புதன், 16 அக்டோபர், 2013

DALIT MASSACRE CASE: ALL 26 ACCUSED ARE ACQUITTED

மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு 
பால் பாயாசம் வழங்கிய தீர்ப்பு!
--------------------------------------------------------
மரண தண்டனையை எதிர்க்கும் 
மனித உரிமைப் போராளி (!!!)களின்
காட்டில் மழை!
பாட்னா உயர்நீதி மன்றம் 
கடந்த அக்டோபர் 9, 2013 அன்று 
வழங்கிய தீர்ப்பு மேற்படி மனித நேயப் போராளிகளின் வயிற்றில் 
பால் பாயாசத்தை வார்த்திருக்கிறது.

 கீழமை நீதிமன்றம் வழங்கிய
 ( 16 பேருக்குத் தூக்கு, 10 பேருக்கு ஆயுள்)
தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்து, 
26 பேரையும் விடுதலை செய்து 
தீர்ப்பளித்து இருக்கிறார்கள் பாட்னா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சின் 
நீதியரசர்கள் வி.என்.சின்ஹா மற்றும் ஏ.கே.லால் ஆகிய இருவரும்.
58 தலித்துகளைப் படுகொலை செய்த, லட்சுமணபூர் பதே வழக்கு 
( LAXMANPUR BATHE   MASS MASSACRE CASE OF 58 DALITS ) என்று
அறியப்படும் வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு.

வழக்கின் வரலாறு
------------------------------  
பீகார் மாநிலம், லட்சுமண்பூர்   பதே என்ற கிராமம் தற்போது ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ளது.டிசம்பர் 1, 1997 அன்று,
( 16 ஆண்டுகளுக்கு முன்பு)
நள்ளிரவில் ரன்வீர் சேனா என்ற 
பூமிஹார் சாதி நிலப்பிரபுக்களின் படை 
மேற்படி கிராமத்துக்குள் நுழைந்து
58 தலித்துக்களைச்  சுட்டுக் கொன்றது.

தமிழ்நாட்டில் கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்ட 44 தலித்துக்களை 
உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவின் 
வடஇந்தியப் பங்காளிகள்தான் ரண்வீர் சேனாவினர்.

பாட்னா செசன்சு நீதிமன்றத்தின் 
நீதியரசர் விஜய் பிரகாஷ் மிஸ்ரா 
கடந்த ஏப்ரல் 7, 2010 அன்று,
16 பேருக்குத் தூக்குத் தண்டனையும்,
10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்;
19 பேர் நிரபராதிகள் என்று கூறி 
அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஆக, மொத்தம் குற்றம் சாட்டப் பட்டவர்கள்
45 பேர்.இதில் 19 பேர் விடுதலை ஆகி விட 
மீதி 26 பேருக்கு மட்டுமே தண்டனை!

தற்போது பாட்னா உயர்நீதிமன்றம் மேற்குறித்த 26 பேரையும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்து விட்டது.  
ஆக, 58 பேரைப் படுகொலை செய்த வழக்கில் 
( 26 பெண்கள்,16 குழந்தைகள் உட்பட) 
யாருக்கும் தண்டனை இல்லை!

மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று உச்சி மோந்து கொண்டாடுகிறார்கள்! இனிப்புப் பரிமாறி மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!

மரண தண்டனை எதிர்ப்புப் போராளி (!!!)களும் மனித உரிமைப் போராளி(!!!)களும் 
இந்தத் தீர்ப்பால் பெருத்த உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் குற்றவாளிகள் தண்டிக்கப் படவே கூடாது என்ற தங்களின் லட்சியம் இத்தகைய தீர்ப்புகளால் 
நிறைவேறி வருவது கண்டு அவர்கள் குதூகலிக்கிறார்கள்.

58 தலித்துகள் செத்ததில் 
அவர்களுக்கு வருத்தம் இல்லை!
ஆனால் 45 ACCUSEDகள் விடுதலை ஆகி விட்டதில் அவர்களுக்கு 
சந்தோசம்! 
அவர்களின் மனித உரிமை (!!!)
 நிலைநாட்டப் பட்டு விட்டதில்
மனித உரிமை மற்றும்
மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள் (!!!)
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

     மக்களே போல்வர் கயவர்  அவரன்ன 
    ஒப்பார் யாம்கண்ட(து) இல்.  
******************************************************
 

   

2 கருத்துகள்:

  1. 58 தலித்துகள் செத்ததில்
    அவர்களுக்கு வருத்தம் இல்லை!
    ஆனால் 45 ACCUSEDகள் விடுதலை ஆகி விட்டதில் அவர்களுக்கு
    சந்தோசம்!
    அவர்களின் மனித உரிமை (!!!)
    நிலைநாட்டப் பட்டு விட்டதில்
    மனித உரிமை மற்றும்
    மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள் (!!!)
    ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. நய்யாண்டி ! இது படமல்ல ! பாராட்டு !பஞ்ச் டயலாக் கேள்விப்பட்டு இருக்கேன் ! பஞ்ச் கட்டுரை இப்போதுதான் பார்க்கிறேன். நல்ல டிசெண்டா வந்து இருக்கு ! வாழ்த்துக்கள் ! தொரட்டும் நய்யாண்டி ! - பாலா-

    பதிலளிநீக்கு