வியாழன், 17 அக்டோபர், 2013

DEATH PENALTY COMMUTTED TO LIFE IN NAINA SAHANI CASE

தலைவாழை இலையில்
லட்டும் ஜிலேபியும் பாதாம் அல்வாவும்!
-------------------------------------------------------------------- 

கொடுத்து வைத்தவர்கள்தான் அவர்கள்!
யார்? மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்!


ஒன்றல்ல, இரண்டல்ல;
16 மரண தண்டனைகளை
பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது.
தூக்கில் தொங்கி, நாக்கு வெளித்தள்ளிச்  
செத்துப் போய் இருக்க வேண்டிய

16 குற்றவாளிகள்
தப்பித்து விட்டார்கள். 

சிறையில் இருந்து விடுதலை ஆன
அத்தனை பேரும் உயர் நீதிமன்றம் வழங்கிய
நிரபராதிகள் என்ற பட்டத்துடன்

தெருக்களில் திமிருடன் நடந்து செல்கிறார்கள்.
58 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட
லட்சுமண்புர் பதே வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம்
குற்றவாளிகள் அனைவரையும்

 விடுதலை செய்து
வழங்கிய தீர்ப்பை ஒட்டி 

நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

ஒருவேளை 58 தலித்துகளும் கொல்லப்படவில்லையோ?
உயிருடன்தான் இருக்கிறார்களோ!
எங்கேனும் தலைமறைவாக வாழ்கிறார்களோ?


எது எப்படி இருப்பினும், கொடுத்து வைத்தவர்கள்
மரண  தண்டனை எதிர்ப்புப் போராளிகள்(!!!)தான். 
ஒரு தீர்ப்பா,  இரண்டு தீர்ப்பா?
எல்லாத் தீர்ப்புகளுமே
மரண தண்டனை எதிர்ப்புப்  போராளி(!!!)களுக்குச் சாதகமாக அல்லவா
வந்து கொண்டு இருக்கின்றன!


நைனா சஹானி கொலை வழக்கிலும்
மரண தண்டனையை  ரத்து செய்து
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பந்தியில் உட்கார்ந்து இருக்கிறார்கள் 
மரண தண்டனை எதிர்ப்புப் 'போராளிகள்'.
அவர்களுக்கு முன் விரித்து இருக்கிற 

தலை வாழை இலையில்
லட்டு, ஜிலேபி, பாதாம் அல்வா, முந்திரி கேக்
என்று இனிப்புகளாகப் பரிமாறப் படுகிறது!


நைனா சஹானி ஒரு இளம் பெண். 
இளம் மனைவி. வயது 29.
இவள் கணவன் சுசீல் சர்மா இவளைச் சுட்டுக்கொன்று,
பிரேதத்தை கண்டம் துண்டமாக வெட்டி
தந்தூரி அடுப்பில் நெய்யை விட்டு எரித்தவன்.
சுசீல் சர்மா ஒரு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பதற்கு
அருகதை உள்ளவர். இல்லாவிடில் மனைவியைக் கொன்று
தந்தூரி அடுப்பில் வைத்து எரிக்க முடியுமா?   


இச் சம்பவம் நடந்தது ஜூலை 2, 1995 அன்று. அதாவது,
18 ஆண்டுகளுக்கு முன்பு.

புதுடில்லி செசன்சு நீதிமன்றம்
சுசீல்  சர்மாவுக்கு மரண தண்டனை விதித்தது. (தீர்ப்பு நாள்: நவம்பர் 7, 2003)
புதுடில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனையை
உறுதிபடுத்தியது.

(தீர்ப்பு நாள்: பெப்ரவரி 19, 2007)

உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை
ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

( தீர்ப்பு நாள்: அக்டோபர் 8, 2013)
தீர்ப்பு வழங்கிய மூவர் அமர்வில் 

( 3 member division bench )   
தலைமை நீதியரசரான 

மேதகு தமிழர் சதாசிவம் அவர்களும் அடக்கம்.

ஆக, மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள்
ஆனந்தக் கூத்தாடி வருகிறார்கள்.
குற்றவாளிகளுக்குத் தண்டனையே 

விதிக்கப் படக்கூடாது
என்ற தங்களின் லட்சியம் கைகூடி வருவது கண்டு 
களிப்பும்  எக்களிப்பும் அடைகிறார்கள்!


*****************************************************************************************************
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக