கிரஸ் சார்பிலும், நஜ்மா ஹெப்துல்லா 
பாஜக சார்பிலும் போட்டி இட்ட போது   ,
மூன்றாவது அணி சார்பில், இவர் போட்டியிட்டுத் 
தோற்றார். இவர் பெற்ற வாக்குகள் 75 மட்டுமே.
சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் 
மூன்றாவது அணி சார்பாக 
இவரை நிறுத்தி இருந்தன.

உயர்ந்த பதவிக்குப் போட்டி இட்ட இவர் 
தற்போது திஹார் சிறையில்!

ஓம் பிரகாஷ் சவுதாலா , லாலு பிரசாத் யாதவ் 
வரிசையில் இவர் தண்டிக்கப் பட்ட
மூன்றாவது குற்றவாளி!

அடுத்து கம்பி எண்ணுபவர் 
தமிழ் நாட்டில் இருந்தா?

***********************************       

வியாழன், 3 அக்டோபர், 2013

laloo in prison

உப்பைத் தின்றவன் 
தண்ணீர் குடிப்பான்!
-----------------------------------------------------------------------------------------------
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 
லாலு பிரசாத் யாதவ் 
5 ஆண்டுகள் சிறைத தண்டனை பெறுகிறார்!

மகிழ்ச்சியாக இருக்கிறது!

இனிப்பு வழங்கிக் கொண்டாடுவோம்!

ஏற்கனவே ஓம் பிரகாஷ் சௌதாலா 
ஆசிரியர் நியமன ஊழலில் 
தண்டனை பெற்று 
சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு 
இருக்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு பயலாகக் 
கம்பி எண்ணட்டும்!  

திங்கள், 23 செப்டம்பர், 2013

publisher's note

பதிப்பாளர் குறிப்பு 
--------------------------  
நெல்லை இளவரசவேலனின் 
தான்சேனும் 
குளியலறைப் பாடகர்களும் 
என்ற கட்டுரையில் உள்ள  கருத்துக்கள்  
கட்டுரையாளரின் 
கருத்துக்களே அன்றி 
தமிழ் மார்க்சியம் வலைப்பூவின் 
கருத்துக்கள் அல்ல. 
-----பதிப்பாளர்........... 

வியாழன், 19 செப்டம்பர், 2013

TANSEN AND BATHROOM SINGERS

தான்சேனும் குளியலறைப் பாடகர்களும்!
------------------------------------------------------------  
        நெல்லை இளவரச வேலன் 
----------------------------------------------------------------------------------------------------------------- 

வரும் நாட்களில் இந்தியத் துணைக் கண்டம் ஒரு பேரெழுச்சியைச் 
சந்திக்க இருக்கிறது. சூத்திரர் நரேந்திர மோடியை, பிரதமர் 
வேட்பாளராக பாஜக அறிவித்து இருப்பது இதற்குக் கட்டியம் கூறுகிறது.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 
100 கோடி சூத்திரர்கள் இருந்தும், பிரதமர் பதவி என்பது,
ஏடன் தோட்டத்து ஆப்பிளைப் போல தடுக்கப் பட்ட கனியாகவே 
சூத்திரனுக்கு இருந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மாற்றமே இல்லாமல் நீடித்து வரும் இந்த அநீதிக்கு, 
மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற முடிவு
பிராயச்சித்தம் செய்கிறது!

இந்த முடிவு சமூக நீதிக்கான லட்சியப் பயணத்தில் 
இலக்கை நெருங்கி நிற்கும் ஒரு மைல்கல். அடிமைச் சூத்திரர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை எற்படுத்த வல்ல இந்த வாய்ப்பு,
        ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் 
         வாராது போல் வந்த மாமணி 
போன்றது.

முதல் முத்தம் 
---------------------  
"கலை கல்வி அத்தனையும் பார்ப்பானுக்கே 
கனகமணிச் செல்வமெல்லாம் பார்ப்பானுக்கே
நிலவு தாங்கும் மாளிகைகள் பார்ப்பானுக்கே 
நெடுங்கோவில் கருவறைகள் பார்ப்பானுக்கே 
தலைமை கொள்ளும் அதிகாரம் பார்ப்பானுக்கே 
தமிழர்களின் உழைப்பெல்லாம் பார்ப்பானுக்கே 
பல இன்னும் பகருவதேன்; பார்ப்பானுக்காய்ப் 
பாடுபட்டுப் பாடுபட்டே தமிழன் செத்தான்."
          ( புலவர் புலமைப் பித்தன்)   
புலமைப் பித்தனின் குமுறல்கள் முடிவுக்கு வருகின்றன.
தலைமை கொள்ளும் அதிகாரம் பார்ப்பானுக்கே 
என்பது மாறி,
தலைமை கொள்ளும் அதிகாரம் சூத்திரனுக்கே 
என்னும் புதுமொழி, கோடானுகோடிச் சூத்திரர்களின்
இதழ்களில் இடப்படும் முதல் முத்தம்.

உஞ்ச விருத்தியால் அல்ல!
---------------------------------------  
மோடியின் மேலோங்கல் (  elevation )
யாசித்துப் பெற்றதல்ல. ஆரிய வர்க்கத்தின் 
கருணையின் கசிவு அல்ல.
இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப் பட்டதல்ல.

     குஜராத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 
     ஹாட் டிரிக் வெற்றி!
     சிறந்த நிர்வாகத்திறன்!
     இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!
     கடும் உழைப்பில் இந்தியத் துணைக் கண்டத்தில் 
     கலைஞருக்கு  அடுத்த படியாகச் 
     சொல்லத்தக்க ஒரே தலைவர்! 
பட்டியலை நிறைக்கும் இத்தகைய சிறப்புகளால் 
பெற்ற வெற்றி இது.
தகுதியும் திறமையும் , தரணி ஆளும் தகைமையும்
சூத்திரனுக்கு உண்டு என்று 
நிரூபித்துப் பெற்ற வெற்றி இது.

இரும்பு மனிதர் அத்வானியை வீழ்த்திப் பெற்ற வெற்றி இது!
காத்திருக்கும் பிரதமர் ( PRIME MINISTER in waiting ) என்று 
வர்ணிக்கப் பட்ட ஆரிய மாலா 
சுஷ்மா சுவராஜை  வீழ்த்திப்  பெற்ற வெற்றி இது!

பார்ப்பனர்கள் பல்லக்குத் தூக்கிகளாக.....
--------------------------------------------------------  
பல்லக்கில் அமர்பவன் பார்ப்பான் !
தோளில் சுமப்பவன் சூத்திரன் !
     இதுதான் உலக நீதி!
     இதுதான் ராஜ நீதி!!
இன்று மோடி நிகழ்த்திய ரசவாதத்தால்,
        சூத்திரன் பல்லக்கில் அமரவும்   
         பார்ப்பான் தூக்கிச் சுமக்கவும் 
என்பதான தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதுதான் அடிப்படை மாற்றம் என்பது ( PARADIGM SHIFT ).
      " LIGHTLY O , LIGHTLY WE BEAR HER ALONG 
       WE BEAR HER ALONG LIKE A PEARL on A STRING
       GAILY O , GAILY WE GLIDE AND WE SING!"
          ( THE PALANQUIN BEARERS , SAROJINI NAIDU )

கலைஞரால் கூட மறுக்க இயலாது!
--------------------------------------------------  
 RSS-பாஜக அமைப்புகள் பார்ப்பனர்களின் குருபீடம்!
சூத்திரர்களுக்கோ அது பலிபீடம்!
ஆனால் இன்று, சமூக நீதிப் போர்வாளின் 
வீரியச் சுழற்சியில் 
ஆரியம் தன மகுடத்தை இழக்கிறது!
சூத்திரனின் தலையில் மகுடம் ஏறுகிறது! 
புஷ்ய மித்திர சுங்கனின் வாரிசுகள் 
மணிமுடி இழக்கிறார்கள்!
சந்திர குப்த  மௌரியனின் வாரிசுகள் 
மணிமுடி தரிக்கிறார்கள்!
மோடி (எதிர்) அத்வானி என்பதும் 
ஆரிய திராவிடப் போரே என்பதைக்
 கலைஞரால் கூட மறுக்க இயலாது.

களங்கம் கழுவப் பட்டது!
-----------------------------------   
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக 
ஆக்கியதன் மூலம் , RSS - பாஜக அமைப்புகள் 
தங்கள் மீது படிந்த நூற்றாண்டு காலக் 
கறையைக் கழுவிக் கொண்டுள்ளன. 
இதை வரவேற்காமல் இருப்பது நியாயமா?

தெளிந்த முடிவு!
-----------------------  
RSS - பாஜக அமைப்புகள்,  சூத்திர பஞ்சமர்களுக்கு
வாய்ப்பு அளிக்கிறோம் என்ற பெயரில்,
திறமையும் முன்முயற்சியும் அற்ற 
எடை குறைந்த ( POLITICAL LIGHTWAITS )
அரசியல்வாதிகளுக்கு, தலைமைப் பதவி  
கொடுத்து விட்டு, பின்னிருக்கையில் அமர்ந்து 
வாகனம் ஓட்டுவது உண்டு! ( BACK SEAT DRIVING )
பங்காரு லட்சுமணனுக்கு அகில இந்தியத் தலைமை,
டாக்டர் கிருபாநிதிக்கு தமிழகத் தலைமை 
என்பன இதற்கு உதாரணங்கள். 

நரேந்திர மோடி இத்தகைய 
ஒரு பொம்மை (PUPPET ) அல்ல.
சுய சிந்தனை, சுயமான திட்டங்கள்,
சர்வாதிகாரப் போக்கு என்று அமைந்த 
மோடியின் ஆளுமையை நன்கு தெரிந்தே 
அவருக்குப் பொறுப்பு அளித்து உள்ளது பாஜக.
ஆக, மோடிக்கு மகுடம்  என்பது
ஒரு கண்துடைப்புச் செயல் அல்ல. 
மாறாகத் தெளிந்த முடிவு இது! 
( A CONSCIOUS DECISION !)

சூத்திரர்களின் முற்றத்தில் பந்து!
----------------------------------------------  
பார்ப்பன ஆதிக்கம் என்பதெல்லாம் முடிந்து போன விஷயம்.
இன்னும் எத்தனை நாளைக்கு ஆரியப் பேயை 
ஓட்டிக் கொண்டே   காலம் தள்ளுவீர்கள் என்று 
வேதபுரத்து அம்பிகள் கேட்கலாம்.
பார்ப்பன ஆதிக்கம் எப்படிச் சுடும் என்பது
சூடு பட்டவனுக்குத் தான் தெரியும் 
( THE WEARER KNOWS WHERE THE SHOE PINCHES!)
வேதபுரிக் கூட்டத்தால் உணர முடியாத வலி இது.


மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தாலும் சரி--
துப்பாக்கிக் குண்டு துளைத்து 
ரத்தம் சிந்திச் செத்தாலும் சரி--
சூத்திரனைப் பார்ப்பான் அங்கீகரிக்க மாட்டான்.
அங்கீகரித்த வரலாறு 
இந்தியத் துணைக் கண்டத்தில் கிடையாது.

இந்தச் சூழலின் கனத்தில்தான், 
மோடியின்  மேலோங்கலைப்  பார்க்க வேண்டும்.
சூழலில் இருந்து துண்டித்துக் கொண்டு 
தனித்த  ஒரு நிகழ்வாக இதைப் பார்ப்பது அறிவீனம்.  
எனவே, மோடியின் மேலோங்கல், ( elevation )
பார்ப்பன சூத்திரப் போரில், 
ஆயிரம் தலைமுறைகளின் தோல்விக்குப் பிறகு,
சூத்திர வர்க்கம் முதல் முதலாகப் பெரும் வெற்றி இது.

வரலாறு வழங்கி இருக்கும் இந்த வாய்ப்பை 
100 கோடிச் சூத்திரர்களும் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள 
வேண்டும்.இது வரை, BC, MBC க்கு எதிராக இருந்த பாஜகவே 
மோடியை முன்னிறுத்தும் போது,
நூறு கோடிச் சூத்திரர்களாகிய நாம் 
மோடியைப் பிரதமர் ஆக்க 
ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
பார்ப்பான் தன கடமையைக் 
குறைவின்றிச் செய்து விட்டான்;
இனி நம் கடமை மட்டுமே பாக்கி இருக்கிறது.
ஆம்; தற்போது பந்து நம்மிடம் உள்ளது.

குளியலறைப் பாடகர்கள்!
-------------------------------------   
      மோடி பிரதமர் ஆகக் கூடாது என்பது 
      சூத்திரன் பிரதமர் ஆகக் கூடாது 
       என்னும் வன்மமே!

மோடியின் வெற்றி வாய்ப்புகள் 
தொடர்ந்து ஒளி  சிந்துகின்றன.
HE IS UNSTOPPABLE என்கிறார்கள் 
அரசியல் நோக்கர்கள்.
எட்டிய தூரம் வரை, 
மோடிக்குச் சமமான போட்டியாளராக 
எவரும் தென்படவில்லை.
மன்மோகன் சிங்கும் சோனியாவும் 
முடிந்து போன அத்தியாயங்கள்.
ராகுல் காந்தி ஒரு கோவில் காளை. 
தலைமைப் பண்பு இல்லாதவர்.
பத்து ஆண்டுகளாக MP ஆக இருக்கும் இவர்,
நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பேசி 
என்றாவது நாட்டின் கவனத்தை 
ஈர்த்தது உண்டா?
சுருங்கக் கூறின்,
     ராகுல் ஒரு குளியலறைப் பாடகர்!
       மோடியோ தான்சேன்!

கடமையும் மடமையும்!
---------------------------------   
பின்-கோத்ரா வன்முறைக்கு மோடி பொறுப்பல்ல. 
ஈழத்தில் ராஜ பக்சேவுடன்
கள்ளக் கூட்டுச் சேர்ந்து,
ஒரு லட்சம் தமிழர்களை--
ஒரு லட்சம் சூத்திரர்களைக் 
கொன்று இனப் படுகொலை செய்த 
காங்கிரசுக்கு மோடியைக் குறை கூற 
அருகதை இல்லை.

     ஒரு சூத்திரனைப் பிரதமர் ஆக்குவது 
     ஒவ்வொரு சூத்திரனின் கடமை!
      இதைச் செய்யத் தவறுவது மடமை!!

********************************************************************************  

    
         

புதன், 18 செப்டம்பர், 2013

IRAVANAN PATHILKAL

இராவணன் பதில்கள் 
எண் :2 ... 18/09/2013
--------------------------------------------------------------------------    

ஜனாதிபதி பதவி  வழங்குவதாக 
உறுதி கூறிய பின் தான் 
அத்வானி சமாதானம் அடைந்தார் என்று கூறப்படுகிறதே!

(கி. முத்துராஜா, மதுரவாயல்)

"ஆசைகள் குதிரைகள் ஆனால் பிச்சைக்காரன் கூட குதிரைச் சவாரி செய்வான்" 
  ( "IF WISHES WERE HORSES THEN BEGGERS WOULD RIDE")
என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
ராஜ்நாத் சிங் வழங்க,
அத்வானி பெற 
ஜனாதிபதி பதவி என்ன 
சிட்டுக்குருவி லேகியமா?
இதை நம்பினார் அத்வானி என்றால்,
அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில்
 ( fool's paradise ) 
வாழ்கிறார் என்று பொருள்.
---------------------------------------------------------------------------------------------------------  

சூத்திரரான தா பாண்டியன்
சூத்திரரான நரேந்திர மோடியை 
எதிர்ப்பதன் மர்மம் என்ன?

(அ பசுல் உசேன், ராயப்பேட்டை)

நரேந்திர மோடி சூத்திரர் 
ஜெயலலிதா பிராமணர் 
பிராமணனே ஆளப் பிறந்தவன் என்ற 
சனாதன தர்மத்தைக் காக்க வேண்டிய 
பாஜகவே, கனி இருப்பக் காய் கவர்ந்தற்று 
என்பது போல், மோடியைத் தெரிவு செய்து 
விட்டதே என்று மனம் புழுங்குகிறார் போலும் 
இந்த சத்சூத்திரர்! 
---------------------------------------------------------------------------------------

தி இந்து தமிழ்ப் பதிப்பு வந்திருக்கிறதே!

( உ. ரெங்க நாயகி, மயிலாப்பூர்)

தி இந்து என்ன வாழ்கிறது?
தின இந்து என்றோ 
தமிழ் இந்து என்றோ 
வெறும் இந்து என்றோ 
பெயர் வைத்துத் தொலைப்பதில் 
சவுண்டிகளுக்கு என்ன சங்கடம்? 
ஏன் தீயை வைக்க வேண்டும்?

ஆங்கிலம் ஒரு விவஸ்தை கெட்ட  மொழி.
THE என்கிற DEFINITE ARTICLE -ஐ 
முன்னே போடாமல், பெயர்ச் சொல்லை எழுத முடியாது.
THE CHIEF MINISTER ,
THE GOVERNOR , 
THE HEADMASTER 
என்று தீயை வைத்தால் தான்    
ஆங்கிலம் ஆகும்.

தமிழ் சொற்செட்டு நிறைந்த மொழி.
முதல்வர், ஆளுனர்.தலைமை ஆசிரியர்  என்று 
தீ வைக்காமல் எழுதினால் போதும்.
தமிழனுக்கு மானமும் சுரணையும்
வராத வரையில் 
சவுண்டி ராம்கள் தமிழனின் மூளையில்  
மலம் கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை ஏன்  
மக்கள் கவிஞர் என்கின்றனர்?

( பே. மயில்வாகனன், பரங்கிமலை)

ஆசிரியர் தகுதித் தேர்வில் வரக் கூடிய கேள்வியா இது?
காலம் மறந்து விட்ட ஒரு கவிஞனை நினைவு  
வைத்துக் கொண்டு கேட்கின்றீர்கள்,  நன்றி.

     அக்காளுக்கு வளைகாப்பு 
     அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
என்று எழுதியதாலும் 
     அக்காளுக்கு சீமந்தம் 
     அத்திம்பேர் முகத்திலே மந்தஹாசம் 
என்று எழுதாததாலும் தான் அவர் மக்கள் கவிஞர்.
----------------------------------------------------------------------------------------

பெருந்திரள்   விருப்பமும் 
அரசியல்  அழுத்தமும் தான் 
நிர்பயா  வழக்கில் குற்றவாளிகளுக்கு  
 மரண தண்டனை 
கிடைக்கக் காரணம் என்கிறாரே, குற்றவாளிகளின் வழக்கறிஞர்!

கி.ராமசுப்பு, கோவில்பட்டி)

அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு?
நீதி என்பது வழங்கப் பட்டால் மட்டும் போதாது;
வழங்கப்பட்டதாகத் தெரியவும் வேண்டும் தானே!
நிர்பயா வழக்கிலாவது எதிரும் புதிருமாக இருந்த அரசியல் கட்சிகள் ( காங், பாஜக)
ஒன்று பட்டு நின்றது நல்லது தானே.

சூரியநெல்லி வல்லுறவு வழக்கில் 
சிக்கிய குரியன் 
( காங், மாநிலங்களவைத் துணைத் தலைவர்)
பதவி விலகக் கோரி, 
நாடாளுமன்றத்தில் அமளி நடந்தபோது 
பாஜக அதில் கலந்து கொள்ளவில்லை.
ஏனெனில் குரியனின் வழக்கறிஞரே 
பாஜகவின் அருண் ஜெட்லிதான்.

மக்களுக்கு எதிராக கள்ளக் கூட்டு வைப்பதையே 
குலத்தொழிலாகக் கொண்ட அரசியல் கட்சிகள் 
நிர்பயா வழக்கில் ஒன்று பட்டு 
நின்றார்கள் என்றால் 
அதைச் சாதித்தது மக்களின் ஒற்றுமைதான்.
---------------------------------------------------------------------------------------------------------

எந்த சுவரொட்டியைப் பார்த்தால் நீங்கள் 
ஆச்சரியப் படமாட்டீர்கள்?

( பி. மாசிலாமணி, வீரவநல்லூர் )

 பின்வரும் சுவரொட்டியைப் படித்தால் நான் மட்டுமல்ல,
தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக் கோடித் தமிழர்களும் 
ஆச்சரியப் பட மாட்டார்கள்:

          பொருள்: 
         போயஸ் தோட்டத்துக் கழிப்பறையின் 
                              சந்தன நறுமணம் 
          சிறப்புச் சொற்பொழிவு:  தா. பாண்டியன் 
           இடம்: பாலன் இல்லம்.
----------------------------------------------------------------------------------------------------------  

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ யாருடன் கூட்டு வைப்பார்?

( மீ. முருகானந்தம், காருகுறிச்சி )

பாஜகவுடன் கூட்டு வைப்பது என்று 
வைகோ ஏற்கனவே 
முடிவு செய்து விட்டார்.அண்மையில் நடந்த விருதுநகர் மாநாட்டிலும் 
இது   பூடகமாகச் சொல்லப்பட்டு விட்டது.
 நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக்கும்  
புனிதப் பணியில் வைகோ
உடல், பொருள்,ஆவியைப் பணயம் 
வைக்கச் சித்தம் ஆகி விட்டார்.
---------------------------------------------------------------------------------------------------------  

மோடி அலை வீசத் தொடங்கி விட்டதாமே !

( சே. பங்கஜம், பழனி ) 

வட கிழக்குப் பருவக்காற்று
வீசத் தொடங்கும் முன்பே 
மோடி அலை வீசத் தொடங்கி விட்டதாக 
ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------

நரேந்திர மோடி பிரதமர் ஆவதில் என்ன தவறு?
ஒரு சூத்திரர்  பிரதமர் ஆவதில் 
உங்கள் மூஞ்சியில் ஏன் சுருக்கம் விழுகிறது?

( ஜானகி பிரசாத், மாங்காடு )

இது போன்ற குற்றச் சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக
அடையாள அரசியல் செய்யும் எல்லாரும் 
( BC , MBC அமைப்புகள் )  நரேந்திர மோடியை 
ஆதரிக்க நேரும்.
-----------------------------------------------------------------------------------------------------------